Store
  Store
  Store
  Store
  Store
  Store

பிள்ளைகளுக்கு அரசியல் அவசியமா?

 அகத்தாக்கம் என்பது எந்த அளவு குழந்தைகளை பாதிக்கிறதோ அந்த அளவு புறத்தாக்கம் என்பதும் குழந்தைகளை பாதிக்கிறது உள்முக சிக்கல்களை சமாளிக்க நம்மை நாம் மாற்றிக் கொண்டாலேபோதுமானது வெளிமுக சிக்கல்களை சமாளிக்க தனிமனிதனால் முடியாது சமுதாயத்தின் ஒட்டுமொத்த விழிப்புணர்வே வெளிச்சிக்கல்களை எதிர் கொள்ள உதவும்.

           இந்த கருத்தின் அடிப்படை என்னவென்றால் இன்று நடைமுறையில் இருக்கும் அரசியல், சமூகம், சமயம், அறிவியல், பொருளாதாரம் போன்ற துறைகள் அனைத்துமே ஒட்டு மொத்தமாக மாறவேண்டும் அப்படி மாறும்பட்சத்தில் வருங்கால தலைமுறையினர் ஒழுங்கானவர்களாகவும், நியாயமான நடைத்தை உடையவர்களாகவும் நிரந்தர வனத்துடன் வாழ்பவர்களாகவும் இருக்கமுடியாது.

                         மனித சமுதாய கட்டமைப்பில் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பது அரசியல் துறையாகும் உலகம் முழுவதுமே அரசியலில் சுய நலம் மேலோங்கி நிற்கிறது என்றாலும் நமது இந்திய அரசியல் சுயநல சிகரத்தின்  உச்சியில் இருக்கிறது எனலாம் இந்த கருத்தை உலக அரசியலை உற்று நோக்குவோர்கள் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவார்கள் அமெரிக்கா அரசியலும் அதன் மேலான்மை போக்கும் உலகம் முழுவதும் சுயநல நதியை பெருக்கெடுத்து ஒடச் செய்திருக்கிறது தனக்கு மிக அருகில் இருக்கும் கியூபா நாட்டில் பொதுவுடைமையாட்சியை தன்னால் ஜீரனிக்க முடியாது என்பதனால் உலக நாடுகள் எதுவும் கியூபாவோடு உறவு பாராட்டக்கூடாது அந்த சின்னஞ்சிறிய நாட்டின் மக்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை தனது அதிகார நலம் மட்டும் தான் முக்கியமானது எனக்கருதி வருகிறது.

               ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் அதிகார பரவலை தடை செய்யவேண்டும் என்பதற்காக அப்பாவி வளைகுடா இளைஞர்களுக்கு மதவெறியை ஊட்டி ஓசாமா போன்ற தீவிர வாதிகளையும் தாலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளையும் உருவாக்கி சீராட்டி வளர்த்து உலக அமைதிக்கே குந்தகம் ஏற்படும் வண்ணம் தனது செயல் திட்டங்களை வகித்துக் கொண்டிருந்தது.இஸ்ரேலின் தாய் நாட்டுபற்றை தனக்கு சாதகமாக்ககொண்டு அரபு நாடுகளை மிரட்டி உருட்டி பார்த்து கடைசியில் தனது கச்சா எண்ணெய் பசியை இந்த திட்டத்தால் முழுமையாக தீர்க்க முடியாது என்பதற்காக தனது ஆளுகையை அரபு பிரதேசத்தில் நேரடியாக ஏற்படுத்திக்கொள்ள ஈரான் ஈராக்கை மோதவிட்டு வேடிக்கை பார்த்தது.

               அரபு ஆடுகளின் இரத்த சுவையை முழுமையாக ருசிபார்க்க ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பை சாதகமாக பயன்படுத்தி சவுதி அரேபியாவின் தனது படைகளை நிரந்தரமாக குடியமர்த்தி நாசகார  ஆயுதங்களை சதாம் உசேன் வைத்திருப்பதாக கற்பனை குற்றச் சாட்டை சுமர்த்தி ஈராக்கை ஆக்கிரமித்து சாதாகமாக தூக்கிவிட்டு அமெரிக்க வாகனங்கள் ஓட அரபு குழந்தைகளின் இரத்தத்தை எரிபொருளாக்கிக் கொண்டிருக்கிறது.

