( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தபால் தீட்சை கொடுக்கபடுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

விஜயகாந்துக்கு இத்தனை காதலர்களா...?    விழுப்புரம் பகுதியில் கதம்ப சாம்பார் என்று ஒன்று வைப்பார்கள் இன்ன காய்கறி என்று வரைமுறை கிடையாது கையில் கிடைத்தவைகளை நறுக்கி போட்டு மணக்க மணக்க சாதத்தில் ஊற்றி தருவார்கள் என்ன சாம்பார் சாப்பிட்டோம் என்னதான் இதன் சுவை என்று மண்டையை போட்டு உடைத்தாலும் கண்டுபிடிக்கவே முடியாது அந்த மாதிரி தான் இப்போதைய நாட்டு நிலவரமும் இருக்கிறது 

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் மாதிரி சொல்றீங்க டெல்லியில் ஆட்சி அமைக்க மக்கள் கிட்ட எஸ்.எம்.எஸ் மூலம் கருத்து கேட்க போறாங்களாம் இது என்ன விளையாட்டுத்தனம் தேர்தல் என்பது டிவியில் நடக்கும் பாட்டு போட்டியா? எஸ்.எம்.எஸ் போட்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு ஐ.ஆர்.எஸ்  அதிகாரிக்கான செயல் மாதிரியே தெரியலேயே 

இந்த லட்சணத்தில் இந்த மாகானுபவரிடம் பாடம் கற்க போகிறாராம் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியை நேற்று துவங்கிய தேமுதிக என்று நினைத்தாரா? அதன் வரலாறு என்ன? பாரம்பரியம் என்ன? அதை உருவாக்க தலைவர்கள் செய்த தியாகங்கள் தான் என்ன? ஒரு பேராசிரியர் மாணவனிடம் வந்து பாடம் படிக்க போகிறேன் என்று சொல்வது போல ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது. நரேந்திர மோதி தான் படிக்காதவர் அவருக்கு வரலாறு தெரியாது என்று வாய் கிழிய கத்துகிற காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் வரலாறு தெரிந்திருக்கிறதா என்ன? இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்பது நம்ம தலையெழுத்து 

இந்த கூத்தை கூட மன்னிக்கலாம் நம்ம தமிழ்நாட்டில் நடக்கும் கூத்தை நினைத்து பார்த்தாலே நெஞ்சமெல்லாம் அதிருது தமிழ்நாட்டை மின்சார தட்டுபாட்டிலிருந்து காப்பாற்றுவதற்கு இன்னும் வழி தெரியவில்லை அரசாங்க பள்ளிகளின் கல்விதரம் படுபாதாளத்திற்கு போய்க்கொண்டே இருக்கிறது அதை மீட்க தெரியாமல் அரசு பள்ளிகளை மூடி கொண்டுவரும் நேரத்திலேயே மதுக்கடைகளை திறக்கிறார்கள் மக்கள் பணி திட்டங்களை செய்வதற்கு பதிலாக ஓட்டல் நடத்துவது குடிநீர் விற்பனை செய்வது என்று உருப்படாத காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரியாகி நாட்டை வழிநடத்த போகிறார்களாம்? நினைத்து பார்க்கவே தமாசாக இருக்கிறது 


ஏன் ஜெயலலிதா பிரதமராக வரக்கூடாதா? அவறுக்கந்த தகுதி இல்லையா என்ன? பலமே இல்லாத சரண் சிங் பிரதமராகலாம் நாலுபேரை வைத்து கொண்டு சந்திரசேகர் ஆட்சியை பிடிக்கலாம் குஜரால் கவுடா போன்றோர்கள் கூட பிரதமர் நாற்காலியில் உட்காரலாம் ஒரு தமிழர் உட்கார கூடாதா? நரேந்திர மோதி மட்டும் ஜெயலலிதாவை விட எந்த வகையில் உயர்ந்தவர் நரேந்திர மோதியை உப்பளத்தில் உப்பு எடுப்பவரோடு ஒப்பிட்டால் ஜெயலலிதாவை உப்பே இல்லாத பாலைவனத்தில் உப்பு எடுப்பவராக சொல்ல வேண்டும் அவர் வளர்ந்த குஜராத்தை வளமாக ஆக்கினார் இவர் வறண்ட தமிழகத்தை தானே முன்னேற்றுகிறார் அந்த வகையில் மோடியை விட ஜெயலலிதாவிற்கு அதிகமான தகுதி இருக்கிறது. இதில் சிரிப்பதற்கு ஒன்றுமே இல்லை 

பிரதமர் பதவிக்கு தமிழர் வரலாமா? நரிக்குறவர் வரலாமா? என்றெல்லாம் பேசவில்லை வெறும் நாற்பது தொகுதிகளை கூட பிடிக்க முடியுமோ? முடியாதோ? என்ற ஊசலாட்டத்தில் கண்டிப்பாக ஊரு இரண்டு பட்டுவிடும் கூத்தாடிகள் கொண்டாடலாம் என்று போடுகிற கணக்கை நினைத்தால் தான் சிரிப்பு வருவதாக சொன்னேன் 

