( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மீண்டும் குருஜி !
    ன்பார்ந்த உஜிலாதேவி இணையதளத்தின் வாசகர்கள்,அன்பர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வணக்கங்களும்,வாழ்த்துக்களும்......

மீண்டும் என்ற வார்த்தையை இந்த இடத்தில் பயன்படுத்துவதற்கு அர்த்தங்கள் பல உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த ஜனவரி மாதம் ஆறாம் தேதி காலையில் மூச்சிறைப்பு சற்று அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். யாகங்கள்,ஹோமங்கள் இன்னும் பல காரணங்களுக்காக புகையோடு எனக்கிருந்த உறவில் மூச்சிறைப்பு என்பது பதினைந்து வருடமாக நெஞ்சார்ந்த தோழன் போல என்னோடு இருந்து வருகிறது.


அதனால் அன்று ஏற்பட்ட தொல்லையை நான் பெரிதுபடுத்தவில்லை. நேரம் செல்ல செல்ல உடல் ரீதியிலான மாறுதல்கள் அதிகரித்தன எனக்கு எதோ ஒன்று நடக்க போவதை உணர முடிந்தது. என் மனதிற்குள் இறைவன் வைத்து அனுப்பிய அடையாளம் தெரியாத பறவை எச்சரிக்கை சிறகுகளை ஓங்கி ஓங்கி அடித்தது. என் கண்முன்னே இருந்த வேலைகளும், கடமைகளும் அந்த எச்சரிக்கை ஒலிகளை அசட்டை செய்ய வைத்தது.

ஆனாலும் நெருப்பு புகைய துவங்கும் என்பது போல என் உடல் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டன. இனியும் தாமதிக்க கூடாது என்ற என் சீடர்கள் கிடுக்கி பிடி போட்டதாலும் என்னாலும் தாங்க முடியாதபடி நிலைமை இருந்ததாலும் மருத்துவமனை செல்ல சம்மதித்தேன்.

வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அன்று இரவே அனுமதிக்கப்பட்டேன். மருத்துவமனையின் நிறுவனரும் வேலூர் பொற்கோவிலின் ஸ்தாபகருமான ஸ்ரீ சக்தி அம்மா என்னுடைய அன்பரும்,நண்பரும் உற்ற துணைவரும் ஆவார். அவருடைய உத்தரவு படி எனக்கான சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. சிகிச்சை துவங்கி இருபது நாட்கள் வரையில் நான் பரிபூரணமான சுய உணர்வில் இல்லை.

வானத்துக்கும்,பூமிக்கும் உதைபடுபவன் போல மரணத்திற்கும்,வாழ்விற்கும் இடையில் விதி என்னை உதைத்து விளையாடி இருக்கிறது. மருத்துவர்கள் மிக நெருக்கடியான நிலையில் என் உயிர் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அருகிலிருந்த எனது சீடர்கள் அனைவரும் கலங்கி போய்விட்டார்கள். நமது இணையதள வாசகர்கள் பலர் நேரில் வந்திருக்கிறார்கள். தபால் வழியில் மின்னஞ்சல் வழியில் தொலைபேசி வழியில் வேறு எந்த வகையில் இருந்தாலும் அத்தனை தொலைதொடர்பு வழியிலும் என்னை பற்றி என் நலத்தை பற்றி விசாரித்திருக்கிறார்கள். பிராத்தனை செய்திருக்கிறார்கள்.

மூச்சு விடுவதற்கு இயந்திரம், உணவு செல்வதற்கு தனிக்குழாய், இயற்கை உபாதைகள் வெளியேறுவதற்கு செயற்கை துவாரங்கள் என்ற நிலையில் இருந்தாலும் சுய உணர்வு வரும் போதெல்லாம் இரண்டு விஷயங்கள் என் நினைவுகளில் வந்து மோதின. ஒன்று புல்லாங்குழல் ஊதிய கிருஷ்ணன், இன்னொன்று நமது இணையதளத்தில் இன்னும் நான் எழுத வேண்டிய பல கருத்துக்கள் இவைகள் எனக்குள் கடல் அலையை போல ஓங்கி ஓங்கி வீசியதால் வாசுதேவனின் பாதங்களை தொட நான் விரும்பாமல் மீண்டும் இந்த பூமிக்கு ஓடி வர முயன்று கொண்டே இருந்தேன்.

