( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கடவுளை பார்த்த குருஜி !

றையனுபவம் பெறுவது என்பது அருளாளர்களின் வாழ்வில் மட்டுமே நடக்க கூடிய அபூர்வ நிகழ்வு. அப்படி பெற்றவர்களை காண்பது மிகவும் அரிது. நமது குருஜி அவர்கள் கடந்தகாலத்தில் தான்பெற்ற நேருக்கு நேராக உணர்ந்த இறை தரிசன அனுபவத்தை பற்றிய அபூர்வ வீடியோ பதிவு இது. நமது ஆசிரம ஆவணங்களில் பதிவாகி இருந்த அரிதான பதிவை உஜிலாதேவி இணையதளத்தின் வாசகர்கள் அனைவரும் கண்டு கேட்டு தாங்களும் தெய்வீக அனுபவம் பெற குருஜியின் அனுமதியோடு வெளியிடுகிறோம் வாசகர்களுக்கு நிச்சயம் இது இனிய அனுபவமாக இருக்கும்.
இப்படிக்கு, 
சதீஷ் குமார், 

+ comments + 4 comments

ஸ்ரீ ஆச்சார்ய தேவோ பவ. ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தருக்கு அவரது குரு ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி மஹராஜ் அவரது தேக வ்யோகத்திற்குப் பின்னாலும் கூட அதே ஆடைகள் மற்றும் காலணிகளை அணிந்தவாறு தரிசனம் தந்துள்ளார். மேலும் அவர் அதைத் தொட்டபோது சமாதிக்கு முன்பு அவர் தொட்டபோது இருந்த அதேமாதிரியான உடலின் சூட்டையும் அவர் உணர்ந்துள்ளார் . அந்த உருவம் கட்புலனாகும் போது பாத்திரங்கள் உருளும் சப்தம் போன்று இருந்ததையும் அவர் தமது வாழ்க்கை வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார். அவரது தேகம் மறைந்து, கட்புலனாகாத அணுக்களின் கூட்டமைப்பில் கலந்துவிட்டாலும் கூட, அவரது சங்கல்பத்தால் மீண்டும் அணுக்களின் கட்டமைப்பை அதே வடிவில் உண்டாக்குவது சாத்தியமே என்பதை அவர் நிகழ்த்திக் காட்டினார். அந்த நூல் உலகின் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாகவே அந்தந்த நாட்டு அரசாங்கங்களால் பெருமையுடன் வைக்கப்பட்டிருக்கிறது. LIKE PRODUCES LIKE என்று ஒரு இயற்கை விதி ஒன்று உண்டு. ஒன்றைபோலவே இருக்கும்படி இன்னொன்றையும் செய்தால் அது முதல் பொருளின் தன்மையைப் பெற்றுவிடும். மழை வருவதற்காக குளங்களில் நின்று பாசுரம் பாடுவது போன்றது இது. ஓரிடத்தில் ஒரு செயல் உலகில் நடந்தால் வேறோரு இடத்திலும் அது போன்ற செயல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் சர்வ நிச்சயமாக உண்டு என்பதுதான் அறிவியல் கூறும் PROBABILITY THEORY ஆகும். ஆக அறிவியல்பூர்வமாகத் தங்களது அனுபவத்தை மறுக்க இயலாது. ஆன்மீகப்பூர்வமாக இது பற்றிக் கேள்வியே வராது. சுவாமி விவேகானந்தர் கூறுவார் : "ஒரு சிங்கமே இன்னொரு சிங்கத்தை அறிந்து கொள்ள இயலும்". அதுபோல இதயம் உள்ளவர்கள் இதயத்தால் இதைப் புரிந்துகொள்வதில் மகிழ்ச்சியையே அடைவார்கள். காரணம் probability தியரிப்படி ஒரு நாள் தங்களுக்கும் அப்படி ஒரு அனுபவம் கிடைத்தால் அவர்களுக்கும் சொல்ல வார்த்தைகள் கிடைக்காது. " நான் பட்டினி கிடந்தால் அது என் தலைவிதி, என்னை நம்பி வந்த இளம் பிஞ்சுகள் ஏன் கஷ்டப்பட வேண்டும்..." என்ற வார்த்தைகளை என்னால் காதில் கேட்கவே இயலவில்லை.மனம் கனத்துப் போய் விட்டது. அசக்தர்களுக்கெல்லாம் பிறர் கஷ்டங்களை உணரும் இதயம் இருப்பது அவர்களை அவர்களே அவமானப்படுத்திக் கொள்ளவேதான் என்றே நான் எண்ணுகிறேன். சீடர்களின் கர்மங்கள் குருவுக்கே என்ற நிலையில் எனது வேண்டுகோள் ஒன்று உண்டு. முக்குண இயல்பை நன்கு அறிந்து தாங்கள் தரும் தீக்ஷைகள் அதிகரிக்க அதிகரிக்க தாங்கள் தவமிருந்து பெற்ற அம்சங்கள் பகிரப்படுகின்றன. தாங்கள் ஒரு சன்னியாசியாக அதையும் ஒரு யக்ஞமாகவே செய்து வந்தாலும்கூட அதில், குறைந்த எண்ணிக்கையில் தக்க சாதகர்களைத் தேர்ந்தெடுத்து தீக்ஷை அளிக்க வேண்டுவதே எனது வேண்டுகோள் . இதைச் சொல்ல ஆன்மீகரீதியாக அடியேனுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஆனால் வாராது வந்த மாமணியை சுலபமாகத் தொலைத்துவிட்டு காலம் கடந்து அதை வேறு இடத்தில் தேடியலையும் இந்திய மனோபாவமும், தாங்கள் எனக்கும் அமிர்த தாரா மந்திரம் தந்து என்னையும் ஏற்றுக் கொண்டதாலும் வந்த பொறுப்பின் காரணமே எனது வேண்டுகோளுக்கு மூலம். தூரத்தில் இருந்தபோதும் தங்களது நலன்களை ஒரு அடியவனாக எண்ணி விழைவது எனது தர்மமாகக் கருதுகிறேன். அதன் விளைவாக என்னால் செய்ய இயன்றதைச் செய்கிறேன். நன்றி மஹராஜ். ச. ஜானகிராமன்...சென்னையிலிருந்து...

