( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நாரதர் கண்டுபிடித்த விமானம்


   வாரணாசியிலிருந்து ஒரு சந்நியாசி என்னை சந்திக்க வந்தார், அவரும் நானும் பல விஷயங்களை பற்றி பேசினோம், எங்கள் பேச்சு பல உலக விவகாரங்களை சுற்றி வளைத்து கடைசியில் அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்வதில் நின்றது.

    அயல்கிரகவாசிகள் பூமிக்கு வருவது இருக்கட்டும், நமது பூமிவாசிகள் அயல்கிரகங்களுக்கு சென்று இருக்கின்றார்களா? அப்படி அவர்கள் வேற்று கிரகத்துக்கு சென்று வந்திருந்தால் வந்தவர்களைப் பற்றிய குறிப்பு இருப்பதைப்போல் சென்றவர்களைப் பற்றியும் குறிப்புகள் இருக்கும் அல்லவா? அதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியம். இதிகாசம் மற்றும்   சரித்திரக் குறிப்புகளில் உண்டா? என்று கேட்டார்.

    ராமாயணத்தில் இலங்கையின் அரசன் குபேரனோடு போர் புரிந்து அவனது புஷ்பக விமானத்தை கைப்பற்றிய விதமும் அந்த புஷ்பக விமானத்தில்  ஏறி இலங்கை வேந்தன் பல உலகங்களை வெற்றி கொண்டதையும் அதே போன்று மஹாபாரதத்தில் பாசுபதாஸ்திரத்தை பரமேஸ்வரனிடமிருந்து பெற்ற காண்டீபன் ஒரு விசித்திரமான பறக்கும் வாகனத்தில் ஏறி தேவலோகம் மற்றும் பல உலகங்களுக்கு சென்று வந்ததைப் பற்றியும்குறிப்புகள் இருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டினேன்

      எனது பதிலால் அவர் ஓரளவு திருப்தி அடைந்தாலும் அந்த பதில் எனக்கு அவ்வளவாக திருப்திகரமாக தோன்றவில்லை, எனவே பூமிவாசிகளின் அயல்கிரக பயணத்தைப் பற்றி ஆராய வேண்டும் என்ற வேட்கை எனக்குள் எழுந்தது.
  
     பலவிதமான உலகங்களுக்கு இதிகாச  நாயகர்களும் புராண புருஷர்களும் சென்று வந்ததற்கான ஆயிரமாயிரம் குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன, இதில் பெரும்பாலனவற்றை கதைகள் என்றும் கவிஞர்களின் அதீத கற்பனை என்றும் நாம் ஒதுக்கி விடுகிறோம்

    இந்த குணத்தினால்தான் பல அரிய பொக்கிஷங்களை நாம் இழந்து இருக்கின்றோம், புராணங்களும். இதிகாசங்களும் நடக்காதவற்றை நடக்கவே முடியாதவற்றை பற்றி பேசுகிறது என்று கருதி வந்த நமக்கு  அவைகள் உண்மைக்கு புறம்பானவை அல்ல ஒரு காலத்தில் பூமியில் நடந்த சத்யமான சரித்திரங்களே என்பதை நிரூபிக்க பல சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன,

    அமெரிக்க அனுப்பிய விண்கலம் ஒன்று கடலுக்கு அடியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலம் ஒன்று புதைந்து இருப்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டியுள்ளது, இந்தப்படம் வானரங்கள் சேது பந்தனம் அமைத்தது வால்மீகியின் கற்பனை அல்ல நிஜமே என்பதை முகத்தில் அடித்தாற்போல் நமக்கு பறைசாற்றுகிறது.


    ஸ்ரீ கிருஷ்ணனின் காலத்திற்கு பிறகு துவாரகையை கடல் கொண்டதாக பாகவதம் கூறுகிறது, பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துவாரகை கடலுக்கு அடியில் இருப்பதற்கான ஆதாரங்கள் குஜராத் மாநில கடல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
  
      இதே போன்று டில்லிக்கு அருகில் உள்ள குருஷேத்ராவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு கிடைத்த சில எலும்புகளில் அணுக்கதிர் பாய்ந்துள்ளதற்கான சாத்யககூறுகள் நிறைய இருப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

    இது அந்தக்கால அஸ்திர வல்லுநர்கள் அணு ஆற்றலை பயன்படுத்தும் விதத்தை திறம்பட அறிந்திருந்தார்கள் என்பதை நமக்கு புலப்படுத்துகிறது.
 இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது பறக்கும் திறன் உடைய வாகனத்தை நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்பதிலும் அவ்வாகனங்களின் மூலமாக பல கிரகங்களுக்கு சென்று வந்தார்கள் என்பதிலும் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை

    மாக்ஸ்முல்லர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றில் நாம் இப்போது கண்டுபிடித்ததாகக் கூறும் நீராவி எஞ்சின், மின்சாரம், வயர்லெஸ் ஆகியவவைகள் வேதகாலத்திலேயே ரிஷிகளுக்கு நன்றாக தெரிந்து இருந்தது, வேதகாலத்தில் வெற்றிகரமாக கையாளப்பட்டு வந்த பல சாதனங்களின் குறிப்புகள் அவற்றை பின்பற்றிய முறைகள் ஆகியவற்றை நாம் இழந்து விட்டோம் அவர்கள் கண்டுபிடித்து கையாளாத  நவீன  சாதனங்கள் எதுவுமே இல்லை என்று கூறி இருக்கிறார்.

