Store
  Store
  Store
  Store
  Store
  Store

அருகில் அமர்ந்த அமானுஷ்ய பெண்


    மனிதர்களின் அன்றாட வாழ்வில் செழிப்பையும். செல்வ செல்வாக்கை தருவதற்கும். மண்ணுலக வாழ்க்கையை விட்டு விட்டு மறுஉலக வாழ்க்கையை மனித ஆத்மா பெறும்போது ஆத்ம சாந்தியையும். திருப்தியையும் தருவதற்கும் மந்திரங்கள் பயன்படுகின்றன, மேலும் தியானம். ஜபம். காரியானுகூலம். பற்பல தேவ தேவைகளை வழிபடுவதற்கும். வசியப்படுத்துவதற்கும் பல அமானுஷ்யமான சக்திகளை மனிதர்கள் பெறுவதற்கும். அமானுஷ்ய பல வீரிய ஆத்மாக்களை வசப்படுத்தி கொள்வதற்கும் மந்திரங்கள் பயன்படுகிறது,
   
   மந்திரங்கள் நமது வேதங்கள் நான்கிலும் பற்பல விதமாக பரவிக்கிடக்கிறது, வேதங்கள் 4 பிரிவுகளாக வியாச முனிவரால் நமக்கு தொகுத்து தரப்பட்டுள்ளது, ரிக். யஜீர். சாம. அதர்வண என்ற 4 வேதங்களும் சுக்லகாண்டம். கிருஷ்ணகாண்டம் என்னும் முறையே இரண்டிரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது,
  
  இதில் கிருஷ்ண (அ) தைத்ரீய என்று வேத விற்பன்னர்கள் சொல்வது பழமையாகன நூல் என்ற பொருளிலும். சுக்ல (அ) வாஜஸனேய என்பது ஒளிமிக்க சூரியனிடமிருந்து வெளிப்பட்டது என்னும் பொருளை கொள்ள வேண்டும் என்கிறார்கள்,


    ரிக் வேதம் 21 பிரிவுகளாகவும். யஜீர் வேதம் 109 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன, ஆகமொத்தம் 4 வேதங்களும் 1108 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, இதில் ஒவ்வொரு பிரிவுகளுக்குள்ளும் பல நுட்பமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளது, மந்திர சம்ஹதங்கள். பிரம்மாணங்கள். ஆரண்யங்கள். உபநிஷதங்கள் என்பவை முக்கியமான பிரிவுகளாகும்,      சம்பத ப்ராம்ஹணம் எனப்படுவது சுக்ல. யஜீர் வேதத்துக்கு சொந்தமானது, தைத்ரிய மைத்ராயண என்பவைகள் யஜீர் வேதத்தில் கிருஷ்ண காண்டத்தில் அமைந்துள்ளது, தாண்டய பஞ்சவம்ச. ஷட்வம்ச. சாந்தோக்ய. அத்புத ஆர்ஷேய உபநிஷதத் பிராம்மாணங்கள் ஆகியவை சங்கீதத்தின் ஊற்றுவாயான சாம வேதத்திற்கு உரியவை, கோபதா என்பது அதர்வண வேதத்தில் உள்ள பிராம்மணமாகும், ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் உள்ள மந்திரங்களே பிரதானமாக நம்மிடையேயுள்ள பல மந்திர சாஸ்திரங்களுக்கு அடிப்படையாக உள்ளது,        மந்திரங்களால் அடைய முடியாதது என்று எதுவுமேயில்லை,
  
 2 மாதங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன், நமது ஆசிரமத்திற்கு ஒருவர் வந்தார், 40 அல்லது 45 வயது இருக்கும், அவரின் தோற்றம் கம்பீரத்துடன் இருந்ததாலும். முகமும் கண்களும் சொல்ல முடியாத சோகத்தை உள்ளுக்குள் அடக்கி வைத்திருப்பதைக் காட்டாமல் காட்டியது, தான் பெங்களூர் மற்றும் மும்பையில் தொழிற்சாலைகள் வைத்திருப்பதாகவும். பல ஐரோப்பிய நாடுகளுக்கு பலதரப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி செய்வதாகவும். 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றதாகவும். செல்வ செழிப்பின் உச்சியில் தானும் தனது குடும்பத்தாரும் மூழ்கித்திளைத்ததாகவும் சொன்னார்,
   