தங்களின் தரிசன அனுபவத்தை உலகரியச்செய்தமைக்கு நன்றி!
பசுமரத்தாணிபோல் பதிகிறது தங்களின் வார்த்தைகள்.
அங்கீகாரம் பெற எண்ணியிருந்தால் 16 வருடங்கள் கழித்து இந்த அபூர்வ ரகசியத்தை வெளியிட வேண்டியிருந்திருக்காது என்பதை நிச்சயம் அன்பு உள்ளங்கள் உணரும். அடியேன் போன்றோர்களுக்கு இந்த விடையம் இறைவன் நிச்சயம் துயர் துடைப்பான் என மனதில் ஆழ பதிகிறது. அதுவும் கலிகாலத்தில், இந்த நிகழ்வு என்றால் முன்னோர்கள் காலத்தில் .....
இறையை உணர பல வழிகளில் தேடியலைந்த போது தங்களின் அமிர்ததார மந்திர தீட்சை ஒரு தெளிவான பாதையை வகுத்து கொடுத்திருக்கிறது. அந்த பாதையில் தடையின்றி அறநெறியோடு சென்று இறைவனை உணர குருவின் ஆசீர்வாதங்கள் வேண்டும் என குருவின் பாதங்களை நாடும் இவன் ...பாபு V - குடிமங்கலம்,உடுமலை.

இதனை இப்போது யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக பகுத்தறிவு என்று கூறிவரும் "தற்குறி" கூட்டம். ஆனால் கடவுளை பார்த்தவர்கள் இதனை வெளிப்படையாக கூறுவது இல்லை!

ஈரோட்டுப் பாதையின் இறுதி வருடங்களில் - 1995 - என் வாழ்கையில் பெரிய திருப்பம் வந்தது. ( இருந்த வேலை போகும் நிலைமையில் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது ) ஆனால் அந்தத் நல்லத் திருப்பத்தின் கூடவே ஒரு பேரிடியும் வந்தது. பழுது பட்ட இதயம் என்று. அன்றிரவு கனவில் ஒரு பெண்மணி, முகம் சரியாகத் தெரியவில்லை, ஆனால்கையில் கரும்பு வைத்துக் கொண்டு " தைரியமாக மேலே ஏறி வா என்றாள்" . மறுநாள் என்னுடைய வைணவ நண்பரிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் என்னை கண்ணா பின்னவென்று திட்ட ஆரம்பித்து விட்டார். எனக்கு ஒரே அதிர்ச்சி. அவர் சொன்னது -

" அடே மஹா பாவி ( அவர் அப்போது எனக்குக் கீழ் வேலை பார்த்தவர் ) அய்யங்கார் இப்படிச் செய்யலாமா என்று என் உறவினர்கள் திட்டினாலும் பரவாயில்லை என்று வாரம் ஒரு முறை காஞ்சிபுரம் சென்று பார்த்த எனக்கு ஒரு நாளும் கனவில் வரவில்லை. ஆனால் தினம் கடவுள் தூஷனை செய்து கொண்டிருக்கும் உனக்கு வந்தாளே. அதிலும் வந்தது காமாக்ஷி என்று கூட உனக்குத் தெரியவில்லையே " என்று கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்.

அதுவரை காமாக்ஷி யார் என்று கூட தெரியாத எனக்கு அன்று முதல் அவள்தான் இஷ்ட தெய்வம். அதற்குப் பிறகு அவள் கனவில் வரவில்லை என்றாலும் பல நேரங்களில் பல விதங்களில் எனக்கு அருள் புரிந்து கொண்டிருப்பவள்.

தங்களின் ராமகிருஷ்ண தரிசனம் உண்மை என்று கண்டிப்பாக நம்பும்
ரங்கராஜன் - ரங்கராஜபுரம் - சென்னை


Next Post Next Post Home
 
Back to Top