( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை அக்டோபர் 22 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தமிழன் மட்டும்தான் திராவிடனா...?

கேள்வி 4


    ந்தியாவின் வடக்கில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் ஆரியர்கள். தெற்கில் இருப்பவர்கள் அனைவரும் திராவிடர்கள் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள். இவர்களது இந்த வாதத்தை தமிழ்நாட்டில் சிலர் காதுகொடுத்து கேட்டார்களே தவிர ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ. கேரளத்திலோ யாருமே இதை பொருட்படுத்த வில்லை. நாங்கள் திராவிடர்கள் என்று தமிழர்களை தவிர யாரும் கூறவில்லை. ஒரு கேரளத்தான் தன்னை மலையாளி என்று கூறிக்கொள்வானே தவிர ஒருபோதும் திராவிடன் என்று கூறமாட்டான். எனவே தென்னிந்தியா திராவிடர்களின் இருப்பிடம் என்ற கட்டுக்கதை செல்லுபடி ஆகாது என்பதை உணர்ந்து தற்கால திராவிட பரிவாரங்கள் தங்களது பிரச்சார பயணத்தை வேறு வகையில் மாற்றினார்கள்.

வடக்கில் இருப்பவன் ஆரியன் என்றால், அவனே திராவிடர்களின் எதிரிகள் என்றால், அருகில் இல்லாத பகையாளி மீது தமிழனை கொம்பு சீவி விட முடியாது. எனவே பகையை பக்கத்தில் உருவாக்க வேண்டும் என்பதற்காக, பிராமணர்கள் என்பவர்கள் ஆரியர்கள் என்ற புதுக்கதையை ஜோடித்தார்கள். படித்தவர்கள், அரசு வேலைகளில் அதிகமாக இருப்பவர்கள் நம்மை ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்று பிராமணர்களின் மீது தமிழ்நாட்டில் ஒரு சாராருக்கு எப்போதுமே காழ்ப்புணர்ச்சி உண்டு. அந்த காழ்ப்புணர்ச்சியை வளர்த்துவிட்டு பிராமணர்கள் தவிர அனைவரும் திராவிடர்களே என்ற அரசியல் வேள்வியை வெற்றிகரமாக சில சக்திகள் வளர்க்க ஆரம்பித்தன. பிரிட்டீஷ்காரனின் ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்ட திராவிட மாயை, நாடககாரர்களின் பதவி சுகத்திற்காக பயன்படுத்தப்பட்டது. உணர்ச்சிவசப்படும் தமிழ் ஆர்வலர்கள் திராவிட மாயையில் இன்னும் மயங்கி கிடக்கிறார்கள். அந்த        மாயப்பிசாசை பாரதி சொல்வதை போல் பயமென்னும் பாம்பை பிடிப்போம் பொய்மை வாயை பிளந்து உயிர் குடிப்போம் என்றானே அதைப்போல செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது.

கேள்வி:-   திராவிடம் பற்றிய குறிப்புகள் சமஸ்கிருத இலக்கியங்களில் எந்த வகையில் கூறப்பட்டுள்ளது என்பதை எங்களுக்கு கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவே அதை விளக்கமாக எங்களுக்கு கூறவும்.

குருஜி:-  விந்திய மலைக்கு தெற்கே உள்ள பகுதியை திராவிட நாடு என்று பண்டையகால மக்களும், நூல்களும் கருதியதாக உரையாடலின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டேன். பல வேத இலக்கியங்களில் இதே கருத்து மிக தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் ஸ்ரீ மத் பாகவதம், சத்திய விரதன் திராவிட தேசத்தின் சீரிய மன்னன் என்ற ஒரு பதத்தை கூறுகிறது. வடக்கே இருப்பவர்கள் திராவிடர்களின் எதிரி என்றால் பகுத்தறிவு சங்கத்தார் கூறுவது போல இந்துமதம் என்பதே திராவிடர்களை இழிவுபடுத்தும் மதம் என்பது உண்மையானால் திராவிட தேசத்து மன்னன் ஒருவனை அந்த இலக்கியம் ஏன் பாராட்ட வேண்டும்?

