( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை

   
ந்த பெரியவர் சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டு பொருள், சிறுவர்களின் கையில் கிடைக்கும் சிறு கூழாங்கற்கள் அவர் உடலை பதம் பார்ப்பதும் உண்டு, மற்றவர்களுக்கு அவர் ஒரு அறுவருப்பு பொக்கிஷம், இடுப்பை மறைக்கும் கிழிந்த சாக்கு. முகத்தை மூடி மறைத்திருக்கும் பெரிய சாடமுடியும். தாடியும். குளித்தே பலவருடமாக அழுக்கில் உரம் ஏறிப்போன உடம்பும். குப்பைகளை வாரி வைத்து முதுகில் தொங்கவிட்டு இருக்கிற பாங்கும் தெருமுனையில் அவர் வந்தவுடன் வீசும் முடைவீச்சும். யாரையும் அவரிடம் அண்ட விடாமல்தான் செய்யும், திடீரென்று  அவர் போடுகின்ற கூச்சலும். பாடுகின்ற பாடலும் மூளை பிளந்து போன பரம்பரை பைத்தியம் என்று பறைசாற்றும். ஊரில் இருக்கின்ற குப்பைகளையெல்லாம் பொறுக்கி எடுத்து பையில் திணித்துக் கொள்ளும் அவரின் ஆவேசம் எல்லோரையும் பயமுறுத்தும்.

    இப்படிப்பட்ட அந்த பைத்தியத்தை அணுகிய மகாகவி பாரதியார். ஏன் இப்படி குப்பைகளை சுமக்கிறாய் என்று கேட்டாரம், அதற்கு அந்த பைத்தியம் முண்டம் முண்டம் நான் வெளியில் சுமக்கிறேன், நீ உள்ளுக்குள் சுமக்கிறாய் என்று கூறியதாம், அப்போதுதான் பாரதியாருக்கு புரிந்து இருக்கிறது, அவர் ஞானப்பித்தன் என்று வெளியில் தெரியும் கோலத்திற்கும் உள்ளுக்குள் இருக்கும் ஞானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அலங்கரிக்கப்பட்ட பூக்களைப் புரட்டிப் பார்த்தால் புழுக்கள் நெளிவதைப் பார்க்கலாம், கலங்கி நிற்கும் சாக்கடையை துழாவினால் தங்கமும் கிடைக்கலாம்.

     நம்மைப்போன்ற சாதாரணர்கள் அலங்காரத்தையும். அழகையும் பார்த்து ஏமாறுகிறோம், கண்முன்னே இருக்கும் அழகான ரோஜா தோட்டத்தை விட்டு விட்டு வானத்திலிருந்து ஒரு கந்தர்வ தோட்டம் குதிக்கப்போவதாக கனவுகளில் மிதந்து காலத்தை வீணாக்கி கொள்கிறோம், மிக சாதாரண நடப்பில் கூட மிகப்பெரும் விஷயம் அடங்கியிருப்பதை கவனிக்காமல் பல நேரத்தில் ஊதாசினம் செய்து நமது அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுகிறோம்,

    நான் ஒரு நாயை 2 நாட்களாக கவனித்து வந்தேன், 2 நாட்களாகவே அந்த நாய் எதுவும் சாப்பிடுவதில்லை, வழக்கமான சுறுசுறுப்பு  அதனிடம் இல்லை, வாய்விட்டு குரைக்கக் கூட. அது யோசனை செய்து கொண்டிருந்தது, மந்தமாக எதையோ சாப்பிடக் கூடாததை சாப்பிட்டு விட்டது போன்று உடலை நெளிப்பதும். வளைப்பதும் சுருண்டு படுப்பதுமாக இருந்தது, 3வது நாள் காலை என்று நினைக்கிறேன் உடைந்த செங்கல்களுக்கு இடையில் முளைத்திருந்த ஏதோ ஒரு செடியை போய் ஆசையுடன் தின்றது, எனக்கு அந்த காட்சி அதிசயமாக இருந்தது, ஆடு. மாடுகள். இலை. தழைகளை தின்பது ஒன்றும் வியப்பல்ல, நாய் தின்பது விந்தையாகவும் விசித்திரமாகவும் இருந்தது, என்ன ஆச்சரியம் சிறிது நேரத்தில் அந்த நாய் வாந்தி எடுத்தது, வாந்தியில் கந்தை சாக்கு பகுதிகளும் வந்து விழுந்தன.
  
     நமக்கு நோய் வந்தால் அந்த நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம், நாம்வளர்க்கும் விலங்குகளுக்கும் கூட நாம் வைத்தியம் பார்க்கிறோம், ஆனால் தானாக பிறந்து வாழ்ந்து முடிந்து போகும் சாதாரண ஜீவன்களான இவைகளும் நோய் வந்தால் மருந்தை தேடும் அறிவை பெற்றிருப்பது இறைவனின் பெருங்கருணையல்லவாõ இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்பதை ஐந்தறிவு ஜீவன்கள்கூட மிக தெளிவாக அறிந்து வைத்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் தானே.
    நாய் தின்ற அந்த செடியை எடுத்து வரச்சொல்லி அதை ஆராய்ந்து பார்த்தேன், அந்த செடியின் பெயர் “தேள் கொடுக்கு இலை” என்பதை புரிந்து கொண்டேன், சாதாரணமாக அந்த தழை கிராமங்களில் தற்கொலை செய்து கொள்ள விஷம் சாப்பிட்டவர்களை வாந்தி எடுக்க வைக்க இதைப் பயன்படுத்துவர், நாய்கள் வாந்தி எடுக்க இந்த தழையை மட்டும் பயன்படுத்துவதில்லை, அருகம்புல்லையும் பயன்படுத்தும். பூனை. குரங்கு முதலியவை இத்தழைகளின் சக்தியை அறிந்து வைத்திருக்கின்றன, மிக சாதாரண விலங்குகளே மூலிகைகளை பயன்படுத்தி நோய்களை நீக்கி கொள்ளும் போது இறைவனின் உயரிய சிருஷ்டியான மனிதன் எந்த அளவு அறிந்து வைத்திருப்பான் என்று எண்ணி வியந்து போனேன்,

