( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கொத்தி தின்னும் கோழி


ண்ணாடியை பார்க்கிறேன்
கன்னம் முழுவதும்
கறுப்பாய் தெரிந்த தாடி முடிகள்
வெளுத்து நுரையாகி
வெண்மையாய் வடிகிறது
துடித்து நின்ற
மீசை கூட
படிந்து கிடக்கிறது
கிழக்கே பார்க்கும்
அந்தி நிழலாய்
முடியும் காலத்தை
முட்டி முட்டி பார்க்கிறது
வெள்ளை புருவங்கள்
ஆகா
காலம் என்னை
அபகரித்து விட்டது

யானையின் தந்தத்தால்
செத்துக்கிய சீப்பும்
சந்தன மரத்தால்
கட்டிய கட்டிலும்
தங்கமுலாம் பூசி
வடித்த செருப்பும்
இரும்பு பெட்டியில்
உறங்கி கொண்டிருக்கிறது
யார் வந்து தட்டிச்செல்வார்களோ என்று
உறங்காமல் பயந்து துடிக்கிறேன்
ஆகா
ஆசை என் வீரத்தை அபகரித்துவிட்டது

துரியோதனன் சபையில்
தர்மத்தை விற்க சென்று
விற்காத பொருள்களை
கடைகட்டி கிளம்பிய
விதுரன் என்ற ஞானி சொன்னான்
பொறாமை தர்மத்தை அபகரித்துவிடும்.
கோபம்
செல்வத்தை அபகரித்து விடும்.
காமம்
வெட்கத்தை அபகரித்து விடும்.
கர்வம்
நல்லவைகள் அனைத்தையும்
அபகரித்து விடும்.

அபகரிக்கும்
நெருப்பு துண்டங்கள் அனைத்தையும்
விழுங்கி தின்றுவிட்டு
தண்ணீர் குடித்து கொப்பளிக்க பார்க்கிறேன்
காலம் என்ற கோழி
முள்ளான அலகெடுத்து
கொத்தி கொத்தி
என்னை அபகரிக்க பார்க்கிறது.


http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG
+ comments + 3 comments

ஸ்ரீராம்
10:37

குருஜியின் பதிவு அருமை!

எனக்கும் ஒரு சிறுகவிதை தோன்றியது!


காலம் என்பவன் இரக்கமற்றவன்!

ஏதுமறியாக் குழந்தை என்னை

கர்வம் கொண்ட இளைஞ்சனாக்கி

எதுவும் செய்ய முடியாக் கிழவனாக்கி

பார்த்து மகிழ்பவன்!

குருஜியின் கவிதை என்னை அபகரிக்க பார்க்கிறது.

ATTN all, Krishna, Devi, Shiva, Kali, rudra, ramba, Durga, Agni, varunu, Vishnu, Brahma, prajapati, (all Hindu gods) are my parents and families. I'm jeshu JAH mashiach avatar, "sar ha-olam judgment has started, " all kingdoms, religions, laws will be destroyed forever as new 5th cycle of life started on 15 Nisan 5774 "new world kingdom" love jeshu JAH mashiach avatar


Next Post Next Post Home
 
Back to Top