( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )18 ஞாயிறு ஆகஸ்ட் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சூன்யம் இருக்கிறதா?    றுமை, துர்மரணம், பித்துபிடித்தல், வீட்டைவிட்டு ஓடிப்போகுதல் இப்படி இன்னும் எத்தனை விதமான துன்பங்கள் உண்டோ அத்தனையும் எங்கள் குடும்பத்தில் கடந்த பத்துவருடமாக நடந்து வருகிறது உங்கள் உறவினர்களில் ஒருவர் சூன்யம் வைத்திருக்கிறார். அதனால் தான் உங்கள் குடும்பம் இப்படி அழிகிறது எனவே நல்ல மாந்திரீகரை பார்த்து சூன்யத்தை எடுங்கள் இல்லை என்றால் எல்லாமே தரைமட்டமாகி விடுமென்று சொல்கிறார்கள். உண்மையாகவே எங்கள் குடும்பத்திற்கு அப்படி ஏதாவது மந்திர பாதிப்புகள் இருக்கிறதா? அப்படி இருந்தால் என்ன செய்வது என்பதை சொல்லி குருஜி அவர்கள் என் குடும்பத்தை காப்பாற்றுமாறு பணிவோடு வேண்டுகிறேன். 


இப்படிக்கு 
ராஜலஷ்மி 
நாகர்கோவில்       த்தியை வைத்து அறுவைசிகிச்சையும் செய்யலாம் கொலையும் செய்யலாம் ஏறக்குறைய மந்திரங்களும் அப்படியே! நல்ல மந்திரங்களால் நன்மை விளையும் என்று கூறுவது எந்தவகையில் சரியோ அதே அளவு தீய மந்திரங்கள் கெடுதியை விளைவிக்கும் என்பதும் உண்மையே. 

ஒரு நல்ல மந்திரத்தை தினசரி சொல்லி வருகிறேன் அது எனக்கு நன்மை செய்கிறது என்றால் அது வாதப்படி சரி தீய மந்திரத்தை நான் சொல்வதே கிடையாது இன்னும் சொல்வதாக இருந்தால் அது என்னவென்றே எனக்கு தெரியாது நிலைமை அப்படி இருக்க எந்த வகையிலும் என்னோடு சம்பந்தபடாத அந்த மந்திரம் எப்படி என்னை பாதிக்கும் என்று சிலர் கேட்கலாம் இது தவறுதலான கேள்வி அல்ல. ஆனால் மந்திரங்களை பற்றி அறியாமல் கேட்கும் கேள்வியாகும். 

மந்திரங்களை நமக்காகவும் பயன்படுத்தலாம் மற்றவர்களுக்ககவும் பயன்படுத்தலாம். நமக்காக பயன்படுத்த அவ்வளவு பயிற்சி தேவையில்லை ஈடுபாடும் மன ஒருநிலைப்பாடும் இருந்தால் மட்டும் போதுமானது பிறருக்காக பயன்படுத்தும் போது அதற்கென்று பிரத்யேகமான பயிற்சிகளும் தகுதிகளும் தேவை. இந்த இரண்டும் ஒருசிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடுகிறது இவர்கள் மந்திரங்களை மிகச்சுலபமாக பயன்படுத்தி காரியங்களை சாதிக்கிறார்கள்.

எப்போதுமே மந்திரங்களை சுயநலம் இல்லாமல் பாவிக்கும் போது அது நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது சுயநலத்தோடு பாவிக்கும் போது இறைவனுக்கு எதிர்மறையான சாத்தானோடு கொண்டு சேர்க்கிறது என்றும் சொல்லலாம். சாத்தான் என்று நான் இங்கே குறிப்பிடுவது பேய் பிசாசுகளை அல்ல மனதில் உள்ள வக்கிரங்களை ஆகும். 

ஒரு மனிதனோடு நேராக மோதி அவனை தாக்குவதற்கு சக்தியற்ற கோழைத்தனம் நிறைந்த மனிதர்கள் தீய மந்திரங்களை துணைக்கு வைத்துகொண்டு மறைமுகமாக மற்றவர்களுக்கு தொல்லைகள் கொடுக்கிறார்கள். அவர்களால் நிச்சயம் இன்பமாக வாழ இயலாது. இந்த வகையில் சொல்லபோனால் உங்கள் குடும்பத்தில் சூன்யம் இருக்கிறது என்றே துணிந்து சொல்லலாம்.

சூன்யம் இருக்கிறது என்றவுடன் அதை யார் செய்தது என்று கேட்பது வாடிக்கை ஒருவேளை பங்காளிகள் அதை செய்திருப்பார்களோ? என்று நாம் உடனடியாக குழம்ப ஆரம்பித்துவிடுகிறோம் இதற்கு காரணம் பங்காளிகளின் மீது நமக்குள்ள சந்தேககங்களாகும். சூன்யம் என்பதை பங்காளிகள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

உதாரணமாக ராஜலஷ்மி அவர்களின் ஜாதகத்தை பார்க்கும் போது இவரது தந்தைவழி பாட்டனார் சிறந்த மந்திரவாதியாக இருந்திருப்பார் என்பதும் அதன் விளைவாக பலருக்கு பல காரியங்களை சாதித்து கொடுத்திருப்பார் என்பதும் தெரிய வருகிறது இந்த ஜாதகத்தை மட்டுமே வைத்து ஆராயும் போது இவ்வளவு மட்டும் தான் தெரியும். இதற்கு மேலும் அதிகமாக தெரிய வேண்டுமானால் நீங்கள் நேரில்வந்தால் தான் இயலும் என்று நினைக்கிறேன் எனவே உடனடியாக நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவரோ நேரில்வந்து என்னை சந்திக்கவும். அப்போது மட்டும் தான் உண்மைகளை தெளிவாக தெரிந்து உங்களுக்கு உதவி செய்ய முடியும்.
Next Post Next Post Home
 
Back to Top