   வான வெளியில் சதா சஞ்சரித்துக் கொண்டு இருக்கிற ஒலி அலைகளை மந்திரமாக கண்டறிந்து வெளியிட்ட மனிதன் தனது சரீரத்திற்குள் வியாபித்து இருக்கும் “ஓஜஸ்” சக்தியை பிரபஞ்ச சக்தியோடு இணைக்க தெரிந்த மனிதன் மன சக்தியின் மூலம் இயற்கையின் இயக்கங்களையே கட்டுப்படுத் தெரிந்த மனிதன் இறைவனின் வரமாக பூமியில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து கிடக்கும் மூலிகைகளின் சக்தியை அறிந்தும் உள்ளான், பயன்படுத்தியும் வருகிறான்,
    ஒரு காலத்தில் நான் மூலிகைகள் மனித உடலின் மருத்துவத்திற்கும் ரசவாதத்திற்கும் மட்டுமே பயன்படக்கூடியது என கருதியிருந்தேன், 1992-ஆம் வருடம் ராபர்ட் வில்சன் என்ற அன்பருக்காக சித்த வைத்தியம் பற்றி அறிந்த அவரின் உறவினர் ஆவி ஒன்றை அழைத்து பேசிக் கொண்டிருந்தோம், அந்த ஆவி பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருந்த போது துண்டாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளை அனுத்துளுத்தான் தழை என்ற மூலிகையால் தொடும் ஷனத்திலேயே உறுப்புகள் ஒட்டிக் கொள்ளும் என்று கூறியது,
    மேலும் அந்த மூலிகைச் செடி கொல்லி மலை. உதக மண்டலம் போன்ற இடங்களிலும் செஞ்சிக் கோட்டையில் ராஜாக் கோட்டையில் உள்ள சுரங்க வழியில் இந்த மூலிகை உள்ளது என கூறியது, மேலும் அந்த ஆத்மா மூலிகைகளில் மந்திரப் பிரயோகம் பற்றியும் மூலிகைகளால் கிடைக்கும் மந்திர சித்திகளை பற்றியும் மிக விரிவாக கூறியது,
    மூலிகைகளில் மந்திர பிரயோகம் என்கிற விஷயம் எனக்கு புதுமையாக இருந்தது, அவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வலுத்த வேளையில் ஆவி சொன்ன அனுத்துளுத்தான் தழை உண்மையா அப்படி ஒன்று உண்டா என்ற கேள்வி மண்டைக்குள் பூரான் ஊர்வதைப் போல் உறுத்திக் கொண்டேயிருந்தது,
    அந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் என நினைக்கிறேன், தினமலர் பத்திரிகையை புரட்டி கொண்டிருந்த போது உதக மண்டலத்தில் வெளிநாட்டு நபர் ஒருவரின் அனுபவம் என்ற செய்தி என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது, மலைச்சரிவுகளில் அவர் நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராமல் எருமைமாடு ஒன்று அவர் தொடையில் முட்டி பெரும்காயத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் செடிகொடிகளுக்கு இடையில் பொறுக்க முடியாத வலியில் நடக்க முயாமல் நடந்து மேலே ஏறுகின்ற போது. திடீரென்று கால்களில் இருந்த வலிமறைந்ததாகவும் வலி என்ன ஆனது என்று காலைப் பார்த்த போது காயம்பட்டதற்கான அடையாளமே இல்லாது மறைந்து விட்டதாகவும் அந்த வெளிநாட்டுக்காரர் கூறி இருந்தார்,

   செடிகளுக்கு இடையில் நடந்து வரும் போது பலவிதமான செடி கொடிகள் தமது காயத்தை தொட்டதாகவும் அதில் ஏதோ ஒரு செடியின் வேகம் தான் தனது காயத்தை குணப்படுத்தியிருக்க வேண்டும் என கருதி அந்த செடி என்னவென்று அறிய 4 நாட்கள் தேடியதாகவும். இறுதி வரையில் தனக்கு கிடைக்கவே இல்லையென்று கூறியிருந்தது, மேலே சொன்ன ஆவி கூறியது என்னை நம்ப வைத்தது, அவரை குணப்படுத்தியது அனுத்துளுத்தான் தழையாகத்தான் இருக்க வேண்டும் என்று இன்றுவரை உறுதியாக நான் நம்புகிறேன்,

    இந்த விஷயம் மந்திரத்திற்கும் மூலிகைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும், அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற என் வேட்கையை மிக அதிகமாக அதிகரித்தது, இதன் அடிப்படையில் பலவித ஆராய்ச்சிகளையும் நான் மேற்கொண்டேன், அதர்வண வேதமந்திர சம்ஹிதை என்கிற சாகையில் குறிப்பிடப்பட்டுள்ள மரமல்லி இலையை எடுத்து ஜீவபீஜம் மந்திரத்தை உருஏற்றிய போது எனக்கு கிடைத்த விசேஷமான தேவதைகளின் பிரசன்னம் புது விதமான உத்வேகத்தை தந்தது, அந்த உத்வேகம் மூலம் என் சுய அனுபவமாகவும் பல பழைய கிரகந்தங்ளின் மூலமாகவும் பல அரிய விஷயங்களை அறியப் பெற்றேன், அதை அனைத்தையும் இல்லையென்றாலும் ஒரு சிலவற்றையேனும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

    மனிதர்களாகிய அனைவருக்குமே பணத்தின் மீது எப்போதுமே ஒரு ஈடுபாடு உண்டு, அதுவும் உழைக்காமல் திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமó கிடைக்கின்ற பணம் என்றால் யாருமே அதை வேண்டாம் என்று ஒதுக்குவதில்லை, புதையலைத் தேடி பெரும் பயணம் மேற்கொண்ட சரித்திர வீரர்கள் எத்தனைப் பேரையோ நாம் படித்து இருக்கிறோம் பார்த்தும் இருக்கிறோம், முதலில் புதையலுக்காக போட்டியிட்டு புதைந்து போன சாம்ராஜ்ஜியங்களும் உண்டு, அப்படிப்பட்ட புதையல் எங்கு இருக்கிறது, எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு, புதையல் எங்கு இருக்கிறது என்று காட்டி தரும் ஒரு மூலிகை இருக்கிறது, அதன் பெயர் நிலம் புரண்டி என்பது, புதையல் என்பது அக்கால மன்னர்கள். நிலப் பிரபுக்கள். மிகப் பெரும் கருமித்தனம் கொண்டவர்கள் மற்றும் சேமிப்பில் அக்கறை கொண்டவர்கள் தங்களது செல்வத்தை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்க பூமியில் புதைத்து வைப்பதாகும், அவர்கள் அப்படி செய்யும் போது வெறும் நிலத்தை தோண்டி மண்ணைப்போட்டு காசுகளை மூடி விடுவது இல்லை,    அப்பொருளை பாதுகாக்க பல அமானுஷ்ய சக்திகளை மந்திர உச்சாடனம் மூலம் அவ்விடத்தில் ஸ்தாபிதம் செய்துவிடுவார்கள், பூதம் புதையலை பாதுகாக்கும் கதையெல்லாம் வெறும் கற்பனைகளஞ்சியங்கள் அல்ல அதிலும் ஓரளவு உண்மைகள் உண்டு என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்,

    அமானுஷ்ய சக்திகளின் பாதுகாப்பில் புதையல் இருப்பதால் தான் அதை எல்லோரும் எடுத்து விடுவது கடினமாக இருக்கிறது, இந்த சக்திகளின் பாதுகாப்பில் இருக்கும் புதையல்கள் ஒரே இடத்தில் இருப்பதும் இல்லை, இந்த சக்திகளால் பல இடங்களுக்கு நகர்த்தப்படுவதும் உண்டு, புதையல்களை பாதுகாக்கும் அமானுஷ்ய சக்திகளை அதற்குரிய முறையில் திருப்தி படுத்தினால் மட்டுமே நம்மால் எடுக்க முடியும்,

