Store
  Store
  Store
  Store
  Store
  Store

வெற்றி தரும் அறிய மந்திரம்


 சென்ற வருடத்தில் பங்குனி மாதம் அக்னி நட்சத்திரத்தின் உக்கிரமான வெய்யில் நடுப்பகலை நெருப்பாக்கி கொண்டிருந்தது.  ஆதிகால தமிழகத்தில் பாலை நிலப்பகுதியில் தான் கள்ளி செடியும் பற்றி எறியும்.  கொடிய வெயில் வீசுமாம்.  ஆனால் இப்போது மனிதர்களின் தவறுதலால் சோலை வனங்கள் கூட பாலைவனங்களாக தகிக்கிறது.

 பருவநிலை மாறி போனதற்கு மனிதர்கள் காரணமா?  அல்லது மனிதர்களின் புத்தியை விபரீத வழியில் நடத்தி சென்ற இறைவன் காரணமா?  பகவத் கீதையில் உலகில் நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்குமே காரணமாக இருப்பது நான்தான் என கண்ணபரமாத்மா சொல்கிறான்.  அப்படியென்றால் வளிமண்டலம் சூடாகி போனதற்கு கடவுள் தான் உண்மை காரணமா?  கருணையே வடிவான கடவுள் இத்தகைய கொடுஞ்செயலை செய்யலாமா?  என்று நமக்கு கேட்க தோன்றுகிறது.
  அமெரிக்க அதிபர் ஒபாமா வளைகுடா நாடுகளை வளைக்க நினைப்பதும், ஒசாமா பின்லேடன் நாசகார செயல்களை செய்வதும் கடவுளின் செயலா?  நிச்சயமிருக்காது.  ஆத்திகர்கள் கடவுள் என்று சொல்வதும், நாத்திகர்கள் இயற்கை என்று சொல்வதும் ஏறக்குறைய ஒன்று தான்.  அதன் அடிப்படையில் பார்க்கும் போது இயற்கை தன்னை தானே அழித்துக்கொள்ள ஒருபோதும் செயலில் இறங்காது.  மண்ணுக்குள் நடப்பட்ட விதை முளைத்து மண்ணின் அழுத்தத்திலிருந்து வெளிப்பட்டுத் தான் செடியாக வேண்டும்.  வளர்ச்சி என்பது நேர்விதி, அழுத்தம் என்பது எதிர்விதி.  கடவுள் அல்லது இயற்கையின் செயல்பாடு நேர்விதியாகும்.  மனித சக்தி அழுத்தத்தை அதிக படுத்தி செயல்படும் போது எதிர்சக்தியாக தோற்றமளிக்கிறது. 

   தத்துவ நோக்கில் எதிர்சக்தி நேர்சக்தி எல்லாமே ஒன்று தான் என்றாலும் தனித்தனியாக செயல்பட்டால் தான் இயக்கம் என்பது ஒழுங்கு முறையில் அமையும்.  நேர்சக்தியின் வெளிபாட்டுக்கு எதிர்சக்தியானது தடைகளை தகர்த்து எறிந்து செயல்பட்டால் எல்லாம் சரியாக நடக்கும்.  நேர்சக்தியோடு மல்லுகட்டி போட்டி போட ஆரம்பித்தால் எல்லாம் விபரிதமாகி விடும்.  ஆக இன்றைய சிக்கல்களுக்கு மூலாதாரம் கடவுள் அல்ல மனித மூளையின் விந்தை செயல்பாடே ஆகும் என்று முடிவுக்கு வரலாம்.
   புறவுலகம் என்ற சுற்றுபுறத்தை கேடு உடையதாக்கியது எப்படி மனித செயலோ அப்படியே மனிதன் அகவுலகம் என்ற தனது தனிப்பட்ட வாழ்க்கையும் அளவுகடந்த ஆசையின் வசப்பட்டு மிகவும் கேடு உடையதாக ஆக்கிகொண்டான் மிக கூர்ந்து பார்த்தால் நமது துக்கங்கள் ஒவ்வொன்றிற்கும்  நாம் தான் காரணம் என்பது மிக தெளிவாக தெரியவரும்.

