Store
  Store
  Store
  Store
  Store
  Store

தெய்வத்தை இகழ்ந்தால் குழந்தை இல்லை !



    குருஜி அவர்களுக்கு நமஸ்காரம். என் பெயர் சாருமதி தற்போது அலகாபாத்தில் நான் வாழ்ந்தாலும், என் சொந்த ஊர் மும்பை. என் தாய் மொழி மராத்தி. உங்களை பற்றி நிர்மலா பார்த்தசாரதி என்ற என் பக்கத்து வீட்டுக்காரர் புகழ்ந்து சொன்னார். அதனால் உங்களிடம் எனது குறையை முறையிட்டால் நிச்சயம் விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் அவரை வைத்தே இந்த கடிதம் எழுதுகிறேன்.

எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்து விட்டன. என் கணவர் இங்குள்ள ஜவுளி ஆலை ஒன்றில் மேலாளாராக பணிபுரிகிறார். நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்வாக வாழ்கிறோம். ஆனாலும் எங்களுக்கு ஒரு குறை இருக்கிறது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை எங்களுக்கு மட்டுமல்ல, என் கணவரின் தம்பி மற்றும் அண்ணனுக்கு கூட குழந்தை இல்லை. அனைவரின் உடல் நலமும் நல்ல நிலையில் இருக்கிறது. ஆனாலும் ஏனோ குழந்தை இன்னும் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இல்லை.

எங்கள் மாமனார் சிறிய வயதில் அறியாமல் சீக்கியர்களின் குருத்வாராவிற்கு சென்று அங்குள்ள புனித புத்தகத்தை கேலி செய்தாராம் அது தெய்வ குற்றமாகி எங்கள் குடும்பத்தில் வாரிசு இல்லாத நிலை இருப்பதாக இங்குள்ள பண்டிட்ஜி ஒருவர் கூறுகிறார். அப்படி தெய்வ குற்றம் இருந்தால் அதை நீக்குவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்? குருஜி அவர்களின் பாதம் தொட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு நல்வழி காட்டுங்கள்.

இப்படிக்கு,
சாருமதி மகாஜன்,
அலகாபாத்.


   ருவருடைய ஜாதகத்தில், ஜென்ம லக்கினத்திற்கு ஐந்தாவது வீட்டுக்கு உரிய கிரகம் பாவ கிரகங்களோடு கூடி அதே ஐந்தாவது இடத்திலேயே இருந்தால் அவர்களுக்கு தெய்வத்தின் சாபத்தால் குழந்தை இருக்காது என்று வராகிமிகிரர் கூறுகிறார். நீங்கள் அனுப்பிய உங்கள் குடும்பத்தாரின் அனைவரின் ஜாதகத்தையும் பார்க்கும் போது தெய்வ குற்றம் இருப்பது தெளிவாக தெரிகிறது.

ஆனால் அது குருத்வாராவில் புனித கிரந்தத்தை கேலி செய்ததனால் ஏற்பட்டதா? அல்லது வேறு தெய்வ நிந்தனையில் உங்கள் மாமனார் ஈடுபட்டாரா? என்பதை உறுதியாக கூறமுடியாது. அதற்கு அவருடைய ஜாதகத்தை பார்த்தால் தான் தெளிவு கிடைக்கும்.

இருந்தாலும் நீங்கள் குருத்வாரா சம்பவத்தை ஆழமான நினைவுகளோடு குறிப்பிடுவதனால், அது சார்ந்த பரிகாரம் செய்தால் மட்டுமே உங்களுக்கு மனசாந்தி ஏற்படும். எனவே நீங்கள் அமிர்தஸரஸ் சென்று பொற்கோவிலில் நடைபெறும் அன்னதானத்தில், உணவு உண்ட தட்டுக்களை சுத்தப்படுத்தி கொடுக்கும் பணியை செய்யுங்கள். உங்கள் குடும்பத்தார் அனைவரும் அந்த பணியை செய்வது மிகவும் அவசியம். உங்கள் மாமனார் விரும்பினால் பக்தர்களின் பாத ரச்சைகளை சுத்தம் செய்யும் சேவையை செய்யலாம்.

இதற்கு பின்னால் உங்கள் ஊரில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில் பனிரெண்டு வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில், எலுமிச்சைப்பழம் மாலை சாற்றி அம்மனை வழிபடுங்கள். பனிரெண்டாவது வாரம் ஒன்பது குழந்தைகளுக்கு ஆடைகள் தானம் வழங்கி அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்கள் தோஷம் விலகி வாரிசு பிறக்கும்.



Contact Form

Name

Email *

Message *