( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!


பிள்ளை ஒன்று இல்லையென்று
தூங்காமல் தவமிருந்தேன்
பிள்ளை வந்து பிறந்ததம்மா-என்
பிள்ளைக்கலி தீர்த்ததம்மா!

கன்னங்களில்
முத்தமிட்டு முத்தமிட்டு
கனவுகளில் நான் மிதந்தேன் -என்
கனிந்த வயிறு குளிர்ந்ததம்மா!

பறக்கின்ற குருவிகளை
பனி நிலவின் பேரெழிலை
கைவீசி அழைத்ததம்மா!-என்
இளம்மார்பில் துயின்றதம்மா!

கண்மூடும் நேரமெல்லாம்
கனவிலும் என்பிள்ளை
கைகொட்டி சிரித்ததம்மா!

கட்டாத கோட்டையில்
சூட்டாத மகுடத்தை
சூட்டியே ஆண்டதம்மா

மொட்டாக இருந்தப் பிள்ளை
பூத்து
பிஞ்சாக வளர்ந்ததம்மா

கைபிடித்து நடந்த போது
வழிகாட்டி வந்தபோது
காலம் என்னை முடித்ததம்மா

தூக்கிவிட கைகளின்றி
அரவணைக்க உறவுமின்றி
அனாதையாய் நின்றதம்மா-என்பிள்ளை
நாதியற்று போனதம்மா!

அன்னம் பிசைந்து ஊட்டி
அரவணைத்த அம்மாவை
சாவுக்கு கொடுத்து விட்டு
உண்பதற்கு சோறின்றி
உறங்குவதற்கு வழியின்றி
தெருவில் பிள்ளை அலையுதம்மா!-அதன்
சின்ன வயிறு வேகுதம்மா!

இரையுட்டும் பறவை பார்த்து
பாலூட்டும் ஆட்டைக் கண்டு
தாயுறவை வேண்டுதம்மா!

கண்ணில் விழும் கானலுக்குள்
காய்ந்து எரியும் நாணலுக்குள்
அம்மா முகம் தேடுதம்மா!

பட்டினியில் துடிதுடித்து
பாசத்திற்கு தேடித்தேடி
பாதம் நோக நடக்குதம்மா

சோங்களை மறைத்துக் கொண்டு
சொந்தங்களை சுமந்துக் கொண்டு
விம்மி வாழும் பெண்ணினமே!
பிடியரிசி கூடசேர்த்து உலையிலிடு
கதரியழும் பிள்ளைக்கு
ஒரு கவளம் சாதமிடு

ஆதரவாய் மென்கரத்தால் தட்டிக்கொடு
பாதாளமில்லை நீ பார்க்கின்ற உலகு !
பாசமுண்டு என்று காண்டு
உன் கண்சிந்தும் கருணையால்
கைகொடுக்கும் சக்தியால்
காய்ந்தமனம் குளிரட்டும்
என்மகனின் ஈரவிழி உலரட்டும்

ஆசைகளை சுமந்தப்படி
அறைகுறையாய் செத்தவளின்
வேண்டுதலை நிறைவேற்று
என் பசுந்தளிரை கரையேற்று
உன்பிள்ளை அனாதையாய்
ஒருநாளும் ஆகாமல்
உன்தர்மம் காத்து நிற்கும் • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும் • + comments + 9 comments

  அருமை வரிகள் ஆழமாக ...

  உங்கள் கவிதைகளில் தான்பின் ஏக்கம் நிறையத்தெரிகிறது.

  தாயன்பு கலந்த மண்வாசனை வரிகள்
  குருஜி கவிதை அழகு

  சுட்டெரிக்கும் வரிகளைக் கொண்ட கவிதை அய்யா...!

  படித்தவுடன் மனம் கனத்துத்தான் போனது.

  ஊர்ப்பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதை கவிதையாக வடித்துக் கொடுத்த விதம் அருமை.

  பாராட்டுகள் குருஜி!

  மனதை உறைய வைத்த அருமையான கவிதை. பாராட்டுக்கள் ஐயா...!

  மனதை உரைய வைக்கும் வரிகள். உண்மையில் இப்படி எத்தனை குழந்தைகளோ?.... கலங்கும் கண்களை தடுக்க முடியவில்லை...

  பிள்ளைக்காய் இறந்தும் அழுது புலமபும் ஒரு தாயின் குமுறல் கேட்டேன். வலிக்கிறது. வாழ்த்துகள்.

  நான் பலமுறை என்னையே கேட்டுக்கொள்வது இதுதான்.

  படத்திற்காக கவிதை எழுதுகிறீர்களா? இல்லை கவிதையின் கருவுக்கேற்றார்போல் படத்தைத் தேர்ந்தெடுக்கிறீகர்களா?

  உங்களிடமும் அதையே கேட்கிறேன். சொல்லுங்கள்.

  சிலசமயம் படத்திற்காக எழுதுகிறேன் பலசமயம் எழுதிவிட்டு படத்தை தேடுகிறேன் இந்தக்கவிதை படத்திற்காக உருவானது

  கவிதை அருமை ஐயா உணவு சமைக்கும் போது ஒரு பிடி அரிசி தவித்திருக்கும் பிள்ளைக்காகச் சேர்த்துப் போடும் படி சொன்னமை சிறப்பு.

  பாராட்டும்....


  Next Post Next Post Home
   
  Back to Top