( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ராம பக்தராகிறார் கலைஞர்...!


   மிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்களை பற்றி குறை சொல்வோர் எப்போதுமே உண்டு, அவர் நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றமென்று ஏராளமான குற்றசாட்டுகளை சுமத்துவது சிலருக்கு வாடிக்கை பலருக்கு ஒருவித சந்தோஷம், மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவரும், அவரை சார்ந்தவர்களும் எதாவது குற்றங்களை செய்து கொண்டே இருப்பதை பெரிய மக்கள் தொண்டாக கருதியும் வருகிறார்கள்.

    திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி அவர்கள் (தி.மு.க என்பதன் நிஜ விவாக்கம் இதுதான். பலர் தவறுதலாக வேறு எதைஎதையோ சொல்லி வருவதற்கு கலைஞர் பொறுப்பல்ல)  கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நாத்திகர்,  இந்து மதத்திற்கு விரோதமானவர் என்றெல்லாம் பொய் குற்றசாட்டுகள் அவர் மீது வெகு காலமாக சுமத்தப்பட்டு வருகிறது கலைஞர் அவர்களை முழுமையாக அறிந்தவர்கள் இந்த குற்றாசாட்டுகளை கேட்டு மிகுந்த மனவேதனை அடைகிறார்கள்.  அவர் இந்துக்களை திருடர்கள் என்று சொன்னார் என்று பலர் கொதித்து போயிருக்கிறார்கள். அவர் இப்படி சொன்னதை பற்றி யாரும் கோபப்பட வேண்டிய அவசியமே கிடையாது. கருணாநிதி அவர்கள் எதை பேசினாலும் யோசித்து தான் பேசுவார். உண்மையைத் தான் பேசுவார்.  எந்த காலகட்டத்திலும் அவர் பொய் சொன்னதாக சரித்திரமே இல்லை.

    நமது பாசமிகு முதல்வர் திருக்குவளையிலிருந்து தர்மமிகு சென்னைக்கு வந்தபோது எப்படி வந்தார்.  கையில் ஒரு தகரப் பெட்டியும் அதில் ஒன்று இரண்டு வேட்டி சட்டைகளும் தான்.  அவரின் அப்போதைய ஆஸ்தி இன்று அவரின் குடும்பத்தின் பொருளாதார நிலையென்ன?  கோடிஸ்வரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்து தமிழகத்தின் பெருமையை பார் போற்ற செய்ய வைக்க முடியவில்லையே ?  என்ற ஒரே ஒரு கவலைதான் அவரை தூக்கம் இல்லாமல் தீண்டாட செய்கிறது இந்த அளவிற்கு அவர் செல்வ வளத்தை உயர்த்தியது எது?  தோட்டம் போட்டரா?  இரவுபகல் பாராமல் பயிருக்கு தண்ணீர் விட்டாரா?  அல்லது அவர் எழுதிய சினிமா வசனங்களுக்குத் தான் இவ்வளவு பொருள் வந்து குவிந்ததா?  நிச்சயமாக இல்லை.  அரசாங்க கஜானாவில் மக்களின் பணம் கேட்ப்பார் அற்று சிலந்தி வலப்பின்ன குவிந்து கிடக்கிறது. அதை அப்படியே விட்டு வைத்தால் விட்டில் பூச்சிகள் எல்லாம் பணத்தை நாசம் செய்து விடாதா?  மக்கள் பணம் வீணாக போவதை பார்த்து கொண்டு சும்மா இருப்பவனா மக்கள் தலைவன்?


     அதனால் கஜானா பணத்தை எடுத்தார்.  தனது தொழில் துறையை விரிவாக்கினார். தனது சொந்த பந்தங்களை கொலுவேற்றி பார்த்து ரசிக்கிறார்.  மக்கள் பணத்தை எடுப்பவனுக்கு சட்டமும் தர்மமும் திருடன் என்ற பட்டத்தை தருவது அனைவரும் அறிந்ததுதான்.  ஆனால் திருடுகின்றவனை  விட ஒருவனை திருட தூண்டுபவன் தான் பெரிய திருடன். கலைஞர் அவர்களை மக்கள் பணத்தில் கை வைக்கும்அளவிற்கு தூண்டி விட்டது யார்?  தமிழக மக்கள் தானே,  நமது மக்கள் தொகையில் பெரும் பங்கு இந்துக்கள் தானே இருக்கிறார்கள்.  திருட தூண்டியவன் தான் திருடன் என்றால் அவர் அப்படி செய்ய காரணமான இந்துக்களை திருடர்கள் என்பது எந்த வகையில் தவறாகும்.  உண்மைக்கு புறம்பானது அவர் வார்த்தை என்று எப்படி சொல்ல முடியும்?

