Store
  Store
  Store
  Store
  Store
  Store

கமல்ஹாசனை திருத்துவது யார் ?


      தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்று கிராமத்தில் சொல்வார்கள் அதாவது ராத்திரி பகல் என சதா நேரமும் கணினி முன்னாலேயே உட்க்கார்ந்து முதுகுவலிக்க வேலை செய்பவனை தூக்கிக் கொண்டுபோய் பருத்திக்காட்டுக்கு தண்ணீர் விட விட்டால் என்ன நடக்கும்? போட்டமுதல் காற்றில் கரைந்து விடும்

    அதனால்தான் அவனவன் வேலையை அவனவன் பார்க்கவேண்டும் என்பது ஆனால் இன்று நாட்டில் நடப்பது என்ன? தனது வேலையைக் கூட உருப்படியாக செய்ய முடியாதவர்கள் ஊருக்கு உபதேசம் பண்ண கிழம்பி விட்டார்கள்

    நம்ம கமல்ஹாசன் கடவுளைப்பற்றி பேசி இருப்பதை பார்க்கும் போது நமக்கு இப்படித்தான் தோன்றுகிறது தனக்கு சினிமா தந்த புகழ் இருக்கிறது ஊர் உலகம் முழுவதும் நம்மைப் பற்றி தெரியும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம் என்ற எண்ணம் இவருக்கு எப்போதுமே ஏராளமாக உண்டு 


   நாலுபேரு கைதட்டிவிட்டால் எல்லோரும் தாகூர் ஆகிவிட முடியும் நானும் தாகூர்தான் என்று நம்புகிறாரோ என்னவோ தெரியவில்லைஅப்படிபட்ட மூடநம்பிக்கை அவரிடம் நிறைந்திருப்பதை பல காலமாகவே காணமுடிகிறது

    எந்த ஒருமனிதனுக்கும் தான் நினைப்பதை மற்றவர்கள் புரிந்துக் கொள்ளும் வண்ணம் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் அப்படி அவனுக்குத் தெரியவில்லை என்றால் சிந்தனையில் குழப்பம் இருப்பதாக அர்த்தம்

     கமல்ஹாசன் கடவுளைப்பற்றி பேசும் கருத்தாக இருக்கட்டும் அரசியல் மற்றும் சமூகத்தைப்பற்றி பேசுவதாக இருக்கட்டும் எதுவுமே யாருக்கும் புரியாது

    பல நேரங்களில் தன்னை பொதுவுடமை சித்தாந்தத்தின் போர் வீரன் போலக்காட்டிக் கொள்வார் ஆனால் பொதுவுடமை என்பது பேசும் பேச்சில் இல்லை வாழும் முறையில் உள்ளது என்பதை உணர்ந்து நடந்து கொள்ளவே மாட்டார்


   இதுவரை அவரால் அந்தச் சித்தாந்தம் சிறுமை பட்டிருக்கிறதே தவிற பெறுமை அடைந்ததே இல்லை பொதுவுடமை சொல்லுகின்ற ஏழ்மை கண்டு சீறும் செயல் ஏதேனும் அவரால் நிகழ்ந்தது உண்டா? 

   ஜாதிக் கொடுமகளையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் கடைப்பரப்பி திரைத்துறை மூலம் சம்பாதித்துள்ளாரே தவிற அந்த பஞ்சைப் பராரிகளுக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டதுண்டா?

    அதிகம் வேண்டாம் தன்னோடு பணிபுரியும் சகதிரைப்பட தொழிலாளர்களின் வயிற்றுப்பசி தீறுவதற்கு வழி செய்ததுண்டா? அவரின் சொந்தத் தாயாரிப்பு படங்களில் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்களுக்கு எப்போதுமே சரியான ஊதியம் பிரித்தளிக்கப்படாது என அனுபவப் பட்டவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்

    உண்மையான பொதுவுடமைவாதி பேசமாட்டான் செய்வான் இப்படி எதிலும் நிலைல்லாத கமல் கடவுளைப்பற்றி பேசவதற்கும் ஜனநாயகத்தைப்பற்றி  ஹிட்லர் பேசுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?

   ஆரம்பக்காலங்களில் கடவுளே இல்லை என்றார் அதன் பிறகு யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார் இப்போது வந்து கல்லாப்பார்த்தால் கல்தான் கடவுளாய் பார்த்தால் கடவுள்தான் என்கிறார்

      இது என்ன அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது? கடவுள் இல்லை என்றா? இருக்கிறது என்றா? தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதுதான் சினிமாக்காரன் பிழைப்போ? கடவுளுக்கே வெளிச்சம் என விட்டுவிடலாம் சத்தியராஜ் போன்ற நடிகர்கள் இதைப்பற்றி பேசினால் யாருக்கும் சங்கடம் இல்லை

   சத்தியராஜ் பேசுவதை பல நேரங்களில் அவரேக் கூட நம்புவதில்லை அதுவும் இல்லாமல் அவர் பின்னால் ரசிகர் கூட்டம் என்று ஈ காக்கா கூட இல்லை

    கமல்ஹாசன் அப்படியல்ல இத்தனைக்காலத்திற்கு பிறகும் அவருக்கென்று சில ரசிகர் கூட்டம் இருக்கிறது அவர்களையாவது அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டாத வேலைகளை பார்ப்பதை விட்டுவிட்டு தனக்குத் தெரிந்த தொழிலை செய்யலாம் என்ன செய்வது வேகாத பானையில் சோறுவடிக்கும் தமிழன் உள்ளவரை இப்படிப்பட் உளறல்களை கேட்டுத்தான் ஆகவேண்டியுள்ளது!Contact Form

Name

Email *

Message *