( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

திருமணமே ஆகாத ஜாதகம் !
    குருஜி என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள். நான் சூரத் நகரில் ஜவுளிக்கடை நடத்திவருகிறேன் எனக்கு நான்கு தம்பிகள். அவர்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. ஆனால் எனக்கு மட்டும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. மனதுக்குப்பிடித்த பெண் வேண்டுமென்று இத்தனை வருடம் காத்திருந்து விட்டேன். இப்போது எந்த பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, திருமணம் செய்து கொள்ளலாம் என்று பார்த்தால் நாற்பத்தாறு வயதான பிறகு, பெண் தருவதற்கு தயங்குகிறார்கள் என் ஜாதகப்படி எனக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா? உங்களைப்பற்றி என் நண்பர் கூறியதால் (அவர் தமிழ்நாட்டில் திருநெல்வேலி என்ற ஊரைச்சேர்ந்தவர்) இந்த கடிதம் எழுதுகிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் அதை என் இறுதியான முடிவாக ஏற்றுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
விமல்சந்த்செளவுக்கார்,
சூரத்.
  ங்கள் ஜெயின் சமூகத்தில் பெண்களின் விகிதாசாரம் மிகவும் குறைவு. மற்ற சமூகத்தில் பெண்கள் தான் வரதட்சனை கொடுத்து மாப்பிளையை தேடவேண்டும். உங்கள் சமூகத்தில் சில மாப்பிள்ளைகள் வரதட்சணை கொடுத்து பெண்ணை தேடுகின்ற நிலையில் இருக்கிறார்கள். இந்தச்சூழலில் வருகின்ற பெண்ணை எல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டி கழித்துவிட்டு இப்போது வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.

ஒரு ஆண் ஜாதகத்தில், ஏழாவது வீட்டில் சந்திரனும், சுக்கிரனும் அல்லது செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு திருமணம் நடக்காது என்று ஜோதிட நூல்கள் தெளிவாக கூறுகின்றன. உங்கள் ஜாதகமும் இதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. எனவே இந்த வயதிற்கு மேல் திருமணத்தை பற்றி எண்ணி வருத்தப்படாமல் எதிரே இருக்கும் நிதர்சன வாழ்க்கையை பாருங்கள்.

உங்கள் கையில் நிறைய பணம் இருக்கிறது. பணத்தை பெட்டியில் சேர்ப்பதனால் எந்த பயனும் இல்லை. நாலு மனிதர்கள் நமக்கு வேண்டுமானால், நாலுபேருக்கு நல்லது செய்ய வேண்டும். ஏழைகள், முடியாதவர்கள் மற்றும் திக்கற்றவர்கள் என்று எத்தனையோ மனிதர்கள் உலகத்தில் உண்டு. அவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இதைத்தான் நீங்கள் வணங்கும் பகவான் மகாவீரும் விரும்புகிறார்.


+ comments + 1 comments

வணக்கம் குருஜி,

மேஷ லக்னம், மகர ராசி,
7ம் வீட்டில் சனி மற்றும் செவ்வாய் எனக்கு திருமணம் நடக்குமா?நடக்காத?

பிறந்த தேதி - 29.02.1984
நேரம் - 09:40 காலை
பிறந்த ஊர் - பட்டுக்கோட்டை


நன்றி


Next Post Next Post Home
 
Back to Top