    மாக்ஸ் முல்லர் கண்மூடித்தனமான நம்பிக்கைவாதியோ தமது கொள்கைக்காக வலிய வாதிடுபவரோ அல்ல, மிகச்சிறந்த ஆராயச்சியாளர் வேதங்களில் பொதிந்துள்ள பல அரிய நுண்ணிய விஷயங்களை உலக மக்களுக்கு தெரியப்படுத்திய சாதனையாளர் எனவே அவர் கூற்றை ஆப்தவாக்கியமாக எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் நமது வேதங்களிலும் வெறுமென இறைவனை வழிபடுவதற்கான குறிப்புகள் மட்டும் இல்லை, விவசாயம் ரசாயனம் வானியல் பற்றியெல்லாம் தேவரிஷிகள் விரிவாக கூறிஉள்ளார்கள், ருக்வேதம் ஐந்தாம் சாகை பதினோராம் அத்யாயம் ஆறாம் ஸ்லோகத்தில் காற்று நிரப்பிய ரதம் ஒன்றை வானவெளியில் நம் இஷ்டப்படி ஒட்டுவதற்கான வழிமுறை கூறப்பட்டுள்ளது

    வேதம் குறிப்பிடும் காற்றடைத்த ரதங்கள் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு என இருந்ததாகவும் பல சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன, ஆனால் இத்தனை விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்ட இந்த நாளில்கூட சில அடுக்கு விமானங்கள் என்பது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை

    ஷப்த ரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ் மஹரிஷி தாம் எழுதிய யந்திர சர்வஸ்வம் என்ற நூலில் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவைகளைத் தயாரிக்கும் முறைப்பற்றியும் அவைகளின் செயல்திறன் பற்றியும் மிக விரிவாக கூறுகிறார், அவர் மட்டுமல்ல அகத்திய மஹரிஷியின் “சக்தி சூக்தம்” என்ற நூலும் ஈஸ்வரர் என்பவரின் “கௌதாமினி காலா” என்ற நூலும் ஷக்கானந்தரின் “வாயுதத்துப் பிரகரணம்” நாரதரின் “வைஸ்வனா தந்திரம்” மற்றும் “ஆகாச தந்திரம்” போன்ற நூல்களும் நாராயண மஹரிஷி என்பவரின் “விமானச் சந்திரிகா”  “யந்திர கல்பம்” “யானபிந்து சேதாயன” “பிரதிபிகா வியோமயானர்ஹா” “பிரகாலம்” ஆகிய நூல்களும் ஆதிகால விமானங்கள் அதன் நுட்பங்ககள் பற்றி விரிவாக கூறுகிறது.
 
    இதில் சிலவற்றை வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதாலேயே பூமிவாசிகளின் அயல்கிரக பயணம் உண்மைதான் என்பதை உறுதியுடன் புரிந்து கொள்வீர்கள்.


    மேலும் இதில் ஒரு விந்தையான உண்மையையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன், விமானங்களைப் பற்றி மட்டும் அல்ல விமான ஓட்டிகள் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் மனோபாவம் எத்தகைய திடத்துடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் பரத்வாஜ் மகிரிஷி இரண்டு அத்யாயங்களில் விரிவாக கூறுகிறார்.

    விமான சாஸ்திரத்தில் கூறப்பட்ட 32 கொள்கைகளை நன்றாக கற்றுத்  தேர்ந்தவனாகவும் யந்திரங்களின் நுட்பங்களை அறிந்தவனாகவும் வானவீதியில் விமானத்தை செலுத்தவும் நிலையாக நிறுத்தவும் முன்னும் பின்னும் மேலும் கீழும் வட்டமாகவும் தலைகீழாகவும் விமானத்தை ஓட்டத் தெரிந்தவனாகவும் புதிய விமானத்தை உருவாக்கத் தெரிந்தவனாகவும் எந்த நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கும் சக்தி உள்ளவனாகவும் தனது அச்சத்தை பிறர் பார்க்கா வண்ணம் மறைக்கும் திறன் படைத்தவனாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறவது இன்றும் பொருந்தும் அல்லவா
  இனி ரிஷிகள் குறிப்பிடும் விமானங்களைப் பற்றி சிறிது பார்ப்போம்

