Store
  Store
  Store
  Store
  Store
  Store

தூக்கமின்மையை போக்கும் மந்திரம்



    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் உங்கள் பதிவுகளை பலநாள் படித்து வருகிறேன். இரவு பகலாக படித்து வருகிறேன். இப்படி நான் சொல்வதற்கு கண்டிப்பாக காரணம் இருக்கிறது. எனக்கு இரவு நேரத்தில் சரியான உறக்கம் வருவது இல்லை. அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் உறங்கினால் அதிசயம். ஒன்றரை வருடமாக இந்த வியாதியால் அவதிப்படுகிறேன். மாத்திரைகள் போட்டால் தூக்கம் வருகிறது. ஆனால் அதன் வீரியம் உடலை நடுநடுங்கச்செய்துவிடுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் உறக்கம் வராதா? என்று தொடர்ந்து படிக்கிறேன். அதுவும் நீங்கள் எழுதும் சுவாரஸ்யமான விஷயங்களால் வருகின்ற உறக்கமும் ஓடி போய்விடுகிறது. இருபத்தைந்து வயது பையன் உறங்காமல் இருந்தால் ஊரில் வேறு மாதிரியாக பேசி விடுவார்கள். எனவே நான் நன்றாக தூங்க வழி கூறுங்கள் இப்படியே போனால் பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயமாக இருக்கிறது.

இப்படிக்கு,
சுகுமார்,
வலங்கைமான்.



 றக்கம் என்பது இறைவன் கொடுத்த வரம். ஒரு மனிதன் உறக்கத்தில் தான் மனிதனாக இருக்கிறான். ஏனென்றால் அவன் அப்போது தான் பாவம் செய்வதில்லை என்று யாரோ எழுதி இருக்கிறார்கள். அது மிகச்சரியான கருத்தாகும். உங்களுக்கு மிகவும் இளவயது நடக்கிறது. இந்த வயதில் தூக்கம் வரவில்லை என்பது அதிசயமாக இருக்கிறது. என்னிடம் நிறைய தகப்பன்மார்கள் தனது மகன்கள் அடித்து போட்டமாதிரி தூங்குகிறார்கள் எழுப்புவதற்குள் போதும் போதென்றாகிவிடுகிறது என்று குறைபடுகிறார்கள். அந்த வரிசையில் உங்களது குறை நிச்சயம் விந்தை.

பரிபூரணமான நிம்மதியான உறக்கத்தின் போது நமது தசைநார்கள் அமைதியாக ஓய்வெடுத்து கொள்கின்றன. ஆனால் நமது வயிறு அதிகமான இரத்தத்தை கடன்வாங்கி உணவுகளை ஜீரணித்து ஜீவ சக்தியாக்கி உடலுக்கு தேவையான போஷாக்காக இந்த நேரத்தில் தான் தந்துகொண்டிருக்கிறது தூக்கம் கெட்டுவிட்டால். ஜீரனத்தில் பிரச்சனை வந்து உடல் உஷ்ணம் அதிகரிக்கிறது. இதனால் உடலில் பல நோய்கள் ஏற்படும். மிக முக்கியமாக மூளைக்கொதிப்பு உருவாக வாய்ப்புண்டு எனவே உறக்கம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல. உயிர்கள் அனைத்திற்குமே அத்தியாவசிய தேவையானது.

உறக்கம் ஏன் வர மறுக்கிறது? நரம்பு தளர்ச்சி தான் தூக்கமின்மைக்கு முக்கிய காரணம். தேவையில்லாத சிந்தனை, அனாவசியமான கனவு, ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் இவைகள் நரம்புகளை சோர்வடைய செய்கின்றன. நரம்புகள் சோர்ந்தாலும் தூக்கம் வராது. சில மருந்துகள் போதை வஸ்துகள் இவற்றால் முறுக்கேறினாலும் உறக்கம் வராது. எனவே நரம்புகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

உறக்கத்தை வர செய்வதற்கு மருந்துகளை விட சில பயிற்சிகள் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். சிமெண்ட் தரையில் நன்றாக படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் ஒரு அடி உயரத்தில் இருபது நிமிட நேரம் வைத்திருந்து விட்டு படுக்கப்போனால் உறக்கம் வரும் அல்லது வலது கையால் முதுகெலும்பை சிறிது நேரம் தடவி விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தால் நன்றாக தூக்கம் வரும். மலச்சிக்கலும், மனச்சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும். நன்றாக செரிமானம் ஆகவேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக உடல் வலிக்க உழைக்க வேண்டும். இத்தனை செய்தும் உறக்கம் வரவில்லை என்கிறீர்களா என்னிடம் வாருங்கள் ஒரு மந்திரம் இருக்கிறது சொல்லி தருகிறேன் கும்பகர்ணனுக்கு தம்பியாக நீங்கள் ஆகலாம்.


Contact Form

Name

Email *

Message *