Store
  Store
  Store
  Store
  Store
  Store

அரசாங்கத்தை விலைக்கு வாங்கும் பாதிரியார்கள்


    பிலோ இருதயநாத் என்ற எழுத்தாளரை உங்களுக்கு தெரியுமா?  மேஜைக்கு எதிரிலோ,  மொட்டை பாறையின் நீண்ட நிழலுக்கு அடியிலோ உட்கார்ந்து எழுதும் சராசரி எழுத்தாளர் அல்ல அவர் நாம் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்றால் நூலகத்துக்கு சென்று குறிப்புகள் எடுப்போம் நண்பர்களிடத்தில் விவாதிப்போம், தனிமையில் உட்கார்ந்து சிறிது நேரமாவது சிந்திப்போம்.  ஆனால் திரு,  இருதயநாத் ஒரு நூல் எழுத வேண்டுமென்றால் அந்த களத்துக்கே சென்று விடுவார்.  அதிகமாக அவர் காடுகளை பற்றியும் வனவாசிகளை பற்றியும் தான் எழுதுவார். இதற்காக அவரின் வாழ்க்கையின் பெரும்பகுதி காடுகளிலே கழிந்திருக்கிறது. அவர் நூல்களை படிக்கும் போது நிஜமாகவே நாம் காடுகளில் வாழ்ந்த உணர்வை பெற்று விடுவோம்.  அவர் காட்டுவாசிகளின் ஆற்றல்களை பற்றி எழுதி இருப்பது நிஜம் தானா?  என்பதை பரிசோதித்து பார்க்க எனக்கு ஒரு முறை ஆவல் பிறந்தது.  நமது விவேகானந்தர் சேவா சமிதியின் கல்வி தானம் மையம் ஒன்றை திறந்து வைக்க கல்வராயன் மலைக்கு செல்ல கூடிய வாய்ப்பு கிடைத்தது.


    குழந்தைகள் தான் கள்ளம்கபடமில்லாதவர்கள் நாம் பெரியவர்கள் ஆகிவிட்டாலே அழையாத விருந்தாளியாக மனதிற்குள் கல்மிஷம் வந்து குடியேறி விடுகிறது என்று நினைத்திருந்தேன். அதாவது பெரியவர்கள் அனைவருமே அயோக்கியர்கள் என்பது எனது அபிப்பிரயமாக இருந்தது.  ஆனால் கல்வராயன் மலைப்பகுதி மக்களை பார்த்த பிறகு வயதானாலும் கூட கபடம் என்பது சிறிதுமில்லாத மனிதர்கள் இன்னும் உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அப்போது எனக்கு வேறொரு ஞானமும் கிடைத்தது. மனிதர்களை கெட்டவர்களாக்குவது இயற்கையல்ல செயற்கை முறையிலான அறிவு வளர்ச்சியே என்பது தான் அந்த ஞானம்.  சரி விஷயத்திற்கு வருவோம் அந்த மலை ஜாதி மக்களிடம் யானை முதலிய வலுவான மிருகங்கள் தூரத்தில் வருவதே உங்களுக்கு தெரியுமாமே எப்படி அந்த வித்தையை கற்றுக் கொண்டிர்கள் என்று கேட்டேன்.

    அது வித்தையுமல்ல, அத்தையுமல்ல சாமி, பாட்டன்,  பூட்டன் காலத்திலிருந்து எங்களுகுள்ள பழக்கம் அது நல்ல வெடக்கோழியை அறுத்து குழம்பு வைக்க மசாலாவில் நான்கு மிளகாயை கூட்டி வைத்து அரைத்தால் எப்படி வாசம் வருமோ அப்படியொரு வாடை காற்றில் வரும்,  எந்த பக்கமிருந்து வாசம் தொடர்ச்சியாக வருகிறதோ அங்கேயிருந்து யானை கூட்டம் வருவதாக அர்த்தம். அந்த வாசனை ஏன் வருகிறது என்றால் யானைகள் வரும் போது சும்மா வராது.  மரம், செடி, கொடிகளை அழித்து மிதித்து தான் வரும் பல வகையான தாவரங்கள் ஒரே நேரத்தில் நசுக்கப்படுவதால் எழும்புகின்ற வாசனையே அது.,  இப்போது எல்லாம் வாசனைகள் வருவதற்கு வழியே இல்லை. காட்டில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டி தீர்த்த பிறகு இங்கு யானை எது?  இன்னும் இரண்டு வருஷம் போனால் இங்கிருக்கும் பூனைகளுக்கு கூட எலி கிடைக்காது என்று வேதனையாக சொன்னார்கள்.     அவர்களின் பேச்சு பிலோ இருதயநாத்தின் புத்தகத்தில் உள்ள விஷயங்கள் அச்சு அசலான சத்தியங்கள் என்று எனக்கு காட்டியது.  நமது சந்தண கடத்தல் வீரப்பன் கூட காட்டு குருவிகளின் நடமாட்டத்தை வைத்து காவல் துறையினன் வருகையை கண்டுபிடித்து விடுவான் என்று சொல்வது கூட கற்பனையாக இருக்க வாய்ப்பு இல்லை.

