( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பாம்பாக பிறந்த குழந்தை    குருஜி அவர்களுக்கு, வணக்கம். சமீபத்தில் என் தங்கைக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் உடம்பில், பாம்பு உடம்பில் இருப்பது போல செதில் செதிலான தோல் அமைந்துள்ளது. கண்கள் கூட, பாம்பின் கண்ணை போலவே இருக்கிறது. குழந்தையின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் ஒருவர், தாய் - தகப்பன் இருவருக்கும் நாக சாபம் இருக்கிறது. அதனால் தான் குழந்தை இப்படி பிறந்திருக்கிறது என்று சொல்கிறார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, பயமாக இருக்கிறது. குருஜி அவர்கள் தயவு செய்து குழந்தையின் நல்வாழ்விற்கு வழிகாட்டுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
கமலவேணி,
சிங்கப்பூர்.  ருவர் ஜாதகப்படி, எந்த லக்கினத்தில் வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம். அந்த லக்கினத்திற்கு ஐந்தாவது வீட்டில், எந்த சுப கோளின் பார்வை படாமல் இருந்தாலும், ஐந்தாவது வீட்டு அதிபதியோடு ராகு சேர்ந்தாலோ, அல்லது ஐந்தாம் இடத்தில், ராகு இருந்தாலோ அவர்களுக்கு நாக சாபம் இருப்பதாக கூறவேண்டும்.

மேலும் ஒருவரது லக்கினத்தில் ராகு அல்லது கேது அல்லது ஒன்பதாவது வீட்டில் இந்த கிரகங்களில் ஏதாவது ஒன்று இருந்தாலும் நாக சாபம் இருக்கிறது என்று தெளிவாக கூறலாம். ஆனால் இப்படி நாக சாபம் இருந்தால் குழந்தையே பிறக்காது என்று சொல்லலாமே தவிர குழந்தை பாம்பை போன்று பிறக்கும் என்று கூறமுடியாது. அதற்கு எந்த சாஸ்திர ஆதாரமும் கிடையாது.

உங்கள் தங்கையின் குழந்தை சர்பத்தின் சாயலாக இருப்பதற்கு வேறு காரணம் தெரிகிறது. குழந்தையும், ஆறாம் பாவத்தை செவ்வாயும் ராகுவும் தாக்குகின்றன. இதனால் குழந்தையின் இரத்தமும், சருமமும் பாதிப்படைந்துள்ளன. இதனாலேயே இந்த குறைபாடு இருக்கிறது. இது உடல் சார்ந்த நோய் தவிர வேறு அல்ல.

குழந்தையின் நோய் தீர, ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளியுங்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டில் தன்வந்திரி ஹோமம் செய்து வாருங்கள். குழந்தையின் மூன்றாவது வயதில் பரிபூரண சுகம் கிடைக்கும்.Next Post Next Post Home
 
Back to Top