என் முயற்சிக்கு உறுதுணையாக பொற்கோவில் ஸ்ரீ சக்தி அம்மா, மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை நிர்வாகி திரு பாலாஜி, அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த செயலாளர் சுரேஷ்பாபு, அன்னதான பிரிவின் இயக்குனர் திரு விஜயகுமார், மருத்துவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், திரு ரமேஷ் மற்றும் பல மருத்துவர்கள் துணை நின்றார்கள்.

இவர்களை விட நான் வணங்குகிற கிருஷ்ணனும் ஸ்ரீ கிருஷ்ணனின் நேரடி வடிவங்களான மருத்துவ செவிலியர்களும் மிக முக்கிய காரணம் எனலாம். என் முனங்கல்கள், முகம் சுளிப்புகள், வேதனைகள் அத்தனையையும் வார்த்தைகளால் நான் வெளியிட முடியாத நிலையில் இருந்தாலும் அதை உணர்ந்து கொண்டு எனக்கு சேவை செய்த அவர்களின் கருணையும், அன்பும் என் கண்ணீரால் அபிஷேகம் செய்ய தக்க தகுதி வாய்ந்தது.

என்னை கருவில் பத்துமாதம் சுமந்து, இருபது வயது வரை தூக்கி வளர்த்த தாயார் மட்டுமல்ல இந்த நாற்பது நாட்களில் எனக்கு மலம், மூத்திரம் சுத்தம் செய்து குளிக்க வைத்து ஆடை உடுத்தி அசிங்கம் பாராமல் என் சளியை கைகளில் ஏந்தி குழந்தையை விட கவனத்தோடு பார்த்துகொண்ட செவிலியர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் நான் குறிப்பிட வேண்டும். ஆனால் இங்கே அதற்கான இடமில்லை எனவே எனது சாஸ்டாங்கமான வணக்கத்தை அவர்களுக்கு சமர்ப்பித்தே ஆகவேண்டும்.

தன்னை துறவி என்கிறான், இறை சேவை செய்வதற்கு பிறந்தவன் என்கிறான், கடவுளின் திருவடியை அடைவதே தனது நோக்கம் என்கிறான் இப்படியெல்லாம் வாய் வழியாக பேசிவிட்டு மரணத்தையும், பிணியையும் கண்டு அச்சப்படுகிறானே அவைகளின் கைகளில் விழ இசையாது ஓடி ஒளிகிறானே என்று சிலர் நினைக்க கூடும். அவர்கள் எண்ணுவது தவறல்ல மனிதனாக பிறந்த தன் இறுதி லட்சியமே இறைவனோடு இரண்டற கலப்பது தான்.

முக்திக்கு கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் கைவிடாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்பதை தெரிந்தும் நான் ஏன் அவற்றை கையிலெடுக்க தயங்குகிறேன் என்றால் ராமன் பாலம் கட்டுவதற்கு அணில் பிள்ளை உதவியதை போல இறைவன் நிர்மாணிக்க இருக்கும் சத்திய யுகத்தின் அஸ்திவார கற்களில் ஒன்றாக நான் இருக்க மாட்டேனா? என்ற ஆசையில் தான். அதில் சிறு கல்லாக நான் உபயோகப்படுவதற்கு இன்னும் என்னை செப்பனிட்டு கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. பல குருட்டு கண்களை திறப்பதற்கு உழைக்க வேண்டிய தேவை இருக்கிறது. பள்ளத்தில் விழுந்து பரிதவிக்காமல் பாதுகாக்க வேண்டிய வேலை இருக்கிறது.

அவைகளை செய்தால் மட்டுமே முக்தி என்றும், சத்திய யுகத்தின் புள்ளிகளில் ஒன்று என்றும் நான் நன்கு அறிவேன். அதனால் மட்டுமே கிடைத்திருக்கும் இந்த அரிய பூமி வாழ்க்கையை இன்னும் சற்று காலம் பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன். இதுவே எனது நிஜமான நிலைப்பாடாகும். இதை யாருக்காகவும் நான் மறைக்க வேண்டிய மறைத்து புண்ணுக்கு புனுகு பூசுவது போல் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.

