( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தாயை பகைத்தால் குழந்தை பிறக்காது    குருஜி ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம். நானும், என் மனைவியும் தற்போது அமெரிக்காவில் வாழ்கிறோம். எங்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் செய்து பார்த்து விட்டோம். இருவர் உடம்பிலும் எந்த குறையும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்கிறாகள். ஆங்கில வழி, ஆயுர்வேத வழி என்று எல்லாவிதமான மருத்துவ முறைகளிலும் முயற்சி செய்கிறோம். தெய்வ காரியங்கள் பலவற்றையும் தானங்களையும் செய்கிறோம். ஆனாலும் எந்த பலனும் இல்லை எங்களுக்கு இனியும் குழந்தைப்பேறு கிடைக்குமா? என்ற பயமே வந்துவிட்டது உங்களது பதிவுகளை சில மாதங்கள் என் மனைவி படித்து வருவதாலும் உள்ளதை உள்ளபடி தெளிவாக நீங்கள் சொல்லி விடுவதாலும் உங்களால் எங்களுக்கு கண்டிப்பாக ஒரு விடியல் கிடைக்குமென்று நம்பி இந்த கடிதத்தை எழுதுகிறேன். எங்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்து எங்களுக்கு குழந்தை உண்டா இல்லையா என்பதை மறைக்காமல் சொல்லுங்கள் நீங்கள் சொல்லுகிறபடி நடந்து கொள்கிறோம். 

இப்படிக்கு, 
பெயர் வெளியிட விரும்பாத உஜிலாதேவி வாசகர், 
அமெரிக்கா. 
    சிலருக்கு மாத கணக்கில் வயிற்றுவலி இருக்கும். வலியால் அவதிப்படுவார்கள் ஒவ்வொரு நிமிடமும் துடியாக துடிப்பார்கள். மருத்துவரை தேடி மருந்துகளை தேடி றெக்கை கட்டி பறப்பார்கள். யார் என்ன மருந்து சொன்னாலும் அதை தட்டாமல் சாப்பிடுவார்கள் ஆனாலும் நோய் தீராது இதனால் தான் வயிறு வலிக்கிறது என்பது தெரியாது ஒருநாள் ஒரு சாதாரண ஆடு மேய்ப்பவன் குடலில் சுளுக்கிருக்கும் நிமிர்ந்து படுத்துக்கொள் தட்டிவிடுகிறேன் என்பான் நாமும் அதற்கு உடன்படுவோம் அவனும் செய்வான் நிமிட நேரத்தில் பலமாதம் தொல்லை கொடுத்த படுபாதக நோய் விலகி ஓடிவிடும். 

பெரிய பெரிய வைத்தியர்களாலும் மிகச்சிறந்த மருந்துகளாலும் தீராத தீர்க்க முடியாத வயிற்றுவலி ஒரு ஆடு மேய்ப்பவனால் எப்படி தீர்க்க முடிந்தது. இதற்கு முன் நாம் பார்த்த வைத்தியர்கள் திறமை இல்லாதவர்களா? அருந்திய மருந்துகள் வீரியம் அற்றவைகளா? இரண்டுமே கிடையாது நோயின் காரணம் எது என்று யாரும் ஆராயவில்லை. இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம் என்று தவறான கணக்குகளை போட்டுக்கொண்டே கால நேரத்தை வீணாக்குகிறோம் இது அனைவரின் வாழ்விலும் நடக்க கூடிய ஒன்றே !

இந்த கேள்வி கேட்டிருக்கும் அன்பரின் நிலையும் ஏறக்குறைய இதே போலவே இருக்கிறது. மருத்துவர்கள் பரிசோதித்து உடம்பிலே குறையில்லை என்று சொல்லி விட்டார்கள் ஜோதிடர்களும் கிரகங்களை ஆராய்ந்து தோஷமில்லை என்று முடிவு கூறி விட்டார்கள் பரிகாரங்கள் செய்து வைத்தவர்களோ எல்லாம் இனி நன்றாக நடக்குமென்று ஒதுங்கி விட்டார்கள். ஆனாலும் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது, நோயாளிதான் இறந்துவிட்டார் என்ற கதையாக பலன் எதுவும் இவருக்கு கிடைக்காமல் இருக்கிறது. 

நானும் கூட இவர்களின் ஜாதகத்தை பார்த்து விட்டு சனிப்பெயர்ச்சிக்கு பிறகு குழந்தை பிறக்குமென்று எழுதிவிடு என முதலில் சொன்னேன் அதன்பிறகு இந்த கடிதத்தில் உள்ள வரிகளை மீண்டும் ஒருமுறை படித்தபோது இதனுள் வேறொரு ரகசியம் இருக்க வேண்டும் அதை தேடிப்பார் என்று உள்மனது சொல்லவும் பல வேலைகளுக்கு மத்தியிலும் இதற்கான பதிலை இரண்டுமாதமாக தேடிக்கொண்டே இருந்தேன் கடைசியில் புலிப்பாணி சித்தரின் நூலில் அதற்கான விடை கிடைத்தது.  

ஒரு மனிதன் ஜாதகத்தில் அவனது லக்கினத்திற்கு நான்காவது வீட்டிலும் பனிரெண்டாவது வீட்டிலும் பாவ கிரகங்கள் வீற்றிருந்தால் ஐந்தாமிடத்து அதிபதியும் சனியும் கூட்டாளியாக கூடி நின்றால் அந்த மனிதன் பெற்ற தாயை விரோதியாக கருதி அவளை பழித்திருப்பான். அவளது மனம் வெந்து போகும்படியாக நடந்திருப்பான் இதனால் அவனுக்கு தாயின் சாபம் கிடைத்திருக்கும் தாயின் சாபத்தை பெற்றவனுக்கு குழந்தை இருக்காது என்று புலிப்பாணி சித்தர் மிக அழகாக சொல்லி இருந்தார். 

இவர்கள் ஜாதகத்தில் ஆணுக்கு தாயை பகைத்தலும் பெண்ணுக்கு கணவன் வழி உறவினர் மீது பழி சுமத்தும் தன்மையும் இருக்கும் என்பது கிரகங்களின் அமைப்பை பார்க்கும் போது தெரிந்தது. எனவே இவர் மனைவியின் சொல்லை கேட்டு தாயாரை நோக செய்திருக்க வேண்டும். ஆலயங்கள் சென்று பரிகாரம் செய்வதை விட தானங்கள் செய்து புண்ணியம் தேடுவதை விட தாயின் காலடியில் விழுந்து மன்னிப்பு கோருவது சகலத்திலும் சிறந்ததாகும். அந்த சாபத்தை நீக்க மனமுருகி தாயிடம் மன்றாடுவதை தவிர வேறு வழி இல்லை அதை செய்யவில்லை என்றால் குழந்தை இல்லை.+ comments + 2 comments

Guruji, Ungalaium, ungal nun arivaium vaarthayaam paarata vaarthaigal ellai. Thank you Guruji.

Anonymous
17:12

ஐய்யா வணக்கம், நான் அறிந்தொ அறியாமலோ என் பெற்றோரை மணதிற்க்குள் திட்டி இருக்கிறேன். அம்மா 2006-ல் காலமகிவிட்டார் அப்பா என்னோடு இருக்கிறார். நான் அறிந்தொ அறியாமலோ என் பெற்றோரை அவர்கள் மணம் வருந்த செய்ததுக்கு பறிகரம் கூறுங்கள் ஐய்யா...


Next Post Next Post Home
 
Back to Top