    நிலம் புரண்டி மூலிகைச் செடி புதையல் எங்கே இருக்கிறது என்பதை நமக்கு காட்டும் ஒரு கருவியே ஆகும், இந்த மூலிகை சாதாரணமாக பூமியில் மற்ற செடி கொடிகளுக்கு இடையில் முளைத்திருக்கும், இது மனிதர்களின் வாசனை பட்ட மாத்திரத்தில் மண்ணை கீறிக்கொண்டு உள்ளே  போய்விடும், அதனால்தான் இதற்கு நிலம் புரண்டி என்ற பெயரை நமது முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள், இதை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் சாதாரணமாக நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் தேத்தான்   கொட்டைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நடந்தால் தேத்தான் கொட்டையினுடைய வீரியத்தால் நிலத்திற்குள் போகாமல் வெளியே நின்று விடும்,

    இத்தகைய நிலம்புரண்டி மூலிகையை ஞாயிறு. செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சூர்ய உதயத்திற்கு முன் இடத்தை சுத்தம் செய்து அச்செடிக்கு சாப நிவர்த்தி செய்து மந்திரத்தால் உயிர் கொடுத்து காப்பு கட்டி தூப தீபங்கள் காட்டி பறித்து வந்து குழித்தைலம் இறக்க வேண்டும், அந்த தைலத்தில் பச்சை கற்பூரம் ஜவ்வாது. கோரோசனை மூன்றும் சம எடையில் சேர்த்து குழைத்து அஞ்ஜனமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும், அந்த அஞ்ஜனத்தில் ஆஞ்சநேய மூல மந்திரம் மற்றும் அஞ்ஜனா தேவி மூல மந்திரம் முறையே 1008 முறை ஜபித்து உருஏற்ற வேண்டும், தேவையான போது அந்த அஞ்ஜானத்தை சிறிது எடுத்து வெற்றிலையில் தடவி மேற்குறிப்பிடும் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்து வெற்றிலையில் பார்த்தால் தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவது போல் புதையல் இருக்கும் இடத்தை நமக்கு மிக துல்லியமாக காட்டும்,    மேலும். இந்த மூலிகையின் வேரை கன்று போடாத பசுஞ்சானத்தோடு எரித்து சாம்பலாக்கி நீரில் கரைத்து மேற்குறிப்பிட்ட மூல மந்திரத்தை முறைப்படி ஜபித்து புதையல் இருப்பதாக நாம் கருதும் இடத்தில் இரவில் தெளித்து விடவேண்டும், காலையில் சென்று பார்த்தால் அங்கு புதையல் இருக்கும் பட்சத்தில் பாளம் பாளமாக வெடித்து இருக்கும். புதையல் இல்லையென்றால் சாதாரணமாக இருக்கும்

    புதையல் மிக ஆழமாக பல நூற்று அடிகளுக்கு கீழே இருந்தால் அந்த இடத்தில் ஸ்ரீலேகா என்ற மூலிகையை புதைத்து விட்டால் குறைந்தது 6 மாதத்தில் நாம் தோண்டி எடுக்கும் சொற்ப ஆழத்தில் புதையல் மேலே வந்துவிடும், ஸ்ரீ லேகா என்பது 16 வகை மூலிகைகளின் கூட்டு வடிவமாகும், இது இமயமலை சாரல்களில் மட்டுமே கிடைக்கிறது, மூலிகை சாஸ்திரத்திலும். மந்திர சாஸ்திரத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த அரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வைத்து இருப்பார்கள்


     இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை மனிதர்களே வசியம் செய்யும் இடுமருந்து என்பதை மிக அதிகமாக கேள்விப்படுகிறோம், இவைகள் முன்பெல்லாம் கிராமப்புறங்களில் தான் அதிகமாய் இருந்தது, இன்றோ நகரங்களில் கூட இந்த இடுமருந்து ஊடுருவி விட்டது, இந்த மாதிரியான விஷயங்களால் பல குடும்பங்கள் தொல்லைகளை சந்தித்து அழிந்தும் போயிருக்கிறது, இந்த இடுமருந்தை எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல, புல்லாமணக்கு என்கிற மூலிகையை நிழலில் உணர்த்தி கல் உரலில் இடித்து வஸ்திர காயம் செய்து நெய்யில் குழைத்து காலை. மாலை இருவேளையும் தொடர்ந்து 3 நாட்கள் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால் போதுமானது, 3 நாட்களிலே இடுமருந்தின் வீரியம் குறைந்து சகஜ நிலைக்கு அவர்கள் திரும்பி விடுவார்கள், இந்த புல்லாமணக்கு என்பது பல்லி முட்டையைப் போன்று இருக்கும், இருப்பினும் முறைப்படி காப்பு கட்டி எடுக்கப்பட்ட மூலிகையாக இருந்தால் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்,

    ராமாயணத்தில் தசரதன் குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான் என்பதை நாம் அறிவோம், அந்த யாகத்தில் கூறப்படும் மிக முக்கியமான புத்திர வர்ஷா என்கிற மந்திரத்தை விபூதி இலை என்ற மூலிகையில் உருஏற்றி அரை மண்டலம் சாப்பிட்டால் பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் புழுக்களை நீக்கியும் ஆண்களுக்கு மலட்டு தன்மைû போக்கியும் புத்திர சந்தானத்தையும் உண்டாக்கும், இம்முறையை இன்றும்கூட பலர் பயன்படுத்தி அற்புதமான பலனை அடைந்து வருகிறார்கள், இதை எம்மிடம் பெற்ற ஒரு அன்பர் கைமேல் பிள்ளையை பெற்றுள்ளார்,

    இன்று நமது தமிழகமெங்கும் வறட்சி, அதனால் விவசாயம் பாதிப்பு கிணறுகளில் தண்ணீர் இல்லை, பயிர்கள் பட்டுப்போயின என்ற அழுகுரலும் அங்கலாய்ப்பும் எங்கும் கேட்கிறது, கிணறுகளில் தண்ணீர் ஊர பன்னீர் இலையில் சடாட்சர மந்திரத்தை 1008 முறை உருஏற்றி நீர் இல்லாத கிணற்றில் போட்டால் 9 நாட்களுக்குள் நீர் இல்லாத கிணற்றில் நீர் சுரக்கும், பயிர்களின் மீது பூச்சிகள் பரவினாலும் தென்னை மரங்களில் குருத்துப் புழுக்கள் அதிகரித்தாலும் மா. தென்னை. பலா போன்ற மரங்களில் காய்கள் குறைந்தாலும் ஆடு திண்டாப்பாலையை பஸ்பமாக்கி பிரணவ மந்திரத்தை 1008 முறை உருஏற்றி பாதிக்கப்பட்ட மரம். செடி. கொடிகளின் மேல் தெளித்தால் பூச்சிகள் அழிந்து நன்றாக காய்கள் அதிகரிக்கும்


