Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்


    னதை கடக்க வேண்டும்  மனதை கடக்க வேண்டும் என்றால் மனம் என்ன கடலா? ஆஞ்சநேயன் இலங்கையை அடைவதற்கு கடலை கடந்தது போல் நாமும் கடலைத் தாண்டிச் செல்ல வேண்டுமா என்று கேட்கலாம், மனதை கடத்தல் என்றால் மனதை இல்லாது செய்ய வேண்டும், மனதை ஏன் இல்லாது செய்ய வேண்டும்? அந்த மனது நம்மை என்ன செய்துவிட்டது என்று கேட்கலாம்,

    மனம் என்பது ஒரு மாயை, அதாவது இருப்பனவற்றை இல்லாதது போலவும். இல்லாததை இருப்பதாகவும் துக்கத்தை சந்தோஷமாகவும். சந்தோஷத்தை துக்கமாகவும் காட்டவல்லது, அதோடு மட்டுமல்ல இறைவன் நம்மை படைத்தபோது அவன் நமக்குத் தந்த சக்தியை நாம  உணராமல் உணர்ந்து விடாமல் சர்வ ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டு இருக்கின்ற ஒரு மிகப்பெரிய ராட்சசன் நமது மனம், எவ்வாறு என்று நீங்கள் கேட்கலாம், இறைவன் மனிதர்களை சிருஷ்டிப்பதோடு மட்டுமில்லாமல் மனிதர்களை தனக்கு இணையானவர்களாக படைத்தான்,    தன்னிடம் இருக்கின்ற ஒரு சக்தியை தவிர்த்து மற்ற எல்லா சக்தியையும் மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ளான், அதாவது புதிய உயிர்களை சிருஷ்டிக்கின்ற சக்தி. மேலும் அனைத்து விதமான சக்திகளும் நமக்குள் அடங்கியிருக்கிறது, நமக்குள் இருக்கின்ற அந்த மகா சக்தியை நாம் உணராமல் இருக்க அந்த மன மாயையை மனத்திரையை நாம் அறுத்துவிட்டோம் என்று சொன்னால் அனைத்து சக்திகளையும் நாம் பார்க்கலாம். பெறலாம் பயன்படுத்தலாம், இறைவனுக்கு இணையாக வாழலாம்,
    எப்படி சக்தி நமக்குள் இருக்கிறது, மனதை எப்படி நாம் அறுப்பது என்று கேட்கலாம், மனதை கடப்பது என்பது அவ்வளவு சமானியமான விஷயமல்ல, தாயுமானவர் தமது பாடலில் குறிப்பிட்டு இருப்பதைப்போல் அதாவது மதம் பிடித்த யானையை அடக்கி விடலாம். சிங்கத்தை புலியை மடக்கி வசப்படுத்தி நமது விருப்பம் போல் ஆட்டுவிக்கலாம், சீறிவரும் பாம்பை கட்டுப்படுத்தலாம், இவையெல்லாம் செய்யலாம் ஆனால் சிந்தையை அடக்கி சும்மா (அமைதியாக) இருக்க நம்மால் முடியாது,

    எண்ணங்களில் கூட்டு வடிவமே மனது, அந்த எண்ணங்களை அழித்துவிட்டோமானால் மனதை அறுத்துவிடலாம், அதற்கு நமது 6 ஆதாரத்தை முறைப்படி இயக்க துவங்கினால் அறுத்தெறிவது என்பது மிகச் சுலபம்,

    பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மிக அற்புதமாக மனதை பற்றி கூறியுள்ளார், மனதை அடக்குவது என்பது அசாத்தியமான ஒன்று கடுமையான பயிற்சிகளின் மூலம் அந்த மனதை அடக்கி  விடலாம் என்று சொல்கிறார், ஆறு ஆதாரங்களில் இருக்கின்ற சக்தியை முறைப்படி அப்பியாசப்படுத்தி பழகிக் கொண்டும் அந்த ஆறு ஆதாரங்களில் இருக்கிற சக்தியை மேலே எழுப்பி பிரம்ம சக்கரத்தில் சக்தியை நிறுத்திவிட்டால் நம்மால் சாதிக்க முடியாத விஷயங்கள் என்று எதுவுமே இல்லை,
    அதாவது அஷ்டமாசித்துகள் என்று சொல்வார்கள் அல்லவா  அப்படிப்பட்ட அஷ்டமா சித்துக்களையும் கடந்து இறை நிலையோடு சற்றேக்குறைய இறைவனுக்கு சமமாக நாம் இருக்கலாம்,

