( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )25 ஞாயிறு ஆகஸ்ட் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பாவமன்னிப்பு வேண்டாமா ?
   ருவன் அறியாமல் தவறு செய்கின்ற போது அவனை தண்டிப்பதை விட்டு விட்டு மன்னிப்பது தானே உயர்ந்த குணம் உங்கள் இந்து மதத்தில் பாவத்திற்கு கிடையாது என்று சொல்வது எந்த வகையில் சரியாகும்?

நெல்சன் 
திருச்சி 

   வறு என்பதற்கும் தப்பு என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது சரியா தவறா என்பதை அறியாமல் தவறுதலாக செய்வது தவறு. அதே நேரம் இது தவறு என்பதை அறிந்தே வேண்டுமென்றே ஆசை வயபட்டோ கோபம் கொண்டோ திட்டமிட்டோ செய்வது தப்பு. இந்த தப்பை மன்னித்தோம் என்று சொன்னால் அதை செய்தவன் திருந்த மாட்டான். மற்றவனும் அவனை போல் நாமும் செய்யலாமே என்று நினைப்பானே தவிர உணர்ந்து நடக்கமாட்டான். எனவே தண்டனை என்பது பல விஷயங்களுக்கு அவசியமானதாக இருக்கிறது.

தொடர்ந்து திருடுவதையே தொழிலாக கொண்ட ஒருவன் அதற்கான பாவ மன்னிப்பை பெற்ற பிறகும் திருடாமல் இருந்தால் பரவாயில்லை நேற்று செய்த பாவத்திற்கு மன்னிப்பு பெற்றாகி விட்டது நாளை செய்கின்ற பாவத்திற்கும் மன்னிப்பு பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் பாவங்களை செய்து கொண்டே போகின்றவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

தப்பு செய்தால் தண்டனை உண்டு அந்த தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் மீண்டும் தண்டனைக்கு ஆட்படாமல் இருக்க வேண்டுமானால் தவறுகளை தொடர கூடாது என்ற எண்ணம் வந்தால் மட்டுமே ஒருவனால் திருந்த முடியும். மேலும் எந்த ஒரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு என்பதே இந்து மதத்தில் உள்ள கர்ம கொள்கை ஆகும். சென்ற பிறவியில் செய்த பாவத்திற்கும் இந்த பிறவியில் செய்கின்ற பாவத்திற்கும் தண்டனையை அனுபவித்தால் மட்டுமே ஆத்ம சுத்தி கிடைக்கும் என்பது இந்துமத நம்பிக்கை மட்டுமல்ல நாம் அன்றாடம் பெறுகின்ற அனுபவமாகவும் இருக்கிறது.

தங்கத்தில் இருக்கின்ற கசடுகளை நீக்கினால் மட்டுமே ஆபரணம் செய்கின்ற பொன் கிடைக்கும். நமது வாழ்வில் கசடுகள் என்ற பாவங்கள் நிறையவே உண்டு அவைகளை நீக்கும் போது புண்னை சுத்தம் செய்தால் கிடைக்கின்ற வலியை போல வேதனை கிடைக்கவே செய்யும். வலி இருக்கிறது என்பதற்காக புண்னை அப்படியே விட்டு விட்டால் நிலமை விபரீதமாகி விடும். மனிதாபிமானம் பார்ப்பது என்பது வேறு மனிதனாக வாழ முயற்சிப்பது என்பது வேறு.

குற்றங்கள் மற்றும் சட்ட விரோத செயல்கள் மற்ற நாடுகளை விட நம் நாட்டில் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமே தப்பு செய்தால் தண்டனை உண்டு என்ற நம்பிக்கையே ஆகும். எந்த தப்பு செய்தாலும் மன்னிப்பு வாங்கி விடலாம் அதை ஒருமுறை அல்ல பலமுறையும் வாங்கலாம் என்று சுதந்திரம்  கொடுத்தால் மனிதனின் ஒழுக்க நெறிமுறைகள் சீர் குலைந்துவிடும். எனவே தான் இந்துமதம் பாவ மன்னிப்பை பற்றி பேசவில்லை.


+ comments + 2 comments

சரியான கருத்து , நன்று..

பாவ புண்ணியத்தின் கர்மாவை அனைவரும் அனுபவித்தே ஆகவேண்டும், நாம் செய்யும் பாவ புண்ணியத்தை பொறுத்தே நமக்கு அடுத்த பிறவி கிடைக்கிறது. அதன் விளைவே நாம் அனுபவித்து கொண்டிருக்கும் இப்பிறவியும் ஆகும்.

கிடைப்பது ஒரு பிறவிதான் என்பது உண்மையானால் நாம் அனைவரும் பிறக்கும் போதே ஆரோக்கியமாகவும், செல்வந்தனவகவும், நல்ல வாழ்வுக்கும், சோகம் என்ற எண்ணம் கூட வராத நிலையில் பகவன் நம்மை படைத்திருக்க வேண்டும் ..

ஆனால் ஏன் ஒரு சிலர் மட்டும் நல்ல ஆரோகியமாக இருகிறார்கள் , ஒரு சிலர் மட்டும் செல்வந்தராக இருக்கிறார்கள் , அவன் மோசமான புத்தி உள்ளவன் அவனுக்கு மட்டும் எப்படி தான் செல்வமும் சந்தோஷமான வாழ்வும் அமைகிறது என்று நம்மில் பலர் புலம்புவது உண்டு ..

நம் முன்ஜென்ம பாவ புண்ணியத்தின் விளைவை நாம் இப்பிறவியில் அனுபவித்தே அவன் அவன் கடமை ஆகும், இது இயற்கையின் கட்டாயமாகும்.

பகவானிடம் சரணடைந்தால் கர்மவினையின் வீரியம் அதாவது தாக்கம் குறையுமே தவிர அதை அனுபவிக்காமல் முற்றிலுமாக யாரும் தப்ப முடியாது.. எனவே இருக்கும் பிறவியிவை பயன்படுத்தி பாவம் செய்யாமல் " எல்லாம் அவன் செயல் " என்றும்
" நடப்பெதேல்லாம் நன்மைக்கே " என்ற தங்கமான வார்த்தைகளை நினைவு கூர்ந்து நடந்தால் , அடுத்த பிறவி மட்டும் அல்ல இப்பிறவியும் நலமா வாழலாம் ..

Anonymous
05:06

திரு நெல்சன் அவர்களுக்கு தங்களது மதத்தில் உள்ள இந்த பாவமன்னிப்பு என்பது மார்டின் லூதர் கிங் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது அதாவது நீங்கள் தப்பு செய்தாலோ அல்லது தப்பு செய்வதற்கு முன்னாலோ பாவமன்னிப்பு பெற்று கொள்ளலாம், இன்னும் சொல்ல போனால் உங்களை அரசாங்கம் கூட ஒன்றும் செய்ய முடியாது.

அன்புடன்

முத்துசரவணன்


Next Post Next Post Home
 
Back to Top