Store
  Store
  Store
  Store
  Store
  Store

கழிவறையை எங்கே அமைப்பது...?



   குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் புதியதாக வீடு ஓன்று வாங்கி உள்ளேன். அதன் தென்மேற்கு மூலையில் செப்டிக் டேங்க் அமைந்துள்ளது. வாஸ்துப்படி இது கூடாது என்று என் நண்பர் கூறுகிறார் அவர் கூறுவது சரியா? இதை மாற்றி அமைக்க வேண்டுமா?

இப்படிக்கு,
கண்ணன்,
கவுந்தபாடி.


ரு மிகப்பெரிய தவறை சாதாரண நிகழ்வு போல நீங்கள் கேட்பதிலிருந்தே உங்களுக்கு இதை பற்றி எதுவும் தெரியாது என்று நினைக்கிறேன். நீங்கள் இந்த வீட்டை வாங்கி இருக்கிறீர்கள் அது சந்தோசம். ஆனால் இதை வேறொருவர் விற்றிருக்கிறார் அவர் ஏன் விற்றார் என்பதை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் சந்தோஷம் வராது சங்கடம் வரும்.

பரிசோதனைக்காக வீட்டை விற்றவரின் கடந்தகால வாழ்க்கையை தேடி ஆராய்ந்து பாருங்கள். கடன் பட்டிருப்பார் வாக்கை காப்பாற்ற முடியாதபடி அவமானப்பட்டிருப்பார். மீளவே முடியாத நோய் கொடுமையால் அவதிப்பட்டிருப்பார் வீட்டு பெண்கள் நிம்மதி என்பது இல்லாமலே தவித்திருப்பார்கள் கடன் வாங்கி வைத்தால் கூட அது விரய செலவாகியிருக்கும். பைத்தியம் பிடிக்காத குறையாக வீட்டை விற்றிருப்பார்.

அவர் பட்ட அதே துயரங்களை நீங்களும் அனுபவிக்க விரும்பினால் கழிவறை தொட்டியை மாற்றாமல் அப்படியே வையுங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்பினால் தென்மேற்கில் இருக்கும் தொட்டியை வடமேற்கில் மாற்றி அமைத்து கொள்ளுங்கள். இதை தவிர வேறு வழி கிடையாது. பரிகாரங்களுக்கும் இந்த விஷயத்தில் பலன் கிடைக்காது.



Contact Form

Name

Email *

Message *