    நமது பாரத திருநாட்டில் வனவாசிகளின் இருப்பு என்பது மிக புனிதமானதாகும்.  காட்டு வளங்களை முறைப்படி பயன்படுத்தி துஷ்ட விலங்குகளின் எண்ணிக்கையை அதிகப்பட்டுவிடாமல் அதே நேரம் அழிந்து போய் விடாமல் வனவாசிகள் பாதுகாத்து வந்தனர். நகரப்புறத்தாருக்கும்.  காட்டுபுறத்தார்களுக்கும் சண்டை,  சச்சரவுகள்என்று எதுவுமே மன்னர்கள் காலத்தில் வந்தது இல்லை அப்போதைய ராஜாக்கள் வேட்டைக்கு போவது பொழுது போக்கிற்காக அல்ல.  வனவாசிகளின் சக்திக்கு மீறி விலங்களின் தொல்லை இருப்பதை தடுக்கவே ஆகும். 


      நகரங்களில் வாழ்ந்த மக்கள் வனவாசிகளை நாகரீகம் குறைந்தவர்களாக கருதினார்கள் என்பதற்கான பண்டையகால ஆதாரங்கள் எதுவுமே இல்லை.  ஒரு புதிய அரசன் முடி சூட்டி கொள்கின்ற போது பக்கத்து நாட்டு மன்னர்கள் வந்து பரிசளிப்பது போலவே வனவாசிகளின் தலைவர்களும் வந்து பரிசுகள் வழங்குவார்கள்.  மற்ற மன்னர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை போலவே வனசவாசிகளுக்கு மரியாதை காட்டப்படும். அவ்வளவு தூரம் ஏன் போவானேன். ராமபிரான் காட்டிற்கு சென்ற போது குகன் காட்டிய அன்பும்,  அரவனைப்பும் வனங்களில் இருந்த முனிவர்கள் கூட காட்டவில்லை.   அல்லது அவர்களின் அன்பு குகனின் அன்பிற்கு முன்னால் வலுவற்றது என்றே சொல்லலாம்.  அப்படி இந்த தேசத்தோடும் தேச மக்களின் நெஞசத்தோடும் நமது பண்பாட்டோடும் இரண்டற கலந்து இருக்கும் வனவாசிகளை தனித்தீவாக பிரித்து விடும் சதி நடப்பது தாங்கி கொள்ள முடியாத வேதனையை தேசப்பற்றாளர்களுக்கு சமீப காலமாக கொடுத்து வருகிறது.

    மகாகவி பாரதியின் காலத்தில் நமது நாட்டு மக்கள் தொகை முப்பது கோடி,  இன்று நாம் எதில் வளர்ச்சி கண்டோமே இல்லையோ மக்கள் தொகையில் அதீத வளர்ச்சி கண்டு நூறு கோடியையும் தாண்டி விட்டோம். இந்த நூறு கோடி மக்களின் ஏறத்தாழ பத்து கோடி மக்கள் வனவாசிகளே ஆவார்கள். அவர்களுக்குள் நானூறுக்கும் அதிகமான உட்பிவுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சராசரி  மக்களிடம் இருந்து வனவாசி மக்கள் சற்று மாறுபட்டவர்களாகவே இன்றும் காணப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு. மற்ற மக்கள் மேலை நாட்டு நாகரீக மோகத்தால் தங்களின் சுய பண்பாடுகள் பழக்கவழுக்கங்களை மாற்றி கொண்ட போது இவர்கள் தங்களது பண்பாட்டை மாற்றிக் கொள்ள உறுதியாக மறுத்து நிற்கிறார்கள்.


