Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாடுபிடிக்கும் சதிகூட்டம்


    சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு இருக்கும் வரையில் பனிப்போர் என்ற வார்த்தையை நாம் மிக அதிகமான முறை கேட்டிருக்கிறோம்.  எழுதியும் இருக்கிறோம்.  இந்தியாவாக இருக்கட்டும் நமது தமிழகமாக இருக்கட்டும் பனிப்போர் என்ற விஷயம் நமக்கு புதுமையானது மட்டுமல்ல விந்தையானதும் கூட.  இன்று அந்த வார்த்தை நம்மிடமிருந்து ஏறக்குறைய மறைந்துவிட்டது.  இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு பனிப்போர் என்ற விஷயம் வரலாற்று புத்தகங்களில் மட்டுமே படிக்கக் கூடியதாகி விட்டது.  ஆனால் அதை அனுபவித்தவர்களுக்கு அதன் உண்மையானப் பதட்டமும் பயமும் என்னவென்று தெரியும்.  இன்றைய சூழலில் பனிப்போர் அபாயத்தைப் போல பன்மடங்கு அபாயமாக சிறப்பு பொருளாதார மண்டலம் வந்துள்ளது.  இந்த வார்த்தையை அடிக்கடி உச்சரிக்கும் நாம் அதன் அபாயத்தை உணர்ந்து இருக்கிறோமா?

  தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்பதெல்லாம் நமது நாட்டில் 1990-முதலே துவங்கிவிட்டது எனலாம்.  1995-லிருந்து உலக  வர்த்தக மையம் தனது பணிகளை நமது நாட்டில் ஆரம்பித்துவிட்டது.  இப்படி ஆரம்பித்த காலத்திலிருந்து தான் சிறப்பு பொருளாதார மண்டலம் முன்னுக்கு நகர்த்தப்பட ஆரம்பித்தது.  இதற்கு நமது தலைவர்கள் சொன்ன விளக்கம் இந்த மண்டலங்களுக்காக அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும், ஏற்றுமதி உயரும்.  பாப்பாரபட்டியில் செய்கின்ற கீரவடை கூட பாரிஸ் நகர வீதயிலே விற்க முடியும்.  நமது குப்பனும்  சுப்பனும் பென்ஸ் காரில் தான் பறப்பார்கள் என்றுயெல்லாம் கற்பனை நயம் சொட்ட சொட்ட அழகான கவிதைகள் பாடப்பட்டன.
    நம்ம ஊர் கோபாலசாமி  நாயக்கரும் இந்தியா வல்லரசாக போவதாக திண்னையில் இருந்தே கனவு காண ஆரம்பித்தார்.  உண்மையில் சிறப்பு பொருளாதார மண்டலம் என்றால் என்ன?  கேட்பதற்கு நல்ல அழகான வார்ததையாக இருக்கிறதே என்று நம்மில் பலர் நினைக்கலாம்.  அவர்களுக்காக சின்ன விளக்கத்தை கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  உங்கள் தெருமுனையின் ஓரத்தில் ஒரு பாட்டி பெட்டிகடை வைத்திருக்கிறார்களா?  அவர்கள் கடையில் சிறியதாகவோ, பெரியதாகவோ தராசு இருக்கிறதா? அந்த தராசை வருடாவருடம் அதிகாகளிடம் காட்டி முத்திரை போட்டு கொள்ள வேண்டும்.  தவறினால் அபராதம் கட்ட வேண்டும்.  இந்த அபராதம் எந்த வகையில் வசூலிக்கப்படுகிறது என்றால் இந்திய வணிக சட்டத்தின் கீழே தான் என்பதை புரிந்து கொள்ளவும்.

  ஆக வெற்றிலை பாக்கு கடையிலிருந்து விமானம் ஓட்டும் நிறுவனம் வரை வணிக சட்டம் பாயும்.  நம்ம ஊர் போர்வை, கொத்தமல்லி எதுவாகயிருந்தாலும் ஏற்றுமதிக்காக எத்தனையோ கட்டுபாட்டு சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.  இதில் பல தேவையற்றதும், நடைமுறை ஒழுங்கினங்களை அதிகரிப்பதுமே ஆகும்.  ஆனால் அந்நிய முதலாளிகள் அல்லது நம்மூர் உலக பணக்காரர்கள் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆரம்பிக்க வேண்டுமானால் இந்த தொல்லை பிடித்த சட்டங்கள் எதுவும் அவர்களை நெருங்காது.  அதாவது 1000 ரூபாய் முதலீட்டில் வியாபாரம் செய்பவன் கழுத்தை நெறிப்பதும் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்தவனின் பாதங்களில் மலர் சொறிவதும், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலையாய பணி.


