Store
  Store
  Store
  Store
  Store
  Store

அறிவில் குறைந்தவர்களா இந்தியர்கள்...?


    ரசாங்கம் என்பது எப்படி தோன்றியது என்று நமக்கு தெரியும்.  ஆனால் அரசாங்கத்தை நடைமுறைபடுத்துவது எப்படி என்ற விஷயம் நம்மில் பலருக்கு தெரியாது.  அதாவது அரசாங்க வரலாறு என்பது வேறு. அரசாங்க நிர்வாகவியல் என்பது வேறு,  பொதுவாக இன்று நடைமுறையில் இருக்கின்ற அரசாங்க தத்துவங்கள் ஜனநாயகம் சர்வதிகாரம், முடியாட்சி ஆகிய மூன்று வகைதான்

    நம்மில் பலர் அரசாங்கத்தை நடைமுறைபடுத்தும் சட்டதிட்டங்கள், உள் மற்றும் வெளிபுற நடைமுறைகள் அயல்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தவைகள் தான் இந்தியர்களாகிய நமக்கு முறைப்படுத்தப்பட்ட அரசாங்கத்தை பற்றி எதுவுமே தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  இந்த சிந்தனைவுடைய மக்கள் நம் நாட்டில் மட்டுமல்ல எங்கெல்லாம் பிரிட்டிஸ் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டிருந்ததோ அங்கெல்லாம் இத்தகைய சிந்தனைகள் இன்றும் இருக்கின்றன.  வெள்ளையாதிக்கம் ஒரு நாட்டை பிடித்தவுடன் செய்யும் முதல் வேலை நீ முட்டாள் உனக்கு ஒன்றும் தெரியாது. உன்னை வாழவைக்க வந்திருக்கும் ரட்சகன் நான்தான் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு மக்களின் அடிமை புத்தியை வளர்ப்பது தான்.


    நாடு விடுதலை பெறுவதற்கு முன்னே மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பாட புத்தகங்களை எடுத்து படித்தாலே விஷயம் மிக தெளிவாக தெரிந்துவிடும்.  வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்திய நாடெங்கிலும் பிச்சைகாரர்களும், களை கூத்தாடிகளும் நிறைந்திருந்தனர்.  தினம் தினம் பட்டினியால் மக்கள் செத்து மடிந்து கொண்டிருந்தனர்.  நரமாமிசம் புசிப்பவர்கள் நாடு முழுவதும் நடமாடினர்.  இத்தகைய அவல நிலையை கண்டு மனம் கலங்கிய இங்கிலாந்து அரசியாரும் அரசகுல பிரபுக்களும் இந்தியாவின் மீது கருணை கொண்டு ஆட்சி பொறுப்பை எடுத்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள் என்ற ரீதியில் தான் பாடங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.

    இத்தகைய பாடங்களை படித்து வளரும் குழந்தைகள் சொந்த நாட்டை நேசிக்கும் மனோ பாங்கை எப்படி பெறுவார்கள்.  அன்று பிரிட்டிஸார் விதைத்த விஷவிதை இன்றும் பலரின் மனதில் ஆங்கில வழி போதைனையால் தொடர்ந்து நடந்து வருகிறது.  ஏகாதிபத்ய அரசாங்கம் என்பது தனது அதிகாரத்தை  நிலை நிறுத்திக் கொள்ள மிக முக்கியமாக குழந்தைகளை குறிவைத்து முளைச்சலவை செய்வார்கள்.  அப்படி செய்யப்பட்டால் மட்டும் தான் அரசாங்கங்களின் உண்மைமுகம் மறைந்து போலி முகத்தை நிஜமென்று நம்புவார்கள்.