என் விபரம் தெரிந்த நாளிலிருந்து  இறைவன் ஒருவனை தவிர வேறு எவருக்கும் தலைவணங்கியது கிடையாது. இந்த மருத்துவ பணியாளர்களின் கருணை மிகுந்த செயல் என்னை வணங்க வைத்து விட்டது. என் நெஞ்சத்திலிருந்த சிறிதளவு வேற்றுமை உணர்ச்சிகளையும் மறைந்து போக செய்துவிட்டது. எனவே ஒரு நோயை தந்து பல நோயை எனக்குள் இருந்து வெளியேற்றிய ஸ்ரீ கிருஷ்ணனின் அருளுக்கும், மனித தெய்வங்களின் கருணைக்கும் ஆயிரம் கோடி வந்தனங்கள்.

இனி வழக்கமாக நமது உறவு தொடரும்.....
+ comments + 39 comments

08:28

இந்த செய்தியை படித்து அளவிலா மகிழ்ச்தி அடைந்தேன். கண்ணனின் கருணையால் குருஜி உடல்நலம் தேறி மீண்டு வந்த்தமைக்கு இறைவனுக்கு நன்றி. அவர் மீண்டும் பரிபூரண உடல்நலத்துடன் நமக்கெல்லாம் வழிகாட்ட வேண்டும் என கண்ணனை பிரார்த்திக்கிறேன்.

குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
தாங்கள் மீண்டு வந்தது குறித்து எனது தாழ்மையான கருத்து
இது இறைவன் தாங்கள் மீது வைத்துள்ள அன்பு
தாங்கள் இப் பூமியில் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளது
இறைவன் என்றண்டும் தங்கள் கூடவே இருக்கிறார்
நலமுடன் வாழ்க பல்லாண்டு
வணங்குகிறேன்

Thanks GOD. Welcome back GURUGI. We are Awaiting for your service.

Guruji, namaskaram migavum santhosham . Katturai manathai thoduvathaga irundathu. Ennidam irunda siria vetrumaiyum maraindu ponathu enru koori ulerikale. Athu ennadu guruji. En chandegathai rhelivu paduthungal guruji

மு .சரவணன்
திருச்சி


அனைவரது பிரார்த்தனையும் வீண் போகவில்லை குருஜி மீண்டும் நல்லபடியாக வந்ததற்கு கோடானகோடி நன்றிகளை எல்லாம் வல்ல இறைவனுக்கு செலுத்துவோம்
மிக மிக மிக்க மகிழ்ச்சி மீண்டும் மீண்டும் கடவுளுக்கு கோடான கோடி நன்றி

குருஜி அவர்களின் ஆன்மிகப்பணி தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மு .சரவணன்
திருச்சி


அனைவரது பிரார்த்தனையும் வீண் போகவில்லை குருஜி மீண்டும் நல்லபடியாக வந்ததற்கு கோடானகோடி நன்றிகளை எல்லாம் வல்ல இறைவனுக்கு செலுத்துவோம்
மிக மிக மிக்க மகிழ்ச்சி மீண்டும் மீண்டும் கடவுளுக்கு கோடான கோடி நன்றி

Anonymous
10:04

மீண்டு வருவீர்கள் இப்படி ஒரு பதிவை நாங்கள் காணத்தான் போகிறோம் என்று உள்ளுணர்வு அழுத்தமாக சொல்லிக்கொண்டே இருந்தது. அந்த கருணை கடல் கிருஷ்ணன் பாதங்களுக்கு நன்றி.

மிகுந்த மகிழ்சியுடன்,
குருபிரசாத்

Wowww....:) :) :)
Guruji. Today You filled my face with full of smile and Happiness. We are extremely Happy to see you & here your voice Guruji. We were missing you So So So Much. Thanks to God Krishna.

Neengal Thollaikoduka varavellai engalai paathugakathan vanthu erukeerkal enbathai thelivaha sollikolla verumbukuren. :)

Ungal Assirvathathudan.

