( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கடவுளை அடைவதற்கு மிகவும் எளிய வழி எது?


இந்த வாரத்திற்கான குருஜியின் கேள்வி இதோ!!!..


கடவுளை அடைவதற்கு மிகவும் எளிய வழி எது?

     என்ற கேள்விக்கு நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தந்தவர்   இந்துமதி.  அவரை குருஜியின் சார்பில் பாராட்டுகிறோம் அவருக்கான பரிசினை நேரில்வந்து குருஜியின் கைகளால் பெற்றுகொள்ளலாம் அல்லது அவரது வங்கி முகவையை அனுப்பினாலும் நாங்கள் அதில் செலுத்தி விடுகிறோம்.

இந்துமதியின் பதில் இதோ 

   

    விண்ணில் உள்ள மழைத்துளி மண்ணில் விழுவதற்கு என்ன தேவை?
மலையில் தோன்றிய நதி கடலில் வந்து கலப்பதற்கு என்ன தேவை?
தாய்பசுவை அடைவதற்கு இளம் கன்றுக்கு என்ன தேவை?
பூரண சரணாகதி ஒன்றுமட்டுமே தேவை.
இறைவனை அடைவதற்கும் இந்த ஒன்று தான் எப்போதுமே தேவை.இந்துமதி
டெல்லி


+ comments + 36 comments

Dear Guruji

Nobody knows about the true God. and see the God

If any one read the Holy Quran , can surely know and the way to reach the God in easy way. This is simplest way.Within 7 days anyone can able to read and understand the Quran

மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு,

வணக்கம், எனது பெயர் சக்திவேல், பொள்ளாச்சியில் வசித்துவருகிறேன்.

இந்த எளியவனுக்கு தெரிந்த வரையில், கடவுளை அடைய எளிய வழி, "சரணாகதி மற்றும் நாம சங்கிர்தனம்".இவ்வண்ணம்,
அடியேன், க. சக்திவேல்

பஞ்ச பூதங்களால் ஆனதுதான் இந்த உலகம். அதில் மனிதனுக்கல் அந்த பஞ்சபூதங்களின் பிரதிபலிப்பு உள்ளது. ஆகவேதான், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் உள்ளான் என்கிறோம். உடல் வேறு, மனம் வேறு, சிந்தனை வேறாக செயல்படுவதால் அந்த இறை தன்மை இழக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தனுக்குள்ளே இருக்கும் இறைத் தன்மையை உணர இந்த செயல்பாட்டை மாற்றி மனதாலும், சிந்தனையாலும் செயலாலும் மூலத்திளிரிண்டு இந்த பிரதிபலிப்பான மனிதன் அந்த மூலத்தின் தன்மைப்படி நடந்தால் தனுக்குள்ளேயே இருக்கும் இறைவனை அடையலாம்--
Best Regards,
S. Rajagopal

SASVADHA SUGAm enra sollin arthamaga oruvan valdhal avan KADAULAI elidhil adivan

மனம் என்ற கருவியால் பக்தி மூலம் அவனை
அடைய முடியும். பக்தியே முக்திக்கு வழி. பக்தி செய்வது மிகவும் சுலபம். தவம், தியானம், பூஜை போன்றவைகளை விட, மனதால் பகவானை துதி செய்வது சுலபம். மனதுக்குள்ளேயே பகவானை வழிபடுவது இன்னும் விசேஷமானது. எளிமையாக இருந்தே, எளியவனான கடவுளிடம் பக்தி வைக்கலாம்.

மனமது செம்மை ஆனால் மந்திரங்கள் தேவை இல்லை.

நம்முடைய பூஜை, பக்தி இவைகளை கண்டு, மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென் பதில்லை; பகவான் பாராட்டினால் போதும். ஒரு கூடை பூவைப் போட்டு, ஆயிரம் நாமாவால் பூஜை செய்ய வேண்டுமென்பதில்லை; ஒரே ஒரு புஷ்பம் போட்டு, ஒரே நாமாவைச் சொன்னாலும் அவன் ஏற்றுக் கொள்வான். பூஜை செய்வதற்கான பொருட்களை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை; மானச பூஜையே போதும்.

