Store
  Store
  Store
  Store
  Store
  Store

யாராவது பதில் சொல்ல முடியுமா?





     புதுசா பூத்திருக்கிற ஒரு பூவு பிஞ்சாகுமா? காயாகுமா? கனியாகுமா? மொத்தத்தில் வாய்க்கு ருசியா ஜனங்க சாப்பிடுவதற்கு கையில கிடைக்குமா? கிடைக்காதா? ஒன்றும் புரியவில்லை 

கனியா கிடைக்குதா? இல்லையா? என்பது பிறகு பார்த்து கொள்ளலாம் முதலில் பூத்திருப்பது பூதானா? இல்லை பூ மாதிரி தெரிகிற காகிதமா என்பத உறுதிபடுத்தனும் 

கண்டதற்கும் சந்தேகபட்டால் இடுப்பிலே வேட்டி கூட தங்காது நம்புங்கப்பா நம்புங்க கண்டிப்பா அது பூதான் பூவேதான் 

இப்படி நம்பி நம்பி தான் மோசம் போனோம் இப்போ எதை பார்த்தாலும் சூடுபட்ட பூனை மாதிரி சந்தேகப்பட வைக்கிது 

எத வச்சி இத சொல்றீங்க 

1967 ல் ஜனசங்கம் என்ற கட்சிய துவங்கினாங்க துவங்கிய சூடு ஆறுவதற்குள்ளே டெல்லி முனிசிபல் தேர்தலில் அமோக வெற்றி பெற்றாங்க பிறகு அது வளர்ந்து தான் பாரதிய ஜனதா என்ற கட்சியாக ஆனது நம்ம அத்வானிஜி போன்ற தலைவருங்க கூட அப்போதான் உருவானாங்க 

எதற்கெடுத்தாலும் வடக்கு பக்கமா பாத்து தான் உதாரணம் சொல்வதா? தெற்கு பக்கம் சொல்லுகிற மாதிரி எந்த உதாரணமும் கிடையாதா? 1967 க்கு முன்பே ஐம்பத்தி ஒன்பதாவது வருஷமே நமது கழக கண்மணிகள் மெட்ராஸ் கார்பரேஷன் தேர்தலில் வெற்றி பெற்றதும் அண்ணாத்துறை கலைஞர் போன்ற தலைவர்கள் இளமையாக உருவானதும் கண்ணுக்கு படலையா? சாதனையாக சொல்ல மனசு வரலையா? 

பேச்சுவாக்கில் மறந்து போச்சி அதற்குள்ளே வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று திராவிடம் பேசினால் என்ன அர்த்தம் மேலே இருந்து கீழே வருவோமே என்று சொன்னேன் கோப படாம விஷயத்தை கேளுங்க கோப பட்டு உணர்ச்சிவசப்பட்டு எத்தனையோ நல்ல விஷயங்களை இழந்து விட்டோம் 

தமிழன் என்றாலே உணர்ச்சி பிழம்பு தானே அது தானே எங்கள் பெருமை உணர்ச்சி வேகத்தில் அறிவை கூட மறந்து போவோம் அது தான் எங்கள் பாரம்பரிய வீரம் மன்னன் வெற்றி பெற்றால் தன் சொந்த தலையை பலிகொடுப்பவன் அல்லவா தமிழன் ஆத்தாவும் பொண்டாட்டியும் எக்கேடு கெட்டா எங்களுகென்ன தலைவர்கள் எங்கள புகழ்ந்தால் போதாதா? 

சரி விடும் நம்ம பால்தாக்ரே அண்ணாச்சி கூட பம்பாய் மாநகராட்சியை கைப்பற்றிய காலத்தில் தான் சிவசேனா ஆரம்பித்தார் பளபளவென்று வளர்ந்தும் விட்டார் இதுவல்லாம் நாட்டோட நடுபகுதிகள் கிழக்கு பகுதியில அசாம் கனபரிஷத் கட்சிய ஆரம்பித்த இளைஞர் பிரபுல்ல குமார் மொகந்தா இளைய ரத்த துடிப்போட எப்படி எல்லாம் கட்சியை ஆரம்பித்து ஆட்சியை பிடித்தார் 

இப்ப என்ன சொல்ல வரிங்க இவுங்கல்லாம் முத முறையா அரசியலுக்குள்ள வரும்போது பச்சபுள்ள மாதிரி கள்ளம் கபடம் இல்லாமல் வந்தாங்க வந்த பிறகு பத்தோட பதினொன்னு அத்தோட இதுவோன்னு என்ற மாதிரி ஆயிட்டாங்க அதே மாதிரிதான் டெல்லி சமாச்சாரம் இருக்கும் என்று சொல்ல வரிங்களா? 

அய்யய்யோ நான் அப்படி ஒன்னும் சொல்லல அப்படி நடக்க கூடாது என்று தான் விருப்ப படறேன் ஆனால் அரசியல் என்ற கூவ சமுத்திரம் இருக்குதே இது வித்தியாசமானது இத சுத்தபடுத்த நினைச்சவுங்க எல்லாம் சுத்த படுத்தவே முடியாத அளவிற்கு அழுக்காகி போயிருக்காங்க அன்னாஹசாரேயும் அரவிந்த் கேஜ்ஜரிவாலும் காந்தி இல்லையே காந்தி மாதிரி நடக்க நினைக்கிறாங்க அப்படி நடக்க கால்களில் மட்டுமல்ல நெஞ்சத்திலும் தெம்பு வேண்டும் அது இவர்களிடம் இருக்கா? என்பது தான் கேள்வியே! யாராவது பதில் சொல்ல முடியுமா? 







Contact Form

Name

Email *

Message *