  ஆனால் இன்றோ தனது தொழிற்சாலைகள் மூடக்கூடிய அளவுக்கு நலிவுற்று விட்டதாகவும் அயல்நாட்டில் எடுத்த ஆர்டர்களுக்கு சரக்கை டெலிவரி செய்ய முடியாத நிலையில் தனது நம்பகத்தன்மையே பாதிப்படைந்து விட்டதாகவும் கண் கலங்க சொன்னார்,


  நன்றாக இருந்த தன் இளைய மகனும் திடீரென்று மூளை நரம்பு பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பதாகவும் தன் குடும்பத்தினரே தன்னை விரோதியாக பார்ப்பதாகவும் அவர் சொன்னபோது அந்த சோகம் என்னை சுட்டது, வாழ்ந்தவன் வீழ்ந்தால் சமுதாயம் அவனை என்னென்ன பாடுபடுத்தும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும், இதனால்தான் யானை விழுந்தால் எறும்பும் எட்டிப் பார்க்கும் என்று கிராமத்தில் மிக அழகாக சொல்கிறார்கள்,
 
   இவரைப் போன்றுதான் சென்ற வருடத்தில் ஒரு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இதே நிலையில் நம்மிடம் வந்தார், கூட்டாளியால் துரோகப்படுத்தப்பட்ட அவரின் நிலை மிகவும் வேதனைக்குரியது, அவருக்கு துரோகம் செய்த கூட்டாளி குதிரை குப்புற தள்ளியது மட்டுமின்றி குழியும் பறித்த கதையாக இவரின் உயிரைப் பறிக்க மாந்த்ரிகர் ஒருவர் மூலம் தீவினைகள் செய்து இருந்தார்,
 
  இவரின் பரிதாபகரமான நிலையை போக்க நாம் விரும்பினோம், இதற்காக எமது பிரதான கிஷ்யர்கள் இருவரை அனுப்பி அந்த தயாரிப்பாளர் விட்டில் காலபைரவர் பூஜை என்னும் தாந்த்ரீக முறையிலான பூஜை மற்றும் யாகங்களை நடத்தி வைத்தோம், மந்திர பயிற்சியிலும் மாந்த்ரிக அனுஷ்டானங்களிலும் விற்பன்னர்களாகிய எமது சிஷ்யர்கள் செய்த அந்த பூஜை முறைகள் பதினைந்தே நாட்களில் அந்த தயாரிப்பாளரின் வாழ்க்கையை வசந்தமாக்கியது, அதன் பின்னர் அவர் எடுத்த சில படங்கள் இன்றும் வெற்றி நடைபோடுகிறது,
    இந்த கால பைரவ பூஜை முறைகள் “ரிக் வேதத்திலும்” “அதர்வண வேதத்திலும்” மகா பைரவஸதன தந்திரம் போன்ற சாகைகளிலும் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது,
  
 ஸ்ரீ பைரவர் என்பது சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் ஒன்றாகும், பைரவர் என்ற சொல் பயத்தை நீக்குபவர். பாவத்தை உண்பவர். காப்பவர் என்ற பொருளாகும்,
  
  உடுக்கையும். கபாலமும். திரிசூலமும். விபூதி பஸ்பமும். நாய்வாகனமும் பைரவரின் சின்னமாகும், இவர் ஆனந்த அம்சத்தில் படைப்பவராகவும் காக்கும் அம்சத்தில் “கால” பைரவராகவும் பிரளய காலத்தில் காலாக்னி பைரவராகவும் இருக்கிறார் என்று ரிக்வேதம் கூறுகிறது, எந்தவித ஆச்சார அனுஷ்டானங்களும் இல்லாது ஆபத்து காலத்தில் மன ஒருமைபாட்டுடன் தியானித்தால் எவரையும் எந்த நேரத்திலும் காப்பதாக ஸ்ரீ காசி காண்டம் கூறுகிறது,