    அடுத்ததாக அவர் ஸ்ரீ ராமனை குடிகாரன் என்று சொன்னதற்கு எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.  ஜெயலலிதாவும் ராமகோபாலனும் காரசாரமான கண்டன அறிக்கைகளை விட்டு கலைஞரின் பொன்னான மனதை புண்படுத்தினார்கள்.  கலைஞர் அவர்கள் ராமனை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவா அப்படி சொன்னார்.  இல்லவே இல்லை. ஆகாதவன் மனைவி கைப்பட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்று பேசுவதுதானே.  சாதாரண மனிதனின் சகஜமான நிலை. 

     கலைஞர் அவர்கள் சதா சர்வகாலமும் தமிழக மக்கள் நலமுடன் இருக்க வேண்டும். வளமோடு வாழவேண்டும் என்ற எண்ணத்திலேயே ஒவ்வொரு மணி நேரத்தையும் கடத்துபவர். தமிழகம் எங்கும் குத்துவெட்டு, ஆள்கடத்தலும் கந்து வட்டியும், கட்டபஞ்சாயத்தும் போட்டி போட்டு கொண்டு வளர்வதை பார்த்து நெஞ்சம் வெதும்பி போய் இவர்கள் செய்கின்ற பாவம் எல்லாம் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் பெயரை உரக்க வாய்விட்டு சொன்னால் தான் தீரும் என்ற முழு நம்பிக்கையில் பக்தி சிரத்தையில் எப்படியாவது ராமன் பெயரை விவாதம் செய்வதற்காவது பட்டி தொட்டி எங்குமுள்ள மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று ஆசையில் தான் அத்தகைய சர்ச்சையை கிளப்பிவிட்டார்.


     கலைஞர் ராமனை குடிகாரன் என்று கூறியதற்கு வேறொரு காரணமும் உண்டு,  அரசகுமரானாக பிறந்தாலும்,  ஆண்டியாக காட்டுக்கு போ என்றவுடன் போய் விட்டானே அந்த ராமன்,  சுயபுத்தியிருக்கும் எந்த அரசியல்வாதியாவது பதவி வேண்டாம் என்ற பாதக செயலை மனம் துணிந்து செய்வனா?  ஒரே நொடியில் செய்து விட்டான் அய்யா ராமன் சராசரி மனிதனாக இருந்தால் அப்படி செய்யமாட்டான்.  அதனால் சந்தேகமே இல்லாமல் ராமன் குடிகாரனாகத்தான் இருக்க வேண்டும்.  இது மட்டுமல்ல அவன் சுயபுத்தியில்லாத குடிகாரன் என்பதை வேறு  சில சான்றுகளும் இருக்கிறது.

    கட்டிய மனைவியை யாரோ தூக்கி போய்விட்டான் என்பதற்க அழுகிறான், ஆத்திரப்படுகிறான், படைகளை வேறு திரட்டி எதிரியின் மீது போர் பிரகடனம் வேறு செய்கிறான்.  ஒரு தன்மானமுள்ள அரசியல்வாதி செய்யும்  செயலா இது?  கட்டிய மனைவி வீட்டில் இல்லை என்றாலே வேறொருத்தியை கூட்டி வந்து குடும்பம் நடத்துவதல்லவா?  ஒரு நல்ல தலைவனின் அழகு கடத்தப்பட்டவள் வந்து சேர்ந்தால்  சேர்கிறாள் இல்லையென்றால் துணைவி, இணைவி என்று வாழ்க்கை நடத்துவதை விட்டுவிட்டு சண்டையாம், சமர்க்களமாம்,  சுத்த அயோக்கியன் இந்த ராமன்,  ஒருத்தயோடு மட்டும் தான் குடித்தனம் நடத்த வேண்டுமென்று குடிகாரனை தவிர எவன் நினைப்பான்?  இப்படியெல்லாம் ஆழ்ந்து அகன்று ஆய்வு செய்துதான் ராமன் குடிகாரன் என்ற மாபெரும் உண்மையை கண்டுபிடித்தார்.

