Store
  Store
  Store
  Store
  Store
  Store

கோபத்தை குறைப்பது எப்படி...?



குருஜி அவர்களுக்கு, நமஸ்காரம். நான் தினசரி தியானம் செய்து வருகிறேன். ஒருநாள் கூட விடுவது கிடையாது. ஆனால், என் மனது இதுவரை ஒருநிலைப்படவில்லை. கண்ணை மூடினால் எங்கெங்கோ பறக்கிறது கோபத்தை குறைப்பதற்காக தான் தியானம் பழகினேன் அன்று எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்று வரை கோபம் இருக்கிறது. சிறிது கூட குறையவில்லை. அலைபாயும் மனதை அடக்குவது எப்படி? என்னை தினசரி கொன்று கொண்டிருக்கின்ற கோபத்தை கொல்வது எப்படி? தியானத்தில் வெல்வது எப்படி? என்று எனக்கு தெரியவில்லை. திசை தெரியாது தத்தளிக்கும், இந்த ஓட்டை காற்றாடிக்கு வழிகாட்டுங்கள் குருஜி. உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

இப்படிக்கு,
ராஜாராமன்,
சேலம்.




துணி துவைப்பதற்கு, குளிப்பதற்கு, வீட்டு வேலைகளை செய்வதற்கு, தண்ணீர் வேண்டுமென்றால் அம்மா கிணற்றிலிருந்து நீரை எடுத்து வைப்பாள். காலையிலிருந்து மாலை வரை அம்மா கிணற்று நீரை இரைத்து கொண்டே இருக்கிறாள். பாத்திரத்தில் அரை பாகம் கூட தண்ணீர் வரவில்லை. ஏன் அப்படி என்று யோசிக்காமலே தண்ணீர் எடுத்துக்கொண்டே இருந்தால் அம்மாவின் உடல்நிலை என்னாவாவது? கெட்டுப்போகும். அம்மாவின் உழைப்பில் தவறில்லை. முயற்சியில் தவறில்லை. தேவையிலும் தவறில்லை. தண்ணீர் எடுக்கும் பாத்திரம் ஓட்டையாக இருப்பதை கவனிக்காமல் எடுப்பது தான் தவறாகும்.

மனம் என்பது தண்ணீர் எடுக்கும் பாத்திரத்தை போன்றது. இதில் காமம், குரோதம் என்ற ஓட்டைகள் விழுந்து விட்டால் நல்ல சங்கதிகள் எதுவும் உள்ளே தங்காமல் வெளியில் ஒழுகிக் கொண்டே இருக்கும். தண்ணீர் தங்கவேண்டும் என்றால், ஓட்டையை அடைக்க வேண்டும். மனம் குவிய வேண்டுமென்றால், காம குரோதங்களை விரட்டவேண்டும். ஆனால், எப்படி விரட்டுவது? எதைக்கொண்டு விரட்டுவது? என்ற கேள்விகள் நம் முன்னால் நாகப்பாம்புகள் போல படமெடுத்து ஆடிக்கொண்டே நிற்கின்றன. பல்லாண்டுகளாக நாமும் நமது முன்னோர்களும் இதற்கு விடை தேடியே காலத்தை முடித்துவிட்டோம்.

காமக்குரோதம் என்பது கொடிய விலங்குதான். நமது வாழ்க்கையையே மொத்தமாக தூக்கி விழுங்கி விடுகிற அளவிற்கு அகலமான வாய்படைத்த அராஜக மிருகம் தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், எப்படிப்பட்ட உறுதியான இரும்பு சங்கிலியையும், பயங்கர மிருகத்தையும் வேட்டையாடி வெல்லுகிற சக்தி மனித அறிவிற்கு இருக்கிறது. முதலில் தினசரி பத்து நிமிடமாவது உன் மனதோடு பேசு. அதை நிற்க வைத்துக்கொண்டு கேள்வியை கேள்! அவசியம் வந்தால் சட்டையை பிடித்து உலுக்கு. நீ செய்தது சரிதானா? அதை தவிர்த்திருக்க முடியாதா? என்று திரும்ப திரும்ப கேள். மனம் பேசும். தவிர்க்க வேண்டிய வழிமுறையை உனக்கு கூறும். அமைதிக்கான பாதை இதுவென காட்டும். தினசரி அப்படி உனக்கு காட்டப்பட்டால் விறகு இல்லாத அடுப்பு அனைவது போல கொதித்து கொண்டிருக்கின்ற கோபம்  குறைந்துவிடும். ஒருநாள் முற்றிலுமாகவே மறைந்து விடும்.

நான் கவர்னராக இருக்கலாம். என் கட்டளையை ஏற்க ஆயிரம் பேர் காத்திருக்கலாம். ஆனாலும், நான் ஜனாதிபதியின் வேலைக்காரன் என்பது போல, அனைவருமே இறைவனின் தொண்டர்கள் என்பதை முழுமையாக நம்பத் துவங்கினால் அகங்காரம் என்பது மறைந்து போகும். கடவுளின் சித்தப்படியே காற்றடிக்கிறது, மழை வருகிறது. எனது விருப்பபடி ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்று புரிந்து கொள்ளும் பக்தனுக்கு காமக்குரோதங்கள், தான் என்ற அகந்தை முற்றிலுமாக தேய்ந்து, மறைந்து விடுகிறது. தியானம் என்பது தானாக கைகூடி விடுகிறது.









Contact Form

Name

Email *

Message *