     மனிதனின் பண்பாடு என்பது வாழும் பகுதியை சார்ந்தே அமைகிறது. உதாரணமாக நமது தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கு அவ்வளவாக தண்ணீர் தட்டுபாடு வந்துவிடவில்லை உப்பு தண்ணீரோ, சப்பு தண்ணீரோ சிறிதளாவது தடையில்லாமல் கிடைத்து வருகிறது.  துணி துவைப்பதிலிருந்து, பாத்திரம் பண்டம் அலும்புகின்ற வரைக்கும் நமக்கு தண்ணீர் தேவை,  நமது தமிழ்நாட்டில் வாழுகின்ற பெருவாரியான மார்வாடி இன மக்கள் பாத்திரம் அலும்புவதற்கு தண்ணீரே பயன்படுத்துவது கிடையாது. அவர்களின் முன்னோர்கள் வறண்ட ராஜஸ்தான் பகுதியில் வாழ்ந்ததினால் பாலைவன மணலை கொண்டே பாத்திரங்களை சுத்தப்படுத்துவார்கள்.  அந்த பழக்கம் இன்றைய மார்வாடி இன பெண்களுக்கு தண்ணீர் தாராளமாக கிடைக்கும் தமிழ்நாட்டில் கூட மாறவில்லை. மணலுக்கு பதிலாக உமியை எரித்து கிடைக்கு சாம்பலிலேயே பாத்திரங்களை சுத்தப்படுத்துவார்கள்.

    இப்படி ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் தனித்தனியான பழக்க வழக்கங்கள் உண்டு.  கடலோரம் வாழகின்ற மக்களின் வாழ்க்கை முறையும் எதிர்படும் சாவாலும் வேறு.  செழிப்பான பகுதி மக்களின் வாழ்க்கை முறையும் சிக்கலும் வேறு.  இந்த இருதரப்பாடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் வனப்பகுதி மக்கள் நமக்கு முங்கிலை பந்தல் காலாகவோ. தட்டியாகவோ தான் பயன்படுத்த தெரியும்,  ஆனால் வனவாசிகளுக்கு மூங்கில் நீர் குடிக்கும் குவளையாகவும்,  உணவுகளை சேகரித்து வைக்கும் பாத்திரமாகவோ கூட பயன்படுகிறது  எவர்சில்வர் மற்றும் வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்துபவர்கள் முங்கில் பாத்திரத்தை மட்டமானதாகவும் கீழ்தரமானதாகவும் கருதினால் அது முட்டாள்தனம்.


     அவர்களுக்கு எவர்சில்வரும் வெள்ளியும் கிடைப்பது குதிரை கொம்பு, அதனால் தான் அவர்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றி கொள்ள மறுக்கிறார்கள்.மேலும் பரம்பரை பரம்பரையாக வனம் சார்ந்த தொழில்களையே செய்து பழக்கப்பட்டு விட்டதினால் மற்ற தொழில்களை திறம்பட செய்ய தங்களுக்கு  இயலாது என்று நம்புகிறார்கள்.  அத்தோடு மட்டுமல்ல அவர்களது சமய சடங்குகளில் நவீனத்துவம் புகுந்துவிட கூடாது என்றும கண்டிப்பாக இருக்கிறார்கள் அதனால் தான் நாடு சுகந்திரம் பெற்ற பிறகு கூட சமுதாய பொருளாதார அரசியல் வாழ்க்கை முறை ஆகியவற்றில் நம்மிலிருந்து மாறுப் பட்டவர்களாக அவர்களை காட்டுகிறது.

    ஆனாலும் நமது மைய,  மாநில அரசுகள்,  வனவாசிகளின் நலன் கருதி பல சலுகைகளையும்,  வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டையும் செய்து வருகிறது.  ஆனால் அரசின் நலத்திட்டங்கள் எதுவும் சரிவர அந்த மக்களை சென்று அடையாமல் பல இடைத்தரகர்கள் தட்டி பறித்து கொள்கிறார்கள்.  ந்னறாக முன்னேறிய நகர்புற மக்களில் சிலர் கூட தங்களை பழங்குடியினர் என்று சொல்லி குறுக்கு வழியில் சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள்.


     வனவாசிகளுக்கு  அரசாங்கம் பல சலுகைகள் வழங்கியிருப்பது அவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. தேசிய நீரோட்டத்தில் அந்த மக்களும் பங்கு பெற வேண்டும் நாட்டு மக்கள், காட்டுமக்கள் என்ற பேதம் இருக்க கூடாது என்பதற்காக தான்.  நாகரீகத்தில் ஊறி கிடக்கும் நகர்புற இந்தியர்கள் கூட வித்தியாசமான ஆடை அணிகலன்களை அவர்கள் அணிந்து இருப்பதினால தான் விந்தையாக பார்க்கிறார்களே தவிர மற்றப்படி அவர்களை ஒதுக்கி வைக்கும் எண்ணத்தில் அணுகுவது கிடையாது.