வள்ளலார் கூட எளிமையாக வாழ்ந்தவர். எளிய முறையிலேயே ஆண்டவனை பூஜித்தவர். அகல் ஜோதியையே கடவுளாக வழிபட்டார்.
பூசலார் நாயன்மார் தன மனதில் இறைவனுக்கு கோவில் கட்டி பெற்றவர்.
தெய்வங்கள் ஜோதி வடிவமாகத் தான் சொல் லப்பட்டுள்ளது. "ஜோதி ஸ்வரூபன்’ என்பர். ஜோதி தான் அவனது வடிவம்.
கடவுள், என்றாலே, ஒரே பரம் பொருள் தான். பல உருவங்களில் வழிபடுகின்றனர். இந்த உணர்வு வேண்டும். தினமும் கோவிலுக்குப் போய்த் தான் தெய்வ வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது வீட்டில் இருந்து கொண்டே பக்தி செய்ய முடியாதா என்று யோசிக்கலாம். கோவிலுக்கு போனாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, மனம் மட்டும் தெய்வத்திடம் இருக்க வேண்டும். கோவிலுக்குப் போனால், பலவித ஆரவாரங்களுக்கு இடையில், மனதை பகவானிடம் வைக்க முடியுமா என்பதும் கேள்விக் குறிதான்.

கோவிலில் குடும்ப விஷயங்களை பற்றி விவரிக்க கூடாது.

ஆக, மனிதனுக்கு தெய்வ பக்தி அவசியம் இருக்க வேண்டும். இப்படி பக்தி செய்து நற்கதி அடையும் பாக்கியம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு பக்தி, பூஜை, வழிபாடு என்பதெல்லாம் தெரியாது; அதனால், அவை இதில் ஈடுபடுவதில்லை. மனிதன், சுலபமான முறையில், தியானத்தின் மூலமே பக்தி செய்து பகவானை அடைய முடியும். இதற்குத் தான் முயற்சி செய்ய வேண்டும்.

தன் ஆத்மாவையும் உடலையும் பரிசுத்தமாக காப்பதே எனக்கு தெரிந்த கடவுளை அடையும் எளிய வழி

BEING TRUTH & HONESTY TO EVERY THING

GURU JI: KADAVULAI ADAIVATHARKKU EZIYAVALI ? ANSWER:: SARANAGATHI,SARANAGATHI,SARANAGATHI

வழிபாடும்,முழு சரணாகதியுமே இறைவன் அடைய உதவும் எளிய வழி ஆகும்.இந்த வழிபாடு தூய மனதுடன்,அவனிடம் எதையும் எதிர்பார்க்காமல் உதாரனத்திற்க்கு முக்தியை கூட எனக்கு தா என்று கேட்காமல் அவனிடம் பக்தியோடு வழிபாடு செய்ய வேண்டும்.இறைவனை அடைய ராஜா யோகம், பக்தி யோகம் , ஞானயோகம் மற்றும் கர்ம யோகம் என இன்னும் பல வழிகள் உள்ளன.அவற்றுள் முக்கியமானது கர்ம யோகம் ,எவன் ஒருவன் கர்ம யோகத்தில் முழு சிரத்தையோடு தன்னலமில்லாமல் ஈடுபடுகின்றானோ அவனால் மற்ற யோகங்களை தொட முடியும் .தன்னலமற்ற சேவை நம்மால் இயன்ற சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம் நமது கர்மக்கள் குறைக்கபட்டு அடுத்த நிலைக்கு ஆன்மீக பாதைக்கு தடை இன்றி அடியெடுத்து வைக்க முடியும், கற்கண்டு வாங்கி ஏறும்புக்கு போடுவது கூட ஒருவித உதவி தான் .படிக்க முடியாத ஏழை குழந்தைகளக்கு ,திருமணம் ஆக வசதி இல்லா ஏழை பெண்களக்கு உதவி என தங்களால் ஏயன்ற உதவிகளை செய்யலாம்.அன்றாட வாழ்வில் செய்யும் கடமையில் கூட சுயநலம் இல்லாமல்,பலன் எதிர்பார்க்காமல் அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும்.உதாரணமாக இந்து மதத்தில் அன்ன தனம் ,கோ தனம் வஸ்திதிர தனம் ,என பல தனங்களை நாம் முன்னோர்கள் செய்துள்ள்னர்.மேற்கூறியவற்றில் செய்யும் கர்ம யோகத்தை இறைவனுக்கு வழிபாடு மூலம் அர்பணித்து,பின்பு முழு சரணாகதி அடையும் போது அவனே நம்மை ஈர்த்து கொள்வான்.ராமகிருஷ்ண மடத்து துறவிகளை இதற்க்கு சான்றாக கூறலாம்.