ஜெயலலிதாவை விட்டு தள்ளுங்கள் சென்ற சட்டசபை தேர்தலை போலவே இந்த நாடுளுமன்ற தேர்தலிலும் நம்ம கேப்டன் தான் கிங் மேக்கராக தமிழ் நாட்டை பொறுத்தவரையில் இருக்கிறார் என்கிட்டே உள்ளது இவ்வளவு தான் இதற்கு மேல் எதுவுமே கிடையாது அடிப்பதும் குடிப்பதும் தான் எங்களது சித்தாந்தம் என்று அவர் மேடை போட்டு கூப்பாடு போட்டாலும் அதிஷ்ட காற்று என்னவோ அவர் பக்கம் தான் வீசுகிறது. ஒரு காதலியின் வரவுக்காக காதலன் காத்திருப்பது போல கோபாலபுரத்தில் ஒரு காவிய காதலர் காத்திருக்கிறார் காவி நிறத்து காதலர்களோ தாமரை இல்லத்தில் வழி மீது விழி வைத்து காவல் கிடக்கிறார்கள் சத்தியமூர்த்தி பவனின் சத்திய கீர்த்திகள் கேப்டன் வருவார் ஆறுதல் தருவார் என்று கால்கடுக்க தவம் செய்கிறார்கள் ஆனாலும் கேப்டனின் நரசிம்ம பார்வை இன்னும் யார் மீதும் விழவில்லை அவர் மீதே விழுந்திருக்கிறதா? என்றும் தெரியவில்லை 


கண்டிப்பாக அவர் தன்னை கண்ணாடியில் பார்த்திருப்பார் என்று சொல்ல முடியாது எதோ ஒருவித கனவு உலகிலேயே சஞ்சாரம் செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் முதல் முதலில் இலங்கை தமிழரின் விவகாரத்தை சர்வேதேச மன்றத்திற்கு எடுத்து செல்ல தகுதியும் திறமையும் வாய்ந்தவர் யாரென்று கணக்கு போட்டு பார்த்ததில் பண்ருட்டி ராமச்சந்திரன் தான் ஏற்றவர் என்ற முடிவுக்கு வந்து இந்திராகாந்தி அம்மையாரே அவரை ஐநா மன்றத்தில் உரையாற்ற அனுப்பி வைத்தார் அப்படிப்பட்ட மூளைக்காரர் தனக்கு கிடைத்த போது கூட அவரை பயன்படுத்த தெரியாமல் வெளியே அனுப்பி விட்டு கவலை இல்லாமல் இருக்கும் கேப்டனை பார்த்தால் வைரகல்லை வைத்து கொண்டு பாத்திரத்திற்கு ஈயம் பூசியவனை தான் நினைக்க முடிகிறது. 

டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று விட்டதனால் இந்தியா முழுவதும் அதன் அலை இருக்குமென்று எதிபார்ப்பது எந்த அளவிற்கு தவறானதோ அந்த அளவிற்கு விஜயகாந்தை நம்புவதும் தவறாகும் அவர் காங்கிரசோடு போகட்டும் என்று விட்டு விட்டு பாமக, மதிமுக போன்றவரோடு அணி சேர்ந்து தேர்தலை சந்தித்தால் நிச்சயம் நல்ல பலன் மோடியின் விசுவாசிகளுக்கு கிடைக்கும். 

ஒவ்வொருவரும் தானே தலைவர் என்று நினைக்கும் வரை எல்லாமே கதம்ப சாம்பாரே ஆகும் கதம்ப சாம்பாரை உண்ணுவதும் கஷ்டம் உருவாக்குவதும் கஷ்டம் நல்ல சாம்பாரை கொடுக்க நினைப்பவனே இப்போது நல்ல சமையல் காரன் அவனே முதல் விருந்தாளியாகவும் அழைக்க படுவான் நம் தமிழ் நாட்டிலும் பாரதத்திலும் அப்படிப்பட்ட நல்ல சமையல் காரன் யார்? ஆயிரம் சமையல் காரர்கள் வரிசையாக நமக்கு உணவு பரிமாறினால் யார் சமைத்ததை தனித்து சுவை பார்த்து தக்கவனை தேர்ந்தெடுப்பது அதுவரை கதம்ப சாம்பார் தான் விதி! 
+ comments + 3 comments