    இத்தகைய மூலிகைகளை உயரிய நிலையில் இருக்கும் தெய்வீக ஆத்மாக்களோடு மந்திர பிரயோகம் செய்பவர்களும் இருக்கிறார்கள், ஆத்மாவை அழைத்துப் பேசும் கலைதெரியாத சாதாரண மக்கள் கூட மன சுத்தியோடும் உடல் சுத்தியோடும் இதை செய்யலாம், அப்படி செய்தாலும் நல்ல பலனை கொடுப்பதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன், ஆனாலும் பயிற்சி பெற்ற நல்ல மனிதர்களை இதைச் செய்தால் கைமேல் பலன் கொடுப்பது கண் கூடான விஷயம்

    எனக்கு தெரிந்த இளைஞர் ஒருவர் மிகவும் சுறுசுறுப்பானவர், சதா சர்வகாலமும் ஏதாகினும் ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பார், அவர் வேலை செய்யும் வேகம் சாட்டையால் சுழற்றப்பட்ட பம்பரம் ஒன்று அதிவேகமாக சுற்றுவது போல் இருக்கும்   அவரைப்பற்றி நான் சிலநேரம் யோசிப்பதுண்டு, இரவில் கூட இவர் ஓய்வாக தூங்குவாரா? இல்லை அப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டுதான் இருப்பாரா? என்ற இறைவன் வேலை செய்வதற்காகவே இவரை படைத்துள்ளாரோ தானும் இவரை போல்தான் சதா வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று காட்டுவதற்காக இவரை பூமியில் நடமாட விட்டிருக்கிறாரோ என்றெல்லாம் எண்ணி வியந்ததுண்டு

    இப்படி சுறுசுறுப்பின் இலக்கணமான அந்த இளைஞர் திடீரென்று ஒருநாள் மயங்கி விழுந்து விட்டார், அதன் பின்பு அவரிடம் படிப்படியான சில மாற்றங்களை நான் கவனித்தேன், சோர்ந்து உட்கார்ந்து விடுவதும் வேலையிடத்திலேயே சுருண்டு படுத்துவிடுவதும் உண்டு, நாளடைவில் அவர் கைகால்கள் நரம்புத் தளர்ச்சியால் நடுங்குவதைப் போல் நடுக்ககம் எடுக்க ஆரம்பித்தது, அவரிடம் நான் விசாரித்தேன், உனக்கு என்ன ஆயிற்று என்றுõ  அவர் அதற்கு ஒன்றுமே புரியவில்லை, உடல் நடுங்குவதும். நாவறட்சி ஏற்படுவதும் அதற்கு மேல் கண்களின் பார்வை சக்தி குறைந்து விடுவதுமாக இருக்கிறது என்றார், அவர் மீது களிவிரக்கம் ஏற்பட்ட நான் எனது வசமாக இருந்த ஒரு தேவரையை அழைத்து அவருடைய உடலுக்கு என்ன என்று கேட்டேன், அதற்கு அந்த தேவதை அவருடைய மூளை நரம்புகளில் ஒன்றில் சீதளக் கிருமிகள் தாக்கி ரத்த ஓட்டத்திற்கு சிறு தடை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது, அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை செய்ய விரும்பி அவரை ஒரு வாரமாக தேடினேன், கிடைக்கவில்லை,


  ஒரு வாரம் சென்று வந்து தான் மருத்துவமனைக்கு சென்றிருந்ததாகவும் பரிசோதனையில் தனது மூளை நரம்பில் நோய்த் தொற்று என்கிற பஆ உள்ளதாகவும் அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் சில வருடங்கள் மாத்திரைகளை சாப்பிட்டு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டதாக கவலையுடன் குறிப்பிட்டார், என் மீது தீவிர பக்தியும் அன்பும் கொண்ட அந்த நண்பரை குணமாக்கும்படி வேண்டினார்  அவருக்காக சிவ பெருமானின் பரிவாரங்களான 12 ருத்திரர்களில் தலைவரான ஸ்ரீ மாகருத்ரரின் நேரடி அம்சமான  ஸ்ரீ பிரபாசன் என்று போற்றுதலுக்குரிய தேவ கனத்தை அழைத்து பேசினோம், அவர் அந்த இளைஞரின் நோய் நீங்கிட சில மூலிகைகளை (அவர் கொடுத்த உத்தரவின்படி அந்த மூலிகைகளின் விபரம் இங்கு தரமுடியாமைக்கு வருந்துகிறோம்) அதர்வண வேத மந்திரங்களால் செறிவூட்டச் சொல்லி 2 மண்டலம் மட்டுமே அவரை சாப்பிடச் சொன்னார், அதன்படி அந்த இளைஞருக்கு செய்து கொடுத்தேன், ஒரு மாதத்தில் அந்த நண்பர் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டார், 2 மண்டலத்திற்கு பின்பு அவர் பரிபூரணமாக குணமடைந்து பழையபடி சுறுசுறுப்பு அடைந்து விட்டார், இன்று அவர் நல்ல நிலையிலே உள்ளார், இப்படி எத்தனையோ மந்திரமும் மூலிகையும் செய்த மகத்துவத்தை சொல்லிக் கொண்டே செல்லலாம்

    இறைவன் இந்த பூமியில் எந்தவொரு சிறிய வஸ்துவையும் காரணமில்லாமல் படைக்கவில்லை, ஒன்றைத்தழுவி ஒன்று இருப்பதைப் போல் தாவர ஜங்கமங்கள் அனைத்தும் ஒன்றுக்கு பயன்படும் வண்ணமே இறைவன் சிருஷ்டித்துள்ளான், ரிக் வேதத்தில் வரும் பல ஸ்லோகங்கள் தாவரங்கள் சூரியனிடமிருந்து சக்தியை ஜீவர்களுக்கும் கொடுப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது, அதாவது அண்ட சராசரங்கள் அனைத்திலும் பரவியுள்ள பரமாத்மாவின் பரமசத்தை கிரஹித்து பூமிக்கு வழங்கி கொண்டிருக்கும் அமுத சுரபிகளே விருட்சங்கள் என்று வேதம் சொல்கிறது, விவிலியமும். திரு-கூர்-ஆனும் இதைப்போன்ற கருத்துக்களை வலியுறுத்துகின்றன,

    சுக்ருத சம்ஹிதையில் ஐந்தறிவும் ஆறறிவும் உடைய ஆத்மாக்களின் உடலின் நோயையும் மரங்களிலும் செடி கொடிகளிலும் மண்ணிலும் நோய்க்கான மருந்தையும் பரமான்மா வைத்துள்ளதாக வைரத்தை உடைத்தது போல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் சுசருதர் ஒளஷதங்கள் ரசங்களாலும் மந்திரங்களாலும் நிரப்பபட வேண்டும் என்றும் கூறுகிறார்.


