( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மழுப்பாமல் பதிலை சொல்லுங்கள்    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஆண்டிக்கு ஆண்டி ஒட்டு காச்சல் என்று சொல்வார்கள். அதாவது ஒரு சாமியாருக்கு இன்னொரு சாமியாரை பிடிக்காதாம். நீங்கள் அப்படி பட்டவர் அல்ல என்று நான் நினைக்கிறேன். அதனால் மழுப்புதல் இல்லாமல் நேரடியாக ஒரு பதிலை சொல்லுங்கள். இன்றைய நிலையில் மிகச்சிறந்த ஆன்மீக புருஷர் யார்? தயவு செய்து பதில் தரவும்.

இப்படிக்கு,
கிருஷ்ணராஜன் ,
மலேசியா .   ண்மையை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்த பிறகு, அதை மழுப்பி பசப்பி பேசுகின்ற பழக்கம் எனக்கு சிறிய வயது முதற்கொண்டே கிடையாது. சரியோ? தவறோ? மனதில் தோன்றியதை பேசி விடுவேன். இதனால் பல இழப்புகளையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்து இருக்கிறேன். 

திறமைசாலி, அனுபசாலி பல விஷயங்களை தெரிந்தவர் என்றால், அவர் யாராக இருந்தாலும் அவரிடம் சென்று கற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பவன் நான். எனவே மற்றவர்களின் திறமையை குறைத்து மதிப்பிடும் பழக்கம் எனக்கு கிடையாது. அதனால் என்னால் எப்போதும் ஒளிவு மறைவு இல்லாமல் பேச முடியும்.

நல்ல ஆன்மீகவாதிகள், பழுத்த ஆன்மீகபழங்கள் என்று பலரையும் என்னால் கூற முடியும். அவர்களில் பலர் ஊருக்கும், உலகத்தாருக்கும் தெரியாமல் வாழ்வதனால், அதாவது தெரிவிக்க விரும்பாமல் வாழ்வதனால், அவர்களை பற்றிக்கூறுவதை விட்டு விட்டு அடையாளம் தெரிந்த சிலரை கூறுகிறேன்.

நமது காலத்தில் வாழ்ந்த, காஞ்சி மகாபெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா போன்றோரும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் யோகி ராம்தேவ், மாதா அமிர்தானந்தமயி, தயானந்தசரஸ்வதி இன்னும் சிலரும்.


+ comments + 1 comments

Anonymous
14:21

அன்பு சகோதரன் கிருஷ்ணா ராஜன் உங்களுடைய ஆன்மீகக் ஆர்வம் காரணமாகவே தாங்கள் இந்த கேள்வியை அன்பான குருஜியிடம் கேட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நம்முடைய பாரத தேசம் இன்றைக்கும் தெய்வாம்சம் நிறைந்தது என்று நிரூபிக்கும் வகையில் நாம் வாழ்ந்த இந்த நூற்றுடான்டிலேயே வாழ்ந்தவர் காஞ்சி மகாபெரியவர், பகவான் சத்யா பாபா, ஷீரடி பாபா , ரமண மகரிஷி மற்றும் பலர். பகவான் சத்யா பாபாவை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும், தயவு செய்து என் வார்த்தையை கவனிக்கவும் நன்கு அறிந்தவர்களுக்கு என்று குறிபிட்டு இருக்கிறேன் அவர் ஸ்ரீமன் நாராயணனுடைய அவதாரமே. நன்மை உண்டானால் தீமையும் உண்டு, வெளிச்சம் உண்டானால் இருளும் உண்டு. அதனால் நாம் தீமைகளை கண்டு கொள்ளாமல் நன்மையை மட்டுமே நோக்குவோம்.

நேற்று தான் என்னுடைய குடம்பத்தாருடன் அன்பான குருஜியை சென்று சந்தித்தேன். உங்களுடையா நல்ல கர்மா நீங்கள் குருஜியை அறிந்தவராய் இருக்கின்றீர்கள். இன்று நம்முடன் காஞ்சி மகாபெரியவரும், அன்பே உருவான சத்யா சாய் பாபா அவர்களும் உயிரோடு இல்லை. ஆனால் நம் குருஜி போன்ற ஸ்ரீமன் நாராயணனை உண்மையான் அன்போடு ஆராதிக்கும் மிக நல்ல ஆன்மீகவாதிகளும் நம்மோடு இருகின்றார்கள் என்பது நாம் சந்தோஷமடைய வேண்டிய விஷயம் தானே.

பெயர் வெளியிட விரும்பாத வாசகி, சென்னை.


Next Post Next Post Home
 
Back to Top