   நம்ம கோவிந்தசாமி கவுண்டர் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து தனக்கு சொந்தமான 10 ஏக்கரா பூமியில் பயிர் செய்து பிழைப்பு நடத்தி கொண்டு வருகிறார், என்று வைத்து கொள்ளுங்கள்.  நம்ம சிறப்பு முதலாலியின் கண்ணில் அந்த நிலம் பட்டுவிட்டால் அது அவருக்கு பிடித்துவிட்டால் அரசாங்கத்திடம் தெரிவித்துவிடுவார்.  உடனே அரசாங்க பிரதிநிதியொருவர் நமது கவுண்டர் வீட்டு கூடத்தில் நாற்காலியில் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்து விடுவார்.  பத்து பேருக்கு சோறு போட்டு குடும்பங்களை காப்பாற்றும் கவுண்டர் கைகட்டி நிற்பார்.  உங்கள் இடத்தை ஒரு பொது வேலைக்காக அரசாங்கம் எடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டது.  ஏக்கருக்கு 5000 ரூபாய் வீதம் பத்து ஏக்கருக்கு பணத்தை வாங்கி கொண்டு நாளை காலையில் வந்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு போங்கள் என்பார் அதிகாரி  பஞ்சாயத்து பேசும் கவுண்டர் வாய் திறக்க கூடாது.  தப்பி  தவறி திறந்து விட்டால் அரசாங்க பணியாளரை வேலை செய்யவிடாமல் தடுத்தார் என்று போலிஸ் ஸ்டேஷன் கூட்டி போய் லாடம் கட்டி விடுவார்கள்.  ஐம்பது லட்சம் மதிப்புள்ள பூமியை ஐம்பதாயிர ரூபாய்கு கேட்டாலும் கொடுக்க வேண்டும்.  வெறும் 5000 ரூபாய்க்கு கேட்டாலும் கொடுத்தே ஆக வேண்டும்.  இது கவுண்டரின் தலையெழுத்து. 

   இத்தகைய அருமையான திட்டம் உலகில் முதல் முறையாக யாருடைய மூளையில் உதித்தது என்பதை கிளறி பார்க்க வேண்டும்.  இந்த அருமையான திட்டத்தை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று எந்த மகானுபவருக்கு தோன்றியது என்பதை அறிந்து கொண்டாலே திட்டத்தின் உள் அர்த்தம் பளிச்சென்று தெரிந்துவிடும்.  எனது செல்லப்பிள்ளை என்று கலைஞரால் கலைஞரின் மூளை என்று தமிழக மக்களாலும் அழைக்கப்படும் அமரர் முரசொலி மாறனுக்கு தான் தோன்றியது.    தேசிய ஐனநாயக கூட்டனி ஆட்சிலிருந்த போது இதைபற்றி சிறிது விவாதம் தான் மக்களவையில் நடந்தது.  ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சிக்கு வந்ததும் 2006-லிருந்து அதிகாரப் பூர்வமாக வழி திறந்து விடப்பட்டுவிட்டது.  இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் நாட்டின் எந்த பகுதியில் ஆரம்பித்தாலும் அந்த மாநிலத்தின் வரிவிதிப்பு, தொழிலாளர் சட்டம் எதுவுமே அதை பாதிக்காது.  அல்லது கட்டுபடுத்தாது.  சிறப்பு பொருளாதார மண்டலத்தை வளர செய்யும் தொழில் அல்லது தனிநபர் யாராகயிருந்தாலும் அவர்களுக்கு விற்பனைவரி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரிகள்,  சேவை வரி என்று எதுவுமே பதினைந்து ஆண்டுகளுக்கு கிடையாது.  நிறுவனத்திற்கான முதலீடு 100% கூட அந்நிய நாடுகளில் இருந்து கொண்டு வரலாம்.  இது மட்டுமல்ல அந்த பகுதியில் தண்ணீர், மின்சாரம், பாதுகாப்பு சாப்பிட, குடிக்க, தங்க என்று எந்தவிதமான வளர்ச்சி பணிகளையும் மண்டல முதலாளிகள் தங்கள் விருப்பப்படி அமைத்து கொள்ளலாம்.