    அந்தக் கால மருத்துவர்கள் மந்திரங்களிலும் வல்லுநர்களாக இருந்தார்கள், நவீன விஞ்ஞான கருவிகள் எதுவுமே இல்லாது சுசருதர் செய்த பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அனைத்திலும் மந்திரங்கள் மூலிகைகளின் உதவிகளாலேயே செய்யப்பட்டதாக பழைய கிரந்தங்கள் கூறுகின்றன

    நோய் தீர்க்கும் மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல ஆலயங்கள் கிரேக்க நாட்டில் இருந்துள்ளன, அந்த ஆலயங்களில் படுத்து உறங்குவதனாலேயே நோய்கள் குணமாகி விடுவதாக கிரேகக் நாட்டின் மந்திர நிபுணர் கேலன் கூறியுள்ளார், சீன நாட்டில் கி,மு,450 ஆண்டில் வாழ்ந்த எம்ப்படிடாக்கின்ஸ் மனிதர்களின் தோல் மீதுள்ள துளைகள் வழியாக பல தீய சக்திகள் புகுந்தே நோயை உருவாக்குகிறது என்றும் அதை மந்திரங்களால் தொட்டே குணப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளார்

    இன்று நடைமுறையில் உள்ள ரெய்கி. பிரானிக்ஹீலிங் என்ற முறைகளும் அண்டத்தில் உள்ள காஸ்மிக் மற்றும் பலவித பிரணவம் சார்ந்த பல கதிர்களை உடலுக்குள் செலுத்தவதே ஆகும், மந்திரங்களும் அண்ட நாதத்தின் மறுவடிவு ஆகும், ஆகவே அண்டசக்தியின் பிம்பங்களுடன் மூலிகைகளும் மந்திரங்களும் இணைந்தால் சாத்தியம் இல்லாதவற்றை சாத்தியமாக்கி விடலாம்.

    மந்திரங்களில் இரண்டு வகை உண்டு, குட்டிச்சுவரை கோபுரமாக்கும் நல்ல மந்திரங்கள் ஒருவகை சாம்பிராஜ்யங்களை சாம்பல் மேடாக்கும் தீய மந்திரங்களை ஒரு வகை, இத்தகைய இருவகை மந்திரங்கள் உலகெங்கும் நம்மிடையே உள்ளது, தீய மந்திரங்களின் கொடுமையான விளைவுகள் பல குடும்பங்களை நாசமாக்கி இருக்கின்றன, அத்தகைய தீய மந்திரங்களை ஒடுக்குவதற்குரிய மந்திர மூலிகைகள் ஏதேனும் உண்டா? என்று நான் தேடுதலில் ஈடுபட்ட போது ஆன்மீக ரீதியிலும். மற்ற வகையிலும் பல நேரங்களில் எனக்கு வழிகாட்டியிருக்கும் இன்னொரு உலக வாசிகளான தெய்வீக ஆத்மாக்கள் பலமூலிகைகளை எமக்கு காட்டின அவற்றில் தீவினைகளான பில்லிசூன்யத்தை முற்றிலுமாக ஒழிக்கும் சில மூலிகை வகைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.


    ஆடு தீண்டாப்பாலை. திருநாமப் பாலை. வில்வம். துளசி. வேம்பு. திரவந்தி. அழுகண்ணி. ஏர்சிங்கி. சூக்குளி. வல்லாரை. கொடுப்பை. கரிசிலாங்கண்ணி. தாழைமடல். நாபி. அஷ்வலோகா மற்றும் பல மூலிகைகள் கலந்து ஸ்ரீ ருத்மூலமந்திரம் ஹோமத்தில் ஆகுதி செய்யப்பட்ட மந்திர ஒளஷத பஸ்பத்தை மக்கள் பயன்பாட்டிற்கு இன்றும் கொடுத்து வருகிறோம், இந்த மூலிகை பஸ்பத்தை கடல் நீரில் கலந்து சில மந்திர உச்சாடனத்துடன் சூன்யம் இருக்கும். பகுதியில் தெளித்தால் 9 நாட்களிலேயே தீய சக்திகள் விலகி நல்ல சக்திகள் குடிகொண்டு பல சௌக்ய சௌபாக்கியத்தை தந்து வருவதை இன்றும் நடைமுறையில் பலர் அனுபவித்து வருகிறார்கள்.


    இத்தகைய தெய்வீக ஆத்மாக்கள் பூமியின் சுத்திகரிப்புகாகவும் அதாவது “வாஸ்து” நிவர்த்திக்காகவும் பல விதமான மூலிகை பஸ்பங்களை தந்துள்ளார்கள், பல இலட்சம் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் வாஸ்து நிவர்த்திக்காக இடித்து தரைமட்óடம் ஆக்கப்படுவதை இம்மூலிகை பஸ்பங்கள் தடுத்து வாஸ்து தோஷத்தை முழுமையாக நிவர்த்தி செய்துவிடுகிறது, பல கஷ்டங்களை தாண்டி கட்டப்படும் வீடுகளில் காலம் முழுக்க குடியிருக்க முடியாமல் தேச சஞ்சாரியாக அவதிப்படுபவர்களும். கழுத்தில் தொங்கவிடப்பட்ட கல் கிணற்றுக்குள் ஆழத்தில் அமுக்கி விடுவதைப் போல் கட்டிய வீட்டை விற்க முடியாமல் மூச்சு திணறுபவர்களும் தனது வாழ்நாளில் ஒரு சொந்த விடு கட்டி விடமாட்டோமா என்று ஏங்குபவர்களும் இந்த மூலிகை ஓளதஷதங்களால் நல்ல பயன்களை பெற்று இருப்பதை பார்க்கும் போது தெய்வீக ஆத்மாக்கள் மனித குலத்திற்கு செய்து வரும் மகத்தான சாதனையை எண்ணி நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை


   வெந்ததை தின்று வேளை வந்தால் சாவோம் என்று அர்த்தம் அற்ற பாதையில் அவசரகதியாக நமது வாழ்க்கை ரதம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது, நம்மால் எது சரி? எது தவறு? என்று தீர்மானிக்க முடியவில்லை, எதை விடுவது எதை தொடுவது என்ற முடிவுக்கும் வர முடியதில்லை, நுனியில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுபவனைப் போல் பித்து குளித்தனமாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், நமது அஜாக்கிரதையினாலும். அசட்டையினாலும் இழந்த செல்வங்கள் அது எத்தனையோõ  நான் இங்கு குறிப்பிடும் மந்திரங்களும். மூலிகைகளும் நம் கையில் இருந்து நழுவி விடும் சூழலிலேயே இன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது, வெளிச்சத்திற்கு வீட்டை கொளுத்தியவன் போல் நிறைய செல்வங்களை நாம் இழந்து விட்டோம்.


