( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை ஜனவரி 29 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பிணத்தில் இறைவன் இருக்கிறானா...?குருஜி அவர்களுக்கு, பாத நமஸ்காரம். எனக்கு வெகுகாலமாக ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. எல்லா இடத்திலும் இறைவன் இருப்பதாக கூறுகிறார்கள். இறைவன் இருக்கும் இடம் தேஜஸ் நிரம்பியதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால், உயிர் இல்லாத பிணத்திலும் இறைவன் இருப்பாரா? பிணத்தில் இருப்பதனால் அவருடைய மாண்புக்கு களங்கம் ஏற்பட்டு விடாதா?  விபரம் புரியாத இந்த சிறுவனின் தவறுதலான கேள்வி இது என்றால் மன்னித்து விடுங்கள்.

இப்படிக்கு,
கோசல்ராம்,
தூத்துக்குடி. 


மது வீட்டில் மின்சார விளக்கு அழகாக எரிந்து கொண்டிருக்கிறது. மின்விசிறி வியர்வை போகும் வண்ணம் சுழன்று கொண்டிருக்கிறது. சிறிது நேரத்தில் இரண்டுமே பழுதாகிவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதனால் மின்சாரம் இல்லை என்பது அர்த்தமாய் விடுமா? இந்த கருவிகளின் மூலம் மின்சாரம் தன்னை வெளிப்படுத்த முடியவில்லையே தவிர அது அங்கேதான் இருக்கிறது.

உயிர் என்பதும் மின்சாரத்தை போன்றது தான் உடம்பு அழிந்து போய்விட்டால் உருத்தெரியாமல் சிதைந்து போய்விட்டால் உயிரும் கூடவே சேர்ந்து அழிந்து விடுவது இல்லை. அது சுத்த சைதன்யமாக எப்போதும் போல் எங்கும் நிறைந்ததாக இருக்கிறது. மரணம் என்பது உடலின் அழிவே தவிர, உயிரின் அழிவு அல்ல. உயிரும், இறைவனும் ஒருவகையில் ஒன்றே ஆகும். இன்னும் விளக்கமாக சொல்வது என்றால் இறைவனின் சுவாசத்திலி ருந்து மனித சுவாசம் சுவிகாரம் செய்யப்பட்டிருக்கிறது எனலாம்.

உயிர் அழியவில்லை என்பதனால் உயிருக்கும், இறைவனும் உள்ள தொடர்பும் சொந்தமும் அழியப்போவது இல்லை. உடம்பு அப்படி அல்ல, அது பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவானது ஆகும். பூதங்களில் மாறுபாடு அடைந்தபோது உருவாகி அதே மாறுபாடு தொடரும் போது மரணித்து மீண்டும், வேறொரு மாற்றத்தை நோக்கி உருண்டோடுவதே சரிரீரத்தின் விதியாகும். அதாவது சடலமாக கிடக்கின்ற உடல் மீண்டும் மாற்றம் அடைந்து வேறொரு பொருளாக ஆகப்போகிறது. ஆகவே உடம்பும், படைப்பு தொழிலுக்கு உதவாமல் போவது இல்லை.

தத்துவப்படி பார்த்தால் உயிரின் நிலைத்தன்மை என்பது இறைவனோடு சம்மந்தப்பட்டதாகும். உடம்பின் நிலைத்தன்மை என்பது பூதங்களோடு சம்மந்தப்பட்டதாகும். ஒரு வகையில் உடம்பும், உயிரும் அழியாத பொருட்களே. ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுவதை நாம் தவறுதலாக முடிந்த முடிவு, திரும்ப வராத சாவு என்று அழைக்கிறோம். எனவே சடலத்தின் மீதும், இறைவனின் சைதன்யம் இருக்கிறது. அவர் இல்லாத பொருளே இல்லை என்று சொல்வதை விட, அவர் தான் எல்லா பொருளுமாக இருக்கிறார் என்று சொல்வது இன்னும் நன்றாக இருக்கும்.

+ comments + 5 comments

அற்ப்புதமான பதில் ஜி

Anonymous
06:50

அன்பான குருஜி அவர்களுக்கு,

எந்த விதமான கேள்விகளக்கும் விளக்கம் சொல்லி பதில் எழுதும் உங்கள் அறிவிற்கு தலை தாழ்த்தி வணங்குகின்றேன். உங்கள் ஆக்கங்களையோ, உங்களைப்பற்றியோ அறியாமல் 69 வயது வரை வாழ்க்கையை விணாக்கி விட்டேன் என்று எண்ணி வேதனை படுகிறேன்.

நான் அறியாத பல விடயங்களை உங்கள் ஆக்கங்கள், பதில்கள் தெளிவு படுத்தின. ஆனால் இன்னும் பல்லாயிரம் இருக்கின்றது வாசிக்க. எப்படி முடியும் என்னால்,

குருஜி நீஙகள் இன்னும் பலகாலம் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன்.

அன்புடன்

மு. சுப்பம்மாதேவி

nandri guruji

mikka nandri ayya miga thelivana karuthugalukku


Next Post Next Post Home
 
Back to Top