வைஷ்ணவர்களை மட்டும்தான் தானைத்தலைர் நேசிக்கிறார் தமிழர்களின் ஆதிமதமான சைவ சமயத்தை அவர் கண்டு கொள்ள வில்லையோ என்று யாரும் மாற்க்கருத்தை கொள்ள வேண்டாம் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட எம்பெருமானை கங்கைசூடிய இறையவரை புறக்கணித்து விடுவாரா? புறநானுற்று புரட்சித்தமிழர்! ஜோதிட நிபுணர்களும் வாஸ்த்துக்கலையின் வல்லுனர்களும் பரிகாரச் செம்மல்களும் இன்னும் பலகாலம் பதவியில் இருந்து இலங்கைத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக வாழவைத்தது போல உலகத் தமிழர்களையும் வாழவைக்க வேண்டுமானால் சிவாலயம் எழுப்பி அதில் உங்களின் திவ்விய நாமத்தை பதித்து விடுங்கள் என்று சொன்னதினால் பகுத்தறிவு பேசும் பகைக்கூட்டம் தனது தியாக உணர்வை நிந்திக்குமே என மனம் மருகி உருகி புதியச் சட்ட சபையை ஆகாயத்திலிருந்து தரிசனம் செய்பவர்களுக்கு மட்டும் சிவலிங்கமாக தெரியட்டுமே அதைபார்பவர்கள் பாவம் தொலையட்டுமே என்று சட்டசபையையே சிவாலயமாக ஆக்கிய சிவனடியார் நம் கலைஞர்!

     இத்தகைய உண்மைகளை அறிந்து கொள்ள சக்தியற்ற அப்பாவி மனிதர்கள் கலைஞர் என்ற மாமேருவை பார்த்து இந்துக்களின் விரோதி என்று கூறுவது எப்படி பொருந்தும்? அவர் ராமன் மீது மட்டுமல்ல கிருஷ்ணனின் மீதும் தீவிர பக்தி கொண்டவர் தினசரி காலையில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வரும்போது வீட்டு முனையிலிருக்கும் கிருஷ்ணன் கோவிலில் பகவான் கண்ணனை வழிபடாமல் ஒரு நாளாவது சென்றதுண்டா?  மேடையில் வேண்டுமென்றால் கிருஷ்ணனையும் ராமனையும் கண்ட கண்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்வாரே தவிர வீட்டிற்கு வந்து தான் இப்படி பேசிவிட்டோமே என்று அவர் விம்மி விம்மி அழுவதை அர்ப்ப மானிடபிறவிகள் எப்படி அறிவார்கள்.  அவர் போற்றுவது போல் கிருஷ்ணனை வணங்குவதில்லை.  நூற்றுவது போல் தான் வணங்குகிறார் என்ற பக்தியோகத்தின் புதிய இலக்கணத்தை அறிந்து கொள்ளும் தகுதி யாருக்கு இருக்கிறது.  கண்ணன் ஒருவனே கருணாநிதி பக்தியின் உண்மை அறிவான்.

    இன்னும் சிலர் சொல்லுகிறார்கள் இந்துக்களின் மத நம்பிக்கையை அவர் கேவலப்படத்துகிறார் என்று.  தமது கட்சிகாரர் ஒருவர் பொட்டு வைத்ததை கிண்டல் செய்தார் என்று யார் யாரோ அவரை திட்டுகிறார்கள்.  உண்மையில் அவர் தரமற்ற குங்குமத்தை நெற்றியில் வைத்தால் ஒவ்வாமை ஏற்பட்டு புண்ணாகி விடுமே என்று தான்அளவிடமுடியாத பாச வெளிபாட்டில் தொண்டருக்கு அறிவுரை வழங்கினாரே தவிர உள் ஒன்று வைத்து புறமொன்றாக அவர் பேசவேயில்லை.       மேலும் அவரை போல இந்துமத நம்பிக்கைகளை போற்றி பாதுகாக்க இன்று யாருமே இல்லை எனலாம்.  சாது தரிசனம் பாவ விமோசனம் என்று நமக்கு தெரியும்.  உலக பற்றுக்களில் கிடந்து உழலும் நாம் பற்றுகளை அறுத்துவிட்டு கடவுகளுக்குள் வாழுகின்ற துறவியர்களை தரிசனம் செய்தால் குழம்பிய நமது மனம் தெளிவடையும் என்பது இதன்பொருள் இதை தானும் கடைபிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்க வைப்பதற்காகவே சத்ய சாய் பாபா அவர்களை தனது வீட்டுக்கே வரவழைத்து தள்ளாத வயதில் தான் போக முடியாது என்று மனைவியை மட்டும் அனுப்பி பாத பூஜை செய்த பரம பக்தர் அவர். நமக்கு கடவுளை பிடிக்கிறாதா இல்லையா?  என்பது முக்கியமல்ல.  கடவுளுக்கு நம்மை பிடிக்கிறதா?  இல்லையா?  என்பது தான் முக்கியம்.  என்ற தத்துவ ஞான முத்தை பட்டினத்தார்.  தாயுமானவர் போன்ற ஞானிகளை போல் பேசிய உத்தமர் அல்லவா?  கலைஞர் பெருமகனார்.