   இந்த பைர வழிபாடு ஷனாதன தர்மத்தின் எல்லா பிரிவுகளிலும் உள்ளது, குறிப்பாக பாசுபதம் காலாமுகம். கபாலிகம் போன்ற பிரிவுகள் பைரவரை முழு முதற்பரம் பொருளாக போற்றி கூறுகின்றனர், சிலர் பைர வழிபாடு என்றவுடன் நரபலி கொடுத்தும் சுடுகாட்டு சாம்பலை உடல் எங்கும் பூசிக்கொள்வதும். மண்டை ஓடு மாலையணிந்து மது மாமிசத்துடன் வழிபடுவது போன்ற அநாகரீக முறை என்று கருதுகிறார்கள்,
  
  நோய். வறுமை. தொழில்நஷ்டம். போன்றவைகளை நீக்கி தனலாபம். அதிகாரம். செல்வம். பூமி. வாகனம் இன்னும் மனித வாழ்விற்கு என்னென்ன தேவையோ அத்தனையையும் தரும், கற்பக விருட்சமாக மந்திரங்கள் அமைந்துள்ளது,    ஆலயங்களிலுள்ள மூலமூர்த்திகளுக்கே ஆகாசத்தில் பரவியுள்ள பரமார்த்த சக்தியை கிரஹித்து வெளிப்படுத்த மந்திரங்களை எந்திரங்களின் வடிவாக்கி பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்றால் மந்திரங்களின் சக்தியை வெறெந்த ரீதியிலும் நிரூபிக்க வேண்டாம், எல்லாம் வல்ல இறைவனையே மந்திர சொரூபன் என்று ரிஷிகள் அழைத்துள்ளார்கள்,
  
  இத்தகைய சர்வசக்தி வாய்ந்த மந்திரங்களை இன்று சரியாக முறையில் கற்றவர்களும். கற்பிப்பவர்களும் அருகி வருகிறார்கள், அரைகுறையாக கற்றுக் கொண்டவர்கள் (அ) கற்றிருப்பதாக போலியாக இருப்பவர்களாலும் மந்திர சாஸ்திரம் மதிப்பிழந்து வருகிறது, இதை மாற்றி மந்திரசாஸ்திரத்தை மக்களின் துயர் துடைக்க மந்திரவல்லுநர்கள் பயன்படுத்த வேண்டுமென்பதே எனது அவா,


    மந்திர சாஸ்திரங்களை கற்றுக் கொள்ள தொடங்கும ஆரம்ப காலத்தில் நமக்கு பல தடைகளும். பல அமானுஷ்ய விந்தை அனுபவங்களும் ஏற்படும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மோகினி கன்ம வசிய மந்திரத்தை உருஏற்றி சித்தி அடைந்த போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்,
   