              ஆசியத் துணைக்கண்டத்தில் தனது ஆயுத வியாபாரம் தங்க தடையின்றி நடைபெறுவதற்காக பாகிஸ்தான் நரியின் வால்களுக்கு எண்ணெய்பூசி பின்னல் போட்டுக்கொண்டிருக்கிறது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதார ரீதியில் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக அந்நாடுகளின் தனது மூலதனத்தை மறைமுக இராணுவ சேவையென்றும் தொழில்நுட்ப உதவியென்றும் சுரண்டிவருகிறது.

அமெரிக்க முகம் மட்டும் தான் சுயநல வடிவானது முன்னாள் பொதுவுடைமை சோவியத் தியாகத்தின் வடிவமானது என்று சொல்லிவிட முடியாது ஹீட்லரின் படையெடுப்பை காரணம் காட்டி ஜெர்மனுக்குள் புகுந்து அக்காட்டை துண்டாடி பல காலமாக தனது சிவப்பு பூட்சை வருடுகின்ற பொம்மை அரசை அந்நாட்டின் ஒரு பகுதியில் ஏற்படுத்தி ஜெர்மன் மக்களின் உழைப்பை சுரண்டியது.

             அமெரிக்கா எந்த தேவைக்காக ஈரான், ஈராக்கை மோத வைத்ததோ அதே தேவைக்கத்தான் இரஷ்யா ஆப்கானிஸ்தானத்தில் நஜீபுல்லா அரசை ஏற்படுத்தி தனது இராணுவத்தை நிலை நிறுத்தியது உலக நாடுகள் அமெரிக்கா பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக வறுமை நாடுகள், வளரும் நாடுகள் பலவற்றில் பொதுவுடைமை விரிவாக்கம் என்ற பெயரில் தனது சிவப்பு கம்பளத்தை போர்த்தி பல நாட்டுமக்களை மூச்சு திணரவைத்தது.

              இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் நடிப்பு சோசலிசவாதிகளை மூளைச்சலவை செய்து இராணுவ உதவி பொருள் உதவி, தொழில் நுட்ப உதவி போன்றவைகளை வழங்குவதுபோல் நடித்து நாட்டுவளங்கள் பலவற்றை கொள்ளை அடித்து மாஸ்கோவின் மாளிகைகளை உல்லாச தனது சித்தாந்த பாவனைகனை புரிந்து கொண்ட பல நாட்டு அரசியல் வாதிகளை கே.ஜி.பி. உளவுப்படையை பயன்படுத்தி கொலை செய்வதும் ஏழை மக்களின் களவுத்தீனியாக காரல்மார்க்ஸ் கொள்கையை கொடுத்து உள்நாட்டு கலவரங்களை தூண்டிவிட்டு குளிர்காய்ந்ததும் சோவியத்தின் திருவிளையாடல்கள் ஆகும்.

              இன்று பல நாடுகள் எதிர்கொண்டு சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பல பிரச்சனைகளுக்கு மூலவிதைகளை விதைத்தும் பல நாட்டு மக்கள் ஒரு வேளை உணவுக்குகூட சரிவர கிடைக்காமல் அவதிப்படுவதற்கும் அமெரிக்கா இரஷ்யா போன்ற நாடுகளின் சுயநல வேட்கையே ஆகும். அதைச் சொல்வதைவிட்டுவிட்டு இந்தியாவில் மட்டும்தான் சுயநலம் தலைவிரித்து ஆடுகிறது என்று சொல்வது எப்படி நியாயமாகும் என்றும் கேட்கக்கூடும்.

            இந்த கேள்விகள் தவறு என்றோ அமெரிக்காவும், இரஷ்யாவும் பரம சாதுக்கள் என்றோ யாரும் சொல்லமுடியாது. ஆனால் அமெரிக்க இரஷ்ய சுயநல நடவடிக்கை எதற்காக என்று ஆழமாக சிந்தித்தால் இந்தியச் சுயநலம் எத்தகைய மக்கள் விரோத செயல் என்பது புரியும் அன்றைய வல்லரசும், இன்றைய வல்லரசு உலக மக்களை துன்புறுத்தியது தனது நாடும் தனது மக்களும் நலம் பெறவேண்டும் என்பதற்காக இந்திய மக்கள் துன்புறுத்தப்படுவது நாடு நலம் பெறவேண்டும் என்பதற்காக அல்ல சில அரசியல் வாதிகள் நலம் பெறவேண்டும் என்பதற்காகவே.இந்த கருத்தில் உள்ள உண்மைத்தன்மையை சுதந்திரம் பெற்றபிறகு நாட்டில் நடந்த நடைபெறுகின்ற சம்பவங்களை வரிசைப்படுத்தி பார்த்தாலே தெரியவரும்.

              முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அதற்கு பிறகு வந்த வாரிசின் அரசாட்சியும் தனது அதிகார பலத்தை தக்க வைத்து கொள்ளவும் பதவி நாற்காலிக்கு போட்டியாக முளைப்பவர்களை பலிவாங்கவும் தனது புகழ்பாட பூமியாக்கியது.துதிபாடிகளின் கூட்டத்தை அதிகரிக்கவும் கவனம் செலுத்தியதே அல்லாமல் உருப்படியாக எதையும் செய்யவில்லை இருபது அம்சதட்ட நன்மைகளை வானொலி பெட்டி மூலமாக மக்கள் கேட்டார்களே தவிர அதன் பயனை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை.

               வாரிசின் கதை இது என்றால் அடுத்து வந்த கிழவர்களின் கூட்டமைப்போ கேலி நாடகங்களின் ஓட்டுமொத்த தொகுப்பாகும் விடுதலைக்கு பாடுபட்டவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நேர்ந்த கொடுமைகளை அனுபவித்து தியாகத்தழம்பு ஏறியவர்களும் நிர்வாகம் என்று வந்துவிட்டால் பதவி சுகத்திற்காக மானத்தைவிட காற்றில் பறக்கவிடுவார்கள் என்பதை நாடேபார்த்து சிரித்தது.

பதவிச்சண்டைகளுக்கு மத்தியில் வாரிசுகளின் ஆட்சி தங்கு தடை இல்லாமல் வளர்ந்து மக்களை நிலையான ஆட்சி என்ற மாய வலையில் தள்ளியது தவறான அணுகமுறை அலாதியான ஊழல் இவற்றால் வாரிசு அத்தியாயம் முடிவுக்கு வந்து பல எதிர் பார்ப்புகளோடு உத்திரபிரதேச மன்னர் பரம்பறையில் ஒருவர் ஆட்சிக்கு வந்தார்.

                      போலியான தேசியவாதம் சுதந்திரம் பெற்று தந்ததாக கபட நாடகம் எல்லாம் முடிந்து நல்ல ஆட்சி மலரும் என்று காத்திருந்தபோது மன்னர் வாரிசு இதுவரை உள்ளுக்குள் புதைந்து கொண்டிருந்த ஜாதி நெருப்பை சட்டபூர்வமாக மூட்டினார் ஜனங்களுக்கு மத்தியில் ஜாதி துவேஷங்கள் வளரவிட்டால் தான் சமூக நீதிக்காவலர் என்ற பெயரில் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம் என்ற பகல் கனவில் அரசு பிறந்தது.

                   ரத வடிவில் வந்தகாலி அலை சமூக நீதி காவலர்களின் கனவுகாணும் தலையில் பிதித்தது அன்று முதல் தான் இந்தியாவில் இருந்த மயான அமைதி வெடிகுண்டுகளின் பேராசையால் சிதைந்து விழுந்தது ஜாதியால் பிளவுபடவேண்டிய மக்கள் மதங்களால் சிததுண்டு போனார்கள் காவியும் பச்சையும் மோதிக் கொள்வதில் வளர்ந்தது என்னவோ பரிவாரங்களின் கல்லா பெட்டியும் இமாம்களின் தொப்பைகளும் தான்.ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் பிரிட்ஷ் ஆட்சி இந்தியாவில் இருக்கவேண்டும் என்று கால் வருடியவர்களும் சுயமரியாதை போர்வையில் தேச ஒருமைப்பாட்டிற்கு பேதம் வளர்த்தவர்களும் சீனாவின் ஆக்கிரமிப்பை வரவேற்று பிரிந்தவர்களும் வர்க்கப்போராட்டம் என்ற பெயரில் நில உரிமையாளர்களின் கூலிப்படைகளாக படுகொலைகள் புரிபவர்களும் அரசு பணத்தில் வயிற்றை வளர்த்து முற்போக்கு போர்வையில் சுய பண்பாட்டிற்கு கேடு செய்வதும் அதிகரித்துள்ளது.

