Store
  Store
  Store
  Store
  Store
  Store

பார்பதற்கு கண்கள் வேண்டாம்

புல்வெளியின்
மேல் நடந்துச் செல்கிறேன்
குழந்தையின்
பட்டுக் கேசம் போல்
பாதங்களை
புல் வருடுகிறது

ஏதோ
ஒரு காட்டுப்பூவை
தொட்டுப் பார்க்கிறேன்
அம்மாவின் கைகள்போல்
மென்மையாய்
இருக்கிறது

மரங்கள்
அடர்ந்த சோலையிலிருந்து
பறவைகள்
பஞ்சாயத்து பேசுவது
காதில் விழுகிறது
என்
இரவு உறக்கத்தில்
இந்த ஓசைத்தான்
கனவாக கேட்கிறது

நதியின் சலசலப்பில்
மீன்
துள்ளுவது மட்டும்
தனியாக
காதில் விழுகிறது
குட்டையின்
நடுவில்
தவளை குதிப்பது
கூட கேட்கிறது

நடந்து வரும்
பெண்ணின் வாசம்
நாசிவழி
கிளுகிளுப்பை ஊட்டுகிறது
அவளின்
சிங்கார
கொலுசு சத்தம்
என் காதல்
நெருப்பை  மூட்டுகிறது

நான்
படிக்கும் எழுத்துக்களெல்லாம்
சலங்கை கட்டி
ஜதி பேசுகிறது
என் விரல் தொடும் போது
அறிவின்
வாசமாய் வீசுகிறது

பேசுகின்ற
வார்த்தையில்
மனித மனம் புரிகிறது
அவர்
உச்சரிக்கும் விதத்தில்
எச்சரிக்கை
மணி அடிக்கிறது


ஐம்புலனில்
ஒன்று செத்தால்
ஆறாம் புலன் விழிக்கிறது
பார்பதற்கு
கண்கள் வேண்டாம்
அறிவுதான் வேண்டுமென்ற



Contact Form

Name

Email *

Message *