    அப்படி இறைவனுக்கு சமமாக இருந்தவர்கள் தான் சப்த ரிஷிகள், அந்த சப்த ரிஷிகளில் மனதோடு பெரும் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர் விஸ்வாமித்ர மகரிஷி, இவருடைய தவசக்திக்கு இணையான தவசக்தியை நாம் பார்க்க முடியாது, அதைப்போல் மனது எந்தெந்த விஷயங்களில் நமது கட்டுக்குள் அகப்படாமல் மீறும்போது என்ன ஏற்படும் என்பதை இவரது வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு விளக்குகிறது, ஆசை. கோபம் காமம் போன்றவை மனதை எந்தெந்த வகையில் கீழ்நிலைக்கு கொண்டுவந்து விடும் என்றும் அதை எந்தெந்த நிலையில் நேர்நிலைப்படுத்தலாம் என்பதை விஸ்மாவமித்ர மகரிஷியின் வாழ்க்கையில் இருந்து நாம் அறியலாம்,

    அவர் மனதை அடக்கியபின் அதாவது மனதை அறுத்தெறிந்து ஆத்ம தரிசனத்தை பெற்றபின் அவருடைய சாதனைகள் என்று நாம் பார்த்தால் இன்றளவும் உலகில் நிலைத்து இருக்கக்கூடிய மாபெரும் சாதனைகளை அவர் செய்து இருக்கிறார், ஆன்மீகத்தில் ஆன்மீக வழியில் மிக கீழான நிலையில் இருப்வன் கூட மிக மேலான நிலைக்கு வந்துவிட ஏதுவாக இருக்கின்ற மந்திரங்களில் மகா உன்னதமான தலைசிறந்த. பிரம்ம மந்திரமான காயத்ரி மந்திரத்தை நமக்கு தந்தவர் விஸ்வாமித்ர மகரிஷி,

    அந்த காயத்திரி மந்திரத்தின் சொல். அசைவுகளை உணர்ந்தவர்கள்தான் விஸ்வாமித்ர மகரிஷியின் தவவலிமையை முழுமையாக உணர்ந்து கொள்ள இயலும், விஸ்வாமித்ர மகரிஷி மந்திரங்களை மட்டும் நமக்கு தரவில்லை தான் மட்டும் உயர்ந்தால் போதாதது, தனக்கு பின்னால் வருகின்ற சந்ததியினரும் உயர வேண்டும் என்பதற்காக அவர் நமக்கு காயத்ரி மந்திரத்தை தந்திருக்கிறார்,

    இந்த காயத்ரி மந்திரத்தை பயன்படுத்தினாலே செயற்கரிய சாதனைகளை நாம் செய்யலாம், அவர் தமது தவ சக்தியால் ஒரு புதிய சொர்க்கத்தையே நிர்மாணித்தவர், புதிய தேவாதி. தேவர்களை உருவாக்கியவர், புதிய இந்திரனையே நிர்மானம் செய்தவர், அப்பேற்பட்ட சக்தியை ஒரு சத்ரிய மன்னனாக கௌசீக சக்கரவர்த்தி விசுவாமித்திரனாக எப்படி மாறி செய்ய முடிந்தது என்றால் அவர் மனதை கடந்து விட்டதனால் தான்  புராண காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் ரிஷிகளும். இன்று நம்மோடு வாழ்ந்து இருக்கிற பல சித்த புருஷர்கள் அனைவருமே மனதை உணர்ந்ததால் தான் பல சாதனைகளை நிகழ்த்த முடிந்தது,
    இமயமலைச் சாரலில் இருக்கின்ற திபெத் லாமாக்கள் இன்று நம் கண்ணெதிரே மனதை கடந்துவிட்ட நிலையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள், நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேரு திபெத் பகுதிக்கு விஜயம் செய்த போது ஒரு லாமா தனது மனோச்தியால் ஜவஹர்லால் நேரு அவர்களின் தலைக்கு மேல் மேகக் கூட்டங்களை வரவழைத்து அவருக்கு மட்டும் மழை பொழிய வைத்து காண்பித்தார், இன்னும் எத்தனையோ விஷயங்களை மனதை கடந்தவர்கள் செய்திருக்கிறார்கள்,
  