                       நாட்டில் நடக்கின்ற திவிரவாத செயல்களை அனைத்துமே முஸ்லீம் பயங்கார வாதிகளால் மட்டம் தான் நடைபெறுகிறது இந்து அமைப்புகள் அனைத்துமே பரிசுத்தமானது என்று சொல்லி விடமுடியாது பதிவு செய்யப்பட்டும் படாமலும் பல படுகொலைகள் மதச்சண்டைக்கு தூண்டுகோள்கள் இந்து பயங்காரவாதிகளால் நாடு முழுவதும் அவ்வவ்போது நடைபெறுகிறது மேலும் நமது நாட்டை பொறுத்தவரை முஸ்லீம் திவிர வாதிகளின் தாக்குதல் அதிகரித்து போனதற்கு மிக முக்கிய காரணம் இந்து அமைப்புகளும் காங்கிரஸ் கட்சியுமே ஆகும்.

                அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்குமுன் நடந்த முஸ்லீம் தீவிரவாதிகளின் தாக்குதல்களின் எண்ணிக்கையும் மசூதியை இடித்தபிறகு நடைபெறுகிற தாக்குதலின் எண்ணிக்கைகளையும் கணக்கிட்டாலே உண்மை தெரிந்துவிடும் அமைதியும் அறமும், அன்பும் வடிவான ராமனுக்கு ஆலயம் எழுப்ப அரசியல் வியாதிகள் முற்பட்டபின்னரே அல்கொய்தா அல் உம்மா என்ற பெயர்களை மக்கள் கேட்க ஆரம்பித்துக் இருக்கிறார்கள்.எரிகிற வீட்டில் பிடுங்கும் வரையில் லாபம் என்ற நோக்கில் பல கிருஸ்துவ அமைப்புகள் செயல்பட துவங்கி உள்ளனர் ஆத்மாக்கள் அறுவடை என்ற பெயரில் மதம் மாற்ற முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

               நான் ஒரு மதத்தத்துவத்தால் கவரப்பட்டு எனது தாய் மதத்தை விட்டுவிட்டு அந்த மதத்திற்கு மாறுவேன் என்றால் அதை தடுப்பதற்கோ விமர்சனம் செய்வதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது தத்துவ கவர்ச்சியால் இந்துக்கள் யாருமே கிருஸ்துவர்களாக மாறினார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது மன பலகீனத்தாலும் ஆசையாலும் குடும்பச் சண்டைகளாலும் கிருஸ்துவர்கள் ஆனவர்கள் தான் அதிகம்.இந்து மதத்தில் உள்ள சாமியார்களும் பூசாரிகளும், மட்டும்தான் பேய்ஓட்டுதல் மந்திரித்தல் போன்ற மோபிமஸ்தான் வேலைகள் செய்வது போலவும் ஒரு கற்பனை தோற்றம் நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

           முழு இரவு உபவாச ஜபம் அற்புத சுகமளிக்கும் கூட்டம் போன்ற மத பிரச்சார கூட்டங்களில் ஆவிகள் ஓடுவதற்காகவும் ஏவல், பில்லி, சூன்யத்தின் கட்டுகள் உடைப்பதற்காகவும் சாத்தானின் கொட்டம் அடங்குவதற்காகவும் பாதிரிகளும் பிரசங்கிகளும் செய்கின்ற ஜபம் இந்த மத பூசாரிகளின் பேய்ஓட்டும் வேலைக்கு எந்த விதத்தில் குறைந்தது என்று தெரியவில்லை.