  இன்னும் ஏராளமான சலுகைகளை அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.  இந்த சலுகைகளையெல்லாம் கொண்டு வளரும் பொருளாதார மண்டலத்தின் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் விலை உலக சந்தை அளவில் ஒப்பிட்டால் குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  பொருளாதார சித்தாந்தத்தின் படி சரியானது தான்.  ஆனால் நடைமுறையில் இந்த திட்டத்தை செயல்படுத்திய, செயல்படுத்தி கொண்டிருக்கும் நாடுகளை பார்க்கும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது.   ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருவாயை விட மிக அதிகமான பணம் கச்சா பொருளை இறக்குமதி செய்வதில் செலவாகி விடுகிறது.  வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட லாபம், வரிவிலக்கால் ஏற்பட்ட நஷ்டம் இரண்டையும் ஒப்பிடும் போது இழப்பே அதிகமாக இருக்கிறது.  உதாரணமாக 2007-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம்  ஆண்டுக்கு 250 மில்லியன் டாலர் வருமானம் வந்தது.  ஆனால் இறக்குமதி மூலம் 170-மில்லியன் டாலர் செலவாகி விட்டது.  மீதமுள்ள 80 மில்லியன் டாலரும், நிர்வாக செலவுகளுக்கு சரியாகி விட்டது.  ஆக மொத்தம் இலங்கை அரசாங்கத்துக்கு வருவாய் என்பது பல கோடி பூஜ்ஜியங்களே ஆகும்.

   சரி லாபம் கிடைக்கிறதோ இல்லையோ அந்நியர்களுக்கு வால் பிடித்து பழகப்பட்ட ஆட்சியாளர்கள் அதை தொடர்ந்து செய்து தொலைக்கட்டும் என்று விட்டுவிடலாம் ஆனால் நமது அரசு பொருளாதார மண்டலத்தின் முகவுரையை படிக்கும் போது ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டது. 

  அதாவது இந்த மண்டலம் வரி வியாபாரம் என்ற பார்வையில் முழுக்க முழுக்க அந்நிய நாட்டு அமைப்பாகவே கருதப்படும்.  இந்த தொழில் நகரத்திற்கு அதனுடைய தன்னாட்சியுள்ள நகர குழுமத்தின் ஆட்சியே இருக்கும் என்று கூறியுள்ளது.  அதாவது மதுரையில் அந்த மண்டலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  மதுரை நகர மன்ற தலைவருக்கோ அல்லது குறிப்பிட்ட பகுதியின் சட்டமன்ற  உறுப்பினருக்கோ அல்லது மதுரை மாவட்ட ஆட்சி தலைவருக்கோ, ஏன் மாநில முதலமைச்சருக்கோ கூட அந்த காம் பவுண்டிற்குள் அதிகாரம் கிடையாது     அந்த பகுதியில் இந்திய ஜனாதிபதியை விட மண்டல நிர்வாகிக்கு அதிக அதிகாரம் இருக்கும்.  அதனுள் வாழும் மக்களுக்கு தனி குடியுரிமை அட்டைகள் கூட வழங்கப்படும்.  இன்னும் கொஞ்சக் காலம் போனால் தனிக்கொடி, தனி தேசியகீதம், தனி ரூபாய் நோட்டுயென அதிகாரம் கொடுத்தாலும் கொடுக்கப்பட்டு விடலாம்.  நமது தாத்தாமார்கள் எல்லாம் இந்தியா என்பது 567 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்ததாக எழுதி வைத்திருக்கிறார்கள்.  ராமநாதபுர சமஸ்தானம், ஐதராபாத் சமஸ்தானம், திருவாங்கூர் சமஸ்தானம் என்று எல்லாம் கூட நாமே கேள்வி பட்டுயிருக்கிறோம்.  வருங்காலத்தில் இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இப்படி தனித்தனி சமஸ்தானங்களாக ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

  அதனால் அப்படியென்ன பாதிப்பு வந்துவிட போகிறது என்று கேட்பவர்கள் கடந்த கால வரலாற்றை சிறிது யோசித்து பார்க்க வேண்டும். வெள்ளைகாரர்களின் கிழக்கிந்திய கம்பெனி இப்படிப்பட்ட மண்டலங்களை தான் ஆரம்ப நாட்களில் நமது நாட்டில் ஆரம்பித்தது.  பிறகு படைகளை நிறுத்த அனுமதி பெற்றது.  மெதுவாக மன்னர்களிடத்தில் சச்சரவுகளை மூட்டி விட்டு நாடு முழுவதையுமே தன் வசப்படுத்தி கொண்டது.  இது என்னவோ சந்திர குப்த மௌரியர் காலத்தில் நடந்தது இல்லை, 63 வருடங்களுக்கு முன்பு வரையிலும் நாம் கண்ட அலங்கோலம் தான்.  கிழக்கிந்திய கம்பெனியை விட இந்த மண்டலங்களை நிறுவும் பன்னாட்டு நிறுவனங்கள் சக்தி வாய்ந்தவைகள், ஆபத்தானவைகள்.