    வனவாசிகளின் குடியிருப்புக்கு அருகாமையில் வாழும்  ஊர்புற மக்கள் கூட அவர்களை ஒதுக்குவது இல்லை.  அவர்கள் இருவருக்கும் கொள்வினை கொடுப்பினை உறவுகள் இருப்பதை கூட நான் அறிவேன்.  வனவாசி திருவிழாக்களில் ஊர்மக்கள் கலந்து கொள்வதும்.  ஊர் விழாக்களில் அவர்கள் கலந்து கொள்வதும் சகஜமான ஒரு விஷயம்.


    வனவாசிகளின் சமய வழிபாடு என்பது சற்று வித்தியாசப்பட்டாலும் கூட இந்து சமய சார்புடையதே ஆகும்.  இந்து மக்கள் வழிபடும் கிராம தேவதைகளின் மாறுபட்ட வடிவங்களை அவர்கள் வழிபடுகிறார்கள்  என்றே சொல்லலாம் தமிழ்நாட்டில் சில கிராம புறங்களில் பல குடும்பங்களுக்கு ஒரே குலதெய்வம் இருக்கும் அந்த குல தேவதையின் அடையாளமாக எதாவது ஒரு பொருளை வைத்து வழிபடுவார்கள்.

    வழிபடக்கூடிய அந்த பொருள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிலையாக வைக்கப்படுவதில்லை.  வருடம் தோறும் சுழற்ச்சி முறையில் ஒவ்வொரு குடும்பமும் அதை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்.  உதகை, கல்வராயன் உட்பட பலம்பகுதிகளிலுள்ள வனவாசிகளிடம்  இந்த பழக்கம் தான் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கிறது.  பல வனவாசிகள் சிவன், பெருமாள், பகவதி, போன்ற பெருந் தெய்வ வழிபாடுகளை கூட செய்து வருகிறார்கள்.


      நிலைமை இப்படி கண்களுக்கு நேராக வெளிச்சமாக இருந்தாலும் கூட நம்மை அடிமைபடுத்திய ஆங்கில அரசு இந்தியர்களை எவ்வகையிலாவது ஒற்றுமையாக இல்லாமல் பிரித்து வைக்க வேண்டும் என்று கருதி காட்டுமக்களின் சடங்குகளும், சம்பிராதாயங்களும் ஏனைய மேட்டுகுடி மக்களின் சமய வழக்கங்களோடு ஒத்திருக்கவில்லை.  எனவே அவர்களை இந்துக்கள் என குறிப்பிடுவது சரிவராது.  தனி இனமாகவே அவர்களை கருத வேண்டுமென்று சில புள்ளி விவர கணக்கிடுகளில் குறித்து ளவைத்தனர். அதாவது 1911-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது இவர்களை கற்கால மனிதர்கள் எனவும் விலங்கு நிலையில் இருப்பவர்கள் எனவும் குறித்து வைத்தனர்.  1931-ம் ஆண்டு கணக்கின் படி இவர்கள் பின்பற்றுகின்ற மதம் இந்து மதத்திலிருந்து மாறுபட்ட தனிமதம் என்று திரித்து கூறுப்பட்டது.  திட்டமிட்டே இந்திய சமூகத்திலிருந்து அவர்களை பிரிக்க தீட்டப்பட்ட சதி இது.

    ஆங்கிலேயர்கள் போட்ட இந்த சின்ன விஷவிதை 1961-ம் ஆண்டு  மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. சில கிறிஸ்த்துவ அமைப்புகளின் தூண்டுதலால் சில வனவாசி குழுக்கள் தங்களை இந்துமதம் தவிர்த்த மற்ற மதப்பட்டியிலில் சேர்க்க வேண்டும் என்று போராடினார்கள்.  அப்போது பொறுப்பிலிருந்த சில தலைவர்கள் சூழ்ச்சியின் எதிர்கால விளவை கருத்தில் கொள்ளாமல் ஒவ்வொரு தனி இன குழுவையும் தனித்தனி மத பிரிவுகளாக ஏற்றுக் கொண்டார்கள்  உதாரணமாக உராங் என்ற வனசமூகத்தை உறாவ் இனம் என்றும்,  உராவ் சமயம் என்றும் கருதினார் அதே போலவே சண்டால்,  கோண்ட் போன்ற இனங்களையும் சமய பிரிவுகளாக கருதினர்.     இரண்டாயிரமாவது ஆண்டில் தனி ஜார்கண்ட் மாநிலம் உருவான பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் இவர்களுக்கு தனி மத குறியீடு அல்லது தனி இன அந்தஸ்து கோரி போராட்டங்கள் வெடித்தன.  இதனால் அதன் பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் இம்மக்கள் புறகணிக்கப்பட்டார்கள். பழங்குடி இனத்தை சார்ந்த இவர்கள் இந்துக்கள் அல்ல எனவும் இந்து கலாசாரத்தை சார்ந்தவர்கள் அல்ல எனவும்  ஒரு தப்பான கருத்து பரப்பப்பட்டு இந்துக்களிடமிருந்து இவர்களை பிரிக்கும் சதி மிக வேகமாக நடந்து வருகிறது.  பல கிறித்துவ இயக்கங்கள் வனவாசி மக்கள் இடத்தில் மருத்துவ சேவை,  கல்வி சேவை என பல சமூக பணிகளை செய்து வருகிறார்கள்.  இவர்களது நோக்கம் என்னவென்று எல்லோருக்கு தெளிவாக தெரியும்.