    நமது தமிழ்நாட்டில் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சுப்பையா புலவர் என்று ஒருவர் இருந்தார், அவர் தரையிலே காலை நீட்டிப் படுத்துக்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்வதைப் போல கண்களை மூடிக்கொள்வார், அவரது வலது கையில் நீளமாக அங்கவஸ்திரத்தை பிடித்து அதன் மேல் முனையில் ஒரு முடிச்சு போட்டு வைத்திருப்பார், அந்த அங்கவஸ்திரம் பார்ப்பதற்கு தடியைப் போல் விறைப்பாக இருக்கும், அதை அந்த புலவர் ஆதாரமாக பிடித்துக் கொள்வார், சிறிது நேரத்திற்கெல்லாம் சுப்பையா புலவர் படுத்திருந்த நிலையிலேயே மேலே செல்வார், இப்படி மேலே சென்று தரைமட்டத்தில் இருந்து சுமார் 4 அடி உயரத்தில் கால்களை நீட்டி இடது கையை தலைக்கு வைத்துக் கொண்டு கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் மிதந்து கொண்டு இருப்பார், இதை அறிந்த அப்போதைய பிரிட்டிஷ்காரர் புலவர் எப்படி மிதக்கிறார் என்பதை அறிய வந்தார்,

    புலவர் கண்ணுக்கு தெரியாத பல கம்பிகளை கட்டிக்கொண்டு அதன் மூலம் மேலே மிதக்கிறாறோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் எத்தனையோ சோதனைகளை செய்தார், அப்படி எல்லாம் எதுவும் இல்லை புலவர் வெறுமனே அந்தரத்தில் மிதந்து கொண்டு இருந்தார், இதை அந்த பிரிட்டிஷ்காரர் புகைப்படமாகவும் எடுத்து இருக்கிறார், அந்த புகைப்படத்தை நானும் பார்த்து இருக்கிறேன், இப்படி நம் நாட்டில் மட்டுமல்ல பல வெளிநாடுகளிலும் பலர் இருக்கின்றனர்,

    அந்தரத்தில் மிதப்பது மட்டுமல்ல தமது அதிசய மனோ சக்தியால் ஓடுகின்ற விமானத்தையே இழுத்து நிறுத்திய மனிதர்கள் பூமியில் இருந்திருக்கிறார்கள், அவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யூரிகெல்லர், இவர் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்தவர், இவர் தான் பயணம் செய்ய வேண்டிய விமானம் முன்கூட்டியே பறந்து விடாமல் இருக்க தனது மனோ சக்தியை பயன்படுத்தி விமானத்தை பறக்க விடாமல் செய்தார், அதைப்போல் டி,வி,கேமராக்கள் வழியாக தனது கண்பார்வையைச் செலுத்தி எந்த இடத்தில் நேரத்தில் அந்த நிகழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்ததோ அந்தந்த வீட்டில் இருந்த பல இரும்பு கம்பிகள். போன்றவைகளை உருகிபோகவும் செய்திருக்கிறார், சிறிது வயதிலே தமது கைகடிகாரத்தின் முள்ளை தமது கண் பார்வையாலேயே அதிவேகமாக சுழல வைத்திருக்கிறார் இப்படி அதீத சக்திகளை யூரிகெல்லர் பெற்றிருக்கிறார், இவைவெல்லாம் இவர்களுக்கு எப்படி வருகின்றது என்றால் மனதை கடந்த நிலையினால்தான்,

  அதுமட்டுமல்ல நாஸ்டர் டாம் என்ற தீர்க்க தரிசியை நீங்கள் அறிவீர்கள், எதிர்காலத்தில் நடக்கக் கூடிய பல விஷயங்களை முன் கூட்டியே சொல்லியிருப்பவர் நாஸ்டர் டாம் என்று நமக்குத் தெரியும், தற்பொழுது அமெரிக்க நகரங்களில் விமானம் கட்டடங்கள் மீது மோதியதை இரண்டு மிகப்பெரிய தூண்கள் கீழே சரியும் என்று கூறியிருக்கிறார், அவர் காலமாகி ஒரு நூற்றாண்டுக்குப் பின் அவருடைய கல்லறையை சிலர் தோண்டினார்கள்,
     ஒரு நூற்றாண்டு சென்று விட்டது என்று சொன்னால் கல்லறைக்குள் வெறும் எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சியிருக்கும், அந்த எலும்புக் கூட்டின் மார்பில் ஒரு உலோகத்தகடு இருந்தது, அவர்கள் அந்த தகட்டை தொட்டவுடன் அது கீழே விழுந்தது, அதை தோண்டியவர்களில் ஒருவர் நாஸ்டர்டாமின் மண்டை ஓட்டில் மதுவை ஊற்றி குடித்தால் தனக்கும் தீர்க்கதரிசன சக்தி கிடைக்கும் என்று கூறிக்கொண்டே அவர் மண்டை ஓட்டில் மதுவை ஊற்றி கண் துவாரங்கள் வழியாக உறிஞ்சி குடிக்க முற்பட்டான், அப்படி அவன் செய்ய ஆரம்பிக்கும் முன்பு எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு அவன் மீது பாய்ந்து துடிதுடிக்க விழுந்து இறந்தான், அதன் பின்பு அந்த உலோக தகட்டை எடுத்த படித்தபோது அதில் என் எலும்புக்கூடை முதலில் தொடுபவன் எவனோ அவன் உடனே சாவான் என்று எழுதப்பட்டு இருந்தது,