1. THANAM (COW)
2. THARMAM ( FOOD)
3. SERVE CLOTHES & BLANKETS
4. YAGAM

Do anything if it is possible depends upon their wealth

otherwise

Be quiet and do your duty.

Manathai oru nilai paduthuvathal kadavulai adaiyalam

Yours truly
S.Gunaseelan

அன்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்,
எனது பெயர் ரஜினிகாந்த் , சென்னை இல் வசிக்கிறேன.
கடவுளை மிக எளிதாக அடையும் வழி யாதெனில் நாம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும் . நம்முள் இறைவன் அன்பு வடிவமாக உள்ளான் என்பதை உணர வேண்டும் . அது போலவே அனைவர் உள்ளேயும் அதே இறவன் உள்ளான் என்பதை உணர்து விட்டால் மற்றவர் மேல் அன்பு தானாக வந்து விடும். பிறகு நம்முள் இருக்கும் இறைவன் இதை பார்த்து நம்முடன் பேச ஆரம்பிப்பான் . நம் வழக்கை முடியும் நேரத்தில் இறைவன் தம்முடன் நம்மை அடைய வழி வகை செய்வான் . எனவே நாம் மட்ட்ரவர்களிடம் அன்பாக இருந்தாலே கடவுளை மிக எளிதாக அடையலாம்.
குருஜி மிக மிக நன்றி ,
தங்கள் அன்புள்ள ரஜினிகாந்த்
mobile: 9677000554 ,9710571105

ஒரு குருவை சரணடைவதே

ஒரு குருவை சரணடைவதே

ஒரு குருவை சரணடைவதே

பஞ்ச பூதங்களால் ஆனதுதான் இந்த உலகம். அதில் மனிதனுக்கல் அந்த பஞ்சபூதங்களின் பிரதிபலிப்பு உள்ளது. ஆகவேதான், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் உள்ளான் என்கிறோம். உடல் வேறு, மனம் வேறு, சிந்தனை வேறாக செயல்படுவதால் அந்த இறை தன்மை இழக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தனுக்குள்ளே இருக்கும் இறைத் தன்மையை உணர இந்த செயல்பாட்டை மாற்றி மனதாலும், சிந்தனையாலும் செயலாலும் மூலத்திளிரிண்டு இந்த பிரதிபலிப்பான மனிதன் அந்த மூலத்தின் தன்மைப்படி நடந்தால் தனுக்குள்ளேயே இருக்கும் இறைவனை அடையலாம்
இவர் சொல்வது உண்மை ஜயா

அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது, எங்கும் நிறைந்தவன் இறைவன் . நமக்குல் முழுவதும் நிறைந்தவன். அவனை அடைய நமக்குல் தேடினால் போதும்,

ஓடைகள் அனைத்தும் ஆறுகளில் கலக்கும்,ஆறுகள் அனைத்தும் கடலில் கலக்கும் இது விதி.