   1. சக்தி யுகம் : வானத்திலிருந்தே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம் இது.
    2. பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் இயல்புடைய விமானம்.
    3. தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாக கொண்டு இயக்கக் கூடிய விமானம்.
    4. கிதோகமா : சிகி. சிரிகாசினி போன்ற மரங்களை எரித்துப் பெரும் எண்ணையில் இயங்கக் கூடிய விமானம்.
    5.ஹம் சுவாகா : சேமித்து வைக்கும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் அபாரத்திறன் படைத்த விமானம்.
    6. தாரமுஹா : வானிலிருந்து பூமியை நோக்கிவரும் எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம்.
    7. மாணிவஹா : சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் விஜய. பாத்ரா. ஆஷ்ஹா போன்ற உலோகப் பொருட்களாலும் செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக கூடிய விமானம்.
    8. மாராதசாஹா : இது வானில் இருந்தபடியே காற்றை உறிஞ்சி மின்சார சக்தியை எடுத்து இயங்கும் விமானம்.
    இது தவிர “ஷக்டிங்கர்ப்பம்”, “விக்யுதம்”. “துருபதம்” “குண்டலிகமும்” போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் குறிப்பிடுகிறார்


    இன்று செயற்கைக் கோள்களை அனுப்பி புவியின் கனிவளங்களை நாம் ஆராய்வதை போல் அன்றும் மாணிவாஹ விமானம். லோபகர்ப பிரசரணம். அமுஷவாஹா போன்ற விமானங்கள் வானமண்டலத்திலேயே நிலையாக இன்று பூமியில் ஏற்படும் சீதோஷன மாற்றங்கள் கணிம  வகைகள் இருக்கும் இடங்கள் பற்றியும் தகவல்கள் அரசகர்களும் தந்ததாகவும் நாரத மஹரிஷி எழுதிய வைஸ்னா தந்திரம் என்ற நூலில் குறிப்பு இருக்கிறது

    இது மட்டுமல்லாது ஒரு விமானத்தில் இருப்பவன் பேசும் ஒலி அதிர்வுகளை வைத்து அடுத்த விமனாத்திற்கு தகவல் சொல்லும் “அநுக்கிரம ஷாபிதா” என்ற கருவி இருந்ததாக கௌதாமினி மஹரிஷி குறிப்பிடுகிறார்.

    “ரூப கார்ஷண ரகசியம்” என்ற கருவி எதிர் விமானத்திற்குள் ஒளிக்கதிர்கள் பிரயோகித்து அந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் சாதனங்கள் அங்கே இருப்பவர்களின் வண்ண ஆடைகள் ஆயுதங்கள் போன்றவற்றை மிகத்துல்லியமாக தாம் பொருத்தப்பட்டிருக்கும் விமானத்தின் தலைமையகத்திடம் தெரிவித்து விடும் என்று நாராயண மகரிஷி தமது நூலில் கூறுகிறார்

     “தீஷமபதி” என்ற கருவி எதிரிகள் விமானத்தை கவனித்து அதன் வருகையை முன்கூட்டியே “சதபிதா” என்ற விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள “அபஸ்மாராதாபம்” என்ற ஆயுதப் பகுதிக்கு தகவல் அனுப்பும் என்றும் உடனே அந்த அபஸ்மரா கருவி “ஷர்ஷன்” என்ற ஏவுகணையை 87 டிகிரி  வெப்பதில் வெளியிட்டு எதிரி விமானத்தை அழித்து விடுமென்றும் “திக்பிர தர்ஷண” ரகசியம் என்ற நூல் கூறுகிறது

    இன்னும் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பழமையான ஏட்டுச் சுவடிகளிலும் கிரகந்த நூல்களிலும் காணக் கிடைக்கின்றன

     பழங்கால விமான இயலைப் பற்றிய இத்தனை நூல் ஆதாரங்கள் கிடைக்கின்றனவே நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட விமானங்களோ அல்லது அதன் கருவிகளோ ஒன்று கூட இன்றைய ஆதாரத்திற்கு இல்லையா? என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் எழக்கூடும்

    அதற்கான பதில் எந்த புறக்கருவிகளுமே இன்றுவரை நம்மிடம் கிடைக்கவில்லை என்பதுதான் அதற்கு காரணம் அவைகள் ஏதோ ஒரு மஹாப் பிரளயத்தினால் அழிந்து இருக்க வேண்டும் அல்லது அவைகள் உருவாக்கினவர்களே எந்த காரணத்தின் அடிப்படையிலேயோ அழித்து இருக்க வேண்டும்

    பின்னர் நூல் ஆதாரம் மட்டும் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அக்கால நூல்கள் எதுவுமே எழுதப்படவில்லை காலங்காலமாக குருமுகமாக மனப்பாடம் செய்யப்பட்டு வந்திருக்கிறது, அதன் பின்னரே தற்போது கிடைக்கின்ற நூல்கள் எழுத்து வடிவம் பெற்று இருக்கிறது இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் , பல புதிய ஆதாரங்கள் கிடைக்கும் என்தில் ஐயமில்லை

      அந்த  மந்திரத்தில் எனக்கு நல்ல பயிற்சிகளையும் அனுபவமும் குருஅருளால் உண்டு என்றாலும் அதை பகிரங்கப்படுத்த நான் விரும்பவில்லை,
 இதை நான் இங்கே குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம் உண்டு, எந்த ஒரு விஷயத்தையும் பழைய நூல்கள்  குறிப்பிடுகின்றன என்பதாலேயோ  குருமார்கள் கூறுகிறார்கள் என்பதாலேயோ  நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது இல்லை அதை நடைமுறைப்படுத்தி முழுமையான அனுபவம் பெற்று திருப்தியுள்ள பின்னரே ஏற்றுக்க கொள்வது என் வழக்கம்

    இதன் அடிப்படையில் ஆகாசாகாமினியை பிரயோகப்படுத்தி நான் சுயமாக அனுபவம் பெற்றதனால் சூட்சம சரீரத்தில் அயல்பிரதேச பயணம் என்பது அப்பழுகற்ற உண்மை என்பதை உறுதிப்பட என்னால் கூற இயலும்.

    அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து சென்றதற்கான ஆதாரங்கள் தேடுவதில் முனைப்பாக இருக்கும்    நமது  ஆராய்ச்சியாளர்கள். நாம் அயல் கிரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் இன்னும் பயன் உடையதாக பல புதிய ஆதாரங்களை பெற்றுத் தருவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
    நாம் நம்மைச் சுற்றி உள்ள விஷயங்கûப் பற்றி ஆராய்வதில் முனைவதில்லை, நமக்கு அப்பால் இருக்கும்  விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம்.

செவ்வாய் கிரகத்தைப் பற்றி தெரிந்த அளவிற்கு நம் பூமியைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருப்போமானால் இன்றை இயற்கை பேரழிவுகளை எதிர் கொள்வதற்கான சக்தி நமக்கு கிடைத்திருக்கும்

    ஆனால் நம் முன்னோர்கள் எந்தவித விஞ்ஞான உபகரணமும் இன்றி நம்மைச் சுற்றி உள்ள பொருட்களை ஆளுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் வழியில் நாம் சென்றால் பூமியைப் பாதுகாப்பது மட்டுமன்றி அயல் கிரகங்களிலும் நமது குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்கலாம்.


                                                                         
+ comments + 36 comments

Anonymous
12:19

நவீன காலத்தில் பணம், வசதிகள்,திறமை இன்னும் எத்தனையோ மூலங்கள் இருந்தாலும் நாம் இன்னும் எத்தனை தூரம் பின்தங்கி இருக்கிறோம் என்பதை இந்த கட்டுரை தெளிவுபடுத்துகிறது தொடர்ந்து உலகிற்கு உண்மையை உரக்க சொல்லுங்கள் அதுமட்டுமல்லாமல் உங்கள் படைப்புகளில் ஆழமான கருத்துக்களை காண முடிகிறது

Anonymous
18:40

tamil2friends.com

சிறப்பான கட்டுரை

"நாம் நம்மைச் சுற்றி உள்ள விஷயங்கûப் பற்றி ஆராய்வதில் முனைவதில்லை, நமக்கு அப்பால் இருக்கும் விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம்,
செவ்வாய் கிரகத்தைப் பற்றி தெரிந்த அளவிற்கு நம் பூமியைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருப்போமானால் இன்றை இயற்கை பேரழிவுகளை எதிர் கொள்வதற்கான சக்தி நமக்கு கிடைத்திருக்கும்"

மிக உண்மை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிட காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்.

சமீபத்தில் நான் படித்ததிலேயே மிக வினோதமான கட்டுரை.ஆனால் ஆகாய விமானப் பிரயாணமும் பர ஆகாசப் பிரவேசமும்[சூக்கும உடல் பிரயாணம்]ஒன்றல்லவே?

Anonymous
23:26

tamil2friends.com

நம்பும் படியான ஆராய்ச்சி ,, உண்மைகள்


சந்துரு

சுவையான விவரங்களுக்கு நன்றி.

துவாரகையும் சேதுவும் கடலுக்குள் புதைந்திருக்கும் சாத்தியத்தை வைத்துக் கொண்டு அந்த நாளில் வான சாஸ்திரத்தில் தேர்ந்து விமானமோட்டினார்கள் என்பதை நம்ப முடியவில்லை; அப்படி முன்னேற்றத்தின் உச்சியில் இருந்திருந்தால் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் அறிவின்மையைச் செய்திருப்பார்களா? அவர்களும் முனிவர்கள் வழி நடந்தவர்கள் தானே?

ss
13:15

4 varudangalukku munnar naan kallooriyil padikkumpothu "Vaimanika Saastram" Enru Arsikere Pandit enru Bangalore il iruntha saastrigal oruvar idai patri thella thelivaaga ezhuthi irunthaar. antha pusthakam engal kallori library yil veru oru araichikkaaga naan edutha pothu kidaithathu. at the last he mentions some German Name and Note of Thanks to those to bring out this work. wat to say else??????

ஸ்வாமி! வணக்கம்! வாழ்க வளமுடன்! நல்ல ஆய்வு. நல்ல விளக்கமும்! நன்றி! ஆமாம் ஸ்வாமி! கருப்பு சட்டை ஆஆசாமி இன்னும் பார்க்கவில்லையோ! அதுக கிடக்குது! மன்னிக்கவும்! அவுங்க கிடக்குறாங்க! எல்லாம் சிவன்மயம் என்றால், அவர்களுக்கும் மரியாதை கொடுக்கனும் அல்லவா! அன்புடன்..... அருண்முருகன்

சேதுவையும் துவாரகையும் உதாரணமாக நான் காட்டியது புராண இதிகாசங்கள் பொய்யானவைகள் அல்ல. அவற்றிலும் சில உண்மைகள் உண்டு. என்பதை உணர்த்துவதற்கே ஆகும்.