17:33

இறைவனின் கடைசி அவதாரம் என்று இந்துக்களால் விசுவாசிக்கப்படுகின்ற கல்கி அவதாரம் எப்போதோ இடம்பெற்று முடிந்து விட்டது, எனவே இனி அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இந்தியில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார் இந்தியாவில் வங்காள மாநிலத்தை சேர்ந்த சமஷ்கிருத பண்டிதரான பிராமணர் ஒருவர்.
இவரின் பெயர் பண்டித் வைத் ப்ரகாஷ. புத்தகத்தின் பெயரை தமிழில் இறை தூதின் வழிகாட்டி என்று சொல்லலாம். முஹமது நபிதான் வேதாகமங்களில் சொல்லப்பட்டு இருக்கின்ற கல்கி அவதாரம் என்று இந்நூலில் எடுத்துக் கூறி உள்ளார்.
வேதாகமங்களை பன்னெடும் காலம் ஆராய்ந்து கல்கி அவதாரம் குறித்து எழுதப்பட்ட இந்நூல் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் உள்ளது. எட்டு கல்விமான்கள் இந்நூலை படித்து இதில் கூறப்பட்டு இருக்கின்ற தகவல்கள் உண்மையானவைதான் என்று ஏற்றுக் கொண்டு உள்ளனர். இவர் இந்நூலில் முக்கியமாக தெரிவித்து இருக்கின்ற விடயங்களை ஏற்கனவே சில இணையத்தளங்களில் வெளிவந்த விதத்தில் எழுத்துக்கள்கூட பிசகில்லாமல் அப்படியே மீளப் பிரசுரிக்கின்றோம்.
01. வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர்,முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.
02. ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் “ஜஸீரத்துல் அரப்” என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.
03. ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால்,இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம். ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக,இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது,உறுதிப்படுகிறது.
04. அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும்,வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.
05. கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.
06. கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.
07. மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும்,அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “மிஃராஜ்” இரவில், “புராக்” வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?
08. அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும்,இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.
09. மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம்,குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள்,பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது
- See more at: http://www.yarlminnal.com/?p=28220#sthash.ZV9L3VHJ.dpuf

பண்டிட் வைத்தியபிரகாஷக்கு மனநோய் பிடித்துள்ளது.இவா் ஏதற்காகவோ உளறிக்கொண்டிருக்கின்றாா். இத்தகைய பையித்தியங்களின் கதைகள் குப்பை தொட்டிக்குள் விரைவில் சென்று விடும். முகம்மதுவின் யோக்கியதையை தொிந்து கொள்ள செங்கோடி இறையில்லாஇஸ்லாம் அலிசேனா போன்ற வலைதளங்களை அனைவரும் படிக்க வேண்டும். முகம்மது நடத்திய முதல் யுத்தம் பதா். இது ஒன்றும் யுத்தம் அல்ல. பகல் வழிப்பறி.பாலைவனத்தில் வியாபாரம் செய்ய செல்லும் மக்கள் கூட்டத்தை- அவர்கள் முகம்மதுவை இறைவனின் தூதா் என்று ஒப்புக் கொள்ளாத காரணத்தால் - சில குதிரை வீரா்களின் துணையோடு கொள்ளை அடிக்கின்றாா். இப்படி ஒரு சமய புருஷா் உலகிற்கு தேயைா ? முகம்மதுவின் தவறான கொள்கையால் உலகில் வடிந்து கொண்டிருக்கும் இரத்தம எவ்வளவு ? ஒரு கடல் அளவு இருக்கும். புத்தனை, இயேசுவை காந்தியை வள்ளலாரை சைதன்யரை மாணிக்க வாசகரை தாயுமானவரை புனித பிரான்சீஸ் சேவியரை ஆதிசங்கராச்சாாியாரை ............. இவர்களின் அமைதியான சாத்வீக குணங்களுக்கு முன்னா் முகம்மது என்ற அரேபியா் ஒரு பெர்ருட்டு அல்ல. முகம்மது அரேபிய கடும் காடையா்களை சற்று திருத்தினாா் என்பது உண்மை.இருப்பினும் அவரது போதனைகள் தவறானவை.அரேபிய கலாச்சாரம் அரேபிய சமய கலாச்சார அனுஷ்டானங்கள்தான் முக்திக்கு வழி என்றுமுகம்மதுவின் போதனை சாியான மூடநம்பிக்கையாகும். உலக வரலாற்றை பாழாக்கியது. ஆகவே பையித்தியங்களைப்ற்றி பேசுவதில் எந்த பயனும் இல்லை.

மேலும் முஸலீம்கள் இமாம் அலி என்று ஒரு நபி விரைவில் பிறப்பாா் என நம்பிக் கொண்டிருக்கின்றா். கல்வி அவதாரம் இயேசுவின் இரண்டாம் வருகை என்பது எல்லாம் என்னில் நிறைவேறிவிட்டது. நானே இமாம் அலி நானே கல்வி .நானே இயேசுவின் 2-வருகை என கூறுகிறாா் ஹசரத் மிா“ஸதகுராம் அகமது என்ற காதியானி முஸ்லீம் தலைவா். முஸ்லீம்கள் மத்தியில் மண்டையிடி களுக்கு பஞ்சம் இல்லை. உலகத்தில் பிறந்த சமயாச்சாாியாா்களில் மிகவும் குறைந்த பண்பாடு கொண்டவா் முகம்மது என்பது எனபது கருத்து.


Next Post Next Post Home
 
Back to Top