Store
  Store
  Store
  Store
  Store
  Store

நல்ல வேலையாள் அமைய பரிகாரம் !



       குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் மும்பையில் ஆயில் கம்பெனி ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறேன் கைநிறைய சம்பளமும் மற்றும் பல வசதிகளும் இருக்கிறது எவ்வளவு இருந்தாலும் எத்தனை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினாலும் ஒருவரிடம் கைநீட்டி ஊதியமாக பெறுவது என்பது அடிமை சேவகமே என்பது என் எண்ணம். தெருவோரத்தில் தள்ளு வண்டியில் பாணிபூரி வியாபாரம் செய்பவன் கூட முதலாளி. நான் காரில் போனாலும் கூலிக்காரன் தான் என்று நினைக்கிறேன் எனவே எனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக வியாபாரம் செய்யலாம் என்று நினைக்கிறேன் என் ஜாதகப்படி நான் வியாபாரம் செய்தால் நன்றாக இருக்குமா? அல்லது காலம் முழுவதும் ஒரு வேலைக்காரனாகவே இருக்க வேண்டிய சூழல் இருக்கிறதா? என்பதை தயவு செய்து நன்றாக ஆராய்ந்து எனக்கு சொல்லுமாறு வேண்டுகிறேன். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.


இப்படிக்கு,
வெங்கடகிருஷ்ணன்,
மும்பை.




    டித்து முடித்து கல்லூரியிலிருந்து வெளிவருகிற நூற்றுக்கு தொண்ணூறு பேர்கள் ஏதாவது வேலை கிடைக்காதா? காலம் முழுவதையும் பாதுகாப்போடு நகர்த்திவிட முடியாதா? என்றே யோசிக்கிறார்கள் ஒரு வேலையில் அமரும் போது மாத ஊதியம் இவ்வளவு தான் என்ற உறுதி கிடைத்து விடுகிறது. ஓய்வு பெறுகிற நாள் வரையில் அந்த சம்பளத்தில் குறைவு ஏற்பட்டு விட போவதில்லை இதனால் வாழ்க்கை முறை திடீரென்று சரிந்து விடுமோ? என்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை ஒரு பாதுகாப்போடு வாழலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது.

இப்படிப்பட்ட மனிதர்களை பார்க்கும் போதெல்லாம் இவர்களுக்கும் கற்பாறைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அதுவும் ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் கிடக்கிறது இவர்களும் அப்படியே கிடக்கிறார்கள் என்று எனக்கு தோன்றும் வாழ்க்கை என்றால் கட்டிலில் படுத்து கால்நீட்டி உறங்குவது போல சோம்பேறித்தனமாக இருக்க கூடாது சவால்களை எதிர்நோக்கவும் போட்டிகளை சம்பாதிக்கவும் கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் சிறந்த வாழ்க்கையை இவன் வாழ்ந்தான் என்ற முத்திரையை பதிக்க முடியும்.

இப்படி நான் சொல்வதற்காக சொந்த தொழில் செய்கின்ற பலரும் சாதனையாளர்களாக இருக்கிறார்கள் என்று நான் கூற வரவில்லை அவர்களிலும் பலர் ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று உப்புசப்பு இல்லாமல் வாழ்க்கையை ஒட்டி கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த சங்கதியே. அவர்கள் அப்படி இருப்பதற்கு மூல காரணமும் அதிகப்படியான முயற்சிகள் செய்தால் தோல்வியில் தலைகீழாக விழுந்துவிடுவோமோ என்ற பயமே காரணம். காலம் முழுக்க உத்தியோகம் பார்ப்பதற்கும் செக்குமாடு போல மாற்றமே இல்லாமல் தொழில் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டு வாழ்க்கை முறையுமே ஏறக்குறைய கல்லுக்கு சமமே ஆகும்.

உத்தியோகம் பார்த்தாலும் சரி சொந்த தொழில் செய்தாலும் சரி புதிதாக சிந்திப்பதும் வேகமாக செயல்படுவதும் சாதனைகள் செய்யவேண்டும் என முயற்சிப்பதும் கண்டிப்பாக அவசியம் இவற்றை விட மிக முக்கியமானது நாம் செய்கின்ற செயலில் ஒரு ஆர்வமும் விருப்பமும் திருப்தியும் இருக்க வேண்டும் திருப்தி இல்லாமல் எந்த காரியத்தை செய்தாலும் அது உருப்படாது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கான மூலகாரணமே விருப்பத்தோடு செயல்படுவதே ஆகும். அந்த வகையில் உங்கள் இரத்தத்தில் வியாபாரம் செய்வதற்கு உண்டாகி இருக்கும் ஆர்வத்தை உணர முடிகிறது அதை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

நமது விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் இறைவன் நமக்கென்று வகுத்த வழி ஒன்று இருக்கிறது அந்த வழியாக போனால் தான் திருப்தியும் கிடைக்கும் வெற்றியும் கிடைக்கும் சாதனையும் படைக்கலாம். அதை விட்டு விட்டு நாமாக ஒரு பாதை போட்டு அதில் பயணம் செய்ய முயன்றால் பல நேரங்களில் சிரமங்களே ஏற்படுகிறது ஒருவர் ஜாதகத்தில் நல்ல வியாபாரியாக வரவேண்டும் என்றால் புதனும் செவ்வாயும் ஒன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து ஆகிய ஏதேனும் ஒரு இடத்தில் வலுவோடு இருக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஜோதிடம் என்பது இறைவன் நமக்கு தந்த பாதையை இன்னெதென்று ஓரளவு அறிந்து கொள்கிற கருவியே ஆகும் அதன் வழிபார்க்க போனால் உங்கள் ஜாதகப்படி வியாபாரம் நன்றாகவே வரும் அதில் நீங்கள் முதலீடு செய்வது எந்த வகையிலும் நஷ்டத்தை தராது ஆனால் அதற்காக நீங்கள் இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அப்போது தான் தொழில் செய்வதற்கான நல்ல நேரம் உங்களுக்கு பிறக்கிறது.

ஜாதகப்படி இந்த இடங்களில் கிரகங்கள் வலுவோடு அமையாமல் வியாபார துறையில் இருப்பவர்கள் அவதிபட்டால் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று நெய்விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட வேண்டும் முடிந்தால் வடை மாலையையும் வெண்ணை சாற்றுதலையும் செய்யலாம் இப்படி செய்தால் தொழில் நல்ல முறையில் நடப்பதோடு தொழில் நடத்துவதற்கு மிகவும் தேவையான நல்ல வேலையாட்கள் அமைவார்கள் அப்படியே அமைந்து அடிக்கடி வேலையை விட்டு போகாமல் ஓரளவு நிரந்தரமாக இருப்பார்கள்.





Contact Form

Name

Email *

Message *