முன்னேற்றத்தின் உச்சியில் இருந்தால் அழிவு வேலைகளில் மனிதர்கள் ஈடுபடமாட்டார்கள் என்பது போலியான கற்பனையாகும். ஒன்றுமே இல்லாத போதும் எல்லாமே கிடைத்துவிட்ட பிறகும் மனித மூளைக்குள் சாத்தான் நுழைந்துவிடும். அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும் வரைதான் நியாய தர்மம் என்பது நடைமுறை படுத்தபடும்.

Manmadhan
17:01

இது மாதிரியான கட்டுக்கதைகள் நான் நிறைய படித்ததுண்டு. நம்பும்படியாக ஆதாரப்பூர்வமான, அறிவுப்பூர்வமான கருத்துகளைக் கூறுங்கள். இதிகாசங்கள் அனைத்தும் மனிதன் படைத்தவைதான். நீங்கள் கூறிய இதிகாசங்கள் மனிதன் கூறிய கட்டுக்கதைகள்தான். இதுபோன்று அறிவி-கள் கூறிய கருத்துகளை நீங்கள் தக்க ஆதாரத்துடன் ஆராய்ந்து பின்னர் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மனிதன் இப்போது அறிவியல் பாதையில் போய்க் கொண்டிருக்கிறான். எவனோ ஒருவன் அந்தக் காலத்தில் உளறியதை நீங்களும் ஆராயாமல் கட்டுக்கதைகளை தயவு செய்து வெளியிட வேண்டாம். இது எனது அன்பு வேண்டுகோள்.

Anonymous
13:45

ஜயா வணக்கம். என்னுள் ஒரு சந்தேகம் தீர்த்து வைக்கவும். மனித குல பிறவிகள் தோன்றுவதற்கு முன்னாள் தோன்றிய (டைனோசர்) ராட்சத மிருகங்களின் எலும்புக்கூடுகள் இன்றும் கிடைக்கின்றன. ஆனால் ராமர் பாலம் கட்டிய அனுமான்களின் எலும்புக்கூடுகள் ஒன்றுகூட கிடைக்கவில்லையே ? அப்படியென்றால் அனுமான்(குரங்கு கூட்டம்)என்று எந்த மனித இனத்தை குறிப்பிட்டார்கள்.

அருமை சார்..
என் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளேன்...
உங்கள் ஆராய்சி பணி தொடரட்டும்..

தனபால்
11:08

திரு மன்மதன் அவர்களே,

///எவனோ ஒருவன் அந்தக் காலத்தில் உளறியதை.....///

எவனோ ஒருவனால் அந்தக்காலத்தில் எப்படி விமானத்தை பற்றியும்,விமான ஓட்டியின் தகுதிகளையும், அதில் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள் பற்றியும், மற்றொரு விமானத்தில் உள்ள கருவிகள்,மற்றும் நபர்களின் வண்ண உடைகளையும் பற்றி கூறியிருப்பதே (உங்கள் பாணியில் உலரியிருப்பதே ) மிகச் சிறந்த சிந்தனையே.

ஒரு 30 வருடத்திற்கு முன்னாள் உங்களால் இன்டர்நெட் வசதியுடன் கூடிய தொடுதிரை செல்பேசியை கற்பனை செய்ய முடிந்ததா???
அவர்கள் 20 நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தைப் பற்றி எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் கூறியிருப்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால்,அது உங்கள் வெறுப்பையே காட்டுகிறது.

தங்களுடைய ஆராய்ச்சி தொடரட்டும். எங்களுடய அன்பும்,ஆதரவும் எப்போதும் இருக்கும். நன்றி.

Anonymous
20:25

இதை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து மறுபடி நிரூபிக்க முடிந்தால் மிக நன்றாக இருக்கும். இல்லையேல் வழக்கமான இந்திய பழம்பெருமைகளில் ஒன்றாகிவிடும் அபாயம் இருக்கிறது. ஹிட்லர் ஒரு முறை நம் நாட்டின் சமஸ்க்ருத நூல் ஒன்றை மொழிபெயர்ப்பதற்காக ஒரு அறிஞரை இங்கிருந்து அழைத்துச் சென்றாராம். அந்த நூலானது பரத்வாஜ முனிவரின் வானவூர்தி பற்றிய அதி நுட்பமான விவரங்களைக் கொண்டதாக இருந்தது என்று அந்த மொழிபெயர்ப்பாளர் கூறினார். பின் ஹிட்லர் "இத்தகைய மொழியான சமஸ்க்ருதத்தை கற்காத நீங்கள் முட்டாள்கள்" என்றும் சொன்னதாகக் கேள்வி. விழுகிறதா பகுத்தறிவாளர்கள் செவியில்?

