Store
  Store
  Store
  Store
  Store
  Store

நோய்களை காட்டும் ராசிகள்...




     குருஜி அவர்களுக்கு, வணக்கம். ராசி கட்டத்தில் உள்ள பனிரெண்டு ராசிகளும் மனித உடல் உறுப்புகளை குறிப்பதாக சொல்கிறார்கள் அது உண்மையா?



மாசிலாமணி,
தேன்கனிக்கோட்டை.




    ரு ஜாதக கட்டத்தில் லக்கினம் என்ற முதலாம் இடத்தை தலையாக கொண்டு அதற்கு பின்னால் வருகின்ற ஒவ்வொரு ராசிகளையும் உடல் உறுப்புகளாக வரிசை படுத்துவது ஜோதிடத்தின் மரபாகும். இருந்தாலும் பொதுவாக பார்க்கும் போது சூரியன் உச்சமடைகிற மேஷராசியை ராசி சக்கரப்படி முதலாவது ராசியாக கொள்வதாலும் மேஷ ராசியை “சிரசு” என்று அழைப்பது வழக்கம்.

அதன்படி மேஷ ராசி தலை, ரிஷப ராசி முகம் மற்றும் கண்கள், மிதுன ராசி கழுத்து தோள் மற்றும் காது, கடக ராசி மார்பு, சிம்ம ராசி மேல்வயிறு மற்றும் முதுகு, கன்னி ராசி அடிவயிறு, துலாம் ராசி இடுப்பு, விருச்சிக ராசி மர்ம உறுப்பு, தனுசு ராசி தொடை, மகர ராசி முழங்கால், கும்பராசி கணுக்கால் மற்றும் பிருஷ்டம், மீன ராசி பாதம் என்று சொல்வார்கள்.

அதாவது இந்த உறுப்புகள் என்ற ராசியில் கெட்ட கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும் போது அததற்கான நோய்கள் வரும் என்பது ஒரு கணக்கு இந்த கணக்கோடு ஆரோக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஆறாவது இடத்தையும் கவனத்தில் கொண்டால் வருகிற நோய் எது சம்மந்தமாக இருக்கும் என்பதை முடிவு செய்து விடலாம்.


Contact Form

Name

Email *

Message *