( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நெருங்கிய உறவில் திருமணம் செய்யலாமா...?
ன்புள்ள குருஜி அவர்களுக்கு, நான் பிறப்பில் கிறிஸ்தவனாக இருந்தாலும், பல மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை ஆராய்ந்து வருகிறேன். அந்த வகையில், ஹிந்துக்கள் மத்தியில் நிலவுகின்ற சில பழக்க வழக்கங்களை கவனித்து பார்ப்பதில் எனக்கும் சில குழப்பங்கள் உண்டு. அதை உங்களிடம் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்கள் மதத்தவர்கள் மிக நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்கிறார்கள். குறிப்பாக அத்தை மகள், மாமன் மகள் மற்றும் அக்கா மகள் என்ற முறை வெகுவாக தமிழ்நாடு முழுவதும் காணப்படுகிறது. இது தவறுதலான பழக்கம் இல்லையா? மிக நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டால் ஆரோக்கியமான குழந்தைகளை பெறுவது சிரமம் அல்லவா? எனவே உங்கள் மதம் இதைப் பற்றி கொண்டிருக்கும் நம்பிக்கையை மாற்றலாம் அல்லவா? முடிந்தால் விளக்கம் தாருங்கள். இல்லை என்றால் என் தவறுக்கு மன்னியுங்கள்.

இப்படிக்கு,
இராபர்ட் செல்லத்துரை,
இங்கிலாந்து.மாமன் மகளையும், அத்தை மகனையும் மணப்பது என்பது தமிழகத்தில் தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிற பழக்கமாகும். இந்த வழக்கத்திற்கும், இந்து மதத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அப்படி இருந்தால், இந்துக்கள் அனைவரிடமும் இது பொது பழக்கமாக இருந்திருக்க வேண்டும். மிக எளிமையான விளக்கம் ஒன்றை சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பு வரை, தென் தமிழ்நாட்டில் பல பகுதி மக்களிடத்தில் சகோதரியின் மகளையோ, மகனையோ மணப்பது கிடையாது. வட தமிழ்நாட்டு மக்களிடம் தான் இந்த முறை இருந்தது. இன்று மக்கள் மத்தியில் உள்ள தொடர்புகள் மிக நெருக்கமாகி வருவதனால், இந்த பழக்கம் தெற்கு பகுதியிலும் அரும்பி வருவதை அறிய முடிகிறது.

சித்தப்பா, பெரியப்பா மக்களை சகோதர, சகோதரியாக பார்க்கலாம். மாமன், மாமி மக்களை திருமண முறையில் பார்க்கலாம் என்ற பழக்கம் வட இந்தியாவில் பரவலாக கிடையாது. சித்தப்பாவின் மகள் எப்படி சகோதரியோ அதேபோல தான் மாமன் மகளும் சகோதரியாக பார்க்கப்படுகிறாள். இந்த பழக்கம், நிலம் சார்ந்த மக்களின் பண்பாடு சார்ந்த பழக்கமே தவிர, மதம் சார்ந்த பழக்கம் இல்லை.

விஞ்ஞானம் நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கூறுவது எல்லாம் சமீப காலத்தில் தான். ஆனால், நமது இந்து மதம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெருங்கிய உறவு திருமணத்தை தடை செய்திருக்கிறது. சொந்த கோத்திரத்தில் திருமணம் கூடாது என்பது நமது மதத்தின் மிகத் தீவிரமான சட்டமாகும். நம்மிடையே உள்ள அதிகப்படியான சுதந்திரத்தால், மத சட்டங்களை காற்றில் பறக்கவிட்டு அந்த மதத்தையே குறை கூறுகிறோம்.Next Post Next Post Home
 
Back to Top