RENGARAJ
Abudhabi


உங்களின் வருகைக்கும் உங்களது தொடர்சிக்க்காகவும் காத்திருந்தோம் தற்போது மிக்க மகிழ்ச்சி
அந்த இறைவன் சோதிப்பான் கைவிடான்.அதுபோல என்னைபோல உங்களுக்காக ப்ரார்தனைசெஇதவர்கலுக்கும் மிக்க நன்றி. உங்களது சேவை உத்வேகமாக தொடரட்டும், பலரது வாழ்க்கை மாற்றம்கண்டுள்ளது உங்களின் ஆசியால். மீண்டும் மென்மேலும் வளரட்டும் என்று அந்த இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
என்றும் பணிவன்புடன்
இரா கநேஷனந்தன்

im really happy now. ellam valla perungkarunai talaivanaukkum siddhar perumakkalum kodana kodi nandrigal.

Guruji Namaskaram

may God bless you with long healthy life
Muthu barathi p

11:28

Kodi Nakaskarm Kadavulukku... Maranamila peruvaazhvu gurujikku.

தினசரி திருநீறு இடும்பொழுது குருஜியை நினைப்பேன் பிறகு அன்றாடம் வேளையில் மூழ்கிவிடுவேன் நேற்று விடியர்காலையிளிருந்து குருஜி பற்றிய நினைப்பே வந்து கொண்டிருந்தது வரும் ஞாயிறு சென்றுவருவோம் என்று சங்கல்பம் செய்துகொடிருந்தேன் இன்று பதிவு வந்துவிட்டது சகலமும் கிருஷ்ணார்ப்பணம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். ஆகையினால் ஒருமுறைகூட எதிர்மறையாக நினைத்ததே இல்லை. வாழ்கவளமுடன்

Vanakkam Guruji,
Thanks GOD. Welcome back Guruji...

Iraivan siththathil thangal pani thodara vendum endru ullathu. Enave Thangal matrum vasakarkal anaivarathu prarthanai niraiveri ullathu. Thangal meenduvara karunai seitha Iraivanukku pala kodi namaskarangal. Makizhchiudan thangal pani thodarattum. Om Sivaya Nama.

எவ்வளவு பணம் பிடுங்கினார்கள் ? அதை சொல்லவேயில்லையே

Namaskaram. KANNAN THIRUVADIGALE SARANAM.May GOD BLESS you
c.venkatasubramanian

DEAR RESPECTED GURUJI
I AM STALIN FROM COIMBATORE , I AM REALLY HAPPY HEAR ABOUT YOU FROM THE SPEEDY RECOVERY , WE ALL LOVE AND RESPECT YOU GURUJI, THANKS FOR BACK AGAIN

எல்லாம் அவன் செயல்

விஷ்ணு மேல் அதீத ப்ரித்தி கொண்டவர்களுக்கு வைகுண்டம் செல்லும் வாய்ப்பு வரப்ரசாதம் ஆகும். ஒருவன் இறக்கும் தருவாயிலும் என்னை நினைத்தால் அவனுக்கு எனது உலகம் கிட்டும் இனி அவன் மீண்டும் பிறக்கமாட்டான் என்பது கீதையில் கண்ணனின் வாக்கு. வாசுதேவனின் வாயிற் செல்லும் வாய்ப்பு வந்தும் தன்னலம் கருதாமல், தன்னை நம்பி உள்ளவர்களுக்கு இன்னும் உதவி செய்யும் கடமை உள்ளது என்று எங்கள் நினைவு வந்து திரும்பி வந்த குருஜிக்கு நன்றி .. இத்தனைக்கும் நாங்கள் யாரும் தமது சொந்தபந்தமோ உடன் பிறப்போ கிடையாது. தாம் எங்களின் நலம் விரும்பி, பல யோகிகள் இம்மண்ணில் பிறந்து தமது கர்மாவை மட்டும் செய்து பிறப்பிலியானார்கள். அவர்கள் மக்களோடு பேசியதும் அரிது அப்படி பட்டவர்கள் இன்னுமும் வாழ்கின்றனர். ஏதேனும் சந்தேகம் கேட்டாலும் தெளிவான பதில் அவர்களிடம் பெறமுடியாது. ஆனால் தாமோ மாறுபட்டவர் எங்கள் அனைவருக்கும் கிடைத்த அக்ஷய பாத்திரம் ஆவிர்கள். இதில் எங்களில் சுயநல வேண்டுதலும் அதுவே தினமும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இப்போது குருஜிக்கு வைகுண்ட வாசம் வேண்டாம், எங்களுக்கு அவர் வேண்டும் என்றே வேண்டினோம், அன்று ஆஞ்சினேயருக்கு செவி சாய்த்த பரந்தாமன் இன்று எங்கள் வேண்டுதலுக்கும் செவி சாய்த்தார். அதற்க்கு இந்த சமயத்தில் பாற்கடல் வாசனுக்கு நன்றி கூறுகிறோம்.... கிருஷ்ணார்ப்பணம்.