Anonymous
09:16

நல்ல காமெடி, சார்.. உங்களை போன்ற மனிதர்கள் இருக்கும் வரை தமிழகம் உருபடாது ..ராமர் பாலம் பற்றி எழுதும் முன் gondwana நில பரப்பை பற்றி படியுங்கள் நண்பரே ...இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித இனமே தோன்றவில்லை என்னும் பொழுது, எப்படி ராமாயண போர் நடந்திருக்கும்? இரும்பு என்னும் உலோகம் கண்டுபிடித்து வெறும் 3000 ஆண்டுகளே ஆயிருக்கும் பொழுது, எப்படி ராமர் இரும்பினால் செய்யப்பட்ட வில்லினை ஏந்தினர்? ஹிட்லர் ஒரு அறிய இன வெறியர் அதனால் தன சமஸ்கிருதத்தை பற்றி அவ்வாறு கூறினார் ...அறிவியலை கொச்சை படுத்தாதீர்!!!

Anonymous
15:41

@Riyadhraja ARUN, I THINK YOU HAVE NOT REALIZED THAT YOU ARE A DRAVIDIAN AND YOU HAVE BEEN INFLUENCED BY THE ARYANS WITH THEIR PRINCIPLES. IF ANY ARYAN AGREE TO ALLOW YOU INSIDE THE TEMPLE KARUVARAI, THEN I WILL AGREE THAT WE "BLACK SHIRT GUYS" ARE BAD. YOU MAY COME OUT AND CLAIM THAT THOSE ARE SET OF RULES AND REGULATIONS (AAGAMA VIDHIGAL). BUT MY QUESTION IS, WHO CREATED THOSE RULES AND REGULATIONS? IS IT GOD? IF SO, YOU NEED NOT ACCEPT THAT AS GOD THAT DISCRIMINATES PEOPLE BASED ON THEIR BIRTH. IT'S VERY MUCH KNOWN THAT THESE BRAHMINS WROTE THEM AND MADE THE OTHERS BE SUBMISSIVE AND FOLLOW THEM. I FEEL PITY FOR YOU, COZ, YOU STILL BELIEVE THAT RAM IS YOUR GOD, RAVANA IS YOUR ENEMY AND CONSIDER THESE ARYANS AS YOUR GURUS, WHERE THEY STILL CALL YOU A SUDHRA AND TREAT YOU WORSE THAN A ... (IF YOU WANT PROOF, VISIT AND BRAHMIN HOUSE AND DRINK WATER IN THEIR GLASS AND SEE, HOW THEY HANDLE THE GLASS)

Anonymous
16:14

@Anonymous WELL SAID ANONYMOUS. THESE GUYS ARE JUST TRYING TO JUSTIFY THEMSELVES WITH THE SCIENCE... U KNOW, EVEN BHARATHI IMAGINED TELEVISION IN ONE OF HIS SONGS... THANKFULLY, WE HAVE RECORDS OF BHARATHI, OTHERWISE, THESE GUYS WILL MAKE STORIES THAT BHARATHIAR INVENTED TV ;-)

Superb post ji!! Keep up your good work !!!
@ Anonymous:
History is not history any more, it has been modified by people for their own benefits. Regarding the Proof for Ramayana, NASA has confirmed the presence of a bridge inside the sea and please check the below link to know more about the proof for Ramayana

http://balajipalamadai.blogspot.com/2010/03/ramayana-real-pictures.html

Ramayana and Mahabahratham is called Ithi(ippadi)hasam(nadanthathu). So there is nothing to hide or exaggerate!

Anonymous
00:23

ஆகாசாகாமினி என்றால் என்ன? அதை பற்றி சிறிது விளக்கமுடியுமா? How can I contact you regarding this Yoga technique?

Anonymous
12:10

எந்த காலத்தில் சிலை வழிபாடு இந்தியாவுக்கு வந்தது? ஒரு புராணத்திலும், இதிகாசத்திலும் சிலை வழிபாடு பற்றி இல்லவே இல்லை . நன் ஒரு க்ரிச்தவனஹா இருந்தாலும், நன் நுறு தடவைக்கு மேல் மகாபாரதத்தை பகவத்கீதை யை படித்துள்ளேன், ஒரு இடத்திலும் சிலை வழிபாடு பற்றி ஒரு குறிப்பும் இல்லவேயில்லை. பின்பு எப்படி சிலை வழிபாடு இந்தியாவுக்கு வந்தது?

இந்த ரஹஅசியத்தை ஆராய்ந்தால் பல உண்மைகள் புரியும். தங்களின் பிளைப்புகஹா, பலரின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இல்லையென்றால், எப்பொழுதோ இந்தியா கலை அறிவியல் வானசாஸ்திரம் பொறியியல் போன்ற பல துறைகளிலும் முன்னேறியிருக்கும். வார்த்தைகளில் தான் அறிவு உள்ளது, சிலைகளில் அல்ல. வார்த்தைகளை திரும்ப திரும்ப பிரயோஹப்படுதினால் அறிவு நன்கு வளரும். சிலைகளை கட்டி அழுதாலும் ஒன்றும் வளராது.

ஆகவே, வேதங்களையும் உபநிஷதுகளையும் தமிழில் மொழி பெயர்த்து பலரும் பயன்பட அறிஞர்கள் முன்வர வேண்டும்.