  எனது பூர்வசிரம வீட்டில் பூஜை அறையில் மேற்குறிப்பிட்ட மந்திரத்தில் மோகினியை நேரிடையாக அழைக்கும் மந்திரத்தை விளையாட்டாக பரிசோதிக்க நினைத்தேன், அது சித்தரை மாதம். கத்திரி வெயிலின் உக்கிரம் காலையிலோயே மிக அதிகமாக இருந்தது, வெயிலின் வேகமும் சுற்றுப்புறச் சூழலின் தாக்கமும் மனதிற்குள் மந்திரங்கள் உண்மையா? அவைகளால் பயனுண்டா? என்று ஏதோதோ எண்ண அலைகள் கிளம்பிக் கொண்டு இருந்தன, மந்திர சாஸ்திரத்தில் ஆரம்ப கால பயிற்சிகளில் ஆரம்ப கட்டத்தில் இத்தகைய குழப்பங்களும். சந்தேகங்களும் வரக்கூடாது,
    ஆனால் எனக்கு அப்போது அப்படி ஏற்பட்டது, மந்திரங்களின் மீது திடநம்பிக்கையும். கடின பயிற்சியையும் நான் மேற்கொள்ள காரணமாக இருந்தது, அதே போன்றே எல்லோருக்கும் அமையும் என்று சொல்லி விட முடியாது, அப்படி பரிசோதனையில் ஈடுபட்ட சிலர் மனப்பாதிப்பையும். கடும் அதிர்ச்சியையும் அடைந்துள்ளதை நான் பின்னர்தான் அறிந்து கொண்டேன்,
   அன்று நான் அடைந்த குழப்பங்களால் மந்திரத்தை பரிசோதிக்க  முன்பின் யோசிக்காமல் அமர்ந்து விட்டேன், குறிப்பிட்ட அளவு மந்திரபிரயோகம் செய்து கண்களை திறந்து பார்த்தேன், திறந்த கண்கள் கிழிந்து விடும் அளவிற்கு ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் உறைந்து போனேனன், என் எதிரே தெரிந்த அந்த உருவம் இன்றும் என் கண்ணெதிரே நிற்பது  போல் தெரிகிறது,    அங்கலட்சணங்களை வர்ணிக்கும் சாமுத்ரிகா சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து லட்சணங்களும் பொருந்திய அழகே உருவான ஒரு பெண் என்எதிரே அமர்ந்திருந்தாள், அவள் கன்னத்தில் புரண்ட கரும்சுருள் கேசமும். வெண்ணெயால் வடித்தது போல் அழகிய கைகளும். கவிஞர்களின் வர்ணனையில் மட்டுமே வரும் கயல்விழிகளும். பட்டாம்பூச்சி போன்று அப்பெண்ணின் இமைகள் படபடத்ததையும் அவளிடம் இருந்து மெல்லிய நறுமணம் எங்கும் வியாபித்து அனைத்தையும் சூழ்வதையும் என் கண்ணெதிரே நிதர்சனமாக கண்டேன்,    இன்று அந்தக் காட்சி எனக்கு சந்தோஷத்தையும். ரசனையையும் தருகிறது, ஆனால் அன்றோ அந்த நிலையில் பெரும் பயத்தையும். படபடப்பையும் எனக்கு தந்தது, என் இதயம் துள்ளிக்குதிப்பதையும் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்வதையும் என்னால் முழுமையாக உணர முடிந்தது,

    பெரும் மாளிகையை இருள் சூழ்ந்து கொள்வது போல் என்னை பயம் என்ற டிராகன் முழுமையாக விழுங்கிவிட்டது, காரணம் அப்போது எனக்கு மோகினியை அழைக்கும் மந்திரம் தெரியுமே தவிர அதைத் திருப்பியனுப்பும் மந்திரம் தெரியாது, பயப்பாதாளத்தில் கிடந்த நான் கண்களை மூடிக்கொண்டு என் இஷ்ட தெய்வமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பவித்ரமான ராம நாமத்தை எனக்குள் அலறி அலறி சொன்னேன், எவ்வளவுநேரம் அப்படி நான் இருந்தேன் என்பது எனக்குத் தெரியாது, நான் சுய உணர்வு பெற்றபோது காலைபொழுது முடிந்து மாலைப்பொழுது வர ஆயத்தமாக இருந்தது,

    இச்சம்பவத்திற்கு பின் மந்திரங்களின் மீது எனக்கிருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது, மந்திர ஆச்சாரிகளையும். மந்திர நூல்களையும் தேடும் என் வேட்கையாக யாககுண்டத்தில் எரியும் அக்னியைப்போல் பன்மடங்கு ஜீவாலை விட்டு எரியத் தொடங்கியது, அதன் பின்னர்தான் அதர்வண வேதத்திலும். திருமூலர் திருமந்திரத்திலும் புரியாத பல பகுதிகள் தெரிய ஆரம்பித்தன, 


  இன்று அதைப் பயன்படுத்தும் போதும். மற்றவர்களுக்கு கற்பித்து பயிற்சியளிக்கும் போதும் கிடைக்கும அலததியான ஆனந்தத்திற்கு அளவேயில்லாமல் இருக்கிறது, பைரவ தந்திர யோகம் நமது சாஸ்திரத்தில் விழிப்படையக்கூடிய அம்சம் என கூறப்பட்டுள்ளது, இதை அறிவு குறைந்த சுயநலம் கருதுகிற அரைகுறை சாஸ்திர அறிவு  உள்ளவர்கள் பயன்படுத்தும் போதுதான் அருவருக்கத்தக்க பகுதிகாக்கி விடுகிறார்கள்,