    இந்த கொஞ்ச நஞ்ச செல்வங்களையாவது இழக்காமல் இருக்க நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், இன்று நாம் விழித்துக் கொண்டால் இன்னும் ஒரு 1000 ஆண்டிற்கு சுகமாக வாழலாம், இல்லை நான் தூங்கத்தான் செய்வேன் என்று அடம்பிடித்தால் வாழ்ந்ததற்கான அடையாளங்களைகூட பார்வையிட எந்த ஜீவனும் இருக்காது, நம் முன்னோர்கள் நமக்கு தந்து விட்டு சென்ற இந்த அரிய செல்வங்களை நமது அறிவீனத்தால் குழந்தைகளுக்கு கொடுக்காமல் சென்று விடகூடாது, இவைகளைப் பாதுகாக்க ரகசியங்களையாவது தெரிந்து வைத்திருக்க உழைப்போமாக!
---------------------------------

   மகாலக்ஷ்மி அஞ்சனம் வேண்டும் என்று பல பக்தர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  குருஜி ஆசிரமத்தில்  இந்த அஞ்சனத்தை செய்து தருகிறோம்.

இந்த அஞ்சனம் பெறுவதற்கு உங்களுடைய புகைப்படம் மற்றும் உங்களுடைய ஜாதக நகல் கூடவே உங்களுடைய ஆள்காட்டி விரல் ரேகை ஆகியவற்றை கீழே உள்ள குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் 

இந்த அஞ்சனம் செய்வதற்கு காணிக்கை ரூபாய்  9,500   அஞ்சனம் செய்வதற்கு 48 நாள் ஆகும் அஞ்சனம் செய்த பிறகு நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது தாபல் மூலம்  அனுப்பி வைக்கப்படும்   மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


மேலும் விபரங்களுக்கு 

               தொலைபேசி எண்:-    9442426434

              மின்னஞ்சல் முகவரி:- srigurujiashramam@gmail.com


 முகவரி
 
                 ஸ்ரீ குருஜி ஆசிரமம்,
                 விழுப்புரம் சாலை
                 காடகனூர் அஞ்சல் 605755
                 விழுப்புரம் மாவட்டம்
                 தமிழ்நாடு
                 cell no = +91-9442426434

+ comments + 51 comments

02:27

Guruji,
Romba nalla article.I liked it very much.Please share more of your spiritual experiences.

Thanks
Sriram

nice and articles.. wide and deep knowledge..

நல்ல தகவல் பூனை பற்றி சொல்லியது உண்மைதான் இதை இரண்டு பதிவ போட்டு இருக்கலாம் ரொம்ப பெருசு...

http://tamil.kijj.in put ur links here

Anonymous
22:14

gunashan

http://www.eegarai.net

மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் குருஜி...முன்பு மூலிகை மருத்துவம் பாட்டி வைத்தியமாக இருந்தது. இன்று பாட்டிகளே அதை மறந்து விட்டார்கள்.. அதனால் சாதாரண மக்களுக்கு மூலிகை வகைகளும் அதன் மகத்துவமும் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பது உண்மை. சாதாரண மக்கள் படித்து விழங்கிக் கொள்ளக் கூடிய மூலிகை சம்பந்தமான புத்தகங்களும் மிகக் குறைவு. ஆகவே இவ்வரிய வகை மூலிகை மருத்துவம் அழியாமல் இருக்க நம்மால் முடிந்ததை செய்து கொண்டேயிருப்போம்...
மூலிகை மருத்துவம் வாழ்க......

I'd say that lot of space has been wasted in webpage.. Reading pane is very narrow. Hope you dont mind!

Anonymous
11:03

சிவா


http://www.eegarai.net

தானாக பிறந்து வாழ்ந்து முடிந்து போகும் சாதாரண ஜீவன்களான இவைகளும் நோய் வந்தால் மருந்தை தேடும் அறிவை பெற்றிருப்பது இறைவனின் பெருங்கருணையல்லவா!

இன்றும் என்னை வியப்பில் ஆழ்த்தும் விடயமாக இச்செயல்கள் இருந்து வருகிறது!

மூல மந்திரத்தை 108 முறை ஜபித்து வெற்றிலையில் பார்த்தால் தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவது போல் புதையல் இருக்கும் இடத்தை நமக்கு மிக துல்லியமாக காட்டும்

படிப்பதற்கும், கேட்பதற்கும் இனிமைதான், ஆனால் செய்து காட்ட யாராவது தயாராக உள்ளார்களா?

கிணறுகளில் தண்ணீர் ஊர பன்னீர் இலையில் சடாட்சர மந்திரத்தை 1008 முறை உருஏற்றி நீர் இல்லாத கிணற்றில் போட்டால் 9 நாட்களுக்குள் நீர் இல்லாத கிணற்றில் நீர் சுரக்கும், பயிர்களின் மீது பூச்சிகள் பரவினாலும் தென்னை மரங்களில் குருத்துப் புழுக்கள் அதிகரித்தாலும் மா. தென்னை. பலா போன்ற மரங்களில் காய்கள் குறைந்தாலும் ஆடு திண்டாப்பாலையை பஸ்பமாக்கி பிரணவ மந்திரத்தை 1008 முறை உருஏற்றி பாதிக்கப்பட்ட மரம். செடி. கொடிகளின் மேல் தெளித்தால் பூச்சிகள் அழிந்து நன்றாக காய்கள் அதிகரிக்கும்

இவ்வாறு செய்ய யாரை எங்கு அணுக வேண்டும்!

Anonymous
11:04

நிறைய அனுபவமுள்ள சிறந்த பதிவு, மிக்க நன்றி...

--
ராஜூhttp://www.eegarai.net

Anonymous
22:29

என் தந்தை ஒரு சித்த மருத்துவர். அவரும் அவருடைய குருநாதரும் செய்யும் பல்வேறு
மருந்துகளை உடனிருந்து கண்டவன், மருந்து தயாரிப்பில் பங்கு பெற்றவன் என்பதால்
உங்கள் பதிவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நல்ல பதிவு. இதனை இன்று எத்தனை
பேர் நம்புவார்கள்? எலும்பொட்டி என்னும் ஒரு மூலிகை, தங்கத்தை வெண்ணை போல்
குழையச் செய்யும் மூலிகை, நாய்க் கடி மூலிகை, ஆணிக் காலை ஒரு வாரத்திலேயே
குணப்படுத்தும் மூலிகை, பாதரசத்தை மணியாக (திடப் பொருளாக) ஒரு நிமிடத்திலேயே
மாற்றும் திறன் கொண்ட மூலிகை எனப் பல்வேறு மூலிகைகள் எனக்கே தெரியும். ஆனால்
நகர மயமாக்கலில் இன்று அவை கிடைப்பதே அருமை. நீங்கள் சொல்வதுபோல் இப்பொழுதாவது
விழித்துக் கொள்ள வில்லை என்றால், இவற்றை இழப்பது உறுதி.
அன்புடன்
ஆராதி

Gurji, excellent info and very rare to find which you have mentioned and experienced. Thank you for sharing. Seeking your blessings Sriram.

Anonymous
13:21

Swamiji.I was given a plant named minnal keerai by my friend.He said that the leaves of the plant is useful when Srartham is performed as it can substitute a number of vegetable used during srartham.My elders also confirmed it.But nowadays nobody is interested in it.The plant has grown like a tree.It has no fruits and no flowers.The tree does not allow anything to grow by its side It smells like to be in thick forest when we go near the tree.Could be please clarify me?