நமது மூல வேதங்கள் மற்றும் புராணங்கள் pdf பிரதி பெருவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

Ram
10:38

Vaimanika Saastram is a old book written by Bhoja Maharaja.

Thanks,
Ram.

Anonymous
20:17

superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

திரு இராமானந்த யோகி அவர்களின் ஆராய்ச்சி அற்புதம். நமது இந்து மதத்தில் இல்லாத விஷயங்களே இல்லை. அதனால் தான் பல வெளிநாட்டினர்கள் இந்தியாவிற்கு வந்து இந்து மத யோகிகளையும், சாதுக்களையும், சந்நியாசி களையும், ஞானிகளையும் சந்தித்து அருள் பெறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள, குறிப்பாக தமிழகத்தில் உள்ள சில நாத்திக வாதிகளும், அரசியல் வாதி(வியாதி)களும் இந்தியாவின் ஏன் உலகத்தின் மிகத்தொன்மையான இந்து மதத்தையும் அதன் தத்துவங்களையும் இழிவு படுத்துவதே வேலையாக கொண்டுள்ளார்கள். சில மக்களும் அவர்கள் சொல்லும் பொய்யையும், புரட்டையும் நம்பி, ஒரு வேலையும் செய்யாமல் அவர்களின் பின் அலைந்து தங்கள் வாழ்வையும் தங்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வையும் பழாக்குகிறார்கள். இவர்கள் என்று தான் திருந்தப்போகிறார்களோ? இவர்களுக்காகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரம் எடுக்கவேண்டும்.
வாழ்க உங்கள் பணி, வளர்க்க உங்கள் தொண்டு.

நாகராஜன்.சு

Anonymous
14:46

mmmm ipdiyea unga vedhathin puhal padikittte irungada...

Anonymous
14:48

Narathar kndu pidithu vimanam...

neenga comedfy keemady pannaliea???

Sari antha vimanathai yaar olithu vaithar ???? aayyyoo ayyyoo Guruji ungalode ore nahaichuvaiyaha irrukirathu...

Anonymous
20:46

your hitler has just killed around 4 millions of human beeings. you want me to take him as a reference. SHIT

Anonymous
09:57

@tamilsukumar

Exactly. Also the pdf should be given to HAL and ISRO for reference.

Anonymous
13:38

படிப்பவர்களில் பெரும்பாலோனர் கருத்து எதுவுமே சொல்வதில்லை என்பது உண்மைதான்... அதற்காக இப்படியா சார் எழுதுவது?.....

nice research ,
pls continue,,,
any other article like that!


YENADHU ARYA SATHORARGALE :
INNORU MURAI YARAVATHU HINDHU MATHATHAI THAVARAGA SITHARITHAAL,
AVAN KAAL ADI MANNUM MATTRUM THALAI MUDIUM, KELUNGAL.
APPOATHU PURIUM INTHA KURAL
agara muthala yelluthellam aathi
baghava muthatre ulagu
nandri........

@anonymous நீங்கள் இங்கெய் அமர்ந்து கொண்டு கேலி செய்க்ரிரிீர்கள் ஆனால் மற்ற நாட்டுக்காரன் வீமானிக்க சாஸ்திரத்தை ஆய்வு செய்து புது புது விமானத்தை கண்டு பிடித்துக்கொந்டுள்ளன்

ok you have asked about the skelitons of VANARAMS.here they are.it is the species between human and monkey.they are called Neanderthal.HERE IS THE LINK GO AND LEARN THEN COME TO TALK
http://en.wikipedia.org/wiki/Neanderthal
here is the link for the atom bomb created by indians called BRAMMASTHRAM
http://www.youtube.com/watch?v=TLL4aCmphFE

டிசம்பர் 17, 1903 ஆம் அண்டிற்கு சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதம், 1895 ஆம் வருடம் இந்தியாவில், மும்பாய் நகரத்தில் உள்ள சௌபதி கடற்கறையில்…..
சிவ்கர் பாபுஜி தால்பேட் என்னும் இந்திய விஞ்ஞானியும் அவரது மனைவியும் இணைந்து சௌபதி கடற்கறையில் பரபரப்புடன் நின்றிருந்தனர். அவருடன் மிகப் பெரிய திரளான மக்கள் கூட்டம். என்ன நடக்க இருக்கிறது என்று தெரிந்து சில பேர், என்னவென்று தெரியாமல் பல பேர் அவர் அவர்களுக்கு தெரிந்ததை வைத்து யூகித்துக் கொண்டும் சில பேர். மக்கள் வெள்ளத்தின் இடையில் அப்போதிய பரோடாவின் மகாராஜர், சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்களும் புகழ் பெற்ற ஜஸ்டிஸ் கோவிந்த் ரானடே அவர்களும் தென்பட்டனர். ஏதோ முக்கிய நிகழ்வு ஒன்று நடக்க இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது ஆனால் என்னதான் நடக்க போகிறது என்ற வியப்பில் பொது மக்கள். விடை தெரியாமல் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த நொடியே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. உலகின் முதல் ஆளில்லா விமானம் அந்த கடற்கறையில் பறக்கவிடப்பட்டது. காற்றை விட கனமான பொருள் வானத்தில் பறக்க முடியும் என்று ரைட் சகோதரர்கள் சொல்லுவதற்கு 8 ஆண்டுகள் முன்பே அதை மெய்ப்படுத்திய சாதனை. கூட்டத்தில் ஆரவாரமும் பாராட்டு கோஷங்களும் விண்ணைப் பிளக்கும் போதே, “மாருத்சகா” என்ற அந்த ஆளில்லா விமானம் மணிக்கு சுமார் 40,000 கி.மீ வேகத்தில் 1500 அடி மேலே பறந்து விண்ணை முட்டிப் பார்த்து எந்த பாதிப்புமில்லாமல் பத்திரமாக தரையிறங்கியது. மகிழ்ச்சி ஆரவாரங்களுக்கிடையே தால்பேட் அவர்களை அக்கணமே பாராட்டினார் மகாராஜா. ஆம் இத்தனை ஆண்டுகள் அவர் காத்திருந்ததற்கு இன்று தக்க வெகுமதி கிடைத்ததல்லவா. அடுத்த நாள், புகழ்பெற்ற கேசரி நாளிதழில் இந்த சாதனை வெளியானது.

