Store
  Store
  Store
  Store
  Store
  Store

குரானை எரித்தால் ஏசு மன்னிப்பாரா...?

    மெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய கிறித்தவ திருச்சபையின் பாதிரியார் எதிர்வரும் சனிக்கிழமை குரானை எரிக்கப்போவதாக அறிவித்திருப்பதற்கு உலக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

   புளோரிடாவில் இருக்கும் இந்த சின்னஞ்சிறிய தேவாலயத்தில் தீக்குச்சி எதுவும் உரசப்படுவதற்கு முன்பே, இந்த சர்ச்சை சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. 

  பாகிஸ்தானில் அந்நாட்டு அதிபரின் அலுவலகத்திலிருந்து விடுக் கப்பட்ட அறிக்கை, குரான் எரிப்பு வெறுக்கத்தக்க செயல் என்றும் உலகம் முழுவதும் இருக்கும் முஸ்லீம்களின் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்த வல்லது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தோனேஷிய அதிபரும் அமெரிக்க அதிபரை இதில் தலையிடுமாறு கோரியிருக்கிறார். அமெரிக்க அதிகாரிகள் இதில் தலையிடவேண்டும் என்று இந்திய அரசும் கோரியிருக்கிறது. அதேசமயம் குரான் எரிப்புச்சம்பவம் நடந்தால் அந்த காட்சிகளை ஒலிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கும் இந்திய அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது.
உலகு தழுவிய முஸ்லீம் சமூகத்திடம் நெருங்கிச்செல்வதற்காக ஒபாமா நிர்வாகம் எடுத்த நிதானமிக்க முன்னெடுப்புக்களை இந்த சர்ச்சையானது ஒன்றுமில்லாமல் செய்துவிடும் ஆபத்திருக்கிறது. 

   குரான் எரிப்பை தான் சுத்தமாக விரும்பவில்லை என்பதை ஒபாமா ஏற்கனவே தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்திவிட்டார் என்பதுதான் இதில் இருக்கும் விசித்திரமான முரண்பாடு. அமெரிக்காவில் இருக்கும் பிரதான மதஅமைப்பின் பிரதிநிதிகளும் இதற்கான தமது எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்துவிட்டார்கள். 

   ஆனால் பிற்காலத்தில் செயற்படுத்தப்படும் ஒரு நடவடிக்கைக்கு எதிரான அருவெறுப்பு மட்டுமே அதை தடுப்பதற்கு போதுமானதல்ல.
அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் சுதந்திரம் தொடர்பான நடைமுறைகளும், மதநிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையில் நிலவும் பிரிவினைகளும், அந்த குறிப்பிட்ட சர்ச்சின் பாதிரியார் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதை தவிர அமெரிக்க நடுவணரசால் பெரிதாக எதையும் செய்துவிடவும் முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. 

   இதுதவிர இந்த குறிப்பிட்ட விவகாரம், அமெரிக்காவின் கிறிஸ்தவ மதபிரிவுகளில் நிலவும் மையப்படுத்தப்படாத கட்டமைப்பு முறையை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
அமெரிக்காவின் ஒவ்வொரு திருச்சபையும், அது எத்தனை சிறியதாக இருந்தாலும் சுதந்திரமானவையாக செயற்படும் தன்மை கொண்டது.
ஒரு குறிப்பிட்டவகையில் மட்டுமே செயற்படவேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய மையப்படுத்தப்பட்ட மத தலைமை எதுவும் இங்கே கிடையாது.

   இந்தப்பிரச்சினைக்கு ஒரே ஒரு வகையில் தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதாவது புளோரிடாவில் இருக்கும் கெய்ன்ஸ்வில்லி நகர உள்ளாட்சி நிர்வாகம் தனது பல்வேறு சட்டங்களில் ஏதேனும் சிலவற்றை இந்த செயல் மீறுவதாக கூறி குரான் எரிப்பை தடுக்க முயலலாம்.
அப்படி நடந்தால் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலுக்கு உள்ளூர் மட்டத்தில் எடுக்கப்பட்ட வித்தியாசமான குறுகிய தீர்வாக அது அமையக்கூடும்.