    அரசாங்கத்தின் போலி கொள்கைகளை ஆதார பூர்வமானது என்று நிருபிப்பதற்கு செய்றகையான ஆவணங்களும் தயாரிக்கப்படும் வரலாற்று நிகழ்வுகளில் குளறுபடிகளும் உருவாக்கப்படும்.  அரசாங்கம் சொல்வது தான் சரியென்று ஒரு சாராரும் அல்ல அது தவறுயென மற்றொரு சாரரும் வாத பிரதிவாதங்களில் ஈடுபடுவார்கள்.  மக்களும் நாளாவட்டத்தில் அரசை நம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

        நமது நாட்டை பொறுத்த வரையிலும் பிரிட்டிஸ்காரர்கள் செய்த வரலாற்று தில்லுமுல்லுகள் ஏராளமானது.  இந்தியர்கள் அனைவருமே நாகரிகமற்ற கூட்டத்தார் என்று தான் செய்தியை பரப்பி வைத்தார்கள். படித்த இந்தியர்கள் எதிர்குரல் கொடுத்த பிறகு தான் தங்களது புளுகு மூட்டைகளை சற்று குறைத்து கொண்டார்கள்.  பிரிட்டிஸ்காரர்களால் அவிழ்த்து கொட்டப்பட்ட பல புளுகு மூட்டைகளில் மிக முக்கியமானது அரசாங்க நிர்வாகம் என்பது இந்தியர்களுக்கு தெரியாது,  ஐரோப்பியர்கள் தான் அதை இந்தியர்களுக்கு கற்று கொடுத்தார்கள் என்பது. அதாவது மிக சுலபமாக உலகிலேயே முதல் முறையாக அரசாங்க நிர்வாகத்திற்காக தனி நூல் எழுதிய சாணக்கியரையும் அவரின் அர்த்த சாஸ்திரத்தையும் பலவித வாதங்களுக்கு உட்படுத்தி அது கிரேக்க மொழியிலிருந்து இந்தியாவிற்கு வந்த சரக்கு என காட்டுவதற்கு ஏராளமான சித்துவேலைகளை அப்போதைய இங்கிலாந்து அரசாங்கம் செய்தது. அந்த வேடிக்கை விளையாட்டை சிறிது பார்ப்போம்.




     திருவள்ளூர் திருக்குறளை எழுதினார் என்று களத்துமேட்டில் வேலை செய்யும் கந்தசாமிக்கு கூட தெரியும்.  ஆனால் ஒரு கூட்டத்தார் திருவள்ளுவர் என்பவரே இல்லை.  அப்படியொருவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என்றனர். அத்தோடு விட்டுவிட்டார்களா?  திருக்குறளின் எல்லாவற்றை பற்றிய விளக்கம் இருக்கிறது ஒரு மனிதன் எல்லா விஷயங்களையும் தெரிந்தவனாகவும் ஒவ்வொன்றிலும் நிபுணனாகவும் எப்படியிருக்க முடியும்.  எனவே திருக்குறள் என்பது பத்துபேர் சேர்ந்து எழுதிய நூலாகாத்தான் இருக்கும் என்று கண்டுபிடிப்பையும் தருகிறார்கள்.

     சற்று ஏறக்குறைய சாணக்கியரை பற்றியும் இதே விமர்சனத்தையும் தருகிறார்கள்.  அதற்கு அவர்கள் அர்த்தசாஸ்திர நூலில் பல இடங்களில் எடுத்துகாட்டுகளை கூறுகின்ற போது கௌடில்யன் முடிவு என்று அவரை மேற்காள் காட்டும்படி கூறப்பட்டிருக்கிறதே தவிர இது நூலாசியன் முடிவு என்று கூறுப்படவில்லை. சாணக்கியரே அர்த்தசாஸ்திரம் எழுதி இருந்தால் இப்படி ஏன் எழுத வேண்டும். எனவே அது அவரால் எழுதபட்டதல்ல, 

     கௌடில்யர் என்ற வார்த்தை அன்றைய காலகட்டத்தில் எந்த தனி மனிதருக்கும் பெயராக வைக்கப்படவில்லை அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடும் கௌடில்ய என்ற பதம் ஒரு தனிமனிதனை குறிக்காது. ஒரு குழுவை அல்லது ஒரு சபையை குறிக்கு வார்த்தையாகத் தான் இருக்க வேண்டும். அதனால் சாணக்கியர் என்ற ஒருவரே உலகில் வாழவில்லை அவர் சந்திரகுப்த மௌரியனின் அமைச்சராகவும் இல்லை ஏன் மௌரிய சாம்ராஜ்ஜியம் இருந்த போது அர்த்த சாஸ்திரமே எழுதபடவில்லை என்றும் சொல்கிறார்கள்.