கடவுள் நாராயணன் பத்து அவதாரங்கள் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதில் முக்கியமான மச்ச அவதாரம் வைகை நதியில் இருந்து அதாவது ஒரு காலத்தில் மதுரையில் செழுமையாக ஓடி இன்று அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப் பட்டு குறுகி இளைத்து மெலிந்து கிடக்கிறதே அதே வைகையில் தான் பகவானின் மச்ச அவதாரம் உருவானதாக சொல்லப்படுகிறது. பகவான் விஷ்ணு, கஜேந்திரன் என்ற யானையை காப்பாற்றியதாக கூறப்படுகிறதே அந்த கஜேந்திரன் பூர்வ ஜென்மத்தில் பாண்டியநாட்டை சேர்ந்த வைஷ்ணவனாக இருந்தவன். அவன் அரசனும் கூட. அவனது நாடு திராவிட நாடு என்று பாகவத புராணம் அழகாக சொல்கிறது. பகவான் கிருஷ்ணனின் அண்ணனும் அவதாரங்களில் ஒருவரான பகவான் பலராமர் தீர்த்தயாத்திரை சென்ற போது திராவிட நாட்டில் உள்ள வேங்கடமலை, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், தென்மதுரை, ராமர் அமைத்த சேதுபந்தம் ஆகிய இடங்களை பார்த்து விட்டு காவேரி நதியில் புனித நீராடியதாக பாகவதம் கூறுகிறது. அதே பாகவதம் தாமிரபரணி, கிருதமாலா என்ற வைகை நதி, பயஷ்வினி என்ற பாலாறு, காவேரி, மகாநதி போன்ற நதிகளின் தீர்த்தங்களை அருந்தியவர்கள் சிறந்த பக்தர்களாக வருவார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. இதைவிட முக்கியமானது பகவான் கிருஷ்ணனின் மகன் ஒருவனுக்கு திராவிடன் என்ற பெயர் உண்டு என்பதாகும்.

கேள்வி:-   இதுவரையில் திராவிடன், திராவிடர் என்றாலே வடக்கில் உள்ளவர்கள் மதிக்க மாட்டார்கள். பிராமண இலக்கியங்கள் எதுவும் திராவிடத்தை போற்றுவது இல்லை. இரண்டாம் தரமாகவே தமிழர்களை அவர்கள் பார்க்கிறார்கள் என்று இரண்டுகழகங்களும் மாறி மாறி சொல்லி வந்தததை கேட்டிருக்கிறோம். அவர்கள் கூறுவது பொய். அதில் எள்ளளவு கூட உண்மை இல்லை என்று ஆரம்ப காலத்திலேயே யாராவது விளக்கம் கூறி இருந்தால் ஓரளவு விபரீதங்கள் தடுக்கப் பட்டிருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை திராவிட பரிவாரங்களின் கைகளில் இருந்த சினிமா என்ற ஊடகமும், வெகுஜன பத்திரிக்கை என்ற ஊடகமும் மாற்றுக்கருத்தை வெளியில் தெரியாத வண்ணம் இருட்டடிப்பு செய்திருக்கலாம். இப்போதாவது உங்களை போன்றவர்கள் விழித்துக்கொண்டு செயல்பட்டால் எங்களை போன்றவர்களுக்கு தெளிவு கிடைக்கும்.

எங்களுக்கு அடிப்படையாக இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. தமிழர்களின் பண்பாடும், வாழ்வும் இந்து தர்மத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது எனவே அதுவே திராவிடர்கள் என்பவர் தமிழர்கள் என்பதற்கு சரியான உதாரணம் என்றும், தமிழ் இலக்கியங்களில் அதிகமாக இந்து சமய கருத்துக்கள் எதுவும் கிடையாது. மிக குறிப்பாக சங்க இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகள் எல்லாம் கடவுள் மறுப்பு, வேத மறுப்பு சிந்தனைகளே என்று பலர் கூறுகிறார்கள். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை உங்களால் விளக்க முடியுமா?

குருஜி:-   தமிழ் இலக்கியங்கள் வேதங்களை ஒதுக்குகின்றன என்பதே திட்டமிட்ட விஷமத்தனமானவாதமாகும். சங்ககாலம் துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் உள்ள தமிழ் இலக்கியங்கள் எதிலும் இனரீதியிலான, சனாதன தர்மத்திற்கு விரோதமான வாதங்கள் எதுவுமே கிடையாது என்று கூறலாம். திருமூலர் தமது திருமந்திரத்தில் ஆரியன் தோற்றமுன் அற்றமலங்களே என்கிறார். மாணிக்க வாசகரும் சிவபெருமானை பற்றறுத்தால் பாரிக்கும் ஆரியன் என்று அழைக்கிறார். வேதாந்த தேசிகர் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்படும் ஜாதியில் பிறந்த திருப்பாணாழ்வாரை வேதாந்த ஆரியன் என்று பட்டம் கொடுத்து வழிபடுகிறார். அத்தோடு அந்த ஆழ்வார் இயற்றிய பத்து பாடல்களில் வேதத்தின் சாரமே அடங்கி இருப்பதாகவும் மெய்சிலிர்த்து கூறுகிறார்.

சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரை காஞ்சி நகரங்களில் அந்தணர்கள் வாழ்ந்து வேதத்தை இசையோடு பாடினார்கள் என்ற தகவலும் வேதங்களை பரப்புவதால் அந்தணர்கள் புகழப்பட்டார்கள் என்ற தகவல்களும் இருக்கிறது. திராவிட தேசத்தில் உள்ள அந்தணர்களின் கிளிகள் கூட வேத மந்திரங்களை உச்சரித்ததாக பெரும்பாணாற்றுப்படை என்ற தமிழ் நூல் ரசனையோடு சொல்கிறது. சங்க இலக்கியங்கள் பலவற்றில் விஷ்ணுவின் அவதாரங்கள் பல குறிப்பிடப்படுகின்றன. வராக அவதாரம் எடுத்து உலகை விஷ்ணு காப்பாற்றினார் என்று கூறும் பரிபாடலில் உலகை மூன்றடியால் அளந்த கதை, நரசிம்ம அவதார சிறப்பு, அசூரர்களை பரசுராமர் வென்ற விதம் போன்றவைகள் மிக விரிவாக பேசப்படுகிறது. புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களில் மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றின் உதாரண கதைகள் பல காட்டபட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. உதியன் சேரலாதன் என்ற சேர மன்னன் மகாபாரத யுத்தத்தில் உணவு படைத்ததாக மகாபாரதமும் சொல்கிறது, தமிழ் இலக்கியங்களும் சொல்கிறது.

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் நிறையப்பேர் தங்களை விஷ்ணுவின் வழியில் வந்தவர்கள் என்று அழைத்துக்கொள்வதை சரித்திர ஏடுகள் நமக்கு காட்டுகிறது. சைவ சமய சின்னமான நந்தி பல்லவர்களின் ராஜ முத்திரை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே தமிழ் மன்னர்களை போல மிக பிரம்மாண்டமான ஆலயங்கள் அமைத்தது வேறு யாரும் கிடையாது என்று துணிந்து சொல்லலாம். தமிழ் மன்னர்கள் அமைத்த ஆலயங்கள் அனைத்தும் இந்து கடவுள்களுக்கே அல்லாது வேறு யாருக்கும் கிடையாது என்பதை மறுக்க முடியாது. இந்து தர்மத்தை தமிழர்கள் வெறுத்திருந்தால், மன்னர்கள் ஆலயங்களை எழுப்புவார்களா? அதற்கான மானியங்களை எழுதுவார்களா? நிச்சயம் நடந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே கால்டுவெல் போன்ற போலி சரித்திர ஆய்வாளர்களின் கருத்துக்களை நம்பி இன்றைய திராவிட பரிவாரங்கள் செய்துவரும் பிரச்சாரங்களை நம்பி அவர்கள் பின்னால் இளைஞர்கள் போகக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றுபட்ட இந்தியா தான் உலகத்தின் முன்னால் கம்பீரமாக நிற்க முடியுமே தவிர பாத்தி கட்டுவது போல் சின்னசின்ன தேசங்களாக நாட்டை பிரிக்க முயன்றால் அது விபரீதமாக மட்டுமல்ல, அவமானமாகவும் போக கூடும். தனி தமிழ்தேசியம் திராவிட வாதம் என்பவைகள் பாலைவனத்தில் விழும் விதைகளுக்கு சமமானது. அது முளைத்து மரமாக வருமென்று யாராவது கனவு கண்டால் அது பகல் கனவே.

 முற்றும்


http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG
+ comments + 8 comments

Anonymous
20:03

It is an eye opener for the youngsters in TN. Guruji, my request to you, kindly address these issues and give explanations in TV channels in TN like Cho Ramasamy's Enge Brahmanan episodes in TV or Velukkudi Krishnan's Ramayana preachings,etc,.Since you are addressing hostorical facts and events it will reach larger audience and benifits will be more. If you wish to do that, kindly send your answer in this page so that we can try to have such programmes in TV.Great job you are doing for the society.... Panivana vanakkam.