                இந்து சமூகத்தில் ஜாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டு சகமனிதர்களை கேவலப்படுத்துவதினால் இந்துக்கள் மனம் தொந்து கிருஸ்துவ மதத்தில் இணைவதாக ஒரு கூட்டம் நாடு முழுவதும் பேசித்தெரிகிறிது இந்த கூட்டத்தா பார்வையில் விழுப்புரம் மாவட்டம் எறையூர் கிராமத்தில் கிறிஸ்துவர்களிடையே நடந்த ஜாதிச்சண்டை படுவதே கிடையாது.எறையூர் சம்பவம் ஒரு சின்ன உதாரணம் தான் கிருஸ்துவ அமைப்புகளில் நடக்கும் பதவிச் சண்டைகளிலும், திருமண முறைகளிலும் புரையோடி போய் இருக்கும் ஜாதி வெறியை பகுத்தறிவு வாதிகள் கண்டுகொள்வதே கிடையாது அதுமட்டுமல்ல கிருஸ்துவர்களுக்கு ஜாதிகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்டும் போராடுகிறார்கள்.கிருஸ்துவர்கள் இந்து மதத்தில் உள்ளவர்கள் மட்டும் மதம் மாற்ற முயற்சிப்பதில்லை தங்களது மத பிரிவியிலேயே மத மாற்றமுயற்சிகளை செய்கிறார்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் கத்தோலிக்க திருச்சபைக்கும் பெந்தகோஸ்தோ திருச்சபைக்கும் நடைபெறுகின்ற மத மாற்று சண்டை பைப்படி சண்டையைவிட கேவலமானது பெந்தகோஸ்தோ சபையின் தீவிர மதமாற்ற வெறியாட்டம் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதை போப்பாண்டவரே கண்டிக்கிறார் கத்தோலிக்கர்களை மதம் மாற்றுவதை கண்டிக்கும் போப் இந்துக்களை மதம் மாற்றுவதை வரவேற்கிறார் ஏசுவின் வாரிசுகளின் நிஜத் தோற்றம் இதுதான்.

                அவரவர் மதத்தை கடைபிடிப்பதை அல்லா தடுக்கவில்லை என்று கூறிய முகமது நபியின் தொண்டர்கள் பள்ளிவாசல்களில் நடைபெறுகின்ற மதரசா கூட்டங்களில் முஸ்லீம் அல்லாத அனைவருமே காபீர்கள், சாத்தானின் குழந்தைகள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள் மார்க் அறிஞர்கள் என்று கூறிகொள்ளும் பலர் இந்தியாவில் முஸ்லீம்கள் இரண்டாம் தரகுடிமக்களாகவும், அடிமைகளாகவும் நடத்தப்படுவதாக பொய் பிரச்சாரம் செய்து அப்பாவி இஸ்ஸலாம் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

                       இந்துக்களிடமிருந்து இஸ்லாம் மக்களை பாதுகாக்க அரசு நாடுகளில் இருந்து ஏராளமாக பணம் பெற்று ஆயுதங்களாக ஒரு கும்பல் மாற்றிக் கொண்டு இருக்கிறது உண்மையில் முஸ்லீம்களின் விரோதி இந்துக்கள் அல்ல அவர்களிடத்தில் உள்ள கல்வி பற்றிய விழிப்புணர்வு இன்மையே என்பதை எடுத்து சொல்ல எந்த இமாம்களுக்கும் மௌலவிகளுக்கும் நேரம் கிடையாது மதக்கல்வி மற்றும் இளம் பெண்களின் அறிவுக்கண் நிரந்தரமாக குருடாக்கப்படுகிறது.

      கிருஸ்துவ மதத்தில் ஜாதிகள் இல்லை என்ற பொய்தோற்றம் உலவவிடப்படுவதைப்போல் இஸ்லாம் மதத்திலும் ஜாதிகள் இல்லை என்ற கபட நாடகம் அரங்கேற்றப்படுகிறது பட்டானி, ராவுத்தர், மரக்கியாயர், லப்பை, ஷியா போன்ற ஜாதி பிரிவுகள் உள்ளதையும் அவற்றிற்குள் அடிக்கடி நடைபெறும் வெட்டுகுத்துக்களையும் யாரும் பேசுவதே கிடையாது.

                         இந்தியாவில் அரசியல் வாதிகள் என்று தவறாக அழைக்கப்பட்டு வரும் சுய நல வியாபாரிகளும் இரத்தம் குடிக்கும் ரவுடிகளும் கிருஸ்துவ, இஸ்லாமிய ஓட்டுகள் மொத்த கிடைக்கும் என்ற ஆசையில் மதச்சார்பின்மை என்ற போலி வேஷத்தை போட்டுக்கொண்டு அப்பாவி மக்களை பிளவுப்படுத்தி பதவி நாற்காலிகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.மத சார்பு அற்ற அரசு என்றால் அது மக்களை மத ரீதியில் பார்க்காமல் பிளவுப்படுத்தாமல் சமநோக்கோடு இருக்கவேண்டும் பதவியில் உள்ள தலைவர்கள் எவரும் மத நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளகூடாது தங்களது சுய கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் மதங்களை பற்றிய விமர்சனங்களுக்குரிய கருத்துக்களை வெளியிடக்கூடாது மக்கள் மத்தியில் உள்ள மத பாகுபாடுகளை அரசியல் காரணங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.