Anonymous
17:52

இவைகளை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தி, அனைத்து மக்களும் பயனுறும் வகையில் எடுத்துச் செய்யலாம். அல்லது அறிஞர்கள், சமுதாயத்தில் பொறுப்பிலுள்ளவர்கள் முன்னிலையில் தெரியப்படுத்தி, மக்களுக்குச் சேவை செய்யலாம். இத்துணை அறிவினைத் தனியுடைமையாக வைத்திருத்தல் என்ன நியாயம் ஐயா?

மிக்க நன்றி ஐயா... எனக்கு தெரிந்த வரை இன்னொரு அதர்வண வேதம் கற்றவர் மூலமே இவை அனைத்தும் செய்யபடுகின்றன ( சூனியம் ஏவல் )..அதனால் தங்களிடம் இருக்கும் இந்த அறிய கலை .. அதை நல்ல முறையில் ( நல்ல காரியத்திற்காக மட்டும் ) பயன்படுத்துவார்கள் என்பது இன்றைய நிலையில் .. சாத்தியமில்லாத ஒன்று .. இருந்தாலும் இதன் மூலம் பாதிகப்படவர்கள் சில பேரை( நல்லவர்கள் ) பார்க்க நேந்தது..??இந்த செய்வினை சூனியம் விளக்க தாங்கள் கூறிய அஷ்வலோகா மற்றும் பல மூலிகைகளை கொண்டு செய்ய பட்ட அந்த ஒளஷதத்தை ..எப்படி பெறுவது . .. என்பதை கூறவும்.

எனக்கு வயது 63. கடந்த 3 வருஷமாக முட்டிவலியால் சிரமப்படுகிறேன். ஆங்கிலமருத்துவயிடம் சென்றால் முட்டு எலும்பு தேய்ந்துவிட்டது.அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என தெரிவித்தார்.வேண்டாம் என தெரிவிக்க pain killing tab. கொடுத்தார்.10 நாள் எடுத்துபின் பின்விளைவு நினைத்து சிலநாள் தைலண்ணைகளை தடவிடிகொண்டுயிருந்தேன். மூட்டுவலி அப்படி ஒன்றும் குறையவில்லை. என் நண்பர் மலோசியாவில் இருந்து வந்தவர், மூட்டுவலிக்கு ஆயுர்வேதிக்கு மாத்திரை கொடுத்தார். சுமார்10 கருப்பு மாத்திரைகளில் நல்ல பயன்.சுமார் 5 மாதம் வலி இல்லை.ஆனால் அந்த மாத்திரை பெயர் எனக்கு தெரியாது,நண்பரின் தொடர்பு இல்லை.இதைபற்றி தாங்கள் உடைய கருத்து அறியவிரும்புகிறேன்.

i want edu maruthu how to prepare pls

ur knowledge is trust for us thank u

மிக்க நன்றி ஐயா... எனக்கு தெரிந்த வரை இன்னொரு அதர்வண வேதம் கற்றவர் மூலமே இவை அனைத்தும் செய்யபடுகின்றன ( சூனியம் ஏவல் )..அதனால் தங்களிடம் இருக்கும் இந்த அறிய கலை .. அதை நல்ல முறையில் ( நல்ல காரியத்திற்காக மட்டும் ) பயன்படுத்துவார்கள் என்பது இன்றைய நிலையில் .. சாத்தியமில்லாத ஒன்று .. இருந்தாலும் இதன் மூலம் பாதிகப்படவர்கள் சில பேரை( நல்லவர்கள் ) பார்க்க நேந்தது..??இந்த செய்வினை சூனியம் விளக்க தாங்கள் கூறிய அஷ்வலோகா மற்றும் பல மூலிகைகளை கொண்டு செய்ய பட்ட அந்த ஒளஷதத்தை ..எப்படி பெறுவது . .. என்பதை கூறவும்.

Baskar
14:05

வணக்கம் குருஜி அவர்களே
எனது பெயர் பாஸ்கர் வேலூர் சென்னையில் ஓர் பன்னாட்டு நிருவனத்தில் பணி புரிகிறேன் தங்களை போன்றோர்களை நேரில் சந்தித்து பேசுவதில் எனக்கு மிகவும் அவா அந்த வாய்ப்பு கடந்த வாரம் எனக்கு கிட்டியது, உங்களின் உழைப்பும் வளர்ச்சியும் உலகில் மனிதனாக வாழும் ஒவொருவருக்கும் வழிகாட்டியாக திகழும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை இந்து மதத்தில் பிறந்த இன்றைய இளைஞர்களுக்கு தன்னுடைய அறிவும் அறிவும் புரியாத வகையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் இது போன்றோர்களுக்கு உங்களின் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது தொடரட்டும் உங்கள் சேவை

Baskar
14:07

வணக்கம் குருஜி அவர்களே
எனது பெயர் பாஸ்கர் வேலூர் சென்னையில் ஓர் பன்னாட்டு நிருவனத்தில் பணி புரிகிறேன் தங்களை போன்றோர்களை நேரில் சந்தித்து பேசுவதில் எனக்கு மிகவும் அவா அந்த வாய்ப்பு கடந்த வாரம் எனக்கு கிட்டியது, உங்களின் உழைப்பும் வளர்ச்சியும் உலகில் மனிதனாக வாழும் ஒவொருவருக்கும் வழிகாட்டியாக திகழும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை இந்து மதத்தில் பிறந்த இன்றைய இளைஞர்களுக்கு தன்னுடைய அறிவும் aatralum புரியாத வகையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் இது போன்றோர்களுக்கு உங்களின் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது தொடரட்டும் உங்கள் சேவை

Anonymous
15:45

Hello sir
i am lavanya from vellore.i read your lessons all are very excellent information and very rare to find which you have mentioned and experienced. Thank you very much sir.

thank you
lavanyaupendiran

i like this artical. can u able to tell the way or cure the malaikan diesease i.e. evening eye blindness.

Sivakumar S
12:41

பெருமதிப்பிற்குரிய குருஜி அவர்களே,

சிவகுமார் பணிவான வணக்கங்களுடன் அனுப்பும் மடல்.
நான் முதல் முறையாக உங்கள் கருத்துக்களை/பகிர்வுகளை படித்தேன்.
என்ன ஒரு ஆழ்ந்த அறிவும், உண்மையும் செறிந்த கருத்துக்கள்? இவை எல்லாம் காக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் கூட.

தங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.. தற்போது நான் கப்பலில் பனி புரிந்துகொண்டுள்ளேன். பனி முடிந்து வீட்டுக்கு வந்தபின் அவசியம் தொடர்பு கொள்கிறேன். நான் கரூரில் வசிக்கிறேன்.

சில விஷயங்கள் தங்கள் மூலம் தீர்வு பெற விரும்புகிறேன்..

தயை கூர்ந்து எனக்கு உதவுவீர்கள் என மனதார நம்பிகிறேன்.

