Store
  Store
  Store
  Store
  Store
  Store

சாபம் தீர்க்கும் மாசி பெளர்ணமி !



  திகள் என்பது பூமியின் மேற்பரப்பில் ஓடுகிறதா? பூமிக்கு அடியில் ஓடுகிறதா?  என்ற கேள்வியை நம்மிடம் யாராவது கேட்டால், இது என்ன சுத்த முட்டாள்தனமான கேள்வியாக இருக்கிறது. என்றாவது, எங்காவது நதி பூமிக்கு அடியில் ஓடுமா?  பூமியின் மேலே ஓடினால் தானே அதன் பெயர் நதி என்று பதில் சொல்வோம். ஆனால் உண்மையில் சிந்தித்து பாருங்கள் நிஜமாகவே பூமிக்கு மேல் மட்டும் தானா நதி ஓடுகிறது. பூமியின் ஆழத்தில் நதி ஓடவில்லை என்றால், அங்கே இருந்து நீருற்று வருவது எப்படி? நமது வீட்டு கிணறுகள் நிறைவது எப்படி? எனவே நதி மேலும், கீழுமாகவே ஓடுகிறது என்பது தான் சரியான பதில் என்று தெரியும்.


இதை ஏன் இப்போது கேட்கிறேன் என்றால், மாசி மாதத்தில் பெளர்ணமி அன்று இந்தியாவில் ஏதேதோ மூலையில் ஓடுகிற நதிகள் அனைத்தும் நமது கும்பகோணத்திற்கு வருவதாக பல்லாயிர வருஷங்களாக மக்கள் நம்பி வருகிறார்கள். நாம் பயணம் செய்வது என்றால், ரயிலில் போகலாம். பஸ் பிடிக்கலாம். ஆகாய விமானத்தில் கூட பறந்து வரலாம். இதற்கு எதற்குமே வழியில்லாத போது பாதயாத்திரை செய்தாவது எந்த மூலையில் இருந்தாலும் கும்பகோணத்திற்கு வந்து விடலாம். நதிகள் என்ன நம்மை போல மூன்றடி அகலமும், ஆறடி உயரமும் கொண்ட பொருளா? அது பயணப்பட்டு வருவதற்கு அல்லது அதை அழைத்துக் கொண்டு வருவதற்கு. எந்த வாகனம் இருக்கிறது? எந்த மனிதனால் அப்படிப்பட்ட வாகனத்தை உருவாக்க முடியும்? காற்றுக்கு வேலி போடுவதாக கற்பனை செய்யலாம். கடலுக்கு மூடி போடுவதாகவும் எண்ணிப் பார்க்கலாம். நதி பயணப்படும் படி வண்டியை தயார் செய்யலாம். என்று கற்பனை கூட செய்ய முடியாது.

அப்படிப்பட்ட நதிகள் அதுவும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, வேதவதி மற்றும் காவேரி ஆகிய நதிகள் ஒன்றாக புறப்பட்டு வந்து கும்பகோண மஹாமக குளத்தில் கலக்கிறது என்கிறார்கள். அப்படி என்றால் அந்த பயணம் கண்ணுக்கு தெரியாமல் இருக்க வேண்டும். மனிதனால் முப்பரிமான காட்சிகளை மட்டும் தான் காணமுடியும். நமது கண்ணுக்கு அகப்படாத நான்காவது பரிமாணத்தில் நதிகளின் பயணம் அமையவேண்டும். அதாவது, சூட்சமமாக பயணம் இருக்க வேண்டும். சூட்சமமாக பயணம் அமைய முடியாது என்று கிடையாது. பல ஞானிகளும், புண்ணிய மனிதர்களும் சூட்சம பயணத்தை இன்றும் மேற் கொண்டிருக்கிறார்கள் இதற்கு நமது சட்டங்கள் ஏற்க கூடிய ஆதாரங்கள் இல்லையே தவிர மற்ற படி அனைத்தும் உண்மையே ஆகும்.

மாசி மகம் என்பது,  மாசி மாத பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படுவதாகவும், பனிரெண்டு மாசி மகங்கள் சேர்ந்தால் இறுதியில் மஹாமகம் வரும். அதாவது பனிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை வருகின்ற மஹா மகத்தன்று கும்பகோணத்து கும்பேஸ்வரர் ஆலய தீர்த்த குளத்தில் மேலே சொன்ன புண்ணிய நதிகள் அனைத்தும் வந்தடைகின்றன. அந்த நேரத்தில் புனித நீராடினால், நூறு வருடங்கள் காசியில், கங்கையில் ஒருநாள் கூட விடாமல் தொடர்ந்து குளித்து வந்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது கிடைக்குமென்று ஐதீகம் உள்ளது.

அதாவது மாசி மாதத்தில் வருகின்ற பெளர்ணமி தினத்தில் நமது பாவங்களுக்காக, நாம் பெற்ற சாபங்களுக்காக, புனித யாத்திரைகளோ, புனித தீர்த்தங்களோ செய்தால் அவைகள் விலகி, நமது துயரங்கள் மறைந்து வெற்றி முகம் தெரியும் என்பது உண்மை. மாசி பெளர்ணமியில் கும்பகோணத்தில் தான் குளிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. நமக்கு அருகிலுள்ள, ஆலய திருக் குளங்களில் நீராடினாலே அந்த புண்ணியத்தை பெறலாம். நீராடுவது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் ஆலய குளங்களில் மண்டி கிடக்கும் மாசுக்களை அகற்றி மக்கள் பயன்படுத்துமாறு செய்தாலே பெரும் புண்ணியம் கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து. எனவே தான் பாவி தனது ஜென்மம் பாவப்பட்ட ஜென்மம் என்று கருதுகிற நாம் அனைவரும் நம்ம ஊர் தெய்வ குளங்களை சுத்தப்படுத்தி பெளர்ணமி தினத்தில் நீராடுவோம். நற்கதி அடைவோம்.




Contact Form

Name

Email *

Message *