  ஒரு ஆணும், பெண்ணும் காதலிக்கிறார்கள்.  தங்களது காதலுக்கு பெரியவர்களிடத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக பிரிந்து காலமெல்லாம் கஷ்டப்படுவது அல்லது வாழ்க்கையை முடித்து கொள்வது.  இப்படிப்பட்டவர்களை தடுத்து கேட்டால் எங்கள் துயரத்திற்கு நாங்கள் காரணம் அல்ல எங்களை புரிந்து கொள்ளாத பெரியவர்கள் தான் காரணமென்று மிக சுலபமாக பழியை மற்றவர்கள் மீது தூக்கி போட்டுவிடுகிறார்கள் .  காதல் வசப்படுவதோ காதலுக்காக போராடுவதோ பண்பாட்டு குறையாகாது சொல்லப்போனால் அது ஒரு இயற்கை நிகழ்வு ஆகும்.  ஆனால் அதில் சம்மந்தப்பட்டவர்கள் நெஞ்சில் துணிவு இல்லாமல், பிரச்சனைகளை எதிர் கொள்ளும் தைரியம் இல்லாமல் விபரீத விளைவுகளை ஏற்படுத்தி கொள்கிறார்கள்.
  நமது நாட்டை அடிமைபடுத்தியிருந்த ஆதிக்க சக்தியின் பலம் அளப்பறியது.  அதன் பலத்தை கண்டு அதனோடு மோத முடியுமா?  மோதி மீண்டு வரமுடியுமா?  என்ற குழப்பத்தில் நமது சுதந்திர போராட்ட வீரர்கள் மூழ்கி கிடந்தால் இன்று இந்தியாவில் வீசும் சுதந்திர காற்று அடிமை காற்றாகத் தான் இருந்திருக்கும். எதிர் நிற்க்கும் சக்தி எத்தகையதாக இருந்தாலும் அதை மோதி மிதித்து வெற்றிவாகை சூடமுடியும் என்ற நம்பிக்கையோடு மட்டுமல்ல எத்தனை காலமானாலும் வெற்றி கனியை பறித்தே தீருவேன் என்ற பொறுமையோடும் விடாமுயற்சியோடும் நமது பயணத்தை தொடர்ந்தால் உலகத்தையே அழிக்கும் ஆலகால விஷம் கூட நாளாவட்டத்தில் அமிர்தமாகி விடும்.  அத்தகைய பொறுமையும் விடா முயற்சியும் இல்லாதவர்கள், தைரியமற்றவர்கள் அவசரகாலத்தில் அள்ளி தெளித்த கோலம் போல பதற்றத்துடன் காரியங்களை செய்து தானும் கெட்டு உலகத்தையும் கெடுத்து விடுகிறார்கள்.

  இன்று நம்மில் எத்தனை பேருக்கு வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் தைரியமும் நிறைந்திருக்கிறது.  அப்படி இருப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.  காலம் மிகவும் மாறிவிட்டது உலகில் எங்கு பார்த்தாலும் நஞ்சும் நயவஞ்சகமும் தான் மலிந்து இருக்கிறது.  நல்லவர்கள் வாழ்வதற்கு ஏற்றசூழல் பூமிபந்தில் எந்த பகுதிலேயுமே இல்லையென்று பலர் சலிப்படைகிறார்கள்.  உண்மையில் இந்த சலிப்பும் சஞ்சலமும் மனதைரியம் இல்லாதவர்களின் ஒப்பாரியே ஆகும்.  உலகம் என்பது அன்றும் இன்றும் அப்படியே தான் இருக்கிறது.  நயவஞ்சகமும் நம்பிக்கை துரோகமும் எந்த அளவு வளர்ந்து இருக்கிறதோ அதே அளவு இன்னும் அன்பும் அனுசரனையும் உயிரோடு இருக்கிறது.
  சந்தேக புத்தி கொண்டவனுக்கு கருங்கல் கூட கைகுண்டாகத் தான் தெரியும்.  எப்போது ஒரு மனிதன் நான் ஜெயிப்பேனா? மாட்டேனா?  என்று சந்தேகப்பட துவங்குகிறானோ அப்போதே தோற்க ஆரம்பித்து விடுகிறான்.  தோல்வியும் வளர வளர ஆசை நெருப்பு நம்மை சுற்றி எரிய ஆரம்பிக்கும்.  விளக்கை தேடி வரும் விட்டில் பூச்சிகளை போல ஆசை நெருப்பில் விழுந்து அதை மேலும் வளர்க்க பொறாமை, காமம், கோபம் போன்ற பைசாசங்கள் போட்டி போட்டு கொண்டுவரும்.  நமது வாழ்க்கையே பித்து பிடித்தவனுக்கு போதை ஏறியது போல் ஆகிவிடும்.  ஆகவே அனைத்தையும் அடக்க அனைத்தையும் அடைய நம்பிக்கை என்ற உறுதி வேண்டும்.