Anonymous
08:53

புறநானூறு 335, பாடியவர்: மாங்குடி கிழார், திணை: வாகை, துறை: மூதின் முல்லை - பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை
அடலருந் துப்பின் .. .. .. ..
… குரவே தளவே குருந்தே முல்லை யென்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இரும் கதிர்த் தினையே
சிறு கொடிக் கொள்ளே பொறி கிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந் நான்கல்லது குடியும் இல்லை
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

Puranānūru 335, Poet: Māngudi Kilār, Thinai: Vākai, Thurai: Moothin Mullai – Parts of this poem are missing
Of strength difficult to overcome………
There are no flowers other than these four
- kuravam, thalavam, kuruntham and mullai,
there are no foods other than these four
- varaku with black stems, large-eared thinai,
kol on small vines, and spotted avarai beans,
and there are no groups other than these four
- thudi drummers, pānars, parai drummers and
Katampans. There are no gods, other than the
memorial stones of heroes who blocked enemies,
killed their elephants with lifted, bright tusks
and got killed, to be worshiped with rice showerings!

Anonymous
09:07

நீங்கள் கூறும் கண்ணன் ஒரு திராவிட /தமிழ் அரசனே. இன்று உள்ள வாடா இந்தியாவில் இருந்து கடலில் மூழ்கிப்போன குமரிக்கண்டம் முதல் தமிழனாய் இருந்தான். மத்திய ஆசியாவில் இருந்து வந்த நாடோடி காட்டு மிரண்டிகலே இந்த ஆரியர்கள். கண்ணனை வைத்து ஆரியன் கட்டிய கட்டுகதைகள் ஆராலம்...கீதையும் சேர்த்துதான். சமஸ்கிருதம் என்ற ஒன்றை உருவாக்கி தமிழில் இருந்த எல்லா இலக்கியங்களையும் அதி மொழி பெயர்த்து...மூல நூலை அழித்துவிட்டார்கள். சிறிய எண்ணிக்கையில் இருந்த இவர்களால் இன அழிப்பை செய்ய முடியவில்லை, அதனால்...அந்த இன அழிப்பை மொழி அழிப்பிலிருந்து தொடங்கி சமஸ்கிருதத்தை தமிழ் மொழியில் கலந்து...தெலுஇங்கு, கன்னடம்..மலயாளம் என்று மொழிகளை உண்டாக்கி அவர்கள் தமிழர்கள் , திராவிடர்கள் என்ற அடையாளம் இல்லாமல் செய்தார்கள். ஆரிய வந்தேறிகளும் ஆரிய அடிவருடிகளும்...மிக கொடுமையானவர்கள்..இந்து அன்ர மதம் தமிழனுக்கும் திராவிடனுக்கும் தொடர்பற்ற ஒன்று. திராவிடன்/தமிழன் இயற்கை வனைங்கியவன்..உன் ஆரியம் சொல்வதுபூல்...10 தலைகளும்..20 கைகளும் ...புராண புளுகும்...ஜாதியமுறைகளும்...வர்ணசிரம்ன்களும்ம்...ஜாதியால் திராவிடனை அடிமையாக்கியதுதான் ஆரிய *ய்களின் வேலை...அந்த பித்தலாட்ட வெளுகளை உம போன்றோர் காலம் காலமாக செஇதுகொட்னு இருக்கிறார்கள்.

Anonymous
12:21

@ Anonymous 1
Thanks for your Suggestion
Try to have to get chance in T.V
If you need any further Suggestions and Clarification
Please revert back to 8110088842.
Thanks

Sriram
06:16

வணக்கம்!

குருஜி சொல்வதுபோல் சங்க இலக்கியங்களில் மட்டுமல்ல திருக்குறளிலும் திருமால் மிக அதிகமாகவே வர்ணிக்கப்பட்டுள்ளார்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் ஆயதெல்லாம் ஒருங்கு - மடியின்மை

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால் பிறவாழி நீத்தல் அரிது
அறம் என்னும் சக்கரத்தை உடைய "அந்தலன்" - முடிவுல்லாதவன் தாள் சேர்ந்தார்கல்லால் பிறவி என்னும் ஆழியை கடக்கமுடியாது

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்

மலர்மீது அமர்ந்த மால் அடி சேர்ந்தால் புவியில் நீடு - நெடுங்காலம் வாழ்வார் என்பதே!

Sriram
06:26

ஐயர் என்றோ சாதியை விட்டு விட்டான். ஆனால் இன்றும் (பிராமணர் அல்லாத) உயர் இந்து சாதிகளைச் சேர்ந்தவர்களே சாதிகள் நிலைக்கக் காரணம்.

ஸ்ரீரங்கத்தில் இன்றும் பெருமாள் வருமுன் பறையடிப்பவர் யார்?

முட்டாள் தமிழன் திராவிடம் என்பது நிலம் மட்டுமே சாதி இல்லை என்பதை உணர்ந்திருந்தால் சாதி வாரி ஓட்டுப்போட்டு ஒடுங்க்கிப்போக மாட்டான்!

