Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆலயங்களில் உயிர்பலியிடுதலை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?



கேள்வி : ஆலயங்களில் உயிர்பலியிடுதலை இந்தக் கால கட்டத்திலும் நிறையப்பேர் செய்கிறார்களே. இது எதனால்?
                                                                                                                                  கல்யாணசுந்தரம்  சிங்கபூர்

    சாக்த மதத்தில் தாந்திரீக வழிபாடுகளில் மந்திரம். யந்திரம். தந்திரம் ஆகியவற்றைப் பிரதிஷடை செய்யும் போது  உயிர் பலியிட வேண்டும் என்றும் காலமுக மதப் பிரிவில் பைரவர் வழிபாட்டில் உயிர்பலியிடுவதைப் பற்றியும் பல குறிப்புகள் உள்ளன, வேதகாலத்தில் செய்யப்பட்ட பெருவாரியான யாகங்களில் பசு. குதிரை. ஆடு. மனிதன் போன்றவற்றைப் பலியிடப் பட்டதற்கான ஆதாரம் உள்ளது, வேதங்களில் குதிரை. மாமிசப் படையலைப் பற்றியும். மதுபானப் படையலைப் பற்றியும் பல குறிப்புபகள் உள்ன, எனவே உயிர் பலியிடுதல் என்பது பழைமையான விஷயம்,  மகாகாளிக்குத் தன்னையே பலியிட்டு பூஜை செய்த மராட்டியர் . தமிழர்களைச் சரித்திரத்தில் காணலாம், இக்காலத்தில் வைதிகச்சடங்குகளில் உயிர்ப்பலி இடுவது முற்றிலும் குறைந்து விட்டது அது பாவம் என்ற ஜீவகாரூண்ய எண்ணமும் வளர்ந்து விட்டது அதற்கு மாற்றாக பூசனிக்காய். எலுமிச்சை. அவல் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.





கேள்வி : ஆயுள் முழுவதும் சொத்து, சுகம் வாகன வண்டியோடு இருக்கும் ஜாதகம் எது?
                                                                  அஜித் திருநெல்வேலி 

 இத்தகைய ஜாதக அமைப்போடு அரிதாகத் தான் சிலர் பிறப்பார்கள் என்று நாம் நம்பினால் அது தவறு.  சொத்து சுகம், வண்டி வாகனம் என்பது மனிதனுக்குச் சமுதாய கௌரவத்தை அல்லது இவன் பணக்காரன் என்ற பட்டத்தைத் தரலாமே தவிர மனநிம்மதியைத் தரும் என்று கூற முடியாது.

ஆனாலும் பெருவாரியான மனிதர்கள் அழிந்து போகக் கூடிய இத்தகைய பொருட்கள் தங்களின் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறார்களே தவிர ஆயுள் முழுவதும் சாந்தியுடன் வாழ்வதற்கு வழி தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

ஒரு ஜாதக குரு உச்சம் பெற்றும், கஜகேசரி யோகம் அமைந்து இருந்தாலும், அவன் பிறப்பில் இருந்து சாகும் வரை மேற்குறிப்பிட்ட சொத்துக்களோடு வாழ்வான்.  மேலும் லக்னத்திற்கு 10ம் இடத்தில் சுபக்கிரகம் முழுமையான சுபத்தன்மையோடோ ஒன்றுக்கு மேற்பட்ட சுபக் கிரகங்களால் பார்க்கப்பட்டோ இருந்தால் ஆயுள் வரையில் சொத்து சுகத்திற்குக் குறைவு ஏற்படாது.  ஆனால் அவன் கடன்காரனாக இருக்கமாட்டான் என்று சொல்ல முடியாது.











Contact Form

Name

Email *

Message *