    இப்படி சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்று அர்த்தசாஸ்திர நூலை சற்று புரட்டி பார்த்தால் அர்த்தசாஸ்திர நூலின் அமைப்பே முதலில் ஒரு விஷயத்தை எடுத்து கொண்டு உதாரணத்திற்கு சொல்வதென்றால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழுங்வதை பற்றி குறிப்பிடும் சாணக்கியர் தண்டனை முறைகள் என்னன்ன எந்தெந்த குற்றங்களுக்கு நடைமுறையில் விதிக்கப்படும் தண்டனைகள் என்ன என்பதை கூறிவிட்டு அந்த தண்டனைகளை பற்றி தனக்கு முன்னால்  வாழ்ந்த பிரகஸ்பதி,  சுக்கீரர் போன்ற அரசியல் அறிஞர்கள் என்ன கருத்துகளை கொண்டு இருக்கிறார்கள் என்ற விளக்கத்தை தந்துவிட்டு கடைசியில் கௌடில்யர் இதைப்பற்றி இப்படி சொல்கிறார் என்று முடிவுரையும் தருகிறார். இதை படிக்கும் நமக்கு ஒருவேளை சாணக்கியரே இல்லை என்று சொல்பவர்களின் வாதம் சரியாகத்தான் இருக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.

    கதை இத்தோடு முடியவில்லை இதற்கு பிறகு தான் முக்கிய விஷயமே இருக்கிறது.  நவநந்தர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மௌரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி அதன் தலைமை அமைச்சராகவும் சாணக்கியர் இருந்தார் என்றால் அர்த்த சாஸ்திரத்தை எழுதியது அவர் தான் என்றால் தனது மன்னன் பெயரை தான் எழுதிய நூலில் ஒரு இடத்திலேனும் குறிப்பிட வேண்டும் அல்லவா?  


   கவி சக்கரவர்த்தி கம்பன் தான் எழுதிய ராமாயணத்திற்கும், தனக்கு போஸகராக இருந்த சடையப்ப வள்ளலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றாலும் கூட முடி சூட்டும் படலத்தில் சடையப்ப வள்ளலின் முன்னோர்களின் ஒருவர் மகுடத்தை தொட்டு கொடுப்பதாக எழுதுகிறார்.  அதன் அடிப்படையில் அந்த சம்பவம் கற்பனை என்றாலும் சடையப்பனுக்கும் கம்பனுக்கும் உள்ள தொடர்பு நமக்கு தெளிவாக தெரிந்து விடுகிறது. 

  இதேபோல சந்திர குப்தனுக்கும் சாணக்கியனுக்கும் தொடர்பு இருந்தால் நிச்சயம் மன்னன் பெயரை நூலில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அப்படி எந்த குறிப்பும் இல்லை. இதைவிட முக்கியமானது தான்  வாழ்ந்த பாடலிபுத்திர நகரத்தை பற்றியாவது எதாவது ஒரு சிறிய தகவலை சாணக்கியன் தந்திருக்க வேண்டும் அப்படியும் தரவில்லை.  அதனால் தான் மௌரிய அரசுக்கும் சாணக்கியனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள்.





     சரி சாணக்கியர் மௌரிய சாம்ராஜ்ஜியத்தை பற்றியும்.  சந்திர குப்தனை பற்றியும் எழுதவில்லை.  அதை விட்டு தள்ளுவோம் இன்று இருக்கின்ற பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி சாணக்கியர் என்பவர் பெரிய அறிவாளி,  மாபெரும் அரசியல் சட்ட மேதை என்றால் அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் பரம்பரப்பாக பேசப்பட்ட நபராகத் தான் இருந்திருக்க வேண்டும்.  அது மட்டுமல்லமல் ஒரு பெரிய நாட்டின் அதிகாரமிக்க பிரதம மந்திரி அவர்.  அப்போது அந்த அரசவைக்கு வந்த அயல்நாட்டு தூதர்கள் நிச்சயம் அவரை சந்திருக்க வேண்டும்.  சந்திரகுப்த மௌரியன் அரசவைக்கு வந்த பல காலம் தலைநகரிலேயே தங்கியிருந்த மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் தான் எழுதிய இண்டிகா என்ற நூலில் அவரை பற்றி சிறிய அளவிலேனும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி எதுவும் இண்டிகா நூலில் எழுதப்படவில்லை.  இதை வைத்தும் சாணக்கியர் என்றொருவர் வாழ்ந்த இல்லை.  அப்படி சொல்லப்படுவது வெறும் கற்பனை தான் என்கிறார்கள்  சிலர்.