Anonymous
02:05

ஆரியம் நன்று தமிழ் தீதென்று உரைத்த
காரியத்தார் காலகோட்பட்டானை- சீரிய
அந்தன்பொதிய லகயதியான ஆணையார்
செந்தமிழே தீர்கசுவாக..
ஆரியம் முதலிய பதினென் பாடையில்
பூரியர் ஒருவழி புகுந்ததாம் என்க

என்பனவற்றில் உள்ள ஆரியம் என்ற சொல் தமிழர்களால் வாடா மொழியை குறிக்க பெற்றது. திராவிடா என்பது தமிழ்மொழியையும் திராவிட தேசமு என்பது தமிழ்நாட்டையும் தெளுங்கர்களால் குறிக்கபெற்றது. தெலுஇங்க் அகரமுதலி "திராவிடம்" என்ற சொல்லை வடமொழியில் இருந்து வந்தது என்று சொல்லாமல் "தமிழ்" சொல் என்று சொல்கிறது. தமிழ் மொழி பேசிய நாட்டுபகுதிகளை வடவர்கள் "திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினர்".
பகவத வசனம் ஒன்பதாவது ஸ்கந்தம் , முதல் அத்தியாயம் "திராவிட தேசாதிபதியான சத்தியவிரதன் என்கிற ரசரிஷியானவன் .....என்னால் கேட்கப்பட்டது.
ஆரியர் மிலேச்சர் என்று திவாகரம் கூறுகிறது. "ஆரியன் கண்டாய் திலன் கண்டாய் (தேவாரம் 844:5) என்று திருநாவுகரசர் ஆரியனையும், தமிழனையும் வேறுபடுத்தி பாடியுள்ளார். விந்தியமலைக்கு தெற்கே வாழ்ந்த பார்பான்கள் திராவிட பிராமணர்கள் என்று ஆரிய பிரமனர்களால் அழைக்கபெற்றது. வடக்கு பிராமணர்கள் தெற்கே வந்தபோது இங்கு இருந்த பார்பனர்களையும் பிராமணர்கள் என்று சேர்த்து கொண்டார்கள். உண்மையில் "தமிழ் பார்பனர்கள் வேறு வாடா நாட்டு பிராமணர்கள் வேறு" தமிழ் பார்பனர்களையும் சேர்த்து அவர்களையும் வேதம் படிக்கச் சொல்லி திராவிட பார்பனர்களையும் ஆரிய பிரமணர்களாக மாற்றிவிட்டார்கள். உ.வே.சாமிநாத ஐயர் தனக்குள் இருந்த தமிழ் உணர்வால்தான் தமிழ் நூல்களை அச்சிட்டார். இது ஒன்றும் தற்செயலாக நிகழ்ந்த ஒன்று அல்ல. தமிழ் பார்பனர்களும் ,ஐயரும் பிராமணர்கள் அல்ல தமிழ் இலக்கியத்தில் இவர்களை அந்தணர் என்று குறிகிரார்கள் , வடக்கிலிருந்து வந்த ஆரிய கும்பல் நாங்களும் அந்தணர்கள், பார்பனர்கள் என்று கூறி இங்கு இருந்த அந்தணர்களை பிராமணர்களால் சேர்கபட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எண்ணிக்கையில் மிக சிறிய அளவில் இருந்தார்கள். சுமார் 1300 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு உள்ள தமிழ் அரசர்கள் மேலும் சிலரை கஷ்மீர் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வந்து இங்கு குடி அமைத்து தனக்கு தனி சூன்யம் வைத்து கொண்டார்கள். என்னால் சங்க இலக்கியத்தில் இருந்து இதற்கு சான்று தர முடியும்.

Anonymous
00:38

Dravidian: This group came to India from the Southwest Asia and appear to be people of the same stock as the peoples of Asia Minor and Crete and the pre-Hellenic Aegeans of Greece. They are said to have built the city civilization of the Indus Valley, whose remains have been found at Mohenjodaro and Harappa and other Indus cities. The Dravidians spread to the whole of India, supplanting Austrics and Negritos alike. Dravidians comprise three sub-types, Paleo-Mediterranean, the true Mediterranean and Oriental Mediterranean

Nordics: Nordics or Indo-Aryans are the last immigrants into India. Nordic Aryans were a branch of Indo-Iranians, who had originally left their homes in Central Asia, some 1500 years ago, and had settled in Mesopotamia for some centuries. The Aryans must have come into India 1700 CE. Their first home in India was western and northern Punjab, from where they spread to the Valley of the Ganga and beyond. These tribes are now mainly found in the Northwest and the Northwest Frontier Province.


Next Post Next Post Home
 
Back to Top