guruji avarkalukku vanakkam, thaangal meendu vandhadhu ulakin mikaperiya santhosam varam endru ninaikiren. Engalin punniyangal innum iruppadhaal ungalai meendum thodarum vaaipu kidaithulladhu endru ninaikiren. VAALKA NALAMUDAN GURUJI AVARKAL.

Dear respected Guruji, I'm Already told our Uncle Thirupath Thirumal with you. From today onwards our life's Going well, Because of my Guruji YOU

மீண்டும் வந்த குருஜி அவர்களை வாழ்த்த வயதில்லை அவர் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்!

Anonymous
23:03

நன்றி
என்ற
மூன்றெழுத்தில்
முடித்து விட முடியாது
ஆனாலும்
எல்லாம் இறைவன் சித்தம்
என்ற வழியில்
காண வேண்டும் என்று
என்னும்போதெல்லாம்
தடங்கல் கட்டி விட்டு
மீண்டும் காண தந்த
இறைவனுக்கு
நன்றி நன்றி நன்றி
எல்லாம் அவன் அருளால்
என்று ஆனா பின் ஏன் கவலை
மீண்டும் காண தந்த
இறைவனுக்கு
நன்றி நன்றி நன்றி
மகேஸ்வரன் அருப்புகோட்டை

Anonymous
23:19

God always with good people.
[PARAMESWARAN]

குருஜிகு வணக்கம் தங்கள் மீண்டும் இந்த உலகிக்கு வருவீர்கள் என்று தெரியும் இன்னும் பல பயனுள்ள ஆன்மீக சொற்பொழிவுகள் என்னை போன்ற ஆன்மீகபாதை செல்வர்களுக்கு உறுதுணை யாக நிற்கும் என்பதில் மாற்றம் இல்லை நீங்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்
இவன்
சதீஷ்
கரூர்
9659761501

யாமும் வேண்டினோம் நடராசப் பெம்மானை...
வாழி நலம் சூழ.....

-மகுடதீபன்

09:53

மிக்க மகிழ்ச்சி. மீண்டும் உங்களது இறை பணி தொடர அந்த வாசுதேவன் கிரிஷ்ணனை நமஸ்கரிக்கின்றேன்.வாழ்க பல்லாண்டு குருஜி.

GURUJI WAITING FOR GUIDANCE FOR ENLIGHTMENT

Almighty is always with you guruji..........

Welcome guruji.my sincere thanks to our almighty God to give us our guruji with good health.

I AM VERY VERY HAPPY GURUJI

S.Thirumavalavan
www.tamilcore.com

pranams to the un known sakthi ramasubbu

Anonymous
03:20

அன்பான குருஜி,

உங்களை கண்டேன் பகல் கனவில் ஜந்து நாட்களுக்கு முன். என்னை ஆறுதல் படுத்த இறைவன் ஏற்படுத்தும் விளையாட்டு என்று நினைத்து கொஞ்சம் ஆறதல் அடைந்தேன். இருப்பினும் என் மனம் சஞசலப் பட்டபடியே இருந்தது.

இன்று இப்போது என் குருஜியை பார்த்த பின் மிகமிக சந்தோஷத்தில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.

இன்னும் பல்லாண்டு காலம் வாழ வாழ்துகின்றேன்.

அன்புடன்

மு. சுப்பம்மாதேவி

Anonymous
21:35

innum seyya vendiya panigal irukkiradhu. vazhga valamudan. marupiravi kidaithirukkiradhu.

Anonymous
01:40

welcome back guruji

Anonymous
14:30

முப்பு வியாதி,வறுமை இவைக்கு யாரும் தப்புவதில்லை.


Next Post Next Post Home
 
Back to Top