    ஆதிகால இந்திய இலக்கியங்கள் எல்லாமே வேதங்களையும் உபநிசதங்களையும் அடியொற்றி எழுதப்பட்டது என்றே சொல்லலாம்.  புகழ்பெற்ற இதிகாசங்களான ராமாயணமும். மகாபாரமும் கூட வேத கருத்துக்களை வலியுறுத்த எழுந்ததாகவே வால்மிகியும் வியாசரும் சொல்கிறார்கள்.  குப்த பேரரசு இந்தியாவில் தோன்றிய பிறகு தான் இலக்கியங்களின் போக்கு மாறுபட்டது என்று சொல்லவேண்டும். அதுவரை உலக வாழ்விலிருந்து விடுபட்ட மறு உலக வாழ்க்கை பற்றி பேசிய இலக்கியங்கள் இகவுலக வாழ்க்கையை பற்றி பேச ஆரம்பித்தனர்.  இந்த மாபெரும் புரட்சிக்கு வித்திட்டவர்கள் மகாகவி காளிதாசனும்.  காமசூத்திரா எழுதிய வாத்ஸயணரும் ஆவார்.  காமசூத்திரத்தில் வைஹகம் என்ற பகுதி வருவது போல அர்த்த சாஸ்திரத்திலும் வருகிறது.  எனவே காமசூத்திரமும்.  அர்த்தசாஸ்திரமும் குப்த காலத்தல்தோன்றியிருக்க வேண்டுமே தவிர அதற்கு முன் தோன்றியதாக  இராது என்றும் சொல்கிறார்கள்.



     அர்த்த சாஸ்திரத்தில் சந்திரகுப்த மௌரியனைப் பற்றியும்,  பாடலிபுத்திர நகரத்தை பற்றியும் எந்த குறிப்பு இல்லை என்பதினாலும் சாணக்கியர் காலத்தில் இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படும் மெகஸ்தனிஸ் அவரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதினாலும் காளிதாசனை போல வாத்ஸயணரை போலயும் சாணக்கியரும் ஆன்மிக விஷயத்தை பேசாமல் உலக விஷயத்தை பேசுவதாலும் சாணக்கியரின் காலம் குப்தர் காலமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர கிறிஸ்த்துவ சகாப்தத்திற்கு முந்தையாதாக இருக்காது என்றும் அடித்து சொல்கிறார்கள் இந்த வாதங்களோடு சாணக்கியர் என்ற ஒரு நபரே இல்லை, அர்த்த சாஸ்திரம் ஒருவரால் எழுதப்பட்டிருக்காது என்ற கருத்துக்களும் சேர்ந்து நம்மை போன்ற சாதாரண மனிதர்களை குழுப்பம் அடைய செய்கிறது.  இத்தகைய கருத்துக்களை முன் வைப்பவர்கள் ws தாமஸ்  ஜான்ஸ்டன் பன்தாக்கர் ராய் சௌத்ரி போன்ற வரலாற்று பேரறிஞர்கள்.

