Store
  Store
  Store
  Store
  Store
  Store

பல்வலியும் மரண வலியும் ஒன்றா?



    குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு வயது ஐம்பது ஆகிறது. அடிக்கடி மரண பயம் வருகிறது. விபத்தோ, நோயோ ஏற்பட்டு இறந்து விடுவோமோ என்ற அச்சம் வருகிறது. பிறந்தவன் அனைவரும் ஒருநாள் இறக்க வேண்டும். மரணத்தை வெல்ல முடியாது. இதுவரை வென்றவர்கள் யாரும் இல்லை  என்று அறிவு சொன்னாலும், மனதிற்கு அது தெரியவில்லை. சில காலமாக உங்களை அறிவேன். உங்கள் எழுத்துக்களும், கருத்துக்களும் எனக்குள் பல மாறுதலை, ஆறுதலை தந்திருக்கிறது. உண்மையில் உங்களை முழுமையாக அறிந்த எவருக்கும் அச்சம் வரவேண்டிய தேவை இல்லை. நான் அறியாதவன், பக்குவம் இல்லாதவன். எனவே எனக்கு சுவாமி அவர்கள் தக்க வழிகாட்டி உதவுமாறு பாதம் தொட்டு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சதாசிவ சர்மா,
மைலாப்பூர்.



    ரணம் என்பது நாம் நினைப்பது போல, அவ்வளவு கடினமானது அல்ல. மரணத்தை பற்றி மருத்துவ சாஸ்திரம் சொல்வதை கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். பல்லைப்பிடுங்கும் போது ஏற்படும் வலி கூட மரணத்தின் போது ஏற்படாதாம். யோக சாஸ்திரமும், மரணத்தை கொடுமையானதாக கருதவில்லை. ஒரு கிளையில் இருக்கின்ற பறவை, இன்னொரு கிளைக்கு தாவுவது போன்று தான் இந்த உடலிலிருந்து அடுத்த உடலுக்கு ஆத்மா தாவுகிறது என்கிறது.

மருத்துவமும், யோகமும் மரணத்தை இவ்வளவு சுலபமானது  என்கிற போது மனிதர்கள் மட்டும் ஏன் அதை விரும்புவது இல்லை? காரணம் ஒன்றே ஒன்று தான். நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு வகையில் எதிர்காலத்தை விரும்பியே வாழ்கிறோம். இன்று கிடைக்காத சுகம் நேற்று கைவிட்டு நழுவி போன சுகம் நாளை கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறோம்.

மரணம் இந்த நம்பிக்கைக்கு முட்டுக்கட்டையாக வந்து அமைகிறது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை உண்டா? இல்லையா? என்று நிச்சயமாக நமக்கு தெரியாது. இறந்தவர் மீண்டும் பழைய உடம்போடு நம் முன்னால் நடமாடவில்லை அதனால் மரணத்தோடு எல்லாமே முடிந்து விடுகிறது என்று நம்புகிறோம். இதனால் நாளைய சுகத்தை அனுபவிக்காமலே போய்விடுவோம் என்ற ஏக்கத்தின் அடிப்படையிலேயே மரண பயத்தின் காரணமாக இருக்கிறது.

மரணம் முடிவல்ல. இன்னொரு ஆரம்பத்தின் துவக்கமே மரணமாகும் என்ற எண்ணம் வலுவாக நமக்கு ஏற்படும் போது மரண பயம் விலகி விடுகிறது. ஐம்பது வயது என்பது இளமையை விட்டு முதுமைக்கு அடியெடுத்து வைக்கும் பருவமாகும். இந்த பருவத்தின் தளர்ச்சியும், மயக்கமும் தடுமாற செய்வது இயற்கை. மிக கடினமான உடல் உழைப்பு இருப்பவர்களுக்கு இது ஏற்படுவது இல்லை. மூளையால் உழைப்பவனே குழப்பத்திற்கு ஆளாகிறான்.

நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஜாதகம் நீண்ட ஆயுள் உடையவர் என்பதை தெளிவாக காட்டுகிறது. அகால மரணத்தை பற்றிய பயத்தை போக்க மார்கண்டேயனை, எமனிடமிருந்து பாதுகாத்த சிவபெருமானை வழிபடுங்கள் குறிப்பாக சொல்வது என்றால் திருக்கடையூர் சென்று சுவாமி தரிசனம் செய்து உங்களால் முடிந்த தானங்களை முடியாதவர்களுக்கு செய்யுங்கள். இறைவனின் அருள் எப்போதும் உங்களுக்கு சாத்தியமாகும்.


Contact Form

Name

Email *

Message *