    நாஸ்டர்டாமை போன்று நமது தமிழ்நாட்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய மகான் ஐயா வைகுண்டசுவாமி தமது அகிலத்திரட்டு என்ற புத்தகத்தில் நமது இந்தியாவில் நடக்க கூடிய ஆட்சி மாற்றங்கள். இந்தியாவின் அரசியல் தலைவர்களின் எதிர்காலம். அவர்களது வளர்ச்சிகள் மற்றும் இந்தியா உலக அரங்கில் எவ்வப்போது எப்படி எப்படி எல்லாம் பேசப்படும். எந்தெந்த காலகட்டங்களில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாகும், எத்தகைய காலகட்டங்களில் தலை நிமிர்ந்து நிற்கும் என்பதை மிக எளிய தமிழ் வடிவில் சில பரிபாஷைகளில் மிக அற்புதமாக கூறி இருப்பதை அகிலத்திரட்டு என்ற நூலை படித்தவர்கள் அறிவார்கள்,
    அகிலத்திரட்டு புத்தகத்தில் இனி வருகின்ற காலங்களை பற்றி வைகுண்ட சுவாமி சொல்லியிருப்பதை நாம் படித்தோம் என்று சொன்னால் நமக்கு பெரும் வியப்பாக இருக்கும், கடந்த காலத்தில் நேருவுக்கு பின் வந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் அயல்நாட்டிலே மரிப்பார் என்றும்  அவருக்குப் பின்னால் பெண் சிங்கம் ஒன்று அரசாளும் என்றும் அதாவது இந்திரா காந்தி அம்மையாரின் அரசாட்சி பற்றியும் காமராஜர் அவர்களின் செயல்திறன் இந்தியா முழுக்க எந்த ரீதியில் எதிரொலிக்கும் என்றும் அவருடைய மறைவைப் பற்றியும் பல விஷயங்களை கூறியிருக்கிறார்,
 
  ஸ்ரீ ராமானுஜர் பூமியில் இளைய மகன் சதையும். ரத்தமும் சிதறிய பின் தெற்கில் உள்ள மனித சிங்கம் நாட்டை ஆளும் என்று கூறியுள்ளார், அதாவது ராஜிவ்காந்தியின் மரணத்தை பற்றியும் நரசிம்மராவின் பதவிப் பிரமாணத்தை பற்றி இவ்வாறு வைகுண்ட சுவாமி கூறுகிறார்,  மேலும் பிரம்மச்சாரி ஒருவரின் ஆட்சிக்கு பின் மக்களிடையே மௌனப் புரட்சி ஏற்பட்டு யுகப்புருஷன் போல் ஒருவன் தலைமையேற்று இந்திய சாம்ராஜ்ஜியத்தை உலக அரங்கில் பொருளாதாரத்திலும் ஆயுத பலத்திலும் தன்னிகரற்று விளங்கச் செய்வான் என்றும் கூறுகிறார்,
      இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து இப்போதைய வல்லரசுகளை புறம் தள்ளி உலகின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார், சுவாமியின் கருத்துப்படி இவையெல்லாம் ஒரு 10 ஆண்டுக்குள் நடந்துவிடும், தமிழகத்தில் ஒரு கட்சியில் இளம் தலைமுறையில் தலைமை பொறுப்பால்  கட்சி உடைந்து தற்போதைய அரசியலாளர்களின் வாய்வீச்சும். கைவீச்சும் ஓய்ந்து பெரும் மாறுதல்கள் ஆட்சியிலும். வாழ்க்கையிலும் ஏற்படும், கலைத்துறையின் தாக்கம் வருங்காலத்தில் இருக்காது எனவும் மக்கள் பண்பாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சினிமா உருமாறும் என்றும் கூறியுள்ளார்,      

   மனதை கடந்த ஞானிகளின் வாக்குகள் என்றும் பொய்ப்பதில்லை, நீங்களும் மனதை கடக்க முயற்சித்து வெற்றி பெற்றால் உங்கள் வாக்கும் சத்திய வாக்காக மாறும் சமானியமாக இருக்கும் நீங்களும் சரீரத்தில் பெரும் மாறுதலை காண்பீர்கள், அதற்கு உங்களுக்கு தேவை அயராத உழைப்பு. கடினமுயற்சி. சோர்வடையாத மனம்,Contact Form

Name

Email *

Message *