    இந்த தந்திரத்தில் “பஞ்சமகரம்” என்று வழங்கப்படுவதில் மத்ய (மது) மாம்ச (புலால்) மத்ஸ்ய (மீன்) முத்ரா (அடையாள சொல்) மைதுனம் (புணர்ச்சி) போன்ற வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொண்டு கீழ்த்தரமான பூஜை செய்பவர்கள் மந்திர சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லை என்பதை உறுதியாக கூற இயலும், இதன் உண்மை பொருள் என்னவென்றால் அகந்தையை அடக்குவது. மாமிச பற்றை விடுவது. பக்தி எனும் மயக்கத்தில் மயங்குவது. இச்சையை அடக்குவது. இறை உணர்வு என்னும் உணர்ச்சியோடு கூடுவது. இத்தகைய மந்திர சாஸ்திரங்களை கைதேர்ந்த தாந்த்ரீக குருமூலமே பயில முடியும்,
   
  பல உக்கிர அம்சம் பொருந்திய பைரவ வழிபாட்டை ஸ்ரீ ஆதிசங்கரர் சாந்த நெறிப்படுத்தினார், ஸ்ரீ சைலம் சென்று கபாலிக பக்தர்களை பைரவர் சிவனின் அம்சம் என்பதை உணர வைத்து சிவனுக்கு உரிய பலி பூஜைகளை நரபலியில் இருந்து மாற்றி சாத்வீக வழிபாட்டிற்கு “ஸ்ரீ சங்கரர்” கொண்டு வந்தாலும் அவரால் பைரவரின் உக்கிரத்தை முழுமையாக தணிக்க இயலவில்லை, அப்படி தணிக்க முடியாத பைரவ சக்திகளை ஊர் எல்லை நதி மற்றும் குளக்கரைகள் மயானம் போன்ற இடங்களில் காவல் தெய்வங்களாக அதாவது முனியப்பன். ஐய்யனார். கருப்பன். மதுரை வீரன் கடலை மாடன் போன்ற தெய்வங்களாக நின்று மக்கள் பயமின்றி வாழ இன்றும் அருள்பாலித்து வருகிறார்கள்,


   இன்றும் ஆலயங்களில் சனி மூலையில் உள் பைரவ சன்னதிகளில் ஆலயம் பெட்டகங்களின் சாவிகளும். கருவறையின் சாவிகளையும். பாதுகாக்க கொடுத்துவிட்டு வருகிறார்கள், காலையில் கோவில் நடைதிறப்பதற்கு முன் பைரவர்க்கு பூஜை செய்து அவரிடம் இருந்து சாவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகமவிதி,
   
    இத்தகைய உக்கிர பைரவர்களை மந்திரங்கள் மூலம் அழைத்து தீய மந்திர சக்தயை அழித்து அத்தீய மந்திரங்களால் பாதிக்கப்பட்டவர்க்கு நல்வாழ்வை கொடுப்பதே ஆகும், என்னிடம் வந்த அந்த தொழில் அதிபருக்கும் இதே பூஜை முறை சிஷ்யர்களால் செய்யப்பட்டது அவர் இன்று மிக நல்ல முறையில் உள்ளார்,
   
இத்தகையவர்களுக்கு மட்டுமல்லாது இந்த பைரவ பூஜை முறை அரசு மற்றும் அரசியலில் உயர்பதவி பெற நினைப்பவர்கள் வேலை வாய்ப்பு பெற நினைப்பவர்கள். தங்கம். வெள்ளி வியாபாரத்தில் விருத்தியடைய முனைவோர்க்கும். பெரும் பயனை அடையலாம், வாஸ்து தோஷம் உள்ள வீடுகளில் இந்த பூஜை செய்வதினால் தோஷ நிவர்த்தி அடைவதோடு மட்டுமில்லாமல் இழந்தவைகளையும் கண்கூடாகப் பெறலாம்,
இந்த பூஜை முறையை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
பைரவ வசிய மந்திரங்கள்

ஸ்ரீ வடுக பைரவ மந்திரம்

ஓம் அஸ்ய ஸ்ரீ வடுக பைரவ மந்த்ரஸ்ய ப்ரஹதாருண்யா
கருஸி : அனுஸ்டிப்சந்த : ஸ்ரீ வடுக பைரவோ தேவதா
வம் பீஜம் ஹரீம் சக்தி ஓம் கீலகம் மமஸ்ரீ வடுக பைரவ
ப்ரஸத சித்யர்த்தே ஜபே விநியோக :