இதுபோல் தான்

முதலில் உங்களின் சுவசத்தை நன்கு கவனிங்கள் பிண்டம் எது புரியும் , பிறகு உள் மனதை கவனிக்கவும், உள் மனது உங்களை மெல்ல மெல்ல நீ யார் என்று தெரிவிக்கும் , பின்பு உன்னை அறியாமல் இறைவனிடம் அழைத்து செல்லும்.. இறைவன் உள்ளத்தில் இருந்து படைக்க பட்ட நம் ஆன்ம (சரீரம் தந்தது தாய் தந்தை) மீண்டும் இறைவன் அடி சேரும்.. உள் மனதை ஆழமாக கவனித்தால் இறைவன் அடி எளிமையாக சேரலாம்.......

" நீ உன்னை முழுவதும் அறிந்து கொள் , உன் வசம் அந்த ஆண்டவன் அமைவான்""


> இப்படிக்கு

அசோக்குமார்
Villupurum

ஐயா,
என் குருட்டு மனதிற்கு தெரிந்த அளவில் கூறுகிறேன் ஏதேனும் தவறு இருப்பின் மன்னித்துவிடுங்கள்.
எல்லையே இல்லாத கடவுளை அடைய ஏதேனும் வழி கூறப்போய் அவரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்த நான் விரும்பவில்லை.
ஆகவே, இந்த இருப்பு உலகம்.மற்றும்,ஒட்டுமொத்த முழுமையுமே கடவுள்தான்.
சரி இந்த முழுமையை(கடவுளை)அடைய
வழி என்ன?
இந்த முழுமைக்கு எல்லைஇல்லா சக்தி இருப்பது உங்களுக்கே தெறியும்.இந்த முழுமை(சக்தி)க்கு இன்ம்பம்,துன்பம்,பிறப்பு,இறப்பு.போன்ற இன்னும் பல இருமைகள் கிடையாது.இந்த முழுமயே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறது .
அப்படி இருக்க நாம் இந்த முழுமையின் மைத்திலிருந்து விலகி நான் என்ற ஒரு எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டு தனியாக பிரி்ந்து இருமைகளில் சிக்கி இந்த முழுமைக்கு எதிரான திசையில் நீந்தி துன்பபட்டுகொண்டிருக்கின்றோம் .
கடவுளை(முழுமையை)அடைய ஒரே வழி அதனுடைய திசையில்,பாங்கில்,பாவனையில். செல்வதே ஒரே வழி.
முழுமையை நோக்கி நகரும் மனிதன் முழுமை அடைகிறான்.
பிறகு, தேவைகள்,துன்பங்கள்,இருமைகள் கிடையாது முழுமை ஒன்றே எஞ்சி நிற்க்கும்.
இதற்காக பல(தியான)யுக்திகளை முழுமைஅடைந்தவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இந்த முழுமை எதிலும் எளிதாக பொருந்தும் ஆற்றலை மனிதனுக்கு அளித்திருக்கிறது என்பது என் கூற்று .
நன்றி .

Pathil-- Diyanam

மக்கள் நலனில் அக்கறை உள்ள குருஜிக்கு அடியேனின் அன்பு வணக்கம்.


கடவுளை அடைய மிகவும் எளிய வழி என்ற வினாவிற்கு

இறைவனை காதலனாகவும் நம்மை அவன் காதலியாகவும் பாவித்து அவனுடன் தினமும் மனதில் உரிமையுடன் உறையடா கற்று கொள்ளவேண்டும். ஏனெனில் இறைவனிடம் நாம் தொடுக்கும் "அன்பு" என்ற புஷ்பதிற்க்கு மட்டுமே அந்த வைகுண்ட வாசனை தன்னிலை மறந்து இறங்கி வர வைக்கும் சக்தி உண்டு. அன்று கோபியர்கள் செய்ததும் அதுவே, ஆழ்வார்கள் பின்பற்றியதும் அவ்வழியே, சபரியின் அன்புக்கு இறைவன் ராமன் கட்டுபட்டான், யசோதையின் அன்பிற்கு பரம்பொருள் அவனை உரலில் கட்ட உரிமை கொடுத்தான்,

பக்தி செய்தால் உனக்கு இறைவனது அருள் கிடைக்கும் மோக்ஷத்திற்கு பிறகு அவனது தரிசனம் கிட்டும். இதுவே அவன் மீது காதல் கொண்டால் அந்த இறைவனே உனக்கு கிடைப்பான். ஒவ்வொரு நிமிடமும் அவன் உன்னுடன் இருப்பதை உணர்வாய். ஏனென்றால் இறைவன் மீது காதல் என்ற அன்பு உணர்வு உனது இதயகமலத்தில் தோன்றினால் உன்னுடைய பக்தியானது நிர்மலமான பக்தியாக மாறிவிடும் அதாவது சுயநலம் இல்லாத சரணாகதி பக்தியாக மாறிவிடும்.

