( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தாலி இல்லாத இல்லறமா?
ணக்கம் ஐயா. உங்கள் கட்டுரைகள் அருமை. எனக்கு நல்ல வாசிக்கும் பக்கங்களாக அமைகின்றன. மிக்க நன்றி ஐயா.

என் கேள்வி. திருமணத்தில் தாலி கட்டுவதின் சிறப்புகள் என்ன? சில தோஷங்கள் இருப்பதால் தாலி கட்டாமலே குடும்பம் நடத்துவது தர்மமா? நல்ல பதிலை அளிப்பீர்களாக.

இப்படிக்கு,
உஜிலாதேவி வாசகி,
Bebe Abdullah.
   நேற்று வரை ஒருவருக்கொருவர் அறிமுகமே இல்லாமல் இருந்த ஆணையும், பெண்ணையும் உருவத்தால் இரண்டாக இருந்தாலும், உணர்வுகளால் ஒன்றாக்கி இல்லறம் என்ற நல்லறத்தை நடத்துவதற்கு உலகம் கொடுக்கின்ற அதிகாரச்சின்னமே தாலி.

தாலி என்பது பெண்ணுக்கு போடப்படும் வேலி. அடிமையின் சின்னம் என்று சில பகுத்தறிவுவாதிகள் மேடை போட்டு பேசுவார்கள். தாலி பெண்ணை அடிமைப்படுத்தவில்லை. அவளை இல்லத்தின் அரசியாக உயர்த்துகிறது என்றே சமூகத்தில் உள்ள நடைமுறைகள் நமக்கு காட்டுகிறது.

தாலி என்ற பந்தம் இல்லை என்றால் ஆணும், பெண்ணும் நடத்துகிற இல்லறம் ஒரு ஒப்பந்தமாகிவிடும். எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளலாம். பிறகு வசதிப்பட்டால் இணைத்துக் கொள்ளலாம் என்றாகிவிடும். இன்றைய காலகட்டத்தில் ஆசைவயப்பட்ட மனிதர்கள், இல்லறத்தை இப்படி கேலிப்பொருளாக மாற்றி வருகிறார்கள். என்பதை நான் மறுக்கவில்லை. இருந்தாலும் இன்று கூட சமூக அமைப்பு கட்டுக்குலையாமல் இருக்கிறது என்றால் அது தாலியின் மீதுள்ள மதிப்பும், மரியாதையுமே ஆகும்.

இந்தியாவுக்கு பல வகையிலும் வெளிநாட்டிலிருந்து வருமானம் வருகிறது. அந்த வருமானத்தில் நூற்றுக்கு அறுபது சதவிகிதம் அயல்நாட்டில் பாடுபடும் மனிதர்கள் தன் குடும்பத்தாருக்கு அனுப்பும் பணமே ஆகும். இந்தியாவில் உள்ள குடும்ப முறை நாட்டின் அந்நிய செலவாணியை காப்பதற்கு உதவுகிறது என்றால், இந்த குடும்ப முறையை ஆழ்ந்து, அகன்று சிந்தித்து உருவாக்கிய மேதைகளின் அறிவாற்றல் எத்தகையது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தாலி அணிகிற பழக்கம் அனைத்து மதங்களிலும், அனைத்து சமூக குழுக்களிலும், சிறிய மாறுபாடுகளுடன் இருந்தாலும் பொதுவாக இருந்து வருகிறது மஞ்சள் கயிறு, கறுகுமணி, தங்கச்சங்கிலி மட்டும் தாலி அடையாளம் அல்ல. விரலில் மாற்றிக்கொள்ளும் மோதிரம் கூட, தாலியின் இன்னொரு வடிவமே.