    ஒரு ஆறு வருடத்திற்கு முன்பு எனது சொந்த கிராமத்திற்கு சென்று இருந்தேன்.  அங்கே கடற்கரையோரத்தில் கலிலேயோ கடற்கரை முகாம் என்றொரு கிறிஸ்த்துவ பிராத்தனை கூட்டம் நடைப்பெற்றது.  ஊர்மக்கள் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ முகாமில் பேசப்படுகின்ற விஷயங்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக தெரு தெருவாக ஒலி பெருக்கி கட்டியிருந்தார்கள்.  நீங்கள் காதுகளை மூடி கொண்டால் கூட அவர்களின் கருத்துக்களை கேட்காமல் இருக்க முடியாது.  அவ்வளவு இரைச்சல் அவ்வளவு சத்தம், 

   அந்த முகாமில் ஒருவர் பேசினார் இந்த நாட்டுமக்கள் கல்லையும், மண்ணையும் வணங்குகிறார்கள்.  அவர்கள் தெய்வங்கள் எல்லாம் கடவுள் அல்ல,  பேய் பிசாசுகள் தான்.  இப்படி அறியாமையில் கிடக்கும் மக்களை கர்த்தர் அண்டையில் கொண்டு வர வேண்டும்.  கர்த்தர் மட்டும் தான் ஜீவனுள்ள கடவுள் என்று அவர்களை ஏற்று கொள்ள வைக்க வேண்டும்.  அதற்காக வீடு தோறும் செல்லுங்கள், பசித்தவனுக்கு உணவு கொடுங்கள்,  நோயாளிக்கு மருந்து கொடுங்கள் சின்ன சின்ன பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகம் கொடுங்கள் ஆனால் எதை கொடுத்தாலும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மறந்து விடாதீர்கள் அவர்கள் ஒவ்வொரு வரையும் கர்த்தரை நோக்கி மனம்திரும்பும் படி செய்யுங்கள்.  இது தான் இது மட்டும் தான் கிறிஸ்த்துவ பொது சேவையின் உண்மை லட்சணம்.

    கிறிஸ்த்தவர்கள் செய்யும் கீழ்த்தரமான மதமாற்ற முயற்சிகளை, முஸ்லிம்கள் செய்வதில்லை.  முகமது நபியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு இஸ்லாம் சமயத்தை தழுவியவர்களுகம் காதலுக்காக இஸ்லாமியர்களாக மாறியவர்களும் தான்அதிகமே தவிர மூளை சளவை செய்யப்பட்டு  மாறியவர்கள் மிக குறைவு,  


   ஆனாலும் கூட சில இந்து அமைப்புகள் முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது வருங்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மையினராக ஆனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை என்று பேசி வருகிறார்கள்.  அவர்கள் கூற்றில் உண்மை இருந்தாலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகுவது மதமாற்றத்தால் அல்ல.  ஏராளமான குழந்தைகளை அவர்கள் பெற்று கொள்கிறார்கள் பல முஸ்லீம் குடும்பங்கள் இன்னும் வறுமை நிலையிலேயே இருப்பதற்கு அதிகமான பிள்ளை பெறுவதே மூல காரணமாகும்.