                        ஆனால் நம் நாட்டில் நிலமை தலை கீழாக இருக்கிறது பெரும்பான்மையான மக்கள் மனதை நோகடித்தால்தான் சிறுபான்மை மக்கள் சந்தோஷப்படுவார்கள் என்ற நோக்கில் அரசியல் வாதிகள் நடந்துகொள்கிறார்கள் ரம்ஜான் கஞ்சியும் கிருஸ்துமஸ் கேக்கும் சாப்பிடும் அரசியல் தலைவர்கள் யாகங்களை நடத்தவோ, ஆயுதபூஜை செய்யவோ வரவேண்டியது இல்லை அந்த நிகழ்வுகளை கேலி பேசாமல் இருந்தாலே போதுமானது.

                  பெரும்பான்மையான இந்து மக்கள் போலி அரசியல் வாதிகளாலும் முற்போக்கு வாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சில கபட அறிவு ஜிவிகளாலும் மன காயம்பட்டு இந்து வெறியை வளர்க்கின்ற இன்னொரு அரசியல் கும்பல் இடம் சிக்கிக்கொண்டு சகமனிதர்களை மதரீதியில் விரோதம் செய்கிறார்கள். 

                     இந்து மதத்தின் பெருமைகளையும் அதன் தொன்மையையும் வாய்கிழிய பேசுபவர்கள் இந்து மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறிதுரும்பை கூட கிள்ளி போடுவது கிடையாது அறியாமையை வளர்த்து கஜானாவை நிரப்புவதிலேயே பல மடாதிபதிகள் கவனம் செலுத்துகிறார்கள் இந்து மடங்களுக்குரிய சொத்துக்களை முறைப்படி பயன்படுத்தினாலே உலகம் முழுமையும் உள்ள இந்துக்களுக்கு இலவசமாக கல்வியும், மருத்துவமும் கொடுக்கலாம்.ஆனால் இந்து மடங்கள் மக்களிடமிருந்து காசு பிடுங்குவதை குறியாக கொண்டு செயல்படுகிறதே தவிர மக்களுக்கு சேவை செய்வதை நினைத்து பார்ப்பதுகூட கிடையாது இதனால் தான் இந்து சமூகம் மதம் மாற்றம் என்ற படுகுழியில் விழுந்து அழிந்து வருகிறது இந்து மக்களுக்கு தொண்டாற்ற விரும்பும் சங்கப் பிரிவாரங்கள் மாற்று மதத்தினரை தாக்குவதை விட்டுவிட்டு மடாதிபதிகளை கடமை செய்ய கட்டாயப்படுத்தவில்லை என்றால் நம் நாட்டில் இந்து மக்கள் சிறுபான்மையினராக சிறுத்துப் போவார்கள்.

                    நமது நாட்டின் அரசியலும், மதமும் மக்களை சுரண்டுவதாகவே சுயநலம் மிக்கதாகவே இருப்பதனால் நம் சமூக பண்பாட்டில் மிருகத்தன்மை அதிகரித்து வருகிறது மனிதர்களின் மிருக சுபாவத்தை சீராட்டி வளர்ப்பதற்கு அரசியல் வாதிகளும் மகத்தலைவர்களும் முயற்சிப்பது போலவே நிழல் உலக தாதாக்களும் போதை மகுந்து வியாபாரிகளும் சினிமா முதலாளிகளும் பல நடிகர் நடிகைகளும் முயன்று வருகிறார்கள்.அரசியல் மற்றும் சமூக அமைப்பில் உள்ள கேடுகளையும், கேடிகளையும் இதுவரை விரிவாக பேசியதற்கு மிகமுக்கிய காரணம் என்னவென்றால் நமது குழந்தைகள் நல்லவர்களாக வளருவதற்கு இத்தனை அபாயங்கள் உள்ளன என்பதை சுட்டி காட்டத்தான்.

                  சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்ணகி கற்புடைய பெண்ணாக வாழ்ந்தது ஒன்றும் அதிசயம் இல்லை ஏன் என்றால் கண்ணகியை கெடுக்க அப்போது சினிமா இல்லை தொலைக்காட்சி இல்லை பத்திரிக்கைகள் இல்லை இன்றைய நிலைமை குழந்தைகள் வெளியில் போனாலும் போகாவிட்டாலும் கெட்டுபோவதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் இருக்கிறது இந்த சூழலில் நமது தாயும், மனைவியும், சகோதரியும் ஒழுக்கமாக வாழ்வதுதான் மிகப்பெரிய உலக அதிசயம்.