    தமிழகத்து ஜோதிடர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் மஞ்சள்  துண்டு அணிந்திருக்கிறாரே தவிர பாழாய்போன எதிர்கட்சி காரர்கள் சொல்வது போல் பதவியை காப்பாற்றுவதற்காக அல்ல.  ஜோதிடப்படி மஞ்சள் நிறம் குரு கிரகத்தின் அருளை தரும் என்ற சித்தாந்தத்தை கலைஞர் அவர்கள் மதிப்புயிலிருந்தே இந்துமத மரபுகளை அவர் மதிக்கிறார் என்பது புரியவில்லையா?

    அதே போலத்தான் தஞ்சாவூர் பெரிய கோவிலின் தலைவாசல் வழியாக போனால் தலைவர்களின் உயிர் போய்விடும் என்று மக்கள் நம்புவதை தான் புறக்கணித்து இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்திவிட்டதாக யாரும் நினைத்துவிட கூடாதே என்பதற்காக தான் மாற்று வழியில் இப்போது கோயிலுக்கு போனாரே தவிர உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாற்று வழியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை,  ஒடும் ரயிலை இடமறித்து அதன் பாதையில் தலைவைத்த மாபெரும் வீரம் அவருக்குள் இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது.  பதவியின் மீதுள்ள பற்று பிள்ளைகளின் மீதுள்ள பற்று, பணத்தின் மீதுள்ள பற்றுதான் உயிரின் மீது பற்றாக வெளிபடும் கலைஞர் அவர்கள் எந்த பற்றுதலுக்கும் ஆட்படாதவர் என்று உலகத்தில் அனைவருக்குமே தெரியும்.  எனவே அவரை இந்துக்களின் விரோதி என்று  சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள்.  கலைஞர் சிறந்த பக்திமான். இது அவரின் சொந்த அண்ணாவுக்கும் தெரியும்,  அவர் பக்கத்து வீட்டிலுள்ள ஒரு பெரியாருக்கும் தெரியும்.+ comments + 17 comments

மாணிக்கம்
01:18

அடடா! கஞைரின் பக்தி லீலா வினோதங்களை இப்படிக் கூட சொல்ல முடியுமா? படிக்க படிக்க பக்திரசம் சொட்டோ சொட்டென்று கொட்டுகிறது போங்கள் ! எல்லாம் தமிழர்கள் கொடுத்த இடம் நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்! பாராட்டுக்கள் குருஜி

ஆஹா,தமிழ் இனத்தலைவரை நக்கல் அடித்து விட்டீர்களா?இனி பாருங்க.மதுரைல இருந்து ஆட்டோ வரும்.


நன்றி மாணிக்கம்

தன்னையும் தன குடும்பத்தையும் காப்பாற்றும் ஒருவர்தான்
நல்ல குடும்ப தலைவர் அப்படின்னு அவர் தெரிஞ்சு வச்சிருக்கார்.ஆனா நம்ம மட தொண்டனுகளுக்கு விளங்கலியே

கலைஞருக்கு நன்றி.

உண்மை தான் கலைஞர் தன்னை வெறுப்பவர்களையும் மகிழ்விப்பவர்.

கட்டுரையாளருக்கு கூடுதல் மகிழ்ச்சி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்னும் எத்த‌னை கால‌ம் தான் த‌னிம‌னித‌னின் வாழ்க்கையை சொல்லி சொல்லி ம‌கிழ்வார்க‌ளோ?