ந்யாசம்

ஓம் ஹ்ராம் வம் ஈஸநாயா அங்குஸ்டாப்யாம் நம:
ஓம் ஹ்ரீமண் வீம் தத்புருஸய தர்ஜனீப்பயாம் நம:
ஓம் ஹ்ரூம் வூம் அஹோராயா மத்யமாப்யாம் நம:
ஓம் ஹ்ரைம் வைபம் வாமதேவாய அனாமகாப்யம் நம:
ஓம் ஹ்ரௌம் வெளம் சத்யோஜாய கநிஸ்டகாப்யாம் நம:
ஓம் ஹ்ர: வ பஞ்சவக்ராயா கரதல் கருப்ருஸ்டாப்யாம் நம:

ஹ்ருதய ந்யாசம்

ஓம் ஹ்ராம வம் ஈஸநாயா ஹ்ருதயாய நம:
ஓம் ஹ்ரீம் வீம் தத்புருஸய சிரஸஸ்வாஹா
ஓம் ஹ்ரூம் வூம் அஹோராயா சிஹாயை வஷட்
ஓம் ஹ்ரைம் வையம் விமதேவாய கவஹாய ஹீம்
ஓம் ஹ்ரௌம் வெளம் சத்யோஜாதாய நேத்ரத்ரயாய லௌஷட்
ஓம் ஹ்ர: வ பஞ்சவக்ராயா அஸ்த்ராயாபட் ஓம் பூர்புவ:
ஸ்வரோம் இதிதிக் பந்த்:

தியானம் பாலரூபம்

வந்தே பாலம் ஸ்புடி ஹஸட்ட்ஷம் குண்ட லோத்பாஸி
தாங்கம் திவ்யா கல்பைர் நவமணியை கிங்கிணிநூபுராட்தை
திப்தா ஹாரம் விஸதவதநம் சுப்ர சன்னம் த்ரி நேத்ரம் ஹஸ்தாப்
ரம்யம் வடுக ஸட்ட ஸம் சூல தண்டோபதா நம

தியானம் ராஜஸம்


உத்யத்தி வாகர ஸ்ன்னிபம் த்ரி நயனம் ரக்தாங்கரா
ஹஸ்த் ரஜம் ஸமேராஸ்தம் வரதம் கபாலமயம் சூலம். கதா நம்
கரைன : நீலக்ரி லஸிதார பூஸனயுதம் ஸீதாம சுகண்டோஜ்
வலம் பந்தூ காருண வாஸஷம் பயஹரம் தேவம் ஹதாபவயேத்

தியானம் தாமசம்


த்யோயோந் நீலதிஹாஸம் ஸஷிய கலதரம் முண்ட மாலம்
மஹேஸம் திக் வஸ்த்ரம் பிங்ககேஸம் டமரு மதஸ்ருணீம் கட்க
பரஸபயாநி நாஹம் கண்டாம் கபாலம் கரஸ்ர கிருஹைம்
பிப்ரதீம் பீமதம் ஸ்டம் திவ்யா கல்பம் த்ரி நேத்ரம் மணிமய
வலஸிம் கிங்கிணி நூபுராயட்யம்

பஞ்ச பூஜை


லம் பிருதிவி ஆத்மிகாயை கந்தம் சமர்பயாமி
ஹம் ஆகாசாத்மிகாமைய புஸ்பம் பூஜையாமி
யம் வாய்வு ஆத்மிகாயை தீபம் தர்ஸயாமி
வம் அம்ருதாத்மிகாயை அம்ருதம் நிவேதயாமி
ஸம் ஸ்வாத் மிகாயை ஸ்வோபாஸôர பூஜம் ஸமர்பயாமி

மூல மந்திரம்

“ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபதுத்தாரணாய
குரு குரு வடுகாய ஹ்ரீம்”