     இந்திய முஸ்லீம்களிடம் கல்வியை பற்றிய விழிப்புணர்வு இன்னும் பெரியதாக வளரவில்லை.  முஸ்லீம் தலைவர்களும், இயக்கங்களும் அப்பாவி இளைஞர்களுக்கு மத உணர்வை ஊட்டும் வேலையை விட்டுவிட்டு அவர்களுக்கான கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்தினால் இஸ்லாமிய சமுகம் இந்துக்களின் எதிரிகளாக இல்லாமல் பக்கத்துணையாக,  தோழனாக இருப்பார்கள்.  அப்படி இருந்தால் தான் அது நாட்டுக்கு நல்லது. இந்து முஸ்லீம் பிரச்சனைகள் இருக்கும் வரை இந்தியாவின் வளர்ச்சி சொல்லி கொள்கின்ற மாதிரி இருக்காது.


    கிறிஸ்த்துவர்களின் மதமாற்ற முயற்சிக்கும்,  இஸ்லாமியர்களை பற்றிய கற்பனையான பயத்திற்கும் சம்பந்தமே இல்லை, இரண்டையும் இணைத்து பார்ப்பது என்னை பொறுத்தவரை அறிவீனமாகும்.  ஆனால் முஸ்லீம்களிடம் கெட்ட பழக்கம் ஒன்று தொன்று தொட்டே இருந்து வருகிறது.  தாங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சிறுபான்மையான மற்ற மதத்தினரை அலட்சியம் செய்வது அல்லது அடிமைப்படுத்துவது உதாரணமாக காயல்பட்டினம் கீழ்க்கரை போன்ற ஊர்களில் இந்துக்களை புறக்கணித்தே ஊர் காரியங்கள் நடத்தப்படுகிறது.

    இன்னும் சொல்வதென்றால் இஸ்லாமியர்கள் அதிகமாக பணிபுரியும்  ஒரு நிறுவனத்தில் மற்ற மத ஊழியர்கள் மாற்றாந்தாய் மனோபாவத்துடனையே நடத்தப்படுகிறார்கள்.  முஸ்லீம்கள் என்றில்லை கிறிஸ்த்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல,  ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழம் பகுதியில் முஸ்லீம்களுக்கோ,  கிறிஸ்தவர்களுக்கோ,  மனரீதியிலான நெருக்கடிகள் எதுவுமில்லை.  இந்துக்களின் இந்த இயல்பை மற்ற மதத்தினரும் கடைபிடித்தால் மத உணர்வுகளை தூண்டிவிட்டு வளர்ச்சியடைய துடிக்கும் அரசியல்வாதிகள் தங்களது சுயநல சதுரங்க ஆட்டத்தை நிறுத்தி கொள்வார்கள.  


     இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுக்கூடும் வனவாசி மக்கள் கிறிஸ்த்துவர்களாக மாற்றப்படுவதில் அப்படி என்ன தேசிய அபாயம் ஏற்பட்டுவிடப்போகிறது என்று சிலர் கேட்ககூடும்.  ஆப்கானிஸ்தானிலுள்ள மிக பெரியபுத்தர் சிலைகள் தாலிபான்களால் உடைக்கப்பட்ட போது ஒட்டுமொத்த உலகமே வன்மையாக அந்த செயலை கண்டித்தது இந்தியாவிலும்,  ஜப்பானிலும் இன்னும் பல நாடுகளிலும் ஏரளாமான புத்தர் சிலைகள் பாதுகாப்போடு இருக்கும் போது ஒரே ஒரு புத்தர் சிலையை உடைப்பதற்கு உலகம் முழுவதிலுமிருந்தே எதிர்ப்பு வருவது ஏன்?  என கேட்டது எப்படி அர்த்த மற்றதோ,  அப்படிபட்டதே இந்த கேள்வியுமாகும்.