                     காந்தி ஆசிரமத்தில் நமது குழந்தைகள் வளர்க்கப்பட்டால் நிச்சியம் அவைகள் அகிம்சையோடு தான் வாழபழகும் ஆனால் நமது குழந்தைகளுக்கு அத்தகைய சூழல், இல்லவே இல்லை கசாப்புக்கடையில் வளர்வதற்கான சூழ்நிலைதான் குழந்தைகளுக்கு அமைந்து இருக்கிறது வெட்டுவதும், குத்திக்கிழிப்பதும் கபடி விளையாடுவதுபோல் சர்வசாதரணமாகிவிட்ட சமூக அமைப்பில் குழந்தைகள் வளரும்போது பூச்செண்டுகூட வெடிகுண்டாக மாற வாய்ப்புள்ளது.

         எல்லாவிதமான அரசியல் சித்தாந்தகளும் அரசியல் அமைப்புகளும் விஷமாகிவிட்ட நாட்டில் குழந்தைகளுக்கு அறிவு முதிர்ச்சி ஏற்படும் காலம் வரையில் அரசியலால் கவர்ச்சி விலங்கு பூட்டப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் நமக்கு நன்றாக தெரிகின்ற அரசியல் தத்துவங்களை குழந்தைகளின் மனதில் விதைக்க நினைத்தால் அது பயன் இல்லாமலும் போகலாம் விபரீதத்திலும் கொண்டு விடலாம்.ஏன் என்றால் உருவாக்கப்படுகின்ற கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ முயற்சி செய்தால் அது தோல்வியில் தான் கொண்டு போய்விடும் திணிக்கப்படுகின்ற தத்துவங்கள் எதுவும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

                 ஆசைகளை துறந்துவிட்டு எல்லா மனிதர்களாலும் துறவரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது அனுபவ வாழ்வில் அது சாத்தியமும் ஆகாது அனைவரும் கண்களை முடிக்கொண்டு நாள் முழுவதும் தியானத்தில் உட்கார்ந்துவிட்டால் உலக வேலைகள் எப்படி நடக்கும் யார் செய்வார்கள் ஆனால் புத்தர் அதைத்தான் செய்யச்சொல்லி வற்புறுத்தினார் அதனால் தான் புத்த தத்துவம் பிறந்த நாட்டிலேயே செத்துவிட்டது மற்ற நாடுகளிலும் பெயரளவில் வாழ்கிறது.

          காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர் உருவாக்கிய மகத்தான பொதுவுடைமை தத்துவம் தோற்றுப்போனதும் இயற்கையாக உள்ள ஏற்றத்தாழ்வுகளை சீர்படுத்திவிடலாம் என்ற தவறான நம்பிக்கையால்தான்.மகாத்மா காந்தி அகிம்சையை போதித்தார் அதன் படியே தானும் வாழ முயற்சித்தார் மற்றவர்களையும் அப்படியே வாழ கற்பித்தார் ஆனால் அவரால் கூட முழுமையாக அகிம்சை சித்தாந்தத்தை கடைபிடிக்க முடியவில்லை இந்தியா பாகிஸ்தான் இடையில் எல்லைபோர் வெடித்த பொழுது பிர்லா மாளிகை தோட்டத்தில் இருந்து இந்திய போர் விமானங்களுக்கு அவர் ஆசிர்வாதம் வழங்கியபோதே எல்லா நேரத்திலும் அகிம்சை தத்துவம் ஒத்துவராது என்பது தெள்ளத்தெளிவாகியது.இவைகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது இயற்கைக்கு முரணானவற்றை மனிதர்கள் ஏற்று நடந்தால் அவைகளில் வெற்றி என்பது அரிதாகத்தான் இருக்கும் என்பது தெளிவாகிறது எனவே குழந்தைகள் வளர வளர அவர்களின் அனுபவமும், அறிவும் பெருக பெருக சாத்தியமான கருத்துகளை சுயமாக ஏற்றுக்கொள்ள விட்டுவிட வேண்டும் அதே நேரம் தீமையானவற்றை அவர்கள் எளிதாக புரிந்து கொள்ளவழி செய்யவேண்டும்.

 மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்   http://www.verdicms.com/images/goButton.gif

 


Contact Form

Name

Email *

Message *