( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மானை பார்த்தால் வீரம் போகும் !   ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம். என் கனவில் அடிக்கடி மான் வருகிறது. புல்வெளியில் அது மேய்வது போல் இருக்கும். பக்கத்தில் சென்று தொட்டுப்பார்க்க செல்வேன் ஓடி மறைந்துவிடும். இந்த கனவிற்கு என்ன பலன்? இப்படி கனவு காணலாமா? 

இப்படிக்கு, 
ராஜலஷ்மி, 
மதுரை.
   பொதுவாக மனிதர்களின் கனவில் அவர்கள் அடிக்கடி பார்க்கும் பொருட்கள்தான் வரும். மிருகங்கள் என்ற வரிசையில் பார்க்கும்போது ஆடு, மாடு, நாய், பூனை, யானை சில நேரங்களில் குரங்குகள் கூட கனவில் வரும். கனவில் மானை பார்ப்பது அபூர்வமான நிகழ்வாகும். 

நமது சாமுத்ரிகா லட்ஷண சாஸ்திரம், மான் என்பதை அச்சத்தின், நாணத்தின் அடையாளமாக கூறுகிறது. ஓடுகிற மானும், ஒடுங்காத மனமும் ஒன்று என்று யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. கனவு சாஸ்திரம் கூட ஏறக்குறைய மானை இதே வரிசையில் தான் பார்க்கிறது. 

ஒருவர் கனவில் அடிக்கடி மான் வந்தால் அவர் மனதும், புத்தியும் திடகாத்திரமாக இல்லை. தடுமாறும் நிலையில் இருப்பதாக அர்த்தம். உங்கள் மனது அப்படி கூட இருக்கலாம். அதை சுட்டிக்காட்ட இந்த கனவு வந்திருக்கலாம் எனவே மனதை உறுதிப்படுத்துங்கள். ஒளிமிகுந்த வாழ்வை அடைவீர்கள். + comments + 2 comments

15:25

ஐயா! என் கனவில் சிவன் கோவில் அடிக்கடி வருகின்றது ஒரு நாள் கனவில் நான் கோவிலை வலம் வரும் வேலை எரியாமல் இருந்த 5 தீபங்கள் எரிகின்றது நான் பயந்து ஓட நினைக்கிறன் ஒரு ஐயர் என்னிடம் நீ அதை வணங்க சொல்கிறார் , உன் நல்ல நேரம் நீ வந்ததும் தீபம் எரியிது சொல்றார்.2 நாள் பிறகு நாகநாதர் கோவில் திருவிழா போல அலங்கரித்து இருக்க நான் உள்ளே தரிசிக்கேறேன் திடிர்என் ஒரு பெண் என் கையை பிடிக்க அவள் அங்கு உள்ள அம்மன் சிலை அருகே அழைத்து செல்கிறாள் அப்போது நான் பட்டு வேட்டி சட்டை இருக்கிறேன் சிவனுக்கு ஆராதனை நடக்கிறது அனந்த பெண் யாரோ என்னக்கு தெரியாதவர். இப்படி மாதத்தில் 3,4 கனவுகள் வருகிறது நான் என்ன செய்வது சொல்லுங்கள்.

நட்ஷத்ர கூட்டம் எல்லாம் சேர்ந்து இரண்டு வட்டங்களாக வானில் உருவாகிறது ....பின் சூரியன்
உதிக்கிறது அந்த நக்ஷத்ர கூட்டம் மறைந்து போகிறது ....இப்படி கனவு கண்டேன் ...இதன் அருத்தம் என்ன .....பதில் கூறவும் ஐயா ....


Next Post Next Post Home
 
Back to Top