 
 மேற்குறிப்பிட்ட மூல மந்திரத்தையும் மற்றும் மந்திரங்களையும் மந்திர சாஸ்திரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மகாகுரு ஒருவர் மூலம் அதற்குரிய அனுஷ்டானங்களோடு உபதேசம் பெற்று தொடர்ந்து 7 இரவுகள் நடுநிசியில் கோவில் (அ) மந்திரங்களால் சுத்தப்படுத்தப்பட்ட தனி அறையில் ஒரு லட்சம் வீதம் உருஏற்ற வேண்டும், இப்பூஜைக்கு முன் ஸ்ரீ பைரவ யந்திரத்தை பால். தேன் இவைகளால் அபிஷேகம் செய்து முறைப்படி பூஜை செய்து அருகில் வைத்து கொள்ள வேண்டும்,
   
 இந்த விஷயத்தை படிக்கும் நீங்கள் இதை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறைப்படுத்திப் பாருங்கள், அப்படி நடைமுறை படுத்துவதால் உங்களுக்கும் உங்களை சார்ந்த பலருக்கும் பல நன்மைகளை ஏற்படுத்தலாம்,
   
 மந்திர சாஸ்திரம் எனும் மகா சமுத்திரத்தில் இப்பொழுது தான் முதல் அடி எடுத்து வைப்பவர்களுக்கு இந்த மந்திர பூஜாவிதி ஒரு நல்ல ஏணிப்படியாக அமையும், அவர்கள் இந்த ஏணி வழியாக ஏறி மாடிக்கு மேல் வந்து பல அரிய காட்சிகளை தரிசிக்கலாம், அதாவது இதை முதல் அப்பியாசமாக கொள்பவர்கள் இதன் மூலம் பல மந்திர சித்தியை மிக சுலபமாக அடைந்து விடலாம், மந்திர சமுத்திரத்தில் நீந்திக் கொண்டிருக்கும் நிபுணத்துவம் பெற்ற மகா மேதைகள் இதை செய்வார்களேயாயின் தங்கள் மந்திர சக்தின் மூலம் கட்டி வைத்து இருக்கிற அரண்மனை போன்ற சக்தியை மேலும் பன்மடங்கு உயர்த்திக் கொள்ளலாம், 


   இதை அப்பியாசப்படுத்த வேண்டும் மற்றவர்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமில்லாமல் மந்திரங்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் கூட இந்த மந்திரங்கள் எல்லாம்ó உண்மையானதா நடைமுறைக்கு சாத்யமானதா (அ) வெறும் வார்த்தை பிரயோகம் மட்டும்தானா என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ள இதை பயன்படுத்தி அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாது தங்களது ஆராய்ச்சியின் எல்லையை விரிவுபடுத்தி கொள்ளலாம்,
   
   இப்பரைவர் மட்டுமல்ல நமது மந்திர சாஸ்திரங்களில் பல தேவ. தேவதைகள். எட்சர்கள். எச்சினிகள். ஹிம்புடுவர்கள். கந்தர்வர்கள். சப்த கன்னிகள். மோகினிகள். அஷ்ட வசுக்கள். அஷ்டதிக் பாலகர்கள். நீலி. மாதங்கி. மகாசாஸ்தா போன்றவைகளும் இன்னும் எண்ணிக்கையிடலங்காத பல நூறு அமானுஷ்ய சக்திகளையும். அதிபூத சக்திகளையும் வசப்படுதி தரங்கெட்டு கிடக்கும் மனித வாழ்வையும். சமுதாய அமைப்பையும். நலிவுற்ற பல நல்ல உள்ளங்களையும் புத்தம் புது பொலிவுடன் வளமான பாதைக்கு மாற்றி விட முடியும்,
   
  ஆனால் இன்றோ மந்திர சாஸ்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து வருகிறது, கற்றவர்களுக்கும் கற்பிக்கும் மனோபாவம் அரிகி வருகிறது, நமது வாழ்வில் மந்திரம் இன்னொரு உலகம் போல் மறை பொருளாக இருக்கும் மந்திரங்கள் இந்த உலகிற்கு வந்து நம் அனைவரின் வாழ்விலும் ஆனந்த பூங்காற்றாக வீசும் என்பதில் சந்தேகமில்லை, நமது அவா இந்த மந்திரங்களை கற்று பிரயோகப்படுத்தி நலிவுற்ற மக்களுக்கு நன்மை செய்யும் சுயநலமற்ற  பல நல்ல உள்ளங்கள் தேவை என்பதே, இந்த அவா நிறைவேறும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை நான் உணர்கிறேன்,
Contact Form

Name

Email *

Message *