Store
  Store
  Store
  Store
  Store
  Store

அண்ணன் தம்பி சண்டைக்கு இப்போது நேரமில்லை


   பலநூற்றாண்டு காலமாக போராட்டத்தில் இருந்த ஒரு சிக்கலுக்கு 60 ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த தீர்ப்பு கிடைத்திருக்கிறது இது சரியான தீர்ப்பா? இல்லையா இதை சம்மந்தப்பட்ட இருதரப்பாரும் ஏற்பார்களா? மாட்டார்களா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் மிகச்சிக்கலான ஒரு பிரச்சனைக்கு பக்கம் சாராமல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் தராமல் நடுநிலமையோடு தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதிபதிகளுக்கு முதலில் நம்பாராட்டுதலை தெரிவிக்க வேண்டும்

   இந்துக்களும் முஸ்லிம்களும் உணர்வுப்பூர்வமாக கொந்தளித்து விடாமலும் நாட்டு அமைதிச்சூழலுக்கு எந்தவகையிலும் குந்தகம் ஏற்படாமலும் குறிப்பாக வரலாற்று ஆவணங்களையும் நம்பிக்கைகளையும் இணைத்து இந்துவாகவும் முஸ்லிமாகவும் தங்களைக் கருதாமல் சட்டத்திற்கு உட்பட்ட நீதிபதிகளாக மட்டுமே கருதி தீர்ப்பு வழங்கியிருக்கும் விதம் எவ்வளவு பாராட்டினாலும் போதாது காந்திப் பிறந்த மண்ணில் மட்டும்தான் இத்தகைய அற்புதங்கள் நடக்க இயலும் சின்னச்சின்ன குறைபாடுகள் இருந்தாலும் இந்தியா இன்னும் நியாய வழியில்தான் நடைபோடுகிறது என்பதற்கு இத்தீர்ப்பு நல்ல உதாரணம்

   இருப்பினும் அனுபவம் வாய்ந்த சில அறிவாளிகள் இந்தத் தீர்ப்பு அரசியல்மயமானது என்று கருதுகிறார்கள் அவர்களின் கூற்றையும் தவறுதலானது என சொல்லிவிட முடியாது இருந்தாலும் இது வெறும் ராமர்கோவில் பாபர் மசூதி சம்மந்தப்பட்ட விவகாரமாய் மட்டும் இருந்திருந்தால் அரசியல் நிகழ்வுகளை கருத்தில் கொள்ளாமல் சட்டத்தை மட்டும் மனதில் வைத்து தீர்வு சொல்லியிருக்கலாம் 

   நல்லதோ கெட்டதோ இந்த விஷயத்தில் அரசியலும் அரசியல்வாதிகளும் புகுந்து விட்டார்கள் அதனால் தீர்ப்பிலும் அரசியல் நெடி வீசத்தான் செய்யும் அதை தவிற்க முடியாது மேலும் தினமணி போன்ற உண்மையான நடுநிலை இதழ்கள் நிலத்தை மூன்று பேருக்கும் பிரித்துக் கொடுத்திருப்பதைப்பற்றி சொல்லும்போது கட்டப்பஞ்சாயத்துப் பாணியில் தீர்ப்பு இருப்பதாக சொல்லியிருந்தார்கள் 


   இதுசற்று மனவேதனையான வார்த்தை என்றாலும் உண்மைக்குப் புறம்பான வார்த்தை இல்லை வழக்கில் சம்மந்தப் பட்ட முத்தரப்பினடமும் நிலம் தங்களுக்குத்தான் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லாத போது இடத்தை அரசு வசம்தான் நியாயப்படி ஒப்படைத்திருக்க வேண்டும்

    இந்த வழக்கையே முன்னுதாரணமாய் கொண்டு நளை வேறு யாராவது குறும்புக்காரர்கள் மதிப்புமிக்க புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து இதே போன்ற தீர்ப்பை தங்களுக்கும் தரவேண்டும் என்று கேட்டால் கொடுத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது

   ஆனால் இந்தத்தீர்ப்பு அப்படிப்பட்ட செயல்களுக்கு வழிகோலிவிட கூடாது என்ற அக்கரையில் இத்தகைய கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் நாடு எதிர்நோக்கி நிற்கும் இக்கட்டான இந்த விஷயத்தில் நிலத்தை அரசாங்கத்திடப் ஒப்படைத்திருந்தால் நாம் எதிர் பார்ப்பது போல் அங்கு அறுங்காட்சியகமோ அமைதிப் பூங்காவோ ஏற்படாது 