சிறப்பு பொருளாதார மண்டலத்தை வரவேற்கும் சிலர் அவற்றால் பல நன்மைகள் ஏற்படும்.  மிக குறிப்பாக வேலை வாய்ப்புகள் பெருகும்.  உள் கட்டமைப்பு வசதிக்காக இரும்பு, எஃகு, சிமெண்ட் முதலியவைகள் அபரிதமாக தேவைப்படும்.  அதனால் அதன் உற்பத்தியும் அதிகக்கும்.  என்று சொல்லப்படுகிறது.  ஆனால் நிச்சயம் இது உண்மையில்லை.  அயல்நாட்டிலிருந்து கோடிகணக்கான பணத்தை கொண்டு வந்து இங்கு அவர்கள் ரைஸ்மில் ஆரம்பிக்கப் போவதில்லை.

   நவீன மயமான தொழில் கூடங்களையே நிறுவுவார்கள்.  அந்த நவீன தொழில் நுட்பத்தை உள்ளூர் தொழிளார்கள் நிச்சயம் அறிந்து வைத்திருக்க மாட்டார்கள்.  அதற்கென்று பயிற்சி பெற்ற நபர்கள் அயல் நாடுகளிலிருந்தே வரவைக்கப்படுவார்கள்.  வேண்டுமென்றால் உள்ளூர் தொழிலாளர்களுக்கு எடுபிடி வேலைகள் கிடைக்கும்.  அதிகபட்சமாக குமஸ்தா வேலை வரை எதிர்பார்க்கலாம்.  


   மற்றப்படி நமது அமைச்சர்கள் கூறுவது போல் வேலைவாய்ப்பு வெள்ளமென பெருகிடாது.  அரசாங்கம் கூறும் கணக்கை ஏற்றுக் கொண்டாலும் கூட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்க இதுவரை 3,35,000 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டுள்ளது.  இதில் அதிகபட்சமாக 5,00,000 பேருக்கு வேலை கிடைக்கலாம்.  அதுவும் உடனடியாக அல்ல.  ஐந்து வருடங்களில் படிப்படியாக அது நிகழக்கூடும்.  ஆனால் இவ்வளவு பரந்த விவசாய நிலம் கையகபடுத்தப்படும் போது ஒரு ஏக்கர் நிலத்தில் ஒருவர் வேலை செய்து பிழைக்கிறார் என்று வைத்துக் கொண்டால் கூட 3,35,000 குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடுகிறது.  ஆக எந்த வழியில் கணக்கு போட்டாலும் இந்த மண்டலங்களால் உள்நாட்டுக்கு எந்தவித பயனும் இல்லை.  ஒரு சில மேல்தட்டு மக்கள் பயனடைவதற்காக பல்லாயிர கணக்கான குடும்பங்களை பலி கொடுக்க வேண்டிய சூழல் வரும்.

   லட்ச கணக்கான ஏக்கர்கள் தொழிற்சாலைக்காக எடுத்து கொள்ளப்படும் போது அந்த நிலங்களில் நடைபெற்று கொண்டிருந்த வேளாண்மை முற்றிலுமாக அழிந்துவிடும்.  இதனால் உணவு உற்பத்தி பாதிப்படைவது மட்டுமல்லாது நிலத்தடி நீர்வளமும் முற்றிலுமாக அழிந்துவிடும்.  இந்த சுமையை வேறு நாடு தாங்க வேண்டும்.      சீனாவில் இன்று நடந்து கொண்டிருப்பது இது தான்.  1970-லிருந்து துவங்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல நிகழ்வுகளால் சீனாவின் இயற்கை வளம் ஏறக்குறைய செத்து விட்டது.  பல இயற்கை அழிவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை அங்குள்ளது.  எவ்வளவு தான் சர்வதிகார முறையில் மக்களின் எண்ணங்களை அடக்கி வைத்தாலும் ஒரு காலத்தில் பொறுமையை மீறி பொங்கியெழ செய்துவிடும்.  நமது நாட்டிலும் அப்படி நிகழாது என்று சொல்ல முடியாது.  இரவு பகலாக தங்களை பற்றிய சிந்திக்கின்ற தலைவர்கள் அரை மணி நேரமாவது மக்களை பற்றி சிந்திக்க துவங்கினால் வருங்காலத்தில் தப்புவார்கள்.  இல்லையென்றால்…?Contact Form

Name

Email *

Message *