    வனவாசிகள் காப்பற்ற படவேண்டிய மனிதர்கள் என்பது இரண்டாவது விஷயம் அவர்களை போலவே அவர்களின் பண்பாடும்.  கலாச்சரமும் சீர் கெட்டுவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது தான் முதல் விஷயம்.  என்னை ஒரு கிறிஸ்த்துவனாக வைத்துக்கொள்ளுங்கள்  எனக்கொரு மகள் இருந்து அவளை ஒர இந்துவுக்கு திருமணம் செய்து கொடுப்பதாக எடுத்துக் கொள்வோம் இந்து வீட்டில் மருமகளாக போகும் பெண் சுகந்திரமாக ஜெபம் செய்ய முடியுமா?  பைபிள் வாசிக்க முடியுமா?  ஞாயிற்று கிழமை சர்ச்சுக்கு போகிறேன் என்றால் பையன் வீட்டார் விட்டுவிடுவார்களா?  பிறந்ததிலிருந்து என் மகளோடு ரத்தத்தில் ஊறிய கிறிஸ்த்துவ கலாச்சாரம் என்பது சிறிது சிறிதாக நசிந்து முற்றிலுமாக மறைந்தே போய்விடும்.  கிரேக்க பண்பாடு,  எகிப்து நாகரீகம் மாயன் கலாச்சாரம் என்பதை புத்தகத்தில் மட்டுமே படிக்கும் நிலை இருப்பது போல வனவாசிகளின் பண்பாடும் அழிந்து சுவடு கூட இல்லாமல் போய்விடும் இந்த அபாயம் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் கிறிஸ்த்துவ நிறுவனங்களின் மதமாற்ற முயற்சிகள் கட்டுபடுத்தப்பட்டே ஆகவேண்டும்.  நமது அரசாங்கமும,  அரசியல் வாதிகளும் மற்ற விஷயங்களை அசட்டை செய்வது போல இதையும் அசட்டை செய்தால் நிலைமை விபரிதமாகும். 


     இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  மதம் என்பது ஒரு சமூக அடையாளம் என்றாலும் அது ஒரு தனிப்பட்ட மனிதனின் சொந்த விஷயமேயாகும்.  அதை வலுகட்டாயமாகவோ,  ஆசை வார்த்தைகள் காட்டியோ மாற்ற நினைப்பது காட்டுமிராண்டதனமான செயலாகும்.  இந்துவாக பிறந்த நான் பைபிள் அல்லது கூரானை படித்து அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு என் சொந்த மதத்தை விட்டு மற்ற மதத்தை என் விருப்பப்படி ஏற்றுக் கொண்டால் அதை தடை செய்வதற்கு யாருக்கும் உரிமையில்லை.

    ஆனால் இன்று மதமாறும் நிகழ்ச்சி என்பது தானாக கனிகின்ற கனியை தடியால் அடித்து கனிவைப்பது போல் நடந்து வருகிறது.  ஒரு ஏழை குடும்பம் தகப்பனுக்கு காசநோய். தாய் கூலி வேலைக்கு சென்றுதான் குழந்தைகளுக்கு உணவும் கொடுக்க வேண்டும்.  புருஷனுக்கு மருந்தும் வாங்க வேண்டும்.  இந்த அவலநிலை ஒரு உண்மையான சமூக சேவகனின் கண்ணில் பட்டால் அவன் என்ன செய்ய வேண்டும்.  பாதிக்கப்பட்ட குடும்பத்தை மீட்டெடுக்க பொருளாதார உதவி செய்யலாம்.  மருத்துவ உதவிகளையும் வழங்கலாம்.  அதை விட்டுவிட்டு நான் உனக்கு உதவி செய்கிறேன்.  நீ உன் சொந்த மதத்தை விட்டுவிட்டு நான் சொல்லும்  மதத்திற்கு வந்து விடு என்று சொன்னால் அது நவீன முறையிலான அடிமைத்தனமல்லவா?  மற்றவர்களின் பலவீனத்தை தனது பலமாக்கி கொள்வது முதலாளித்துவ நிபுணத்தனம்,  இந்த நிபுணத்தனம்  ஐரோப்பியர்களின் நிதியில் இயங்கும் கிறிஸ்த்துவ இயக்கங்களுக்கு பிறவி குணமாகயிருக்கிறது. 

    ஆரம்பகாலத்தில் மிசோராம்,  நாகலாண்ட், மணிப்பூர், போன்ற மாநிலங்களில் கிறிஸ்த்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவு,  மதமாற்ற முயற்சிகளின் மூலம் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டு அரசியல் காரணங்களுக்காக ஆயுத போராட்டத்தை அந்த பகுதியில் பாதிரியார்கள் தூண்டிவிட்டதை நாம் கண்ணெதிரே கண்டோம்.  அவர்களின் ஆயுத போராட்டத்தை முற்றுபுள்ளி வைப்பதற்கு பல விலைகளை கொடுக்க வேண்டிய நிலை பிற்காலத்தில் வந்தது.

