( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஆரத்தி எடுப்பது எப்படி?    குருஜி அவர்களுக்கு வணக்கம். நாங்கள் வெளிநாட்டில் வாழ்கிறோம். எங்களுக்கு பல ஹிந்து சம்பிரதாயங்கள் எப்படி செய்வது என்று தெரியவில்லை. சொல்லிக்கொடுப்பதற்கும் சரியான ஆட்கள் இல்லை இதனால் எங்கள் குழந்தைகளுக்கு நமது மரபுகள் முற்றிலுமாக அன்னியப்பட்டு கொண்டே வருகிறது. அதை மாற்றுவதற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கடவுள் தான் எங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் இப்போது நான் உங்களிடம் ஆரத்தி எடுப்பது சம்மந்தமாக சந்தேகத்தை கேட்க விரும்புகிறேன் ஆரத்தி எப்படி எடுக்க வேண்டும் ஏன் எடுக்க வேண்டும் என்பதை எளிமையாக விளக்க முடியுமா?

இப்படிக்கு,
குமுதினி மகிழ்ந்தன்,
கனடா.   ப்போதைக்கு இருபது வருட காலத்திற்கு முன்பு கூட வீடுகளில் பாட்டிமார்கள் இருப்பார்கள். இன்று நாகரீகம் வளர்ந்து விட்டது. பருத்தியை நூற்று கதராடைகளாக மாற்றிய கைராட்டைகளை பரண் மீது போட்டுவிட்டது போல நிறைய பாட்டிமார்களை முதியோர் இல்லங்களில் போட்டு விட்டோம். இதனாலேயே பல சமூகக்கேடுகள் நிறைந்து விட்டது எனலாம். எனக்கு ஒரு வருத்தம் வருகிறது. வெளியில் சொல்ல முடியாத சங்கடம் வருகிறது என் முகக்குறிப்பை வைத்தே ஐயா! இராசா உனக்கென்ன தொல்லை. எதுவாக இருந்தாலும், பாட்டியிடம் சொல்லுடா என்று ஆதரவாக தலையைத்தடவி கொடுத்து பாட்டி கேட்பாள். நானும் அம்மாவிடம் சொல்லமுடியாத இரகசியத்தை கூட பாட்டியிடம் சொல்வேன். பாட்டி எனக்கு வழி காட்டுவாள். நான் தற்கொலையை தேடமாட்டேன். மன அழுத்தத்தில் விழ மாட்டேன். சர்க்கரை நோயும், மாரடைப்பும் என்னிடம் வருவதற்கு யோசிக்கும்.

பாட்டி ஆறுதல் மட்டும் தருகின்ற ஒரு உயிரா? இல்லை பாட்டிக்கு மருத்துவம் தெரியும். பதினாறடி அகலத்தில் சிறிய அறை கட்ட வேண்டும் என்றாலும் எத்தனை செங்கல், எவ்வளவு மண், ஆட்கூலி என்ன என்று பாட்டிக்கு தெரியும் பாட்டிமார்களின் ஆலோசனைகளினால் பல சொத்து வழக்குகள் கூட நீதிமன்றம் செல்லாமல் வீட்டுத்திண்ணையிலேயே முடிந்து போயிருக்கிறது. பணம் தேடுகிற வேட்டையில் நமது ஆதாரங்களை அறுத்து போட்டுவிட்டு அம்மணமாக நிற்பது போல, பண்பாடுகளை தேடிக்கொண்டு அனாதைகளாக இன்று நிற்கிறோம். பண்பாடுகளை இழந்துவிட்டால், மனதில் உள்ள இரக்கம் போய்விடுகிறது. அன்பு போய்விடுகிறது மனித மனமே உணர்ச்சிகள் அற்று காய்ந்த பாலைவனமாக மாறிவிடுகிறது.

ஆனால் இந்த கேள்வி கேட்கும் அம்மையாரையும், அம்மையாரை போன்றோரையும் நான் இந்த வரிசையில் சேர்க்க மாட்டேன். இவர்கள் பணம் சம்பாதிக்க அந்நிய தேசம் போனவர்கள் அல்ல. உயிரை காப்பாற்றி கொள்ள மானத்தோடு வாழப்பிறந்த நாட்டை விட்டு அந்நிய நாட்டை தேடி ஓடிய அபலைகள் இவர்கள். ஓடுகிற வேகத்தில் பண்பாடு சொல்லுகின்ற ஆசிரியர்களையும், அழைத்துக்கொண்டா ஓடமுடியும் எனவே பரிதாபத்திற்குரிய நீங்களும், தமிழ்நாட்டு தகைசார்ந்த தமிழர்களும் ஒன்றல்ல ஒரே வரிசையில் வைத்து பார்க்க கூடியவர்களும் அல்ல. எனவே உங்கள் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்லவேண்டிய கடமை இருக்கிறது.

ஆரத்தி எடுப்பது என்பது இரண்டு வகைப்படும். ஒன்று கோவிலில் இறைவனுக்கு எடுக்கும் ஆரத்தி. இன்னொன்று வீடுகளில் மனிதர்களுக்கு எடுக்கும் ஆரத்தி. ஆரத்தி எடுப்பது என்றாலே ஒருவித திருஷ்டி சுற்றுதல் என்பது தான் பொருளாகும். அலங்காரம் முடிந்து சுப நிகழ்சிகளில் பங்குபெற்று பலரின் கண்ணடிகளை பட்டதற்கு பரிகாரமாக ஆரத்தி எடுக்கப்படுகிறது. தெய்வங்களுக்கு எடுக்கும் ஆரத்தி, மஞ்சள் குங்குமத்தை சுத்தமான நீரில் கரைத்து இரண்டு நெய்விளக்குகள் ஏற்றி எடுக்க வேண்டும். எடுத்து முடித்த பிறகு அந்த நீரை மனிதர்கள் காலடி படாத துளசிச்செடியில் ஊற்ற வேண்டும்.

மனிதர்களுக்கு ஆரத்தி எடுத்தால் சுண்ணாம்பையும், மஞ்சளையும் கரைத்து நடுவில் கற்பூரம் ஏற்றி எடுக்கலாம். அதன்பிறகு அந்த நீரை வீதியில் அல்லது வீட்டு வாசலில் ஊற்றி விடலாம். இவ்வளவு விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் சொன்னால் குழப்பங்கள் தான் வரும் எனவே மரபுகளை மீறாமல் பண்பாடுகளை கடைபிடியுங்கள். நல்லது நடக்கும்.


+ comments + 2 comments

குருஜி ........அவர்களுக்கு.... நன்றி.....

வாசகியின் பெயர் 'குமுதினி மகிழ்நன்' என்றிருக்க வேண்டும் என் நினைக்கிறேன். த்வறென்றால் மன்னிக்கவும்.


Next Post Next Post Home
 
Back to Top