( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )



மிர்த தாரா மந்திர தீட்சை டிசம்பர் 18 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post





உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இரண்டாவது திருமணம் செய்யுங்கள் !

 குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். என் மகன் பிறந்து, மூன்றாவது மாதத்திலேயே என் மனைவி நோய்வாய்பட்டு காலமாகி விட்டாள். இப்போது குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. எனக்கு அம்மாவும் கிடையாது. என் மாமியார் வீட்டிலும், குழந்தையை வளர்ப்பதற்கான ஆட்கள் இல்லை. நான் குழந்தையை வைத்துக்கொண்டு வேலைக்கும் போக வேண்டும். மிகவும் சிரமப்படுகிறேன். இரண்டாவது திருமணம் செய்து கொள் என்று அனைவரும் கூறுகிறார்கள். அப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், வருபவள் என் குழந்தையை சரிவர கவனிப்பாளா? என்று பயமாக இருக்கிறது. அடியேனை தவறாக நினைக்காமல் வழிகாட்டவேண்டுகிறேன். 

இப்படிக்கு,
மகேஷ்கண்ணா,
திருச்சூர்
.

ஜாதகத்தில் நான்காம் இடத்து அதிபதியோடு, சனியும் சேர்ந்து எட்டாம் இடத்தில் இருந்தால், அந்த ஜாதகனின் தந்தைக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். வேறொரு தாய் அமைவாள் என்பது ஜோதிட விதி. தாயிடம் கிடைக்கும் அன்பை வேறு எவரிடமும் பெறமுடியாது. இறைவனின் விளையாட்டால் தாய்பாசம் கிடைக்காமல் போனால் அதற்காக வருத்தப்படுவது வீணான காலவிரயமாகும். நீங்கள் உறுதியோடு இருந்தால் மனைவியின் மயக்கத்தில், மகனை மறக்கமாட்டேன் என்ற உறுதி இருந்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம்.







Next Post Next Post Home
 
Back to Top