    வரலாற்றை குழுப்புவதில் வெள்ளைகார்கள் மகா கெட்டிகாரர்கள்.  பொய்யாக ஒரு பொம்மையை செய்வார்கள். அங்கு பொம்மையே இருக்காது அதற்கு உயிர் இருப்பதாக ஒரு வெள்ளைகார விஞ்ஞானி அறிவிப்பான்.  ஆமாம் அந்த பொம்மை கையை, காலை ஆட்டியது.  வாய்விட்டு கூட பாடியது என்று நம்ம ஊர் ஆள் ஒருவன் சான்றிதழ் தருவான் ஆக உருவாகாத பொம்மை ஊர் முழுவதும் உலா வரும்.  அந்த கதைதான் சாணக்கியன் கதையும் இந்த கதையை உருவாக்கியது இரண்டு வெள்ளைகார அறிஞர்கள் இதற்கு ஆமாம் போட்டது வடக்கத்தி தலை ஒன்றும் தெற்கத்தி தலை ஒன்றும்.


   சாணக்கியரை மௌரியர் காலத்தார் அல்ல குப்தகாலத்தவர் தான் என்று சொல்வதினால் வெள்ளைகாரனுக்கு என்ன லாபம் என்று சிலர் யோசிக்கலாம்.  அங்கே தான் ஆதிக்கவெறியர்களின் ஆட்சிக்கான சதி இருக்கிறது.  ஐரோப்பிய நாடுகள் எல்லாமே கிறிஸ்த்துவ சகாப்தத்திற்கு பிறகு தான் நாகரீகத்திலும்.  மற்ற துறைகளிலும் வளர்ச்சியடைய ஆரம்பித்தனர்.  ஆனால் சில ஆசிய ஆப்க்க நாடுகள் அதற்கு முன்பே பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருந்தன். 

   குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து பிறகு அடிமை நாடுகளின் நல்ல தன்மைகள் அனைத்தும் தங்களாலும்,  தங்களது முன்னோடிகளாலும் தான் ஏற்பட்டதே தவிர அடிமைகளின் சொந்த அறிவால்அல்ல என்று காலனி மக்களை நம்ப வைக்க வேண்டும்.  பிரிட்டிஸார் காலத்தில் வெளிவந்த இந்திய வரலாறு என்ற நூல் இந்தியாவின் கணிதம்,  வாண சாஸ்திரம்,  வேளாண்மை அரசியல் எல்லாமே கிரேக்க நாட்டிலிருந்து வந்தவைகள் தான்.  இந்தியர்களுக்கு என்று நெறிப்படுத்தப்பட்ட அறிவுத்ததுறை அந்நியர்கள் இந்நாட்டிற்கு வந்த பிறகு தான் ஏற்பட்டதே தவிர அதற்கு முன்பு ஒன்றும் இல்லை என்று விரிவாக விஸ்தாரமாக அந்த நூல் பேசுகிறது  சாணக்கியரையும்,  கிறிஸ்த்துவ சகாப்தத்திற்கு பிறகு உள்ளவர் தான் என்று நம்பவைத்து விட்டால் அவரின் அரசியல் நிர்வாக கருத்துக்கள் இந்திய தன்மை கொண்டதல்ல ஐரோப்பியர்களிடமிருந்து கடன் வாங்கி இந்திய மயமாக்கப்பட்டது என்று சுலபமாக நம்ப வைத்துவிடலாம்.


    எல்லாம் சரி சாணக்கியரின் உண்மையான நிலை தான் என்ன?  அவர் சந்திரகுப்த மௌரியன் காலத்தாவரா?  அர்த்த சாஸ்திரம் நிஜமாகவே அவர் எழுதியதுதான் என சொல்வதற்கு ஆதாரங்கள் ஏதேனும் உண்டா?  என்ற வினா நமக்குள் மோதி எழும்புவது இயற்கை. முதலில் சந்திர குப்தனை பற்றியும் பாடலிபுத்திரத்தை பற்றியும் அவர் ஏன் குறிப்பிடவில்லை என்பதை பார்ப்போம்.

    சாணக்கியர் மௌரிய அரசின் தலைமை அமைச்சர்.  ஒரு பெரிய நாட்டிற்கு அமைச்சராக இருப்பவருக்கு ஒய்வு நேரம் கிடைப்பது என்பது குதிரை கொம்பு அரசனை விட அமைச்சர்களுக்கு தான் அதிக பணி இருக்கும்.  பரப்பரபான வேலை நேரத்தில் அர்த்த சாஸ்திரம் போன்ற ஆழ்ந்த கருத்துடைய நூல் எழுத நேரம் இருக்காது.