இந்த மார்க்கமே இறைவனை அடையும் எளிய வழியாகும்.


கிருஷ்ணார்ப்பணம்

--

Sathiya Raj.R

இறைவனை மனதார நினைத்து தியானம் செய்தல்

குரு ஜி அவர்களுக்கு வணக்கம் !

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

அகத்தியர் அய்யா -ன் அருள்வாக்கு படி ஒருவனது மனம் செம்மையாக
இருப்பின் அவன் இறைவன் அருளால் இந்த உலகத்திலேயே சகல நலன்களையும் பெறுவான். இறைவனை அடைவதற்கு எளிய வழி, ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் இறைவனுடைய அருள் இருக்கிறது என்பதை உணர்வதுதான். எது நடந்தாலும் அது எனக்காக என் இறைவன் செய்கிறான் என்று புரிந்து வாழ்க்கையை வாழ்வதே ஆகும்.

மனம் என்பது ஒரு குரங்கு என்று சொல்வார்கள்.. காரணம் பலதரபட்ட எண்ணங்கள் வந்து போகும். அதில் தூய எண்ணங்களை பின்பற்றுவதும் தீய எண்ணங்களை பின்பற்றுவதும் அவனவன் கர்மாவை பொறுத்து. எவன் ஒருவன் தன்னுடைய மனத்தில் ஓடும் எண்ண அலைகளை தள்ளி நின்று பார்த்து நல்ல எண்ணங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு தீய எண்ணங்களை தவிர்க்கிறானோ அவனே இறைவனை எளிதில் அடைய இயலும்.

உதாரணத்திற்கு : கொலை செய்வது..

அனைவருக்கும் கோபம் வரும். அந்த நேரத்தில் பல தீய எண்ணங்கள் நம்மை சுற்றி சுற்றி வரும். அப்பொழுது எவன் ஒருவன் தீய எண்ணங்களால் வசப்படுகிறானோ அவன் கொலைகாரன் ஆகிவிடுகிறான். எவன் ஒருவன் அந்த நிலையிலும் இறைவனை துதித்து என்னை தீய எண்ணங்களில்ருந்து காப்பாற்று என்று முறையிடுகிறானோ அவன் நிம்மதி அடைகிறான்..


கருத்துச்சுருக்கம் : எண்ணமே வாழ்வு . எண்ணம் போல் வாழ்க என்று சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன்.

எல்லாம் அவன் செயல்..

நன்றி...

தங்களை காண ஆவலுடன் காத்திருக்கும்

சிவக்குமார்


Thannai unaruvathu

கடவுளை அடைவதற்கு மிகவும் எளிய வழி சுயநலம் 

Anonymous
12:22

கடவுளை அடைவதற்கு அன்பு மயமாகி விடுதல், அழுது பெறல் , பஞ்ச மகா பாதக எண்ணங்களை களைதல் , சேவை செய்தல் ( கர்மயோகம் ), அறிதல் ( ஞான யோகம்), சரணடைதல் முதலியன நம் கலாசாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .

உடனே புறப்பட்டான் .

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார் .

" எங்கே போகிறாய் ?"

" கடவுளை காண போகிறேன் !"

" எங்கே ? "

" கோவிலில் !"

" அங்கே போய் ........"

" அவரை வழிபட போகிறேன் ! "

" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

" தெரியாது "

" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

" அப்படியென்றால் "

" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்

ஞானி தெளிவு படுத்தினார்

" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

" அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

" அதற்க்கு வழி ?"

