( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

விரதத்தில் உறங்கலாமா?
   பிரார்த்தனைகளை முன்னிட்டு விரதம் இருப்பவர்கள் பகல் நேரத்தில் உறங்கலாமா?

இப்படிக்கு,
காந்திமதி,
மலேசியா.  பிரார்த்தனை என்றால் என்ன? நமக்கு தேவையான ஒன்றை கடவுளிடம் விண்ணப்பித்து பெறுவதற்கு பெயரே பிரார்த்தனை என்பதாகும். அதிலும் விரதத்தோடு கூடிய பிரார்த்தனை என்றால் அதற்கு தனி சிறப்பே உண்டு. காலையில் துவங்கி விரதம் முடிகிற நேரம் வரையிலும் கூடியமானவரை மற்ற சிந்தனைகள் இல்லாமல் இறைவனை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருக்க வேண்டும்.

உறங்குவது போல் சாக்காடு என்று நமது சித்தர்கள் உறக்கத்தையும், மரணத்தையும் ஒன்றாக பார்த்திருக்கிறார்கள். உறக்கத்திலிருந்து விடுபடும் போது நமது உயிர் இதே உடலில் விழித்தெழுகிறது. மரணத்திலிருந்து விடுபடும் போது, வேறொரு உடம்பில் நமது உயிர் விழித்தெழும். இவ்வளவு தான் வித்தியாசம் உறக்கத்திற்கும் மரணத்திற்கும்.

இந்த ஜென்மத்தில் உள்ள எண்ணம் இந்த ஜென்மத்தோடு நின்றுவிட வேண்டுமே தவிர அடுத்த ஜென்மத்திற்கும் தொடரக்கூடாது. விரத காலங்களில் பகல் நேரத்தில் உறங்கி விழித்து பிரார்த்தனையை தொடர்வதும், அடுத்த ஜென்மத்தில் தொடர்வதும் ஒன்றே தான். எனவே சிறிது நேரம் கண்விழித்து பிரார்த்தனை செய்தால் பெறவேண்டியதை இந்த ஜென்மத்திலேயே பெற்றுவிடலாமே பிறகு நிம்மதியாக உறங்கலாம்.
Next Post Next Post Home
 
Back to Top