சரி இது எப்படி இவரால் முடிந்தது? சில ஆண்டுகளுக்கு முன்பு………..
சிவ்கர் பாபுஜி தால்பேட்
1864 ஆம் ஆண்டு மஹாராஸ்டிராவில் பிறந்த தால்பேட் சிறுவயது முதலே வானில் பறக்க வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொணடார். அவருக்கு அன்று தான் ஒரு நல்ல சந்தர்ப்பம் அமைந்தது. அன்று அவர் பண்டிதர் ஸ்ரீ சுப்பராய சாஸ்த்ரி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறந்த சமஸ்கிருத பண்டிதரான தால்பேட் விமான சாஸ்திரம் பற்றி பழங்கால வேதங்களில் இருந்து அவர் அப்போதே நிறைய கற்றிருந்தார். அவர்து இந்த சந்திப்பு அவரது அதிர்ஷ்டத்தை இன்னும் பலமாக்கியது. சாஸ்த்திரி அவர்கள் அவரிடம் இருந்த நிறைய சூத்திரங்கள் கொண்ட பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்ட விமான சாஸ்த்திரங்கள் ஆவணங்களை கொடுத்து ஊக்கப்படுத்தினார். இவரது ஆராய்ச்சிக்கு பக்கபலமாய் இருந்து பொருளுதவி புரிந்தது மகாராஜா சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்கள். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ரிக் வேதத்தில் விமானம் குறித்து தகவல் உள்ளதா என்றால் நமக்கு நம்புவதற்கு சற்று கடினம் தான். ஆனால் தால்பேட் முழுக்க முழுக்க கற்று தன்னை தயார் படுத்தியது ரிக் வேதம் மற்றும் விமான சாஸ்த்திரம் மூலம் தான்.

பின் நாளில் சமஸ்கிருத பண்டிதர் திரு ஆச்சாரியா அவர்கள், விமான சாஸ்த்திரத்தில் 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக மொத்தம் 32 தொழில் நுட்பத்தில் விமானம் தயாரிக்கும் முறை இடம்பெற்றிருப்பதை விளக்கினார். ஆனால் இது அவர் இயற்றியதில் நமக்கு கிடைத்த சிறு பகுதியே, பெரும் பகுதிகள் காலப்போக்கில் அழிந்து விட்டன என்கிறார் ஆச்சாரியார்.

மீண்டும் 1895 ஆம் ஆண்டு……

கேசரி இதழில் வெளிவந்த பின் சில நாட்களில் சாஸ்த்ரி அவர்களும், தால்பேட் அவர்களும் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டனர். மகாராஜா கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த தால்பேட் சில நாட்களில் தனது மனைவி இறந்தவுடன் ஆய்வுகளை நிறுத்திக் கொண்டார். 1916 ஆம் ஆண்டு அவரும் இறந்த உடன் அவரது உறவினர்கள் அவரது முக்கிய ஆவணங்களை சில ஜெர்மானியரிடம் விற்றதாக கூறப்படுகிறது. மாருத்சகாவின் மாதிரி வில்லே பார்லெ (Vile Parle) கண்காட்சியில் வைக்கப்பட்டது. இது குறித்த ஆவணங்கள் தற்போது ஹிந்துஸ்தான் ஏரொனாடிக்ஸ் நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


குறிப்பு :- பரத்வாஜ முனிவர் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முனிவர். இவரது குறிப்புகள் இராமாயணத்தில் இடம்பெற்றிருக்கும்.

21:55

அ௫மையான பதில்

Amazing information regarding ancient India. Ithu pola nerya naatula irukura vinyana poorvaamana kandupudipu velila vara arambichuruchu ana matha naatukum sila vera pala naatukum ena vithyasam na vinyanam pokisham aga kathu kedthuruku...


Next Post Next Post Home
 
Back to Top