வெள்ளிக்கிழமை நகம் வெட்டக்கூடாது என்கிறார்களே அது ஏன்?
இப்படிக்கு,
உஜிலாதேவி வாசகர்,
ரமேஷ் பிரபாகர்,
சென்னை.
குதர்க்கவாதம் பேசுவதில் தமிழன் பலே கில்லாடி. சற்றேறக்குறைய அறுபது வருடகாலமாக குதர்க்கவாதம் பேசியே நாட்டை ஆளுகிற ஒரு கூட்டம் இங்கு மட்டுமே இருப்பதை அறியலாம். வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றவுடன் ஏன் அன்று வெட்டினால் வெட்ட முடியாதா? நகம் தான் வெட்டுப்படாதா? என்று கேட்பார்கள் இவர்களுக்கு பதில் கூறுவதற்கு நாலுமுறை பிறந்து வரவேண்டும் அவ்வளவு சிரமம்.
பொதுவாக சனிக்கிழமையை பெருமாளுக்கு உகந்த நாளாகவும், வெள்ளிக் கிழமையை தாயாருக்கு உகந்த நாளாகவும் கருதுவது மரபு மஹாலஷ்மிக்குரிய அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்க கூடாது என்பது நம்பிக்கை. நகம் முடி இரண்டுமே வெட்டினாலும் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஒரு அங்கமாகும். பொருளை இழப்பதே தப்பு என்றால் உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகபடியான தவறு அல்லவா? அதனால் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்று கூறுகிறார்கள்.
இப்படி சொன்னவுடன் இதற்கு எதாவது சாஸ்திர சான்றுகள் இருக்கிறதா? என்று ஒரு ஆஸ்திக கோஷ்டி கேள்வி எழுப்பலாம் இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான பழக்கமே தவிர மனுநீதி போன்ற சாஸ்திரங்களின் அடிப்படையில் தோன்றியது கிடையாது. பிற்கால சாஸ்திர நூல்களில் இந்த விஷயம் சேர்க்க பட்டதே தவிர முன்பு உள்ள சங்கதி அல்ல சாஸ்திரத்தில் சொல்லபடாததை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க கூடாது பெரியவர்கள் சொல்வதும் கூட ஒருவகை சாஸ்திரமே.
+ comments + 2 comments
gurujikku vanakkam. enadhu neenda naalaiya sandhegam theernthadhu.nandri guruji.
எல்லாப் பெண் தெய்வங்களையும் விட ஸ்ரீ மகாலஷ்மி சாந்த சொரூபிணி! அவருக்கு நேய்வேத்தியமே மிகவும் எளிதில் உண்ணக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் நகமோ அல்லது முடியோ வெட்டுவது என்பது குருஜி சொல்வதுபோல் பலி தருவதுபோலாகும். எனவேதான் வெள்ளிகிழமை நகம், முடி வெட்டுவது கூடாது என்பது சரியே!