( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

விவாகரத்து செய்யுங்கள் !ன்புள்ள குருஜி அவர்களுக்கு, மிகுந்த வேதனையோடு இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். எனது ஒரே தங்கைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் முடித்து வைத்தேன். மிகவும் கஷ்டப்பட்டு சிக்கனமாக இருந்து, நகைநட்டு சேர்த்து அவள் கல்யாணத்தை நடத்தினோம். அவளும் ஆயிரம் கனவுகளை சுமந்தபடி புகுந்தவீடு சென்று, குடும்ப வாழ்க்கையை துவக்கினாள். அன்று முதல், அவள் வாழ்க்கையில் சூறாவளி வீசத் துவங்கிவிட்டது. அவள் கணவன் பெரிய குடிகாரன் கட்டுப்பாடே இல்லாத காமாந்தகன், இரக்கம் இல்லாத முரடன், அவன் அதிக நாள் மும்பையில் இருந்ததனால், அவனை பற்றிய விபரங்களை சரியாக விசாரிக்க முடியாததனால் எங்கள் குடும்பத்தில் இந்த துயரம் ஏற்பட்டுவிட்டது. இப்போது எனது தங்கை பாடாய்ப்படுத்துகிறாள். விவாகரத்து வாங்கிவிடலாம் என்றால், மூன்று குழந்தைகள் இருப்பதனால், யோசிக்க வேண்டிய நிலை இருக்கிறது. என்ன செய்வது என்று வகை தெரியாமல் தவிக்கிறேன். ஐயா அவர்கள் சரியான வழிகாட்டி எனக்கு உதவுமாறு பணிவோடு வேண்டுகிறேன். 

இப்படிக்கு, 
பாலசுந்தரம், 
தருமபுரி. ங்கள் தங்கையின், கணவரின் ஜாதகத்தை துல்லியமாக ஆராய்ந்த போது பல உண்மைகள் தெரிந்தன. அவரது ஜாதகத்தில், ஏழாவது இடத்தில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் வட்டமிட்டு அமர்ந்துள்ளன. 

இந்தமாதிரி ஜாதகம் உடையவர்கள், மனைவி மக்களை உயிராகவே கருதமாட்டார்கள். மரம் மட்டையிடம் நடந்து கொள்வது போல, மனிதர்களிடம் நடந்து கொள்வார். அதுவும் குறிப்பாக மனைவியை பார்த்துவிட்டால் வெறி பிடித்தவர் போல் ஆகிவிடுவார். இவருக்கு திருமணம் முடித்து வைப்பதும், ஒரு பெண்ணை விஷம் கொடுத்து கொலை செய்வதும், ஒன்றே! 

இவர் இன்னும் சில வருடங்களில் மிக கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படப்போகிறார். சொந்த ஊரில் இல்லாமல், தேசாந்திரியாக அலைந்து அனாதையாக சாகப்போகிறார். இந்த விதியை யாராலும் மாற்ற இயலாது. எனவே அவரிடம் அவல வாழ்க்கை வாழ்வதை விட, உங்கள் தங்கைக்கு விவாகரத்து வாங்கி கொடுப்பது மிகச் சிறந்த தீர்வு என்பது என் கருத்து. 

துணிச்சலோடு விவாகரத்திற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். காரணம் இல்லாமல், கடவுள் சில துயரங்களை தரமாட்டான். வருங்காலத்தில், உங்கள் தங்கையின் வாழ்க்கை சிறப்படைய நிச்சயம் அருளுவான் என்று நம்பிக்கையோடு செயல்படுங்கள் நல்லது நடக்கும்.

Next Post Next Post Home
 
Back to Top