Store
 Store
 Store
 Store
 Store
 Store

கரண்டு வந்தால் கல்யாணம்


பெண்
கருகருத்த முகத்தில
நெறுநெறுத்த தாடியை
விறுவிறுன்னு
எடுத்தது ஏனைய்யா

 
ஆண்
கதிரறுக்கும் பொம்பளை
கன்னத்தில குத்துமே
கருத்தமுடி
எனக்கு ஏனம்மா

 
பெண்
நெஞ்சிமேல பச்சையை
ரத்தம் வடிய குத்தியே
பெயரெழுதி
வைச்சது ஏனைய்யா

ஆண்
வாய் செவத்த பொம்பளை
வாழ்க்கை
முட்டும் வேணும்ன்னு
வாசிக்கத்தான் எழுதிவைச்சேமா

பெண்
வரப்புமேட்டு ஓரமா
வாங்கிவந்த ரொட்டியை
மறைச்சி வச்சி
முழிப்பது ஏனய்யா

ஆண்
தண்டைச்சத்தம் கேட்காம
தனியாநீ வந்தால்
தந்து
ரசிச்சி பார்க்கத்தானம்மா

பெண்
ரொட்டி எதுவும் வேணாங்கையா
பட்டுசேலையும் வேணாமைய்யா
உன் கெட்டியான கைகளால
கட்டவேணும் தாலிகயிரைய்யா

ஆண்
போட்டிருக்கேன் கழனியில
வெளையட்டும் கரும்பு மெள்ள
கொட்டிடுவோம் கெட்டிமேளம்தான்
உனக்கு கட்ட வாரேன்
தங்கத்தாலிதான்


பெண்
கரும்ப சொல்லி குத்தமில்ல
கரண்டுவர வேணுமில்ல
தண்ணியில்லாம
கரும்பு வெளையுமா
நம்ம கனவு
எல்லாம் நெசமா மாறுமா


 • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்

 •  

  Contact Form

  Name

  Email *

  Message *