" தியானம்"

" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :

" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

தன்னுடைய தேவையை சொன்னார் :

" I WANT PEACE"

ஞானி சொன்னார்:

" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற , வந்தவர் யோசித்தார் .

' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .

" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"

" எப்படி அது ?"

" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"

" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"

உற்சாகமாக சொன்னான் .

" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

"இல்லை "

" அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

" யார் அவர் "

" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

" சரி , சுவாமி . நான் வர்றேன் !"

சோர்வோடு நடந்து போனான் .

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .

ஞானி கேட்டார் :

" எங்கே போகிறாய் ? "

" வீடுக்கு !"

" கோவிலுக்கு போகவில்லையா ?"

" இல்லை "

" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .

" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .

உடனே புறப்பட்டான் .

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார் .

" எங்கே போகிறாய் ?"

" கடவுளை காண போகிறேன் !"

" எங்கே ? "

" கோவிலில் !"

" அங்கே போய் ........"

" அவரை வழிபட போகிறேன் ! "

" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

" தெரியாது "

" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

" அப்படியென்றால் "

" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்

ஞானி தெளிவு படுத்தினார்

" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

" அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

" அதற்க்கு வழி ?"

" தியானம்"

" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :

" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

தன்னுடைய தேவையை சொன்னார் :

" I WANT PEACE"

ஞானி சொன்னார்:

" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற , வந்தவர் யோசித்தார் .

' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .

" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"

" எப்படி அது ?"

" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"

" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"

உற்சாகமாக சொன்னான் .

" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

"இல்லை "

" அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

" யார் அவர் "

" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

" சரி , சுவாமி . நான் வர்றேன் !"

சோர்வோடு நடந்து போனான் .

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .

ஞானி கேட்டார் :

" எங்கே போகிறாய் ? "

" வீடுக்கு !"

" கோவிலுக்கு போகவில்லையா ?"

" இல்லை "

" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .

" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "

குருஜி அவர்களுக்கு, பணிவார்ந்த வணக்கம், தன்னை உணர்தலெ இறைவனை காண சரிியாண வழி. இப்படிக்கு, சி. வீரபாண்டியன், குவைத்

இசையின் மூலம் தான் கடவுளை அடைய எளிய வழி.என்னுடய பெயர் அப்துல் ரஹ்மான்.நான் இலங்கையை சேர்ந்தவன்.

ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பது,தியானம்.

Swamiji,

The best way to reach god is caring our parents,baby,spouse and do the duty what ever we have with dedication.
the god will soon appeared in front of us.

Regards

Sridhar
Madurai.

பாசம் என்கிற ஆசையை விட்டால் எளிதில் கடவுளை காணலாம் சக்திவேல்

பொள்ளாச்சி

ஐயா வணக்கம்,

ஒரு மனிதன் பிறந்து சாதரணமாக வாழும் போது அவனது மூளை 100% வளர்ச்சி அடைந்து கடவுளை அடைவதற்கு 10 இலட்சம் வருடம் ஆகும் என்பதால் யோகத்தினால் அதிலும் கிரியா யோகத்தால் ஒரு நாளில் 2 முறை செய்தால் குறைந்தது 40 வருடங்களில் கடவுளை எளிதில் அடைந்து விடலாம்.

தியானமும் ஒரு நிலைபடுதலும்

விண்ணில் உள்ள மழைத்துளி மண்ணில் விழுவதற்கு என்ன தேவை?
மலையில் தோன்றிய நதி கடலில் வந்து கலப்பதற்கு என்ன தேவை?
தாய்பசுவை அடைவதற்கு இளம் கன்றுக்கு என்ன தேவை?
பூரண சரணாகதி ஒன்றுமட்டுமே தேவை.
இறைவனை அடைவதற்கும் இந்த ஒன்று தான் எப்போதுமே தேவை.

இந்துமதி டெல்லி

அழகான வார்த்தை இசையின் மூலமாகவும் இறைவனை அடைய முடியும்


Next Post Next Post Home
 
Back to Top