தங்கள் மென் மேலும் நலம் பெற்று, இந்த சமுதாயத்துக்கு இந்த அறிய சேவையை வெகுநாட்கள் செய்யவேண்டும் என மனதார வாழ்த்தி, அதற்க்கான அருள் புரியுமாறு எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுகிறேன்.

அன்புடன் சிவகுமார்..

Dear sir, the article is excellent... I too 've heard about the நிலம்புரண்டி... pls share more of ur experience...

அய்யா எனது கடன் தீர ஒரு வலி சொல்லவும்

நல்ல அனுபவபூர்வமான படைப்பு.. இங்கு யாருக்காவது தம்பனா மந்திரம் தெரியுமா?

மிக்க நன்றி ஐயா...

15:05

குருஜீ, வணக்கம்!

1. எனக்கு தலையில் பொடுகுபோன்று தோன்றி, அப்படியே முடியெல்லாம் கொட்டிவிட்டது. அவை சொரியாசிஸ் இல்லை என டாக்டர்கள் கூறுகின்றனர். முடி எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் செதில் செதிலாக உதிர்கிறது. என்னால் தலையிலோ முகத்திலோ முடியை வளர்க்க முடியவில்லை. அது என்ன நோய்? அதற்கு மருந்து உண்டா?

2. எனக்கு தெரிந்த சித்த மருத்துவர் ஒருவர், என்னிடம் ஒரு மூலிகை உள்ளது. அதன் பெயர் “கடவுளை காட்டும் மூலிகை” அந்த மூலிகை இலையை கண்ணை மூடிக் கொண்டு அதன் மேல் வைத்தால் கடவுளை நாம் பார்க்கலாம்; பேசலாம் என்கிறார். அவை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மூலமாகத்தான் பேச முடியும் என்கிறார். இது சாத்தியம்தானா? அப்படியென்றால் அது என்ன மூலிகை செடி? என்ற விவரம் தேவை.

Anonymous
12:18

Guruji, pl.reply to Jimsha question.

romba nalla pathivu, nantri.

பெருமதிப்பிற்குரிய குருஜி அவர்களே,

பணிவான வணக்கங்களுடன் அனுப்பும் மடல்.
நான் முதல் முறையாக உங்கள் கருத்துக்களை/பகிர்வுகளை படித்தேன்.
என்ன ஒரு ஆழ்ந்த அறிவும், உண்மையும் செறிந்த கருத்துக்கள்? இவை எல்லாம் காக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் கூட.

தங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.. தற்போது நான் கப்பலில் பனி புரிந்துகொண்டுள்ளேன். பனி முடிந்து வீட்டுக்கு வந்தபின் அவசியம் தொடர்பு கொள்கிறேன். நான் PONDICHERRY வசிக்கிறேன்.

சில விஷயங்கள் தங்கள் மூலம் தீர்வு பெற விரும்புகிறேன்..

தயை கூர்ந்து எனக்கு உதவுவீர்கள் என மனதார நம்பிகிறேன்.

தங்கள் மென் மேலும் நலம் பெற்று, இந்த சமுதாயத்துக்கு இந்த அறிய சேவையை வெகுநாட்கள் செய்யவேண்டும் என மனதார வாழ்த்தி, அதற்க்கான அருள் புரியுமாறு எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுகிறேன்.
deivamrmc2010@gmail.com

Realy wounderful guidence with abundent knowledge

Anonymous
19:00

yanakku rasathai maniyakkum mooligai patri sollungal
heartking0143@gmail.com

raj
21:09

yanaku rasathai maniyakkum mooligai patri sollungal
ethayaraj2@gmail.com

நான் மிகவும் ஒல்லியான தேகம் கொண்டவன் எனக்கு கொஞ்சம் குண்டா வரவேண்டும் என்று ஆசை
வழிகள் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கலென்

நான் மிகவும் ஒல்லியான தேகம் கொண்டவன் கொஞ்சம் குண்டா வர ஆசை எனக்கு ஏதாவது வழிகள் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கலே

எனக்கு வயது 63. கடந்த 3 வருஷமாக முட்டிவலியால் சிரமப்படுகிறேன். ஆங்கிலமருத்துவயிடம் சென்றால் முட்டு எலும்பு தேய்ந்துவிட்டது.அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என தெரிவித்தார்.வேண்டாம் என தெரிவிக்க pain killing tab. கொடுத்தார்.10 நாள் எடுத்துபின் பின்விளைவு நினைத்து சிலநாள் தைலண்ணைகளை தடவிடிகொண்டுயிருந்தேன். மூட்டுவலி அப்படி ஒன்றும் குறையவில்லை. என் நண்பர் மலோசியாவில் இருந்து வந்தவர், மூட்டுவலிக்கு ஆயுர்வேதிக்கு மாத்திரை கொடுத்தார். சுமார்10 கருப்பு மாத்திரைகளில் நல்ல பயன்.சுமார் 5 மாதம் வலி இல்லை.ஆனால் அந்த மாத்திரை பெயர் எனக்கு தெரியாது,நண்பரின் தொடர்பு இல்லை.இதைபற்றி தாங்கள் உடைய கருத்து அறியவிரும்புகிறேன். i need answer for this pls...

yanakkum rasathai maniyakkum mooligai patri sollungal kuruji avargale
dcesathi@gmail.com

yanakum rasathai maniyakkum mooligai patri sollungal kurujii
dcesathi@gmail.com

good article..... combination and making procedures for Herbal Medicines are complicated and secret, that some peoples are utilized for making money.

iyya romba nallavisaiyangalai marandupona visaiyangalai manam thirandu sonnathrkku mikka nandri.thangal aanmeeha thondum maruthuvamum palarukku payanbada ungalal mudinthathai seyyingal pl.endrum anbudan karanreddi

Anonymous
21:39

guruji avarkale,
om siva siva om enbathai eppadi jabikkavendum???

Thank u and congratats Guruji,

My name is veeramani, iam interested i speak with u , wat time ur free now, and send my email id 173veera@gmail.com,

Some new muligai Deatils & how to use details please send me

Guruji., Vannakkam, You've got GOD GRACE. Very happy and glad about you. I read your experience., I want some treatment for me., and also I WANT LEARN about them for public in good way., I Think by god grace you will teach me., - Rawin . Kmuravi@gmail.com.

Nice Articile Guruji!

Anonymous
14:18

i want govt job.. so what can i do?

VERY RARE INFORMATION TO EVERYONE, IT WILL BE USEFUL TO MIDDLE CLASS PEOPLE, THANKING YOU GURUJI, I MEET YOU SOON.

nice blog

வணக்கம் என் பெயர் ராஜா . மாரண மாய என்பது எனது மற்றோறு பெயரும் உண்டு நீங்கள் சொல்லும் அந்த வெட்டு பட்டால் ஆற்றும் மரம் செடி பெயர் ரோமக் கரந்தை ok அனுபவய் ஆனால் இந்த மூலிகையை யாருக்கும் காண்பிக்க வேண்டாம்


Next Post Next Post Home
 
Back to Top