( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க வழி    குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு முப்பது வயது முடிவடைந்து விட்டது. என் கணவர் சொந்தமாக வியாபாரம் செய்கிறார். எனக்கு இதுவரை மூன்றுமுறை கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது. என் கர்ப்பப்பை குழந்தையை தாங்கக்கூடிய சக்தி உள்ளதாக இல்லையென்று டாக்டர்கள் கூறுகிறார்கள். நானும் என் கணவரும், இதனால் மிகவும் வருந்துகிறோம். எங்களுக்கு குழந்தை இருக்குமா? என்பதை நீங்கள் சொல்லுங்கள். உங்கள் வார்த்தைக்காக காத்திருக்கிறோம்.

இப்படிக்கு,
உஜிலாதேவியின் நிரந்தர வாசகி,
மெர்லின் ஜான்சுந்தர்,
திருநெல்வேலி.    ருவரது ஜாதகத்தில், லக்கினத்திற்கு ஐந்தாமிடத்து அதிபதியோடு ராகுவும், செவ்வாயும் சேர்ந்திருந்தாலும் அல்லது செவ்வாயும், சூரியனும் அந்த அதிபதியை பார்த்தாலோ குருவோடு, சனியும் இணைந்திருந்தாலோ ஐந்தாம் இடத்தில் சனி நீசம் பெற்று அமர்ந்திருந்தாலோ கருச்சிதைவு ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு மேற்குறிப்பிட்ட கிரகங்களின் ஆகர்ஷனத்திலிருந்து தப்பித்துக்கொள்ள மிகச்சிறந்த மார்க்கத்தை அரசமரம் ஒன்றே தருகிறது. அரசமரத்தின் காற்று, அரசமரத்தின் நிழல், அரச இலைகளின் ஸ்பரிசம் போன்றவைகள் அடிக்கடி ஏற்பட்டால், அதாவது தினந்தோறும் ஏற்பட்டால் கிரகங்களால் வரும் கருச்சிதைவு தோஷம் விலகுமென்று ஆயுர்வேதமும் கூறுகிறது.

இதனால் தான் பிள்ளைவரம் வேண்டி அரசமரத்தை சுற்றி வாருங்கள் என்று நமது பெரியவர்கள் கூறினார்கள். ஆனால் நாம் நாகரீகம், விஞ்ஞான வளர்ச்சி பகுத்தறிவு என்ற மேதா விலாசங்களால் அரச மரத்தை விட்டுவிட்டு ஆஸ்பிட்டலை சுற்ற ஆரம்பித்து விட்டோம். அதன் கேடு நமது உடம்பில் ஓராயிரம் நோய்கள் குடிகொள்ள ஆரம்பித்து விட்டன.

தினசரி காலையில் அரசமரத்தை வலம் வருவது மிகவும் நல்லது. கிரகதோஷம் மாறி கண்டிப்பாக குழந்தை பிறக்கும். மேலும் திருநாகேஸ்வரம் சென்றும் வழிபடலாம். கருமாரியம்மன், காமாட்சியம்மன் போன்ற அம்பாள் வழிபாடு கூட கருச்சிதைவை தடுக்குமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

நமது சித்தர்கள் கருச்சிதைவு கருதங்காமை போன்ற கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட தொல்லைகளுக்கு பல நல்ல மருந்துகளும், மந்திர வகைகளும் கூறி உள்ளார்கள். அவற்றை முறைப்படி பயன்படுத்தினால் மிக கண்டிப்பாக குழந்தையே பிறக்க வாய்ப்பில்லை என்று கைவிட பட்டவர்களுக்கு கூட குழந்தை பிறக்கும்.


+ comments + 2 comments

Sriram
11:54

கர்ப்ப ரக்ஷாம்பிகை கோவில் இதற்கென்றே புகழ் பெற்ற தலாம்! குருஜி இதையும் தெரிவித்திருக்கலாமே?

கும்பகோணத்திற்கும் மாயவரத்திற்கும் இடையே உள்ளது கர்பரக்ஷாம்பிகை கோவில்!

Anonymous
17:45

The fame of the temple mentioned by Mr. Sriram, rests largely upon the Goddess Shri Garbharakshambika (an avatar of Goddess Parvati) who offers protection to, the human embryo.
Pregnant women from elsewhere come here and pray to the God and Goddess for a safe child birth. No one in this place has ever had a miscarriage or pregnancy problem.
So the affected person (mrs. Merlin) may go and pray Goddess Shri Garbharakshambika for her miscarriage problem. Apart from doing this, as guruji mentioned, the person should take herbal medicines, and as a supplementary to these medicines she can chant some mantras.
The address of Goddess Shri Garbharakshambika is given below.
Arulmigu Mullai Vananathar Thirukovil,
Thirukkarugavur (P.O), Papanasam Tk., Thanjavur Dt.,
Tamil Nadu 614 302
Phone number : 04374 273423
Mobile number :08870058269


Next Post Next Post Home
 
Back to Top