     மிசோராமில் தீவிரவாதிகளை ஜனநாயக அரசியலுக்கு அழைப்பதற்காக பட்டப்பாடு திரு.  ராஜீவ்காந்தி அவர்களுக்குதான் தெரியும்,  திருமதி,  சோனியகாந்திக்கு அதைபற்றி தெரியுமா?  என்பது சந்தேகமே,  அதனால் தான் அவர் பல கிறிஸ்த்துவ அமைப்புகளுக்கு அயல்நாடுகளிலிருந்து தாரள நிதியுதவி கிடைக்க உதவிவருகிறார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பல வனவாசி அமைப்புகளுக்கு கிறிஸ்த்துவ நிறுவனங்கள் தாராளமாக நிதியுதவி செய்கின்றன.  நிதியுதவியை பெறும் அமைப்புகள் நாட்டுக்கெதிரான ஆயுத போராட்டத்தை பல இடங்களில் நடத்தி வருகின்றனர்.  ஜார்க்கண்ட என்றில்லை பல வடகிழக்கு மாநிலங்களில் இதே நிலைமை தான் இருந்து வருகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் உள்ளது.  பல் வனவாசி அமைப்புகளை வடகிழக்கு மாகாணங்களில் நடத்தி வருவது பொதுவுடமை தீவிரவாதிகளே ஆவார்கள்.

    தங்களது தீவிரவாத செயலுக்கு கிறிஸ்த்துவ நிதியுதவி தாராளமாக கிடைப்பதினால் நக்ச்சல்பாரிகள்,  பாதிரியார்களின் எந்த காரியங்களுக்கும்  தடையாகயிருப்பது கிடையாது.  மாறாக பல ஒத்தாசைகள் செய்கிறார்கள் அதாவது முதாளித்துவத்தை ஒழித்துகட்டி பாட்டாளிகளின் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்ற போவதற்கு புறப்பட்ட லட்சிய வீரர்கள் ஐரோப்பிய முதலாளிகள் வீசூம் உயர்ரக பிஸ்கட்டுகளுக்காக வாலாட்டி கொண்டு நிற்பது தான் தற்போதைய பொதுவுடமை தத்துவத்தின் யதார்த்த நிலையாகும்.

    உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்  இந்தியாவை ஏசுக்கு சொந்த மாக்குவோம் என்ற புகழ்பெற்ற கிறிஸ்த்துவ வாசத்தை அந்த வாசகத்தை செயல்வடிவம் படுத்துவது என்றால் ஊசி போட்டு கொண்டும்,  முழு  இரவு ஜெபம் நடத்தி கொண்டும் மதமாற்ற முயற்சிகளை செய்தால் அவ்வளவு விரைவில் எதுவும் ஆகாது.  பரந்து போகும் கொக்கை பிடித்து அதன் தலையில் வெண்ணெய் வைத்து சூரியன் உச்சிக்கு ஏறும் போது வெண்ணெய் உருகி கொக்கின கண்ணை மறைக்கும்,  அப்போது வேட்டையாடலாம் என்று நினைத்தால் எப்படி சிறுபிள்ளைதனமானதோ,  அப்படிதான் உபவாச ஜெப கூட்டங்கள்,  என்று கிறிஸ்த்துவ நிறுவனங்களுக்கு நன்றாக தெரியும்,  அதனால் தான் அரசியல்வாதிகளையும்,  தீவிரவாதிகளையும் விலைகொடுத்து வாங்க ஆரம்பித்துயிருக்கிறார்கள் இவர்களின் இந்த வியாபாரம் அரசாங்கத்திற்கு தெரியாதது ஒன்றுமில்லை,  நான் கண்ணை மூடிக் கொள்வேனாம்,  நீ ஒடி ஒளிந்து போவியாம்,  என்று சொல்வது போலத்தான் அரசாங்கத்தின் நிலையிருக்கிறது.  அரசாங்கம் தூங்கும் அரசாங்கமல்ல, தூங்குவது போல் நடிக்கும் அரசாங்கம்.

    கடைசியாக கிறிஸ்த்துவ மதத்திற்கு மாற நினைப்பவர்களுக்கு ஒர் செய்தி,  ஒரு சமயம் இயேசுநாதரிடம் உங்கள் உபதேசம் எல்லோருக்கு மானதா?  யூதர்களுக்கு மட்டுமானதா?  என்று கேட்டதற்கு அவர் கையில் இருக்கும் ஒரே ஒரு ரொட்டி துண்டு பசியால் அழுகின்ற உன் குழந்தைக்கா?  அல்லது உன் வீட்டு நாய்க்கா?  என்று திருப்பி கேட்டார்.  இதற்கு உண்மையான அர்த்தம் எனது உபதேசம் இஸ்ரேலியர்களுக்கு மட்டும்தான்.  என்பதாகும்.  இப்போது நாம் மதமாறபோகிறவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விருப்புகிறோம்.  நீங்கள் இந்தியர்களா?  இஸ்ரேலியர்களா?
 Contact Form

Name

Email *

Message *