     இதன் அடிப்படையில் பார்க்கும் போது மௌரிய பேரரசு உருவாக்கம் பெறுவதற்கு  முன்பே அர்த்த சாஸ்திரம் எழுதப்பட்டிருக்க வேண்டும். காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர் பொதுவுடமை தத்துவத்தை உருவாக்கிய பிறகு தான் லெனின் அதை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இதே போன்று தான் அப்போதும் நடந்திருக்க வேண்டும். ஒரு அரசாங்கம் உருவாவதற்கு முன்பே அரசனை பற்றியும் அரசின் தலைநகரை பற்றியும் எப்படி எழுத முடியும்?  அதனால்தான் சாணக்கியர் சந்திர குப்தனை பற்றி எழுத முடியவில்லை.


    அடுத்ததாக மெகஸ்தனிஸ் சாணக்கியரை பற்றி ஒருவார்த்தை கூட குறிப்பிடாததற்கு என்ன காரணம்.  என்ற கேள்வி நிற்கிறது.  அவர் எழுதிய இண்டிகாவில் இந்தியாவை பற்றிய முழுமையான தகவல்கள் இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. பல விஷயங்கள் உண்மைக்கு மாறானதாகவும் எழுதப்பட்டு இருக்கிறது.  இருப்பினும் புகழ்பெற்ற சாணக்கியனை அவர் ஏன் குறிப்பிடவில்லை என்பதற்கு போதிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.  ஒரு வேளை அந்த குறிப்புகள் காலத்தால் மறைந்து போயிருக்கலாம்.  அல்லது மறைக்கப்பட்டு இருக்கலாம்.  எது எப்படி என்றாலும் இது சம்பந்தமான ஆய்வுகள் இன்னும் சற்று ஆழமாக சென்றால் நிச்சயம் கிடைக்கலாம்.  அதுவரை இந்த கேள்விக்கு பதில் இல்லை.

    அடுத்ததாக சாணக்கியரால் நூல் எழுதப்பட்டதா என்பதை ஆராய்வோம்.  திருக்குறளை தெளிவாக ஆழுமாக படித்தவர்கள் அதன் மொழி நடை 1330 குறப்பாட்களிலும் ஒரே மாதியாக இருப்பதை அறிவார்கள் அதே போலவேதான் அர்த்த சாஸ்திரமும், அடி முதல்  நூனி வரை ஒரே பாணி நடையில் இருக்கிறது.  எனவே அந்த நூல் பலரால் எழுதப்பட்டதல்ல, ஒருவரால் எழுதப்பட்டதே என்பது தெளிவாகும்.  



    மேலும் ஐரோப்பிய நாட்டில் ஒரு வாகனத்தின் மைய இயந்திரத்தை பழுதுபார்க்க தெரிந்தவனுக்கு உதிரபாகங்களின் பழுதை சரிபடுத்து தெரியாது. அதற்கென்று உரிய மற்ற நபர்களைதான் தேவைப்படுபவர்கள் அணுக வேண்டும்.  ஆங்கிலேய கல்வி முறை அரசாங்கத்தால் மிக திவிரமாக நடைமுறை படுத்தப்பட்ட பிறகு நம் நாட்டு நிலையும் வலது கண்ணுக்கு ஒரு மருத்துவன், இடது கண்ணுக்கு ஒரு மருத்துவன் என்றாகி விட்டது.

    ஆனால் சென்ற காலங்களிலும் இந்தியர்களின் நிலை இப்படியிருக்கவில்லை.  மோட்டார் கைக்கிளை பழுதுபார்ப்பவன்,  சாதா சைக்கிளையும் பழுதுபார்ப்பான்.  நான்கு சக்கர வாகனத்தின் பழுதையும் போக்குவான்.  நமக்கு தெரிந்த காலமே இப்படியென்றால் நாம் அறியாத ஆதிகால மனிதனின் மூளைத்திறன் நமது கற்பனைகளுக்கு அப்பாற்றப்பட்டது. ஒரே நேரத்தில் அவர்களால் வேளாண்மை பற்றியும் பேச முடியும். விண்வெளியை பற்றியும் பேச முடியும்.  வள்ளூவரும்,  சாணக்கியரும் அத்தகைய மேதாவிகளே ஆவார்கள். அவர்கள் ஒருவரால் எல்லா விஷயத்தின் அடி ஆழத்தையும் காண முடியும்.