இந்த ஆணும், இந்த பெண்ணும் முறைப்படி தாலி கட்டி வாழ்ந்தால் கெடுதி ஏற்படும். எனவே தாலி கட்டாமல் குடும்பம் நடத்தினால் தோஷம் நீங்கும் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. சிலர் அவர்களாக உருவாக்கிய பழக்கங்களினால் அப்படி இருக்கலாமே தவிர அதற்காக சாஸ்திரத்தின் பெயரை கூறி அதை அவமானப்படுத்தக்கூடாது. தாலி கட்டாமல் குடும்பம் நடக்கிறது என்றால் அதை எந்த மதமும் குடும்பமாக ஏற்றுக்கொள்ளாது. அப்படி வாழ்பவர்கள் என்னை பொறுத்தவரை நாங்கள் தம்பதியினர் என்று பகிரங்கமாக அறிவிக்க தைரியம் இல்லாதவர்கள் என்றே சொல்வேன்.


+ comments + 3 comments

ஸ்ரீராம்
08:07

ஐயா

இன்று விவாகரத்து சட்டச் சிக்கல் மேலைநாடுகளில் அதிகம் உள்ளதால் இந்த திருமண்மின்றி வாழுதல் என்பது பழக்கத்தில் வந்து விட்டது. அது இன்று சில புகழ் பெயர் பெற்ற சமூகத்தை திருத்தக்கூடிய நிலையில் உள்ள பெரிய மனிதர்களால் உரிமைச் சாயம் பூசப்பட்டு இந்தியாவிலும் வந்து விட்டது என்பதே வெட்கக் கேடு!

கணவனும் மனைவியும் என்றாகி ஒன்றாய் வாழ்ந்து பெற்றெடுக்கும் பிள்ளைகளே நல்ல மனிதர்களாக வளர முடியும் என்பதில் இக்கருத்து இருக்க முடியாது!

நல்ல பதிவு!

வணக்கம்


தாலி , மோதிரம் என உலகில் திருமணத்திற்கு பல குறியீடுகளும் சடங்குகளும் உள்ளன . எதுவும் புனிதமானதோ உன்னதமானதோ அல்ல . அவர்வர் விருப்பம் சார்ந்தது . மனங்களின் சங்கமும் சட்டரீதியான பதிவும் மிக அவசியம் . மற்றெல்லா புறச்சடங்குகளும் அர்த்தமற்றவை . திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதை இந்திய - தமிழ் சமூகம் ஏற்கும் அளவுக்கு இன்னும் மனப்பக்குவப் படவில்லை . திருமணமான பெண்ணுக்கு தாலி அடையாளம் ஆணுக்கு எது அடையாளம் என்பதே என் கேள்வி . எதுவானாலும் இருவருக்கும் சமமாகப் பொதுவாக அமையும் நிலை நோக்கி மெல்ல நகர்வோம்.

ஸ்ரீராம்
10:24

வெள்ளையர் வாழ்வில் திருமணம் என்பது ஒரு பாரம். அதாவது குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைத்தட்டிகழிப்பதன் முதல் படியே திருமணைத்தை தவிர்ப்பது.

திருமணம் என்பது இருமனம் ஒன்றி வாழ்வது! அதற்கு விட்டுக்கொடுத்து வளைந்து கொடுப்பது அவசியமாகிறது! தான் தனது என்வாழ்க்கை என்னும் சுயநலமே திருமணத்தை முறிக்கிறது. ஆணானாலும் பெண்ணானாலும் இது பொருந்தும்.

பார்ப்பனர்களில் முற்காலத்தில் வெற்றூடம்பில் உள்ள பூணூல் திருமணமானவரா illaiyA என்பதைக் காட்டிக்கொடுத்து விடும். அதுபோல் பெண்டிரில் மெட்டி என்பது காட்டிக் கொடுக்கும்!

தாலியும், மெட்டியும் திருமணமான பெண்ணை மதிப்பதற்காகத்தானே ஒழிய அடிமைப்படுத்த அல்ல.

தாலியுடன் அ மோதிரத்துடன் ஒருபெண்ணோ/ஆணோ அவருடன் ஒரு வேற்று ஆணோ/பெண்ணோ ஒருநிமிடம் சிந்திக்க உதவுவதே அன்றி பிற்போக்கானதன்று.


Next Post Next Post Home
 
Back to Top