Store
 Store
 Store
 Store
 Store
 Store

உன் மடியில் சாக வேண்டும்
வண்ணத்துப் பூச்சியாய்
நான் மாறவேண்டும்
வாழை தோப்பெங்கும்
பறந்து வர வேண்டும்

மலர்களின் மேலமர்ந்து
கனாக்காண வேண்டும்
மகரந்த தேனெடுத்து
உடல்பூச வேண்டும்
மயக்கத்தில் யாழெடுத்து
இசை மீட்ட வேண்டும்

ஆட்டுக் குட்டியாய்
நானாக வேண்டும்
அரசமர இலைத்தின்ன
தாவ வேண்டும்
உன் அழகான தோள்மீது
இளைப்பாற வேண்டும்
இங்கும்மங்கும் துள்ளி
ஓட வேண்டும்


கம்பங் கதிராக
உருமாற வேண்டும்
உன் கைகளுக்குள் கசங்கி
உணவாக வேண்டும்

கதிரறுக்கும் அறுவாளாய்
நானிருக்க வேண்டும்
உன் ஒய்யார இடுப்பில்
நான் ஓய்வெடுக்க வேண்டும்

செம்பருத்தி பூவாக
நானிருக்க வேண்டும்
உன்சிவந்த விரல் வந்து
எனைப்பறிக்க வேண்டும்

பூசுகின்ற மஞ்சளாய்
நான்வர வேண்டும்
உன்முகம் தொட்ட சுகத்தில்
நான் கவியெழுத வேண்டும்

ஏற்றுகின்ற விளக்காக
நான்சுடர வேண்டும்
உன்னிரு கைகளுக்குள்
உயிர் வாழவேண்டும்

ஆற்றுக்குள் மீனாக
நான்
நீந்த வேண்டும்
முந்தாணையில் விழுந்து
என்
உயிர் மடிய வேண்டும் 


 • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்

 •  
  Contact Form

  Name

  Email *

  Message *