    அடுத்தது அவர் குப்த்தர் காலத்தவர் அல்ல.  மௌரிய காலத்தவர் தான் என்பதற்கான ஆதாரங்களை பார்ப்போம். காம சூத்திரத்திலுள்ள வைகம் என்ற பகுதியை சாணக்கியர் பயன்படுத்துவதினால் அவர் பிற்காலத்தவர் என்று கூறப்படுகிறது.  ஆனால் பாலியலை பற்றி இந்தியாவில் தோன்றிய முதல் நூல் அல்ல காம சூத்திரம். வாத்ஸயணர் நூலை எழுதுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தத்தக் என்ற ஆசியர் பாலியலை பற்றி ஒரு விளக்க நூல் எழுதியுள்ளார் .  அது காம சாஸ்திரத்தை போல் கவர்ச்சியாகவும் தெளிவாகவும் இல்லையே தவிர மற்றப்படி வைகம் பகுதி அதிலேயும் வருகிறது. அதைபார்த்து சாணக்கியர் தமது நூலில் சேர்த்து இருக்கலாம்.  குப்த சாம்ராஜ்ஜியம் என்பது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் வாக்கில் உதயமானது தான்.  ஆனால் அதற்கு முன்பு எழுதப்பட்ட சில பௌத்த, ஜெயின நூல்களும் சில புராணங்களும் சாணக்கியரின் பெயரை குறிப்பிடுகின்றன.



     அர்த்த சாஸ்தரத்தில் யுத்தர்கள் என்ற அதிகார பிரிவினரை பற்றி சொல்லப்பட்டுள்ளது.  இந்த பெயரிலுள்ள அதிகார இலாக்காக்கள் மௌரிய காலத்தில் தான் இருந்திருக்கின்றன. குப்தர் காலத்தில் பௌத்த ஜெயன மதங்கள் இந்தியாவில் செல்வாக்குடன் இருந்தது.  எனவே சாணக்கியர் அவைகளை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதோடு மனுநீதி சாஸ்திரம் சொல்லும் ஜாதி பிவுகளை பற்றியும், வேதங்களில் குறிப்பிடப்படும் யாகங்களை பற்றியும் பேசுகிறார். குப்த அரசு இந்து அரசுதான் என்றாலும் யாகங்கள் அவர்கள் காலத்தின் செல்வாக்க இழந்தே காணப்பட்டது.  ஆனால் மௌரியர் காலத்தில் இந்த சடங்குகள் புகழ்பெற்று இருந்தன என்பதை அசோகர் கால கல்வெட்டுகள் நமக்கு காட்டுகிறது. மேலும் சில பாலிமொழி நூல்கள் அசோகன் முன்னோர்களை உருவாக்கியதில் கௌடில்யர் என்ற மனிதனுக்கு தொடர்பு இருப்புதாக சொல்கின்றன.

        இன்னும் பல ஆதாரங்கள் சாணக்கியனையும், சந்திர குப்தனையும் சமகாலத்தவர் என்று காட்டுகின்றன பிற்காலத்தவர் என்று காட்டுவதில் வெள்ளையர்களுக்கு  முக்கிய காரணமும் உண்டு. இந்தியர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று பிரச்சாரம் செய்வதை சாணக்கியர் கிறிஸ்த்துவ சகாப்தத்திற்கு முற்காலத்தவர் என்று காட்டினால் சாணக்கியரின் அறிவு வெளிச்சம் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பதினால் தான் ஏகாதிபத்ய வாதிகளின் குறுக்கு புத்தி சாணக்கியர் பிற்க்காலத்தவர் என்று பிரச்சாரம் செய்தனர் இதை  நன்கு உணர்ந்து நமது இந்திய சரித்திரத்தை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து நமது வருங்கால தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டும்.

மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்   http://www.verdicms.com/images/goButton.gif


Contact Form

Name

Email *

Message *