   இன்று ஆட்சியிலுள்ள கட்சி தனக்கு சாதகமானதையும் நாளை ஆட்சிக்கு வருபவர்கள் தங்களுக்கு சாதகமானதையும்தான் செய்யத் துணிவார்களே தவிற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட விடமாட்டர்கள் பிறகு என்ன நடக்கும் பழையபடி வெட்டுக்குத்து நாடே ரத்தக்காடாகும் வேண்டுமா அந்நிலை?

    ஆகவே சண்டைக்காரர்கள் மூவருக்கும் பிரித்துக் கொடுத்ததுதான் சரியானது இருப்பினும் சில நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் இல்லை நாளை நீதிமன்றம் சொன்னதைப்போல நிலம் பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது என வைத்துக் கொள்வோம் வக்பு வாரியம் மசூதிகட்டும் இந்து அமைப்பினர் கோயில் கட்டுவர்கள்

    இருதரப்பாரும் வழிபாடு செய்ய ஆரம்பிக்கும் போது புதுப்பிரச்சனைகள் தலைதூக்கும் இவன் பூஜை செய்யும் போது அவன் பாங் சொல்லுவான் அவன் தொழுகை நடத்தும் போது இவன் மேளதாளம் தட்டுவான் இப்படி ஏற்படாது என யாரும் உறுதிசொல்ல முடியாது இந்தமாதிரி சிக்கல்கள் நாடு முழுவதுமே பல இடங்களில் நடப்பது அன்றாடங்கதை

   இந்தக்கதை மற்ற இடங்களில் நடந்தால் எதுவும் பெரிய விஷயமாகப் படாது அயோத்தியில் நடந்தால் கேட்கவா வேண்டும் ? வெறும் வாய்க்கு மெல்ல எதாவது கிடைத்தால் ஊரையே துண்டாட இரண்டு பக்கமும் ஏராளமான வல்லூருகள் காத்துக்கிடக் கின்றனவே

   எனவே அரசாங்கம் இத்தைகைய சில்லரை விஷயத்தையும் கவனத்தில் எடுத்து ஜாக்கிரதையாய் நடக்க வேண்டும் மேலும் இந்த தீர்ப்பை ஏற்காமல் இஸ்லாமிய அமைப்பு மேல் முறையீட்டுக்கு போகப் போகிறதாய் உடனே அறிவித்து விட்டார்கள் இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது அல்ல அது அவர்களின் உறிமையும் கூட

   ஆனால் ஒரு பிரச்சனையை முடிக்காமல் இழுத்துக் கொண்டே செல்வது நாட்டுக்கு நல்லதல்ல மூன்றில் ஒருபங்கு இடத்தைப் பெற்றுக் கொள்வதினால் நாட்டில் முஸ்லிம்களுக்கு உரிய எந்த உறிமையும் இல்லாது போய்விடப் போவதில்லை அவர்களை யாரும் தரக்குறைவாக கருதிவிடப்போவதும் இல்லை மாறாக இந்திய முஸ்லிம்களின் மதிப்பும் மரியாதையும் பலமடங்கு உலகில் உயரும்

   சிலர் கேட்கலாம் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்டது போல இந்துக்களுக்கு ஒரு பங்குதான் சொந்தம் என்று தீர்ப்பு சொன்னால் இந்துக்கள் அதை ஏற்றுக் கொண்டு மேல்முறையீட்டுக்கு போகாமல் இருந்து விடுவார்களா? என்று அப்போதும்  கூட நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள் சொல்லவேண்டும்

   நம்முன்னால் இப்போது நிற்பது இந்துக்கள் பெரியவர்களா முஸ்லிம்கள் பெரியவர்களா என்ற பிரச்சனை அல்ல உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைய எதிரிகள்  நம்மை வீழ்த்துவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை எதிர்கொள்ள ஒற்றுமையாக உழைக்க வேண்டிய நேரமிது அண்ணன் தம்பி  சண்டைக்கு இப்போது நேரமில்லை





Contact Form

Name

Email *

Message *