இந்திய‌ ச‌ரித்திர‌த்தில் விமர்ச‌ன‌ம் செய்ய‌ப்ப‌டாத தெய்வங்களும் இல்லை, த‌லைவர்களும் இல்லை. ஆக‌ அதில் க‌லைஞ‌ருக்கு மட்டும் விதிவில‌க்கு உண்டா என்ன?

எதுவாக இருந்தாலும் க‌லைஞ‌ர் ஒரு ந‌ல்ல‌ த‌லைவர், நிர்வாகி. பல்வேறு சமுதாய மாற்றங்கள் செய்யவே பிறந்தவர், அதை செய்து முடித்தவர்.

@பரஞ்சோதி »உங்கள் கருத்துக்கு நன்றி

Anonymous
14:49

I have one question to Yogi sri ramanatha guru!!!!

Watever you written about Karunanidhi is 100% correct.
But onething u guys are missing about Karunanidhi. He is the real leader(whether he is good or bad is another scenario). he always face the critisicm.
If you have guts, just write one review column about jayalalitha like this.
Don't show your castewise partiality while critisicing people ok.

நல்லாத்தான் இருக்கு...ஆனா..இது யோகி சீ..ராமானந்த குரு என்ற பெயரில் வருவது சற்று இடரலாக உள்ளது.

இது போல ராமானுஜ அய்யங்கார் செய்த அயோக்கியங்களையும் எழுதலாம்

கையில போட்டிருக்கும் பல வண்ண கற்கள் பதித்த மோதிரம் பற்றி...?

ஹா ஹா ஹா.....!
இப்படி கூட கலைஞரின் புகழ் பரப்ப முடியுமா???
மிகவும் ரசித்தேன்....!

நினைத்தாலேயே முக்தி தரும் திருவாரூரில் தவழ்ந்து வளர்ந்தவராயிற்றே!

இது நூறு சதவிதம் உண்மை,

என்னும் சில கருத்துகள்.......

1) அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் மனிதர்கள்க்கு, தொலைகாட்சி தந்த வள்ளல்....
2) ஒவ்வொரு மந்திரிக்கும் ஒரு ஊரை கொள்ளே அடிக்க கொடுத்த தலைவர் அவர்....
3) நலிந்த சினிமா துறையை, தன் வசம் அமைத்து, இன்று வெற்றி பெரும் திரைப்படங்கள் எல்லாம் கலைஞர் குடும்பத்தாரின் வெளிடுகள் என்று பெருமை பட செய்தவர்..
4) இந்தி ஒழிப்போம் என்று மேடையில் பேசுவோம், ஆனால் எங்கள் பேரன் வரை அனைவர்க்கும் இந்தி கற்று தருவோம் என்ற உயரிய கொள்கையில் வாழுபவர்...
5) தனது அணைத்து மகன்/ மகள் மந்திரிகள் ஆக்க பெரும் பாடு பட்டவர்.....
6) இந்த 4 ஆண்டுகளில் யார் வாழந்தார்களோ இல்லையோ, அவர்கள் பேரன்கள் வரை அனைவர்க்கும் வாழ வழி செய்த உத்தமர் அவர்......
7) இந்துக்கள் பண்டிகை வந்தால் மட்டும் தனது தொலைகாட்சியில் "விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்" என்றும், காதலர் தினத்திருக்கு "காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்" என்று சொல்லும் இவர்கள் ஏனோ இந்துக்கள் பண்டிகை மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை.... இந்துக்கள் பண்டிகை வேண்டாம் என்றால் எதற்கு நிகழ்ச்சிகள் போட வேண்டும், நிகழ்ச்சிகள் முலம் வரும் பணம் வேண்டும் ஆனால் அதை இந்த பண்டிகை என்று சொல்ல கூடாது.....


With Regards.,
P.V. Praveen Sundar MCA, Mphil CS.,

@Praveen Sundar PV


அருமையான தகவல் ஐயா நன்றி

Anonymous
11:14

Nallave Solle irukeanga......... D M K enbadhan artham purinthathu....

Anonymous
13:01

"நாங்க நல்லவா; அடுத்தவா கெட்டவா"


Next Post Next Post Home
 
Back to Top