bbc. tamil news
       ப்படி பி.பி.சி. செய்தி நிறுவனம் தகவல் தருகிறது இது அமெரிக்க நாட்டில் ஏதோ ஒரு மூலையில் மனநோய் கொண்ட ஒரு பாதிரியின் முட்டாள் தனம் என்று தள்ளிவிட முடியாது அமெரிக்க அரசாங்கம் எப்படியோ அந்நாட்டு மக்களை பொறுத்தவரை அவர்களில் பெருவாரி யானவர்கள் மாற்று மதத்தையோ மதத்தினரையோ அவமானப்படுத்த நினைப்பவர்கள் அல்ல! சகிப்புத்தன்மை என்பது சற்று குறைவு என்றாலும் மற்றவர்களின் சுதந்திரத்தை கெடுக்க கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள்

       அப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் புனிதநூல் ஒன்றுக்கு அவமரியாதை செய்யப்பட போவதாக அறியும் போது நெஞ்சு துடிக்கின்றது இன்று இவர்கள் குரானை அவமதிப்பார்கள் நாளை கோபங்கொண்ட வேறு இஸ்லாமிய நாடு பைபிளை அவமரியாதை செய்யும் இருதரப்பும் வாய்ச்சண்டை போட்டால் பரவாயில்லை வாய் முற்றி கைகலப்பில் கொண்டு விட்டால் இரண்டுதரப்பிலுள்ள அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்


   ஏ ற்கனவே பல யுத்தங்களை அனுபவித்து உலகமக்களில் பலர் வாழ்வாதாரங்களை பறிகொடுத்து அனாதைகளாய் நிற்கிறார்கள் வெடித்த குண்டுகளின் ஓசையே அடங்கவில்லை அதற்குள் இன்னும் ஓசைகள் என்றால் மனிதகுலம் தாங்காது சம்ந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்

    
அமெரிக்கா சீராட்டியதால் தான் ஓசாமா போன்றோர்கள் வளர்ந்தார்கள் வல்லரசின் தவறுக்கு நல்ல தண்டனையை அந்நாடு மட்டுமல்ல சர்வதேசமே பெற்றாகி விட்டது

    குரான் இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமான புனிதநூல் அதை எரித்தால் நமக்கென்ன அவமதித்தால் நமக்கென்ன என்று உலக மதத்தலைவர்கள் வாய்மூடி கிடந்தால் மானிட குலத்திற்கு பெறும் தீங்கு செய்தவர்களாகி விடுவார்கள் 


   ஒருமத நூலை ஒழித்துக்கட்டினால் அந்த மதக்கருத்தையே மூடி மறைத்து விடலாம் என்று எந்தமதமும் சொல்லவில்லை உலகில் வழிபாட்டு முறைகள் ஆயிரம் இருந்தாலும் அத்தனையும் என்னைவந்து சேரும்  வழிதான் என்று ஸ்ரீமத் பகவத்கீதையில் கண்ணபெருமான் சொல்கிறார் 

    ஏசுநாதரும் அன்பையும் அமைதியையும் தான் போதித்தாரே தவிற வன்முறையை உபதேசிக்க வில்லை இந்த விஷயத்தில் மற்ற மதத்தினரைக் காட்டிலும் கிறிஸ்துவ மதத்தினர் உலகம் முழுவதும் அணிதிரண்டு குரானை
கொளுத்தும்  முட்டாள்தனத்தைக் கண்டிக்க வேண்டும்

    அந்தக் குறிப்பிட்ட அமெரிக்க திருச்சபையை கிறிஸ்தவ மார்க்கத்திலிருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும் அப்படி செய்தால் மட்டும்தான் உண்மையில் கர்த்தர் ஆசிர்வதிப்பார்
    ஆப்கானிஸ்தானத்தில் தாலிபான் படையினர் புத்தர் சிலையை உடைத்தது காட்டுமிராண்டித்தனம் என இன்றும் பேசுகிறோம் தாலிபான்கள் வேகம் மிகுந்தவர்களேதவிர  விவேகம் மிகுந்தவர்கள் அல்ல படிப்பறிவு இல்லாத முரடர்கள் 
 
  ஆனால் கிறிஸ்தவ பாதிரிகள் அப்படி அல்ல நல்ல படிப்பாளிகள் தாங்கள் செய்வது என்ன அதனால் உண்டாகும் விளைவுகள் என்ன  என்பதை நன்கு அறிந்தவர்கள் அவர்களே இத்தகைய இழிசெயலை செய்தால் படித்தவன் பாவம் சூது பண்ணினால் போவான் போவான் ஐயோ என்று போவான் என மகாகவி பாரதியார் சொன்னதைத்தான் நாமும் சோல்லவேண்டி வரும்

Contact Form

Name

Email *

Message *