  நம்பிக்கை வேண்டும் என பேசுவதை கேட்பதற்கும், எழுதுவதை படிப்பதற்கும் நன்றாகத் தான் இருக்கிறது.  ஆனால் அதற்காக ஆயிரம்முறை பிரயத்தனப்பட்டாலும் எந்த காரியமும் கனியமாட்டேன் என்கிறதே என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள்.  மனதுணிச்சல் தைரியம் என்பதெல்லாம் பிறவி குணம்.  அது தானாக வரவேண்டும் தவிர நாமாக வரவழைத்து கொள்ள இயலாது என்று நமது அங்கலாப்பை அச்சமாகவே பலர் ஆக்கிவிடுகிறார்கள்.  உண்மையிலேயே தைரியம் என்பது பிறவி குணமா?  அது தானாகத் தான் வரவேண்டுமா?  என்று கேட்டால் அப்படியில்லை, மண்புழுவை பார்த்து நடுங்குபவன் கூட நாக பாம்பை மாலையாக்கி கொள்ளலாம் என்று நமது முன்னோர் வகுத்த சாஸ்திரமும் தற்கால விஞ்ஞானமும் சொல்கிறது.
  தைரியம் பெறுவதற்கு ஒரே ஒரு தேவை உழைப்பு மட்டும் தான்.  அதற்கு மட்டும் நாம் தயார் என்றால் துணிச்சல் என்பது நாம் துணி துவைக்கும் கல்லாக கிடக்கும்.  நான் தயார் அதற்கு என்ன வழி?  என்று கேட்கிறீர்களா விஞ்ஞான பூர்வமான வழிகளை நான் சொல்லப்போவது கிடையாது.  அது மன அழுத்தத்தை தீர்த்து சிந்தனையை தற்காலிக தெளிவுக்கு கொண்டுவரும் மருந்து, மாத்திரைகளைத் தான் போக்கிடமாக காட்டுகிறது.  ஆனால் நான் சொல்லப்போவதோ மெய்ஞ்ஞான வழி நான் அனுபவித்த வெற்றி பெற்ற வழி பலரும் இன்று வெற்றி பெற்று கொண்டிருக்கும் வழி இந்த வழியை பெறுவதற்கு நீங்கள் ஆகாயத்தை வில்லாக வளைக்க வேண்டாம்.  மணலை கயிறாக திரிக்க வேண்டாம்.  தனியான ஒரு இடம் அது உங்கள் அறையாக இருக்கலாம்.  தெருமுனையாக இருக்கலாம்.  அரைமணி நேரத்தை அதற்கென்று ஒதுக்கி விடுங்கள்.  காலையோ,  மாலையோ, இரவோ எதுவாகவும் இருக்கலாம்.


 


இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள்.  சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை  அறிவீர்கள்.  மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம்.  அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை.  ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம்.  இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம் என்று சவால்விட்டு சொல்கிறேன்.  முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம்.


Contact Form

Name

Email *

Message *