Store
  Store
  Store
  Store
  Store
  Store

நந்தியின் கொம்பும் சனியின் தோஷமும்




    யா எனக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது என் மனைவிக்கும் மூத்த மகளுக்கும் அஷ்டமத்து சனி கடேசி மகனுக்கு ஆறாமிடத்தில் சனி இப்படி பல வகையிலும் சனியின் தோஷத்தால் துன்பப்பட்டு வருகிறேன் எல்லாவிதமான பரிகாரங்களையும் செய்து விட்டேன் பலன் இல்லை நீங்கள் வழக்கமான பரிகாரங்களை விட்டு விட்டு புதிய பரிகாரங்கள் எதாவது சொல்லுங்கள் என் துன்பம் தீர வழிபிறக்குமென்று நம்புகிறேன். 


இப்படிக்கு 
கமலக்கண்ணன் 
டெல்லி 






    னிகிரகத்தின் ஆதிக்கம் வந்துவிட்டாலே நம்மில் பலருக்கு கிலி பிடித்துவிடுகிறது பைத்தியம் பிடிக்காத குறையாக புலம்ப துவங்கி விடுகிறார்கள் உண்மையில் சனி கொடுமையான கிரகமா? இல்லவே இல்லை 

துன்பம் வருகிற காலத்தில் அந்த துன்பத்தினால் கிடைக்க கூடிய அனுபவங்களை மிக ஆழமாக பதிவதில் சனி வல்லவன் எனவே அவரை கண்டவுடனேயே நமக்கு பயம் வந்துவிடுகிறது வீட்டுபாடம் எழுதாத பிள்ளையை ஆசிரியர் அடிப்பது போல் தவறான பாதையில் குடும்பத்தை நடத்துபவர்களை சனிபகவான் சோதனை செய்வான் இது தான் நிஜமே தவிர அவர் கொடுமையானவர் என்பதில் உண்மையும் இல்லை 

சனியின் தோஷம் மிக அதிகமாக இருந்தால் ஆண் பெண்ணிடத்திலும் பெண் ஆணிடத்திலும் தவறான ஈடுபாடுகளை கொள்வார்கள் எனவே இந்த காலங்களில் எதிர் பாலினரிடத்தில் மிக ஜாக்கிரதையான உறவு முறையை மேற்கொள்வது சரியாக இருக்கும் 

சனி மிகவும் குளிர்ச்சியான ஒரு கிரகமாகும் இந்த கிரகத்தின் ஆதிக்கம் ஒரு மனிதனிடத்தில் அதிகரிக்கும் போது அவன் முன் யோசனை இல்லாதவனாக மூர்க்கனாக முரட்டுத்தனம் மிகுந்தவனாக இருப்பான் காரணம் அவனது உடம்பில் அதிகப்படியான குளிர்ச்சி வாய்வை கிளப்பி விட்டு விடும் 

எனவே இந்த நேரத்தில் சனியின் ஈர்ப்பாற்றல் நமது உடம்பிற்குள் செல்வதை தவிர்க்கும் எண்ணெய் குளியலை வாரம் தோறும் தவறாமல் செய்ய வேண்டும் உடம்பில் படுகிற நல்லெண்ணெய் சனியிடமிருந்து ஒரு கவசத்தை போல பாதுகாக்கிறது இதை மனதில் வைத்தால் சனியின் தொல்லை தொல்லையே இல்லை.

மேலும் பிரதோஷம் அன்று காளைமாடு ஒன்றிற்கு வாழைப்பழம் அரிசி வெல்லம் இவைகளை கொடுத்து வழிபட வேண்டும் அன்று மாலை சிவாலையம் சென்று நந்தியின் கொம்புகளுக்கு மத்தியில் இறைவனுக்கு தீபாதரனை நடப்பதை தரிசிக்க வேண்டும் இது நல்ல பலனை தரும்.





Contact Form

Name

Email *

Message *